திங்கள், ஜனவரி 27, 2014

கோபல்ல கிராமம்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.


மங்கயத்தாயாரு அம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட போது அவருக்கு வயது ஜஸ்ட் 137 ஒன்லி. அவளின் 9ம் வயதில் இருந்து கதை தொடங்குகிறது, அதை தன்னுடய மகன் பேரனிடம் விவரிக்கும் விதமாக இந்த நாவல் அமைகின்றது. ஆந்திராவில் இருந்து 60 முதல் 70 பேர் வரை கொண்ட ஒரு சமூகம் எதற்காக தமிழகம் நோக்கி வந்தது, எப்படி தனது வாழ்வாதாரங்களை அமைத்துக்கொண்டது, ஒரு கிராமத்தை உருவாக்கியவிதம் என்ன, அதற்கு அந்த சமூகம் செய்த தியாகங்கள் என்ன என்பது போன்ற விசயங்களை அந்த பூட்டியின் (மங்கயத்தாயாரு) வாயிலாக விளக்குகிறது.

பூட்டியின் ஒன்பதாவது வயதில் அவளின் பெரியப்பா மகள் பருவ வயது சென்னாதேவியின் அழகையும் பெருமையையும் பற்றியே இரண்டு பக்கம் விவரிக்கிறது. ரத்தின வியாபாரிகள், கொள்ளயன் தலைவன் மல்லையா என இவள் அழகில் வாயடைத்து நின்றவர்களின் செய்கைகளை படிப்படியாக விவரிக்கின்றது, அம்மணி  அம்புட்டு அழகாம். இவ்வளவு அழகான பெண் இருக்கும் போது அதற்கு ஈடான அழகுடன் ஒரு ஆண் இருக்கனும் இல்லையா.........., ஆனால் அங்க தான் கதையில டுவிஸ்ட், இந்த கதையில் ஹீரோ கிடையாது, வில்லனாக ஒரு முஸ்லீம் ராஜா வருகிறான் (துலுக்க ராஜா என்றே நாவலில் பூரா இடங்களிலும் வருகிறது).

இவளின் அழகை சில அல்லக்கை முண்டங்களின் வாயிலாக தெரிந்து கொண்டு, அவளை மணக்க சில பரிசுப்பொருட்களோடு தன்னுடய கூட்டத்தினரை அனுப்பி பெண் கேட்கிறார் (மிரட்டுகிறார்). ராஜாவுடன் எதிர்த்து உயிர் வாழமுடியாது என்பதை குடும்ப பொதுக்குழுவில் முடிவெடுத்து அரை மனதுடன் சென்னா தேவியை ராணியாக்க சம்மதிக்கிறார்கள். கல்யாணத்திற்காக பூரா சொந்தக்கார பயபுள்ளைங்களையும் ராஜ இருக்கும் இடத்துக்கு, இரண்டு நாள் பயணமாக அழைத்துவருகின்றார்கள். பெண் வீட்டாருக்கு தடாபுடாலாக "மாட்டுக்கறி" விருந்து ஏற்பாடாகிறது என்று தெரிந்து, அதற்குமேல் அங்கிருந்தால் மோசம் என்று எண்ணி, கும்பலாக ராவோடு ராவாக கம்பியை நீட்டுகின்றார்கள்.

ராஜாவின் குதிரைப்படை துரத்திவரும் போது இடைப்படும் பெரிய்....ய ஆற்றினை, அவர்கள் எப்படி கடந்து செல்கிறார்கள் என்று ராம நாரயணன் பட கிராபிக்ஸை மிஞ்சிம் அளவிற்கு 137 வயது கிழவி சொல்லுவது, ‘அடேங்கப்பா’ ரகம். அதை அடுத்து உதவி செய்யும் ஒரு செல்வந்தர், தமிழகத்தை நோக்கி போகச்சொல்லும் பெண் உருவில் வரும் தெய்வம் என சுவாரஸ்யமோ, சுவாரஸ்யம். இடைப்பட்ட காலங்களில் பிணக்கு ஏற்படும் சொந்தபந்தங்கள், பினியில் ஏற்படும் சாவு என பல சோக சீன்கள்.

யாருக்காக துலுக்க ராஜாவிடம் இருந்து தப்பிக்கின்றார்களோ அந்த பியூட்டிபுல் லேடியும், நோயினால் இறந்துவிடுவது ஒரு பெரிய டிராஜெடி. இதுக்கு மேல ஒரு அடி எடுத்துவைக்க முடியாது என்று முடிவானவுடன், அங்கு இருக்கும் காட்டின் ஒரு பகுதியை சீராக்கி விவசாயம் செய்யமுனைகிறது இந்த சமூகம். காடுன்னா, எர்வாமேட்டின் ஆயில் மூலீகைகள் இருக்கும் அமேசான் காடுகளை விட ரொம்ப அடர்த்தியானது போல, கோடரியால் வெட்டி வெட்டிப் பார்த்து முடியாமல் போக. தங்களுக்கு தேவையான பகுதியை காட்டுப்பகுதியில் இருந்து பிரித்து, அந்த பகுதியை மட்டும் தீ வைக்கின்றனர்.

அந்த பகுதியை எப்படி ஒரு கிராமமாக உருமாற்றம் செய்கின்றார்கள், விவசாயம், வணிகம், தொழில்துறை.....இப்படியாக எவ்வாறு அந்த கிராமம் பரினாமவளர்ச்சி அடைகின்றது என்பதை மிகுந்த விருவிருப்போடு விவரிக்கின்றது. இவை எல்லாம் மங்கய்த்தாயாரு அம்மாவின் ஃபிளாஸ்பேக். 125 வருடங்கள் கழித்து அந்த கிராமம், எப்படி இருக்கிறது?, அங்குள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள்?, என்னென்ன வேலை செய்பவர்கள்?, அவர்களின் பட்டப் பெயர் என்ன?, அந்த பட்டப்பெயர்களின் பெயர்காரணம் என்ன? என்பதை பல் வெளியே தெரியாதபடி சிரிக்கும் அளவிற்கு ஆசிரியர் ஹியூமரில் விளையாடி இருக்கிறார்.

கதைகாலத்தில், அதாவது கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட காலத்தில், அந்த கிராமத்தில் நடக்கும் கொலை, அதற்கான தண்டனை, அதை எவ்வாறு நிறைவேற்றுகின்றார்கள் என்பதையும், தீவட்டி கொள்ளையர்களின் அட்டூழியங்கள், அவர்களை ஓட, ஓட விரட்டுவது என வீரதீற செயல்களையும் வைத்து அந்த கிராமத்தின் கட்டுக்கோப்புகளையும், மக்களின் ஒற்றுமையையும் நம்மாள் அறிந்துகொள்ளமுடிகின்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் வருவதோடு இந்த நாவல் முடிவடைகின்றது.


வெறும் 176 பக்கம் கொண்ட அற்புதமான நாவல் இது. 

------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

திங்கள், ஜனவரி 13, 2014

ஆழ்வார் VS போக்கிரி.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
பொங்கள் என்றுதான் என் நினைவு, எட்டு வருடத்துக்கு முன்பு ஆழ்வாரும், போக்கிரியும் ரிலீஸ். தீபாவளி, பொங்களுக்கு எல்லோரும் சொந்த ஊருக்கு போய்விடுவதால், பெரும்பாலான இந்துப் பண்டிகைகளின் நான் பெங்களூரில் ஒண்டியாக இருப்பேன். நேரம் போகவேண்டுமே என்பதற்காக படத்துக்குப் போவதும் உண்டு. அஜித் படம் ஏதாவது ரிலீஸ் என்றால் 1000 ரூபாய் கடன்வாங்கியாவது ஒரு பத்து பேரை கூட கூட்டிசெல்வது வழக்கம்.

கட்சிக்காரர்கள் மாநாட்டிற்கு கூட்டிச்செல்வது போலத்தான் இதுவும், தியேட்டர் டிக்கெட், இடைவெளியில் முருக்கு, கூல்ட்ரிங்க்ஸ் அப்புறமாக இரவு சாப்பாடு என்று அனைத்தும் அடியேனின் செலவே. படம் சூப்பராக இருந்தால், இரவு சாப்பாடு அசைவமாக இருக்கும் இல்லன்னா இட்லியும், கட்டிச்சட்னியும் மட்டும்தான். எனக்கு தெரிந்து அசைவம் வாங்கிக்கொடுத்ததாக நினைவு இல்லை (பில்லா1 தவிர்த்து). சில (பல) படங்கள் ரொம்ப மொக்கையா இருக்கும், அந்த நேரத்துல எப்படிடா இவங்கிட்ட சாப்பாடு வாங்கி சாப்பிடுறதுன்னு எண்ணி, என்னுடய பில்லையும் சேர்த்து கூட்டிக்கொண்டுவந்த கொள்கை குன்றுகளே கட்டிவிடுவார்கள்.

இப்படி எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொண்டாலும், அஜித் படம் என்றால் அல்லு கழண்டு, தெரிச்சு ஓடுவானுங்க. “போன படம்மாதிரி இருக்காதுடா, கண்டிப்பா சூப்பரா இருக்கும், நீ வேணும்னா பாரு, கண்டிப்பா 150 நாள்தாண்ட” என்று கெஞ்சி கூத்தாடி இஸ்துக்குன்னு போவனும். அதுவும் விசிலடிக்க தெரிஞ்சவனுங்களுக்கு எக்ஸ்ரா கொஞ்சம் செலவு செய்யனும். தல வர்ற நேரமா பார்த்து பக்கி தூக்கிரும், எழுப்பு விட்டு “விசில் அடிடா, அடிடா” ன்னு கத்துறதுக்குள்ள தல எண்ரி முடிந்து, வில்லன் முகத்த காட்டிருவானுங்க.

மேட்டருக்கு வருவோம்.

அந்த பொங்களுக்கு அஜித்தின் ஆழ்வாரும், விஜயின் போக்கிரியும் ரிலீஸ். “அஜித் படம் வருது, கண்டிப்பா இங்க இருந்தா இவன் படம் பார்க்கனும்னு தூக்கிட்டு போயிருவான்”னு பயபுள்ளைங்க சுதாரிச்சிட்டானுங்க. பாட்டி செத்ததுக்கு போகதவனுங்க கூட இந்த தடவ பஸ் ஏறிட்டானுங்க. ஆள் கிடக்காம ரொம்ப கஷ்டமா போச்சு. எனக்கு தெரிஞ்சு, அஜித் குமாருடைய படத்துக்கு என்னுடன் வெறும் ரெண்டே ரெண்டு ஜீவன்களை கூட்டிகொண்டு சென்றது ஆழ்வார் படத்துக்கு மட்டுமே.

நாங்க இருந்த இடத்துல இருந்து வெறும் 5 கி.மீட்டரில் லாவண்யான்னு ஒரு தியேட்டர் இருந்தது. “கண்டிப்பா, அங்க எல்லாம் டிக்கெடி கிடைக்காது. புஷ்பாஞ்சலி போகுறதுக்கு பதிலா மாரத்தாளி ஏரியாவில் இருக்கும் மல்டிபிளக்ஸ்க்கு போகலாம்” என்று அந்த இருவரிடமும் கூறினேன். அப்போது இருந்ததிலேயே ரொம்ப காஸ்டிலியான தியேட்டர் அதுதான். இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான்,  என் புண்ணியத்துல அந்த தியேட்டரை பார்த்தால்தான் உண்டு என்று அவர்களுக்கும் தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பயணம் செய்து, தியேட்டருக்கு வந்தால். கூட்டம்னா, கூட்டம் அப்படி ஒரு கூட்டம். சுத்திப் பார்த்தா எல்லாம் அஜித் குமாரின் கட் அவுட் தான். விஜய்க்குன்னு அங்க ஒன்னு, இங்க ஒன்னு என்று இருந்தது. மற்றபடி தியேட்டரை சுத்தி தல போஸ்டர்தான், ஃபெலக்ஸ்தான், அஜித் படம் போட்ட கொடிதான். ஒரே திருவிழாக்கூட்டம்.

டிக்கெட் கவுண்டருக்கு கூட்டம் ஐநூறு மீட்டராவது இருக்கும். மற்ற இரண்டு கவுண்டர்களும் கிட்டத்தட்ட காலியாகவே இருந்தது. அந்த தியேட்டரில் ஹிந்தி, தெலுங்கு படங்களும் ஓடிக்கொண்டிருந்ததால், அது அந்த படங்களுக்கான கவுண்டர் என்று நினைத்துக்கொண்டு இந்த பெரிய்ய்ய்ய கியூவில் நின்று கொண்டிருந்தேன். என்னுடய முறை அரைமணி நேரத்துக்கு பின்பு வந்தது, நான் காசை நீட்ட, “இன்னைக்கு எல்லா ஷோவுக்கும் டிக்கெட் முடிந்துவிட்டது நாளைய ஷோவுக்கு டிக்கெட் தரவா?” என்று டிக்கெட் கொடுப்பவன் கேட்க, எனக்கோ “சே!!! தல படத்துக்கு, இம்புட்டு டிமாண்டா?” என்று மெச்சிக்கொண்டேன். “அண்ணே எஸ்வந்த்பூரா ஏரியாவுல இருந்து, பார்த்தா உன் தியேட்டர்ல தான் படம் பார்கனும்னு வந்திருக்கேன். சாயங்கால டிக்கெட் இல்லன்னாலும் பரவாயில்லை, நைட்டு 10 மணி ஷோவுக்காவது மூனு டிக்கெட் கொடுண்ணா....” பாவமா மூஞ்சை வச்சிக்கிட்டு கேட்க. “நான் என்னடா வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன், இல்லடா, எல்லாம் புக் ஆயிடுச்சு, வேணும்னா, ஆழ்வார் படத்துக்கு தரவா, இந்த ஷோவுக்கே டிக்கெட் இருக்கு..”ன்னு சொல்ல. கொதிச்சிட்டேன் “அப்புறம் இம்புட்டு நேரம் நீ எந்த படத்த பத்தி சொல்லிகிட்டு இருந்த?”ன்னு பெருங்கோபம் கொண்டு கேட்டேன் (நெற்றிக் கண்ணை மட்டுந்தேன் தொறக்கல). அவன் ரொம்ப கூலாக “போக்கிரி” ன்னு சொன்னான்.

நம்முடய டிக்கெட் கிடைத்து, தியேட்டருக்குள்ள போனா...... என் வாழ்க்கையில முதல் தடவையா வெறும் பதினஞ்சு பேரோட பார்த்த ஒரே படம் இதுதான், அதுவும் ரிலீஸ் ஆன முதல் நாளில் (“வெங்காயம்”ன்னு ஒரு படம் அதுக்கு கூட ஒரு அம்பது பேரு இருந்திருப்பான்). சரி, அஜித்துக்குன்னு இந்த 15 பேராவது வந்தானுங்களேன்னு எண்ணி ஒரு சின்ன சந்தோசம். அஜித் எண்ரி சீனில் நான் (மட்டும்) கையை தட்டி ‘தல..............”ன்னு கத்த. அந்த பதினஞ்சு பேரும் திரும்பி விட்ட லுக்கு இருக்கே.................90 வயசு பாட்டிய ரேப் பண்ணினவனா பார்க்குறதுமாதிரி கொலவெறியோட பார்த்தானுங்க.

அப்புறமாத்தான் தெரிஞ்சுது, அவனுங்க எல்லாம் போக்கிரி படத்துக்கு, டிக்கெடி கிடைக்காம வந்து உக்காந்தவனுங்கன்னு. இடைவெளியில் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சிடுச்சு. “பாய், பார்த்தீங்களா?, எவனுமே இல்ல, பேசாம நாமளும் போயிடுவோம்”ன்னு கூப்பிட்டு வந்த ஒரு அடிமை முன்மொழிய, அதை இன்னொரு அடிமை வழிமொழிய. “பாருங்கடா, செகண்ட் ஆஃப் தான் பயங்கரமா இருக்கும், கண்டிப்பா பல டுவிஸ்ட் எல்லாம் இருக்கும், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்....”ன்னு ஏதேதோ சொல்லி பார்த்துவிட்டு வந்த படம் அது.

என்னோட டவுட்டு என்ன என்றால், போஸ்ர ஒட்டினவன், பிளக்ஸ் வச்சவன், கொடி கட்டினவன் எல்லோரும் எங்க போனானுங்க? என்றுதான். உங்க டவுட்டு என்ன என்பது எனக்கு புரியுது, கூட்டிகொண்டு போன அந்த ரெண்டு பேரும் இருக்கானுங்களா ? என்று தானே...


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

ஞாயிறு, ஜனவரி 05, 2014

மச்சி ஒரு குவாட்டர்....ஸ்சொல்லேன்.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

எப்படி புருசன்-பொண்ட்டாட்டி, சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாம் பிரபலமோ அதுமாதிரித்தான் குடிகாரர்களின் ஜோக்கும் ரொம்ப பிரபலம். புருசன்-பொண்ட்டாட்டி ஜோக்ஸ், சர்தார்ஜி ஜோக்ஸ், பெரும்பாலும் 90% கற்பனைத்திறன் கொண்டு சொல்லப்படுபவை. ஆனால் குடிகாரர்களின் ஜோக்ஸ் 99% உண்மையானதாகவே இருக்கும். தண்ணியப் போட்டுட்டானுங்கன்னா பயபுள்ளைங்க பச்சப்புள்ளையா மாறிடுவானுங்க, அந்த நேரத்துல எவனும் பொய்யே பேசமாட்டான். இதுல எனக்கு நல்ல அனுபவம் இருக்குது.

என் நண்பர்களுடய எல்லா பார்டியிலும் நான் இருப்பேன், நான் தண்ணி அடிச்சது கிடையாது (சொன்னா நம்பனும், அதுக்காக சூடம் ஏத்தி சத்தியமெல்லாம் பண்ணமுடியாது). எல்லா கேங்கிலும் என்ன மாதிரி ஒரு பலி ஆடு இருக்கும். சிக்கன் வாங்கிட்டு வர, ஆப்பாயில் போட்டு கொண்டுவர, சோடா வாங்கி வர, இப்படி எல்லா வேலைகளும் நாங்கதான் செய்யனும். அடுத்து, தண்ணியப்போட்டுவிட்டு மட்டயானதுக்கு அப்புறம், தூக்கிட்டுப்போயி அவ, அவனுங்கு பெட்டுல தூக்குப்போடுறது வரை என்ன மாதிரி பலி ஆடுங்கதான் செய்யனும். இதற்கு கூலி இல்லாம இருக்குமா?. இருக்கும், அவனுங்க வாங்குற 2 கிலோ சிக்கன் 65யில், ஒருகிலோ நமக்குத்தான், ஆப்பாயிலில் அனைத்து வெள்ளைக்கரு பகுதியும் நமக்குத்தான்.

புதுசா தண்ணி அடிக்கிறவனுங்க யாராவது நம்ம கேங்குல சேந்திட்டான்னு எனக்கு தெரிஞ்சுச்சுன்னா, அடுத்த பத்து பார்ட்டிக்கு நான் போகவே மாட்டேன். புது குடிகாரனுங்க, ஒரு 50 ரூபா பீர குடிக்குறதுக்கு 500 ரூபா நொருக்கு தீணிய திண்ணுடுவானுங்க. அந்த சிக்கனுக்கும், ஆப்பாயிலுக்கும்தான் அந்த அரசவையிலே கவிஞனாக இருப்பேன், அதுவும் இந்த புதுக்குடிகாரனுங்களால பங்கம் வந்திரும்.

எங்க கூட ஒருத்தரு வேலை செஞ்சாரு, அவர் தண்ணிபோட்டாத்தான் ஸ்டெடியா இருப்பாரு, உடலில் ஆல்கஹால் அளவு குறைஞ்சிடுச்சுன்னா, நாக்கு உளரும், நடை தள்ளாடும். இந்தமாதிரி ரொம்ப வித்தியாசமான ஆளு. சனிக்கிழமை ஆச்சின்னா, போச்சு. மேல சொன்னமாதிரி பச்சப்புள்ளையா மாறிடுவாரு மனுசன். அதுவும் கொஞ்சம் அதிகமாயிடுச்சுன்னா, பிறந்த குழந்தைமாதிரி மாறிடுவாரு. அப்புறமா நாங்கதான் பேண்ட், சர்ட் எல்லாம் மாட்டிவிடனும்.

அந்த ஆளு ரொம்ப பாசக்காரர், அதும் நான்னா அவருக்கு ஒரு தனி பாசம்தான். ஒரு சனிக்கிழமை இரவு, எதுவுமே வாங்காமல், பூஜையை ஆரம்பிச்சிட்டானுங்க. பத்து நிமிசத்து ஒரு தடவ என்ன கூப்பிட்டு, வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா, சிப்ஸ் வாங்கிட்டு வா, கோக் வாங்கிட்டு வான்னு ஒரே இம்சை. ஒரு தந்தூரி சிக்கன கூட ஒழுங்க திங்கவிடல. இப்படி மாறி மாறி எல்லோரும் என்னிடம் வேலை ஏவ, எனக்கு நடக்கும் கொடுமையை கண்டு, நம்மாளுக்கு சாமி வந்து ஆடா ஆரம்பிச்சிட்டாரு, ‘என்னடா நெனச்சீங்க இவன என்ன முட்டாப்ப்.... நெனச்சீங்களா? இல்ல கிருக்க்க்க்.....ன்னு நெனச்சீங்களா?’ ன்னு எனக்கு சப்போர் பண்ணி சண்ட போடுறாரா இல்ல, என்னய சண்டைக்கு கூப்பிடுறாரான்னே தெரியாம, ‘ஙே’ ன்னு முழிச்சிக்கிட்டு நின்னேன்.

‘நீ இருடா தம்பி, இந்த தடவ நான் போய் வாங்கிட்டு வாரேன்’னு சொன்னாரு,

“இல்லண்ணே நானே போயி வாங்கிட்டு வாரேன், நீங்க இப்ப நிதானத்துல இல்ல.......’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள.

என் நிதானத்தப் பத்தி உனக்கென்னடா தெரியும், நான் சொல்லி நீ போனீன்னா, இவனுங்க உன்ன கேனக்க்க்க்....கிருக்க்க்கு......முட்டாப்ப்ப்.....ன்னு நெனப்பானுங்க’

இதுக்கு அவனுங்களே தேவலாம்னு மனுசுக்குள்ள நினைத்துக்கொண்டு ‘சரிண்ணே, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், நீங்களே போய்ட்டுவாங்க, அதுவரைக்கும் உங்க சிக்கனை நான் பாத்துக்குறேன்னு’ சொல்லி இரவு 9 மணிக்கு அனுப்பிவச்சோம்.

போன மனுசன் போனவன்தான், மணி 10 ஆச்சு, 11 ஆச்சு. ஆளக்காணோம். பத்து வீடு தள்ளி இருக்குற கடையில பெப்சி வாங்கப்போனவர காணோம்ங்குற கவலை, எல்லோருக்கும் அடுத்த ரவுண்டுக்கு பெப்சி இல்லங்குற போதுதான் தெளிஞ்சுது, சாரி......, தெரிஞ்சுது. மாடில நின்னு பார்த்தா, அண்ணன் வாங்கப்போன கடை முன்னாடி ஒரே கூட்டம். பதறிப்போய் எல்லோரிடமும் சொன்னேன்.

ஏற்கனவே, அந்த கடக்காரனுக்கும் நம்ம அண்ணனுக்கும் ஆகாது, அக்கம்பக்கத்துல வேற கடை இல்லை என்பதற்காக, அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஒரு ரூபாய் அதிகம்வைத்தே விற்பான். இது நம்ம அண்ணனுக்குப் பிடிக்காது, ‘ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கட்டும், இவன ஒரு வழி பண்ணுறேன்னு’ அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு. இந்த விசயம் நினைவுக்கு வர, கூட்டம், அண்ணன் இருந்த நிலை எல்லாம் ஒன்னு கூடி, ‘போச்சுடா, ஏழரைய கூட்டிட்டாருடா, செத்தாண்டா அந்த கடைக்காரன், போலிஸ் கேஸ் ஏதாவது ஆகிடுச்சா?, பாட்டில எடுத்து மண்டய பொழந்திருப்பாருரோ?,” இப்படி ஆளாளுக்கு பல கேள்விய எங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, கூட்டத்தை விலக்கி அண்ணனைத்தேடுனா....................

அண்ணன் பாதாள சாக்கிடையில பல்டி அடிச்சி கிடந்தாரு. “நான் தலைகீழாத்தான் குதிப்பேன்” ங்குறமாதிரி, கட்டை மேல ஏறிப்போகாமல், ஜம்ப் பண்ணி, சாக்கடைகுள்ள போய்ட்டாரு. தூக்குங்கடான்னு தூக்கி கொண்டுவந்து, குளிப்பாட்டி பெட்டுல போட்டு தூங்கவைக்குறதுகுள்ள, அடிச்சவனுங்களுக்கெல்லாம் இறங்கிடுச்சு. தானம், தர்மம் செய்யுறதுல, இவர மிஞ்ச எவனும் இல்ல. கர்ணன் எல்லாம் வந்து கையேந்தனும் அந்த அளவுக்கு வள்ளல். ஒரு ஞாயிற்றுக்கிழமை ரூமை கிளீன் பண்ண வந்த 5 லேபர்களின் சட்டையைப் பார்த்து, போதையில் இருந்த மனுசன் ‘என்னடா சட்டை இது, எங்கிட்ட வேலைபாக்குறவனுங்க இப்படி இருக்கக்கூடாது, நல்லா டிப் டாப்பா இருக்கனும்’னு சொல்லி, துவச்சி காயப் போட்டிருந்த எங்க சட்ட, பேண்ட் எல்லாத்தையும் எடுத்து தானம் கொடுத்திட்டாரு. அந்த ஒரு வாரம் அவனுங்க இஞ்சினியர் மாதிரி டிப் டாப்பா இருந்தானுங்க, நாங்க லேபர் மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருந்தோம்.  

இப்படி அவரு அலும்பலுக்கு அளவே இல்லாம போய்கொண்டிருந்தது. அவர் சொன்ன ஒரு கதை.
ஒரு பார்ல ஒருத்தன் ஓவரா தண்ணியப் போட்டுவிட்டு, சேர்ல இருந்து எழுந்து நடக்க கூட முடியாமல், தள்ளாடி தள்ளாடி கீழே விழுந்துகொண்டே இருந்தானாம். இத பார்த்த பக்கத்து சீட்டுக்காரன். இவனுக்கு ரொம்ப ஓவராகிடுச்சு, நடக்க முடியாத அளவுக்கு குடிச்சவன் எப்படி வண்டி ஓட்டி வீட்டுக்கு போவான்னு இரக்கப்பட்டு, அவன் வீட்டு அட்ரஸை கேட்டு, அவனை வீட்டில் விடப்போனானாம். அவன் வீடு வந்ததும், அவனின் மனைவி ‘என் கணவனை வீட்டில் பத்திரமா கொண்டு வந்ததுக்கு, கோடி புண்ணியம், ஆனா, அவருடைய வீல் சேரை எங்கே?”ன்னு கேட்டாளாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.