ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

எங்க ஊரு....

.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வரும்ம.. என்ற பாடலின் வரிகளை கேட்ட பொது, எல்லோருக்கும் அவர் அவர் ஊர் கனாபகம் வருவது போல எனக்கும் என் ஊர் ஞாபகங்கள் கீழ் காணும் வரிகளாக.

எங்க ஊருல யாரிடம் ரேஷன் கார்டு இருக்குதோ இல்லயோ எல்லாரிடமும் பாஸ்போர்ட்டு கண்டிப்பா இருக்கும், 80% வெளிநாட்டு சம்பாத்தியம் தான். வெளிநாட்டு புண்ணியத்துல, வேல இல்லன்னாலும் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணு கிடைக்காதுங்கிற கவலை இல்ல. 


திருமணத்தின் போது வேலையோட இருந்தா சூப்பர் பிகர் இல்லன்னா என்ன கொஞ்சம் சுமார் ரகம் தான் (இது சில சமயங்களில் மாருதல்லுக்குட்பட்டது). அரக்கிலோ கத்தரிக்காய் வாங்கிட்டு அசால்டா 1000 ரூபா நோட்ட நீட்டுனா, கவலைப்படாம கேளுக்க நீங்க கடயநல்லூருக்காருதாநேநு. அந்நிய செலவாநிக்கும் அடியேன் ஊருக்கும் அப்படி ஒரு ஆணித்தரமான தொடர்பு, ரேங்க்ல முதல் 5 இடத்திற்குள்ள இருக்கும் . கொஞ்சம் பழைய  காலத்துக்கு  டாடாய்ஸ்  கொசு  சுருள  சுத்தவிட்டு  பின்னாடி  போய்  பார்த்தா , ஊரோட  முக்கியத்  தொழிலே  விவசாயம்  தான் .......... அப்படின்னு  சொல்லுவன்னு  நெனச்சிங்களா .. அது தான் இல்ல , தறி  நெய்யுறது  தான் . வருமையில  கஞ்சித்  தொட்டியெல்லாம்  திறந்திருக்கான்கலாம். இப்ப அந்த  தரிய  எல்லாம்  கீழேயுள்ள  படத்துல  தான் பார்க்க  முடியுது

முன்னாடி  கடையநல்லூர் லுங்கி , கைலினா  அவ்வளவு பேமஸ்ஸாம் . அதுனாலத்தான்  என்னவோ  எங்களுக்கு  கைலி , லுங்கி உடுத்துரதுலா  அலாதி  பிரியம் . என் பள்ளிக்  காலங்களில்  எனது  ஊர் பள்ளி  அனைத்திலும்  கைலி உடுத்திக்கொண்டு  கிளாசுக்குள்ள  போகலாம் , லுங்கி  உடுத்தியிருக்கும்  வாத்தியாரும்  ஒன்னும்  கேக்கமாட்டார்.

நான்  நல்லா  படிக்கணும்னு  எங்கப்பா  என்ன பக்கத்து  ஊர் இடைகாலில் சேர்த்துவிட்டார்,  7m வகுப்பில்  இருந்து  அய்யா  பஸ்ஸுல  பிரயாணம்  பண்ணித்தான்  படிச்சது .அப்படி  சேர்த்துவிட்டதுனாலத்தான் நான் இஞ்சினியர்  படிச்சேன்னு  எங்கப்பாவுக்கு  நினைப்பு , ஆனா  எங்க ஊருல படிச்சிருந்தா டாக்டர்  ஆகியிருப்பேன்னு  அவருக்கு தெரியாம  போச்சு. ஊரு பசங்க கூட சாய்ந்தரம் தான் மீட்டிங், உங்க ஸ்கூல்ல என்ன நடந்தது எங்க ஸ்கூல்ல என்னனு ரொம்ம சுவாரஸ்சியமான பேச்சுகல்லோடு ஓடும். பரீட்சய்க்கு பிட் அடிக்கும் முறைய அவனுங சொல்லும் போது அதாவது பிட்ட கைலிலா போட்டு கால விரிச்சு பார்த்து எழுதனும், வாத்தியார் வந்திட்டா, சிம்பிள் கால மடக்கி வச்சிடனும், இப்படியா பல விஷயஙல சொல்லி அவனுங்க ஸ்கூலுதான் பெருசுன்னு சொரிஜ்ஜிவிடுவானுங்க. அத விட உச்சகட்ட வேதனை லீவுதான். அவனுங்க எல்லோரும் முஸ்லீம் பள்ளிக்கூடம்கிறதுனால வியாழன், வெள்ளிக்கிழமைகலிள் லீவு, நமக்கு சனி, ஞாயிறு தான்.வியழன், வெள்ளியில் பள்ளிக்கு போகும் போது நண்பர்கள் அணைவரும் பேட், பலோடு நின்னு வெருப்பேத்துவானுங, அந்த நேரத்துல எங்கப்பா எனக்கு நம்பியாரா தெரிஞ்ஞாரு.

ரமலான் மாததில் எங்க ஊரு பள்ளிகளுக்கு மதியம் வரை தான், எனக்கு எப்போதும் போல தான், இருந்தாலும் கூட எனக்கு அதுல எல்லாம் பெரிய வெறுப்பா தெரியல, ஏன்னா என் பள்ளியில் மொத்தமே 3 முஸ்லீம் பசஙதான். அதனால நமக்கு அந்த மாசத்துல மட்டும் ஏக மரியாதை கிடைக்கும், படிக்கலனாலும் சரி, வீட்டுப் பாடம் செய்யலானானும் சரி வாத்தியார் அடிக்கவர்ர சமயத்துல மொத்த வகுப்புமே சேர்ந்து கோரசா சொல்லும் " சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவன் நோன்பு வச்சிருக்கான்ன்ன்ன்ன்ன்ன்ன்" ஸோ தோழர்கள் தயவில் கிரேட் எஸ்கேப். ஸ்பெஷல் கிளாஸ் இருந்தாலும் நம்மக்கு கிடையாது, வேக வேகமா பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வந்து, நோன்பு திறக்க எந்த பள்ளிவாசலுக்குப் போகலாமுன்னு நண்பர்களுடன் விவாதம். அப்போ அவங்க அவங்க கலெக்ட் பண்ணின இன்பர்மேசன் படி சொல்ல ஆரப்பிபானுங்க. அங்க இன்னய்க்கு பாயாசம், தெரு பள்ளில கரி, மதினா நகர் பள்ளியில பஜ்ஜி...... இப்படி போகும் லிஸ்ட்டு. அதுல ஒன்ன தேர்ந்தெடுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாலயே போய் ஆஜராகி எல்லாம் முடின்ஞ்சு அரைமணி நேரம் கழித்து, விழவை சிரபித்தமைக்காக எங்களுக்குல்லேயே மாறி மாறி நன்றி தெரிவித்து விட்டுத் தான் இடத்த காலி பண்ணுரது.இந்த மாதத்துல்ல (ரமலான்) ஹீரோனு சொன்னா வாண்டுங தான், பள்ளிவாசலில் அவனுங்க இராஜ்ஜியம் தான், எவனும் கேக்க முடியாது. அதிகாலை தொழுகைக்கு பெரியவங்க மட்டய போட்டலும், இவனுன்க தான் பள்ளிவாசலுக்கு ஹவுஸ் புல் போர்டு போடுரது. சின்ன தொப்பி, சின்ன லுங்கி சகிதமா பள்ளிவாசலுக்கு அந்த பசங்க குரூப் குரூபா வர்ரது பாக்குரதுக்கு அவ்வளவு அழகு (பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும்). நோன்பு கஞ்ஞி எடுக்குரதுக்கு அவஙளுக்குத்தான் முன்னுரிமை. இப்போ அது எல்லாம் மாறிப்போச்சு, பேன்ட், சர்ட்டோட, தொப்பியில்லாம இப்போ உள்ள பசங்கல பாக்குரது அத்தனை சுகமா இல்ல.

மாவட்டம் திருநெல்வேலின்னாலும் எங்க ஊருக்குன்னு ஒன்று இல்ல ரண்டு பாஷை இருக்கு, ஒன்னு கிட்டத்தட்ட திருநெல்வேலி பாஷயா இருக்கும், இன்ன ஒன்னு கொஞம் வித்தியாசமா இருக்கும். உதாரணத்துக்கு இரண்டை மேல சொன்னது மாதிரி ரண்டுனுதான் சொல்லுவாங்க. முதல் வகை அத்தா, அம்மானு பேசுர ஹனபி வகை, ரண்டாவது, ச்சீ இரண்டாவது வாப்பா, உம்மானு பேசுர ஷாபி வகை. ரோட்டுக்கு மேக்கால ஹனபி, கிழக்கால ஷாபி. 

ஷபி யின் சில வார்த்தைக்கள் அர்த்தத்துடன்.

1. ஒக்குடு = ரிப்பேர் பண்ணு
2. பய்தா = சக்கரம்
3. ஓட்டயாபோச்சு = ரிப்பேராகிவிட்டது
4. எல்லூட்டம்மா = எதிர் வேட்டு அம்மா......

ஷாபி இப்படின்னா, ஹனிபி ஏரியால பேமஸ், வீட்டுக்கு ஒரு பேர் இருக்கும் அது தான். பொதுவா எங்க வீட்டு பட்டப் பேரு "காத்தரிக்காச் சட்டி". இதுமாதிரி, உதாரணத்திற்கு

1. அணுகுண்டு
2. காணாத்தி
3. புளுவனி
4. பொத்தக்கனி.....

மேல சொன்ன பேரு எல்லாம் எழுதுர வகை பேர்கள். எழுதமுடியாத அளவிற்கு எல்லாம் பேர்கள் இருக்கிறது. 

எங ஊருக்குனு பல பஞ்ச் டயலக்கெல்லாம் இருக்கு

"கடையநல்லூருக்கான் 
குழிக்கனும்னு நெனச்சா, குற்றாலதிலயும்,
கழுவனும்னு நெனச்சா கம்மாயிலயும் தண்ணிவரும்லே..."

"கடையநல்லுருக்கு வந்தா, கழுதகூட திரும்ப போகாது"

சப்பாடு விஷயத்துல நங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டு ஸ்டிரிக்ட்டு ...

காலை = புரோட்டா, சால்னா, முட்டை.
மதியம் = சால்னர், முட்டை, புரோட்டா.
இரவு = முட்டை, புரோட்டா, சால்னா.
இந்தமாதிரி வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவோம்.

நேரம் இருந்தா எங்க ஊருக்கு வந்திட்டு போங்க....... (ச்சே, ச்சே, மேல சொன்னது கழுதைக்குத் தான்)

Courtesy: For Photos Poochai Sha

வாழிய யாம்
வாழிய யெம்மொழி பல்லாண்டு
வாழிய வழியவே..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அரபாத். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக