வியாழன், ஜூன் 28, 2012

ஆடைக் கலா(அப)ச்சாரம்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
1980 களில் ஒரு பெண் கல்லூரிக்குப் போகும் போது, தன்னுடய தாயாரிடம் கேட்பதுண்டு, “அம்மா நான் இன்னைக்கு தாவணி உடுத்தவா? இல்லை சேலை உடுத்தவா?. இந்த கலாச்சாரம் 1990-2000 க்கு இடைப்பட்ட காலங்களில் மாற்றம் கண்டு, ஒரு பெண் தன் தாயிடம் “அம்மா நான் இன்னைக்கு சுடிதார் போடவா? இல்லை ஜீன்ஸ் போடவா? என்றானது. ஆனால் இந்த காலகட்டத்தில் ஒரு பெண் அம்மாவிடம் கேட்பதற்கு முன்பாக அம்மாவே கெஞ்சிக்கொண்டிருப்பாள் “ஏதாவது கொஞ்சமாவது போட்டுக்கிட்டு போமா.

பெண்களைப் பொருத்தவரை, பெண்ணுரிமை என்பது பாதி உடை அணிவது என்பதாகிவிட்டது. காலத்தின் மாற்றம் என்று சொல்லுபவனை கல்லால் அடித்தே சாகடிக்கவேண்டும். கால மாற்றம் என்பது பெண்களுக்கு மட்டும் தானா? ஏன் ஆண்களுக்கு இல்லையா?. ஆண்களின் மாற்றம் என்பது கோமளத்தில் இருந்து வேஷ்டியாக மாறி இப்போது பேண்ட் என்று முற்றும் மூடிய ஆடையாக உருமாறியிருக்கின்றது. பெண்களுக்கு அப்படியா? சேலை, ஸ்கெர்ட்டாகி இப்போது ஜட்டிலெவலுக்கு வந்திருக்கின்றது.

துபாய், 75% வேற்று நாட்டு மக்கள் மட்டுமே நிரம்பிவழியும் பூமி. இங்கு ஒரு தியேட்டரில் டிரஸ் கோடு உண்டு, எந்தமாதிரி என்றாள், யார் வேண்டுமானாலும் அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டுவரலாம், அல்லது அதை கையில் எடுத்துக் கொண்டு, அம்மணமாகக் கூட வரலாம், ஆனால் முழுதாக மூடிய கைலியோ, அல்லது வேஷ்டியோ உடுத்திக்கொண்டு வரக்கூடாது என்பது. என்ன கொடும சார் இது. மேற்கத்திய நாட்டுப் பெண்கள், அவர்களது நாட்டில் அணியும் ஆடையை விட ரொம்ப குறைவு, இங்கு அணிந்து கொண்டு திரியும் ஆடைகள். ஆட்டுனா, அவிழ்ந்து விழுந்து விடும், ஆட்டாவிட்டாள், அதுவே விழுந்திரும், என்றாக இருக்கிறது அவர்களின் ஆடை.
ஒரு முறை துபாய் மெட்ரோவில் ஏறிய போது, ஒரு குடும்பம் என்னொப்பம் ஏறியது, இரண்டு மகள்களுடன் ஏறிய அந்த தந்தையின் கையில் மட்டும் ஆறு, ஏழு கைப்பைகள் இருக்கும், அதை வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. அவர் மனைவிக்கு உட்கார இடம் கிடைத்தும் கூட, அந்த வயதிலும் லிப்ஸ்டிக்கை அப்பியபடி இருந்த அவள், அந்த கைப்பைகளைப் பற்றிய கவலையின்றியே இருந்தார். அவர்களது இரண்டு மகள்களின் ஆடை என்பது அத்தனை மோசம், காற்று ஓங்கு அடிச்சா, ஒன்றும் காணாது போய்விடும் அளவிற்குத்தான் இருந்தது. அவர்களின் மூத்த மகள் எனக்கு எதிர் ஸீட், மேலாடை, என் கைக்குட்டை அளவை விட குறைவு. இரண்டாவது மகள் மேலாடை பராவாயில்லை என்ற அளவில் இருந்தது. அவளுக்கு உட்கார இடம் கிடைக்காததால், எனக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அவளின் அம்மா மடியில் உட்கார்ந்தாள். என் மூஞ்சு அவள் முதுகை ஒட்டியிருந்தது. அப்போது தான் பார்த்தேன் பின்னாடி ஒன்னுமேயில்லை, சத்தியமா சொல்லுகிறேன், அந்த ஒரு மணி நேர ரயில் பயணத்தில் அந்த மேலாடை எப்படி நிற்கின்றது, எங்கு முடிச்சு இருக்கிறது என்று கண்டுபிடிக்க நான் படாத பாடு பட்டேன், ஆனா கடைசி வரை என்னால் அதை கண்டே பிடிக்க முடியவில்லை.

இப்போது டுவிட்டர் எனும் சமுக வளைதளத்தில், சிலரது முயற்சியால் துபாயில் டிரஸ் கோடு எனும் ஆடை கலாச்சாரத்தினைப் பற்றி விழுப்புணர்ச்சி ஏற்படுத்த, அதற்கு ஆதரவாக அதிக மக்கள் விருப்பம் தெரிவிக்க, இப்போது அரசாங்கம் கையில் சாட்டையை எடுத்துள்ளது. மேற்கத்திய பெண்கள் இந்தமாதிரியான ஆடை அணியவதற்கு சொல்லும் காரணம் இங்குள்ள வெப்பமே என்றாலும், அவர்களின் இடிப்பில் கைபிடித்து நிற்கக்கூடிய கணவன் கோர்ட், சூட் போட்டு நிற்கமுடிகிறது என்றாள், ஏன் இவர்களால் முடியாது?. முன்னாடி டிரஸ் கோடு என்றாள் ஒழுக்கமான ஆடை அணிவது பற்றியாக இருந்தது, இப்போது டிரஸ் கோடு என்றாள் டிரஸ் போடு என்ற அர்த்தமாகிவிட்டது பெரிய அபத்தம்.
இந்தியாவிலும் இந்த மாதிரியான கலாச்சாரங்கள் வர ஆரம்பித்துவிட்டது, நான் கண்டதாக, மேல் கூறிய சம்பவம் ஒரு வட நாட்டு இந்திய குடும்பமே!. பெங்களூர், மும்பை போன்ற நகரங்கள் எல்லாம் அத்தனை கொடுமை. அண்டர்வியர் அணிந்து நடக்கும் ஒரு ஆணுக்கு இருக்கும் கூச்சம் கொஞ்சம் கூட, உள்ளாடை தெரிய நடக்கும் பெண்களுக்கு இல்லை. தொடைதெரிய நடப்பதா நாகரீகம்?. மால்களில் இந்த கொடுமைகள் ரொம்ப அதிகம். மாலுக்கு வரும் சில பெண்களுக்கு ஏனோ பீச்சுக்கு குளிக்க வருவது போன்ற நினைப்பில் டிரஸ் போட்டுக்கொண்டு வருகின்றார்கள்.

இதற்கு முந்தய கால கட்டங்களில், பெண்கள் வயதுக்கு வரும் வயது 20தை ஒட்டி இருந்தது. ஆனால், காலமாற்றம், உணவு பழக்க மாற்றம், வானிலை மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம் என எல்லா மாற்றத்தினாலும் இப்போது பெண்கள் 15ஐ ஒட்டியே வயதுக்கு வந்துவிடுகின்றார்கள். ஆனால் நம் நாட்டில் இன்னும் அதிக பள்ளிக்கூடங்களில் அந்த பாழாய் போன குட்டப்பாவாடை கலாச்சாரம் மட்டும் ஓயவில்லை. மாற்றங்கள் வரத்தான் வேண்டும், எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். செயல் படுத்தத்தான் வேண்டும்.

துபாயில் இந்த டிரஸ் கோடு சட்டத்திற்கு, “இது இங்கு வந்தவர்களை அடிமையாக்கும் செயல், “முட்டாள்தனமானது என்று வரும் எதிர்மறைவிமர்சனங்களுக்கு ஒருவரின் பதில் “நாம் ஒரு வீட்டிற்கு விருந்து சாப்பிட செல்கிறோம், அங்கு வாசற்படியில் “உங்கள் காலணிகளை இங்கு களட்டவும் என எழுதியிருக்கின்றது, அங்கு நீங்கள் உங்களது செருப்பினை விடுகின்றீர்கள், வரவேற்பரையில் “புகை பிடிக்காதீர் என எழுதியுள்ளது, ஆகையால் நீங்கள் அதை தவிர்த்துவிடுகின்றீர்கள். இது எப்படி சாத்தியமோ அதே போல இதுவும் சாத்தியமே.

----------------------------------------------------------------------------------யாஸிர். 

புதன், ஜூன் 20, 2012

எனது வலைத்தளத்தின் முதல் பிறந்த நாள்.


நம் அனைவரின் மீதும் இறைவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
இதுவரையிலும் என்னால் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகவே இருக்கின்றது. ஒரு ஆண்டு கழிந்துவிட்டது நான் பதிவுலகில் பாதம் பதித்து. ரொம்ப ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்துடன் என்னை நான் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னால் எந்த ஒரு விசயத்தையும் சீக்கிரமாக ஆரம்பித்து விட முடியும். ஆனால் அதனை தொடர்ந்து நடத்தும் தகுதி சுத்தமாக என்னிடம் இருந்தது இல்லை. நகம் கடிப்பது, கெட்டவார்த்தை பேசாமல் இருப்பது, உடம்பை குறைக்க உடற்பயிற்சி செய்வது, வேலையை பெண்டிங் வைக்காமல் இருப்பது என பல பல விசயங்களை நான் ஆரம்பித்து பார்த்ததுண்டு, எல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு முத்து முத்தாய் நடக்கும், பத்தாவது நாளில் பால் ஊற்றப்பட்டுவிடும்.

இரண்டாவது ரேங்க் எடுக்கும் ஒருவன், முதல் ரேங்க் எடுப்பதில் இருக்கும் சந்தோசம் என்பது, ஐம்பதாவது ரேங்க் எடுக்கும் ஒருவன் நாற்பத்தி ஒன்பதாவது ரேங்க் எடுக்கும் சந்தோசத்திற்கு முன்னால் ஒன்றும் கிடையாது. அது மாதிரித்தான் என்னுடைய சந்தோசமும். பத்து வருசம் பதிவு போடுறவன் எல்லாம் சும்மா இருக்கும் போது இவன் தொல்ல தொண்டய கவ்வுதேன்னு நீங்க நினைக்கலாம், ஆனா என்னுடய சந்தோசத்த, நீங்க நானா இருந்தால்தான் உண்மையா உணரமுடியும்.

என்னை பதிவுலகின்பால் தர, தரவென இழுத்துவந்த இரண்டு நண்பர்களின் (பிரவின், அருண் பிரகாஷ்), வலைத்தளங்களில் ஏனோ இப்போது பதிவுகள் வருவதே இல்லை. அவர்கள் இருவருக்கும் இந்த நாளில் என் நன்றியினைத்தெரிவித்துக் கொள்கின்றேன் (பதிவு போடாமல் இருப்பதற்கு அல்ல, எனக்கு பதிவுலகை அறிமுகப்படுத்தியமைக்கு)

எத்தனை பேர் எவ்வளோ விசயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சில இணைய தளத்தில் கிடைக்காத விசயங்கள் எல்லாம் இந்த பதிவுலகில் கிடைக்கின்றது. முகம் தெரியாத பல மகாத்மாக்களின் வாழ்க்கை வரலாறு இலவசமாக பதிவுலகில் பரவிக் கிடைக்கின்றது. சொந்த கதை, சோகக்கதை, காதல் கதை, கட்டுக்கதை என எத்தனை எத்தனை.

பதிவுலகில் அடியெடுத்து வைக்கும் போது இரண்டு விசயங்களை நான் செய்வது கூடாது என எண்ணியிருந்தேன், அது சினிமா செய்தி / விமர்சனம் போடுவது, சிலருக்கு / சில விசயங்களுக்கு ஜால்ரா அடிப்பது. இந்த இரண்டில் இதுவரைக்கும் நான் தடம்புரண்டதாக எண்ணவில்லை. மலையாளிகளிடம் பேசும் போது ஒரு விசயம் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும், அவர்களுடய பேச்சில் சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களே இருக்காது. எப்போதும் அரசியல், வியாபாரம், குடும்ப சூழல், எதிர்காலம் இதைப்பற்றியதாகவே இருக்கும். ஆனால் நாம் நம் நண்பர்களிடம் பேசும் 90% சினிமா, சினிமா, சினிமா மட்டுமே. எனவே, ரூமில் போயும் சினிமா, பதிவுலகத்திலும் சினிமா என சினிமாத்தனமாக மாறிவிடக்கூடாது என எண்ணித்தான், அந்த மாதிரியான பதிவுகளை நான் இடுவதில்லை. அதே நேரத்தில் சினிமாவை திருத்திவிட துடிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் உணர்ச்சியை வெளிப்படுத்த தயங்கியது இல்லை.
பதிவுலகில் வந்த பின்புதான் எனக்கு புத்தம் படிப்பதன் ஆர்வம் அதிகமானது. எனக்கு எப்போதும் வரலாற்று சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பது மிகவும் பிடிக்கும். வலைப்பதிவுக்குள் வந்த பின்பு, கதை, கட்டுரைகளை படிப்பதில் ஆர்வம் அதிகமாகிவருகின்றது. எனக்கு தெரிந்து இதற்கு முன்பு நான் படித்த ஒரே ஒரு புத்தகம் என்றால் அது பா.ராகவன் எழுதிய “நிலமெல்லாம் ரத்தம்தான். ஆனால் நான் பதிவுலகில் பலருடைய பதிவுகளைப் பற்றி படிக்கும் போது எவ்வளவோ புத்தகங்களுக்கு அறிமுகம் கொடுத்து நம்மை அதன்பால் அழைத்துச் சென்றார்கள்.

புத்தகங்கள் அதிகமாக படித்த பின்பு, கல்கி, பா.ராகவன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், மருதன், கண்ணதாசன், தமிழருவி மணியன், ஜெய காந்தன்......... இப்படி எண்ணற்ற எழுத்தாளர்களைப் பற்றி அறிய வாய்ப்புக் கிடைத்தது. இப்போது என்னுடைய அறை நண்பர்களின் அரட்டயில் 90% சதமானமாக இருந்த சினிமா விசயங்கள், குறையத்தொடங்கி, 75% புத்தகங்கள், நூலாசிரியர்கள் என விவாதமாக ஆரோக்கியத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. “என்னங்க சாரு, எஸ்.ராவைப் பற்றி இப்படி பேசிட்டாரு, இருந்தாலும் மனிஷ்ஷிய புத்திரன் இப்படி சொல்லியிருக்க கூடாது, காந்தி கொலைவழக்கு படிச்சீங்களா? என எங்களை அறியாமல் எங்களுடய பேச்சுக்கள் வெளிப்படுகின்றன.

ஆனால் பலரது வலைத்தளங்கள், பாதி ஆடையில் நடிகைகளே பவனிவருகிறார்கள். பத்திரிக்கைகளில் படித்த சினிமா கிசு, கிசுவை இவர்கள் என்னவோ, அந்த நடிகரின் கட்டிலுக்கு அடியில் இருந்துகொண்டு கண்டாவாறு காட்சிப்படுத்துவது, சினிமா விமர்சனத்தில் சித்திரம் வரைவது, என எங்கும் சினிமா, எதிலும் சினிமாவாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. சினிமா வேண்டும் ஆனால் சினிமா மட்டுமே வேண்டும் என்று நினைப்பது அபத்தம். சிலரது வலைத்தளங்கள் ரொம்ப அற்புதமாக இருக்கும், கிட்டத்தட்ட என்னை ஒரு அடிமைபோல மாற்றிவிட்ட பதிவாளர்களும் உண்டு.
புலவர், சா இராமாநுசம், ஆரூர் மூனா செந்தில், கேபிள் சங்கர், இவர்களின் பதிவுகளை எதிர் நோக்கி காத்திருக்கும் வாசகனாகிப் போனேன். புலவரின் புலமை நமை புல்லரிக்க வைக்கும், எதுகை, மோனையில் விளையாடுவார். நரைத்த முடிக்காரரின் எழுத்து என்னவோ அத்தனை இளமையாக இருக்கும். வார்த்தைகளில் ஒரு வீரியம் இருக்கும், சமுகம், அரசியல் பற்றிய இவரின் கவிதைகளில் நெருப்பின் சூடு தெரிக்கும். எதைப் பற்றியும் கவிதை எழுதும் ஆற்றல் பிரம்மிப்பூட்டும். மண், மனிதன், மடு வரை இவர் வரி வரையரையின்றி விரியும்.

கண்ணதாசன் தன்னுடய சுய சரித்ததில் எழுதியிருப்பான், ஒருவன் சுய சரிதம் எழுதும் போது அவன் தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டு எழுதவேண்டும், அதாவது தன்னைப் பற்றி எந்த ஒரு ஒளிவு மறைவு இன்றி எழுதவேண்டும் என்று. அந்த வகையில் ஆருரார் கண்ணதாசனின் வாரிசு, அவ்வளவு அழகாக எழுதுவார். தண்ணியடித்தது, வாந்தி எடுத்தது, சீன் படத்துக்கு போனது, முதல் முதலில் சீன் புக் எழுதியது என அத்தனையிலும் இவரை கண்ணதாசன் சொன்னது போலக் காணலாம்.  இவரின் சினிமா சம்பந்தப்பட்ட எழுத்துக்களை அவ்வளவாக படிப்பது இல்லை, அதே நேரத்தில் இவர் இடும் மற்ற பதிவுகளை தவரவிடுவதில்லை. சரித்திர நாயகர்களின் எழுவது ஆண்டு கால வாழ்க்கை வரலாறு, அவர்களைப் பற்றிய ஆயிரம் பக்கம் கொண்ட புத்தகம் அனைத்தும் இவர் இடும் ஐம்பது வரிகளின் பதிவில் அடங்கிவிடும்.

கேபிள் சங்கர், அனேகமாக பதிவுலகில் அனைவரும் அறிந்திருக்கும் நபர், எனக்கு தெரிந்தமையில் ஆச்சர்யம் இருப்பதற்கில்லை. சினிமா குடும்பத்தில் இருக்கும் இவரின் அதிக பதிவுகள் இவரின் பெரிய பெரியப்பா ஹாலிவுட், சின்ன பெரியப்பா பாலிவுட், அப்பா கோலிவுட் என்றே இருக்கும். ஆனாலும் அதையெல்லாம் மீறி என்னை அவர்பால் இட்டுச்சென்றது அவருடைய கதைகள், மொக்கை என்ற பெயரில் அவர் இடும் கவிதைகள், இதையெல்லாம் மீறி மனுசனுக்கு எப்படித்தான் பாய்ஸ் படத்தில் வரும் செந்திலிடம் இருந்த அந்த “இன்பர்மேசன் டேடா பேஸ்”  இவரிடம் கிடைத்ததோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ருசிமிக்க ஹோட்டல்களும் தெரிந்துவைத்திருக்கின்றார். அதுவும் ஹோட்டலின் சிறப்பு, வரலாறு, ரேட், செல்லும் பாதை, அதன் முதலாளி என அத்தனையையும் அடக்கிவிடுவார். கதைகள் அப்படி சூப்பரா இருக்கும், அதன் முடிவுகள் அனைத்தும் சும்மா நச்ச்ச்ச்ச்.

தொடங்க காரணமாக இருந்தது இரண்டு பேர் என்றாலும், இந்த ஒரு வருடத்திற்கு என்னை கை பிடித்து கூட்டிக்கொண்டுவந்தவர்களில் இந்த மூன்று பேருக்கும் பங்கு உண்டு. ஆகவே அவர்களுக்கும் எனது நன்றி. இன்னும் நிறைய புத்தகங்கள் சம்பந்தமான விமர்சனங்கள், அறிமுகங்கள் என நாம் நமை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். பதிவுலகர் பெருமக்களின் அறிமுகத்தால் என்னால், நல்ல, நயமான அதே சமயத்தில் நியாயமான புத்தகங்களை படிக்க நேர்ந்தது.

புத்தகத்தில் இது மாதிரியான வகைப் புத்தகங்களைத்தான் படிபேன் என்று இருமாப்புடன் இருந்த என்னை, அவர்கள் கொடுக்கும் புத்தகம் பற்றிய அறிமுகங்கள், ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து அந்த புத்தகத்தினை வாங்கிவிட துடிக்கும். இப்படியா பல புத்தகங்கள், மருதனின் “இந்தியப் பிரிவினைவாதம்”, பா.ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்”, கண்ணதாசனின் “வனவாசம், கோபிநாத்தின் “நீயும், நானும், தமிழருவி மணியனின் “எங்கே போகிறோம் நாம், என அதன் லிஸ்ட் கொஞ்சம் அதிகம்.

கிடைத்த புத்தகத்தை எல்லாம் படிக்கும் ஆள் கிடையாது நான். ஒரு புத்தகத்தினை எடுத்தால் அந்த புத்தகத்தினை வாசித்து முடித்த பின்பே என்னால் மற்ற / அடுத்த புத்தகத்தில் கவனம் செலுத்த இயலும். எனது கல்யாணத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு, என் மனைவிக்கு அடுத்து, ஒரு நண்பர் அளித்த இரண்டு புத்தகங்கள் “கலீபாக்கலின் வாழ்க்கை வரலாறு “இஸ்லாத்தின் வழியில் இல்லறம். இந்த புத்தக பரிசு முறை என்னை ரொம்ப ஈர்த்த்து, நானும் அந்த முயற்சியில் இப்போது. எப்போதும் புத்தகம் வாசிக்கும் நான் கல்யாண வாழ்க்கைக்குப் பின்பு, மனைவியை வாசிப்பதில் கவனம் செலுத்தியதால், இதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் விடுவதாக இல்லை, மனைவியையும், புத்தகத்தையும்.


அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா,
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!,
எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி,
யாமொன்றும் அறியோம் பராபரமே!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், ஜூன் 13, 2012

நாத்தீகவாதி மாதிரி, நீ என்ன பேய்த்தீகவாதியா


நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
“அய்யய்ய்ய்ய்யோ....................

டாக்டர். எம் புருசனுக்கு என்ன ஆச்சு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எம்புருசன எப்படியாவது காப்பாத்திருங்கஎன அழுகையும், பதட்டமுமாக ராஜி விஜயா ஹாஸ்பிடலில் டாக்டரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள்.

“ஒன்னுமில்லம்மா, பயப்படாதீங்க. உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல. ஆனா இன்னும் கண்ணு முழிக்கல.

“என்ன ஆச்சு டாக்டர்?, எப்படி ஆச்சு?

“அதுதாம்மா எனக்கும் புரியல, அத தெரிஞ்சிக்கலைன்னா என் மண்டயே வெடிச்சுடும், அதுக்காகத்தான் உன் புருசன் கண்விழுக்கும் வரை இங்கேயே இருக்கேன். என டாக்டர் ஒரு புறமும், ராஜி ஒரு புறமும் பெட்டில் அமர்ந்திருந்தனர்.

5 மணி நேரத்துக்கு முன்பு

ஒரு வியாபார விசயமாக, பிரதீஷ்க்கு திருநெல்வேலிக்கு போய்விட்டு திரும்ப சொந்த ஊர் திருச்சுக்கு வருவதற்கு மணி நல்லிரவு 1.30 ஆகிடுச்சு. எப்போதும் பயணத்தை பிளான் பண்ணி செய்யும் பிரதீஷுக்கு, தமிழ்நாடு பேருந்து பாதிவழியில் பாயைப் போட, மூன்று மணி நேரம் தாமதமாக திருச்சு வந்தது. திருச்சின்னாலும் அவர் வீடு, 6 கி.மீட்டர் தூரம் இருக்கும் பாரதி நகர்தான். பாரதி நகருக்கு, பகல் நேரத்துல போகுறதுக்கே பஸ்ஸு பல்லக் காட்டும், இதுல அண்-டயத்துல எப்படி?.

இருட்டுன்னா கும் இருட்டு, அவன் இதுவரைக்கும் இந்த நேரத்துல உலகத்த பார்த்ததே இல்லை, அதுவும் ஆள் நெருக்கடி அதிகமா இருக்கும் திருச்சி பஸ்டாண்டை பார்த்துவிட்டு, ஆளேயில்லாம அந்த இடத்த பார்க்குறதுக்கு அவனுக்கு என்னமோ மாதிரியிருந்தது.

“இந்த நேரத்துக்கு பஸ் எல்லாம் கிடையாது சார், ஒரு ஆட்டோ புடிச்சிட்டு கிளம்புங்கன்னு அங்க தூக்கத்துல டூட்டி பார்த்துக்கொண்டிருக்கும் டைம் கீப்பர் சொல்ல, அங்கிருந்து ஆட்டோ கிடைக்கும் இடத்திற்கு நடந்தான். பஸ்டாண்டுக்கு வெளியே போகுறதுக்குள்ள அவனுக்கு போதும், போதும்னு ஆகிடுச்சு. பேருக்குத்தான் பெரிய பஸ்டாண்டு, விட்டு விட்டு எரியும் இந்த லைட்ட பார்க்குறதுக்கு எவனையும் காணோம். என்று தன் எரிச்சலை, மனசுக்குள் சப்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தான்.

ஆண் நாய், பெண் நாயிக்கு சிக்னல் கொடுக்கும் சப்தம், மார்கழி பனி, என அவனது கோபத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியது.  “ச்சே இன்னைக்கு நான் பண்ணிவச்ச பிளான் எல்லாம் வீணா போயிடும் போலிருக்கே, திருநெல்வேலியில் இருந்து வாங்கி வந்த அல்வாவை நம்ம வாயிலேயே வச்சிட்டானுங்களே.ம்ம்ம்ம் அல்வாவை வச்சி, ஒரு பாக்கியராஜ் படத்த ஓட்டிரலாமுன்னு பார்த்தா, இப்படி ஆகிடுச்சே

“சார் ஆட்டோ வேணுமா சார்,

“ஆமாப்பா, பாரதிநகருக்கு எவ்வளவு?

“300 ரூபா கொடுங்க சார்.

“என்னது 300 ரூபாயா? யோவ் திருநெல்வேலியில இருந்து வந்ததுக்கே எனக்கு 250 ரூபாதான் ஆச்சு, நீ என்னமோ, 300 ரூபா கேட்குற?

“சார் நைட் டைம், டபுள் சார்ஜ், அதுமட்டுமில்ல, பெட்ரோல் விலை எல்லாம் ஏறிடுச்சு.

“பெட்ரோல் விலையெல்லாத்தையும் பத்தி, மன்மோகன் சிங்க் உன் ஆட்டோவுல சவாரி வரும் போது பேசிக்க, கடைசியா சொல்லு எவ்வளவு வேணும்.

“275.

“ஒரு 150 ரூபா தாரேன். வர்ரியா?
ஆட்டோ கிளம்பியது, ஆனால் பிரதீஷ் என்னமோ அடுத்த ஆட்டோவிற்காக, அதே இடத்தில்தான் நின்றுகொண்டிருந்தான். இப்படியாக பேசி, பேசி ஐந்து ஆட்டோவை விட, ஒரு ஆட்டோ தூரத்தில் வந்து கொண்டிருந்தது. இப்பவே மணி 2 ஆகிடுச்சு, இதுக்கு மேல லேட் பண்னினோம்னா நல்லாயிருக்காது. அவன் கேட்குற காசை கொடுத்துவிட்டு, பேசாம வீடு போய்சேரவேண்டியது தான், என்று எண்ணிக்கொண்டான்.

“தம்பி பாரதி நகருக்கு போகனும், எவ்வளவு வேணும்?

“நீங்க எவ்வளவு கொடுப்பீங்க?

“150 ரூபா

“வாங்க

பார்ரா, இம்புட்டு நல்லவனா இருக்கான். ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருந்தான்னா, நமக்கு நேரமாவது மிச்சமாகியிருக்கும். ம்ம்ம்ம் இப்பவாவது வந்தானே, மாராசன்.

வண்டி அமைதியாகவே போய்கொண்டிருந்தது. பிரதீஷுக்கோ, இப்படி வாய மூடிக்கொண்டு வருவது சுத்தமாக பிடிக்காது. திருநெல்வேலியில் இருந்து வரும்போது கூட்டம் அலைமோதிய வண்டியில் கூட இவன் இருந்த சீட்டிக்கருகில் உள்ள சீட் காலியாகவே இருந்ததது என்றாள் பார்த்துக்கங்க.

“என்னப்பா இப்படி அமைதியா வார?. ஏதாவது பேசிக்கிட்டே வரலாமுல்ல?

“இல்ல சார் எனக்கு அமைதியா இருக்குறது தான் பிடிக்கும்

“அப்படியெல்லாம் இருக்க கூடாது. நாலு பேருகிட்ட பேசினாத்தான், நமக்கு ஒரு நாலு பேரு நல்லவங்க கிடைப்பாங்க.

ம்ம்ம்ம்ம்ம்.......

என்னடா இது எப்படி பேசினாலும் வழிக்கு வரமாட்டேங்குறானே என்று மன்சுக்குள்ள நினைத்துக் கொண்டே, போகும் போது

“க்க்க்க்க்க்க்க்கிரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். என ஆட்டோ டிரைவர்  பிரேக் அடிக்க. பிரதீஷின் மூஞ்சு, முன்னாடியிருந்த கம்பியில் இடித்து, தடவியபடியே,

“யோவ், என்னயா ஆச்சு, வேகத்தட வருவது கூடவா கண்ணுக்கு தெரியல, அதுவும் காலில் இருக்குற பின் பிரேக்க அழுத்தாம, கையில இருக்குற முன் பிரேக்க அழுத்துற. எத்தன நாளாயா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்குற?

“மன்னிச்சுக்கங்க, எப்போதும் நான் டே டூடிதான் பார்பேன், நைட் டூட்டி எனக்கு புதுசுங்க.

“நல்ல ஓட்டுன போ, ஆட்டோவ. சரி சரி போகும் போது, நாகா தியேட்டருல என்ன படம் போட்டிருக்கானுங்கன்னு பார்த்துட்டு போகனும். அந்த வழியா போ.

“நாகாலயா சார். காஞ்சனா போட்டிருக்கான்.

“நீ பார்த்திட்டியா?, எப்படி இருக்கும் படம்?

“சார் நான் போஸ்டரத்தான் பார்த்தேன். படம் பார்க்கல, பார்க்கவும் இஷ்டம் இல்லை

“ஏன்?.

“பிறகு என்ன சார், சரத்குமாரெல்லாம் பேயா வந்தா எவன் போய் பார்ப்பான், அதுக்கு லட்சுமி ராய பேயா காட்டிருக்கலாம். அதுமட்டுமில்லாம எனக்கு இந்த, பேய், பிசாசு மேல எல்லாம் நம்பிக்கையில்ல சார்.

“என்னய்யா சொல்லுற, பேய் எல்லாம் இருக்கு. சும்மாவா பெரியவங்க சொல்லுவாங்க.  நாத்தீகவாதிமாதிரி நீ என்ன பேய்த்தீகவாதியா
“அப்படியெல்லாம் இல்ல சார். தம்மேல நம்பிக்கையில்லாதவன் தான் பிறரைப் பார்த்து பயப்படுவான். அதுமட்டுமில்லாம எவனோ, காசு சம்பாதிக்கனும் என்பதற்காக கட்டவிழ்த்துவிட்ட நாடகம். அந்த காலத்து ராஜாக்களிடமிருந்தும், ஜமீந்தார்களிடமும் இருந்த பணத்தை அபகரிக்க, ஒரு பயத்துக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த பேய் கதை எல்லாம்.

“அப்படியெல்லாம் சொல்லாதயா, தன்னுடைய ஆசை நிரைவேறாம செத்தவங்கதான் பேயா அலையுறாங்க.

“ஹா, ஹா, ஹா..... எந்த மனுசன் தான் எல்லா ஆசையையும் பூர்த்தி செஞ்சிட்டு செத்துருக்கான் சொல்லுங்க பார்போம். பணத்தாசையில்லாத மனுசன் இருக்கானா இந்த உலகத்துல?. எல்லோருக்கும் பணம் வேணும். இல்லாதவனுக்கு கொஞ்சம் வேணும், இருக்குறவனுக்கு இன்னும் கொஞ்சம் வேணும். இப்படி பார்த்தா செத்தவனுங்க எல்லோரும் பேயாத்தான் திரியனும். இதுலாம் ஒரு மூட நம்பிக்கை சார். பார்த்த படிச்சவராட்டம் இருக்கீங்க, நீங்களுமா நம்புறீங்க?

“என்னதான் சொன்னாலும் எனக்கு ஏத்துக்குறதுக்கு கொஞ்சம் இதாத்தான் இருக்கு

ஆட்டோ டிரைவர் விடுவதாக இல்லை, “இப்போ நீங்க சொல்லுறமாதிரி, எல்லா பேய்களும் பழிவாங்க கிளம்பியிருக்குன்னா, மாமியார் செத்த எந்த வீட்டிலாவது மருமகள்கள் உயிரோடு இருப்பாங்களா?

“அதுவும் சரிதான். நீ சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு உண்மையே புரியுது

“சரி சார் உங்க வீடு வந்திருச்சு, இறங்குங்க

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி, இந்தா உன்னோட பணம்

“என்ன சார் 50 ரூபா அதிகமா இருக்கு

“பரவாயில்லப்பா வச்சிக்க

“இல்ல சார் எனக்கு வேண்டாம். இந்த பணத்த வச்சு நான் ஒன்னும் பண்ணப்போறது இல்ல. நீங்களே வச்சுக்கங்க

(உணர்ச்சிவசப்பட்டவனாக) “இவ்வ்வ்வ்வளவு நல்லவனா இருக்கீயேப்பா, உன் பேரு என்ன?

“(சிரித்தவனாக) ஆட்டோவுக்கு பின்னாடி இருக்கு, பார்த்துக்கங்க சார்என் கூறிவிட்டு ஆட்டோவை கிளப்பினான். ஆட்டோவின் பின்புறம்,

*

*

*

*

*

அவனது போட்டோவுடன் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்

பெயர் = விஜய குமார்
தோற்றம் = 12.06.1976
இறப்பு = 12.06.2012

-----------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், ஜூன் 06, 2012

பொண்டாட்டிதாசன்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
                            கவிதை இதுவரை எழுதியதில்லை,
                            எழுதுமளவிற்கு எவளையும் கண்டதில்லை.

                            பாவை நீ, என் மனையாளாகிப் போனாய்,
                            பாவம் நான் பாவலனாகிப் போனேன்.

                            உறவாய் நீயிருந்தும் – நாம்
                            உறையாடிய நாளில்லை.

                            முறைப்பெண்ணாய் நீயிருந்தும் – ஏனோ
                            மோகம்தான் வந்ததில்லை.

                            காணும் தூரத்தில் நீயிருந்தும்,
                            காதல் அன்று எனக்கில்லை.

                            சொந்தத்தில் இல்லை (திரு)மணம் – என
                            சொல்லிக்கொண்டிருந்த அக்கணம்,
                            சொக்கித்தான் போனதடி பாவிமனம் – உன்,
                            சுற்றும் விழியழகினைக் கண்டவுடன்.

                            பேருந்துக்கா நின்றிருந்தேன், பேருந்து நிலையத்தில்?
                            பேரழகி உனைக்காணவே - எனும்
                            போதம்தான் இன்னும் உனக்கு புலப்படவில்லையோ?
                            ஆயிரமாயிரம் நன்றியுரைப்பேன்
                            அனைத்து சொந்தக்கார நல்வுள்ளங்களுக்கும்
                            அழகே!, உன்னை எனதாக்கியமைக்கு.

                            துணையே!, யுன் துதிபாட,
                            துடிக்கிறேன் – இருந்தும், முதல் முறையென்பதால்,
                            தவிக்கிறேன், வார்த்தைகளைத் தேடித் தேடி.

                            எதையெடுத்துறைப்பேன் இவ்வுலகிற்கு
                            என்னவள், இன்னவளென்று. - அவையெல்லாம்
                            எண்ணிக்கையில் அடங்கியிருந்தால்,
                            எளிதாய் போயிருக்கும்.

                            கோடி கொட்டிக் கொடுப்பினும்,
                            கிட்டாத, உன் குணம் அறிந்தும் - நான்
                            கேலிபேசி, கடுப்பேற்றினும் – வைத்த அன்பு
                            குறையாது என்மேல் எப்போதும்.

                            கவலை மறக்கச் செய்யும்- உன்
                            கற்கண்டு குரலின் கனிவுப் பேச்சு.

                            அறியாது பேசிபின் நா கடித்து, கூறும்
                            “அஸ்தஹ் பிருல்லாஹ்

                            எரிவு கொண்டினும், நான் ரசிக்கும்
                            “என்னை எவ்வளவு பிடிக்கும்? கேள்வி,

                            கிருக்கிக்கொண்டிருக்கும் இந்த கிருக்கலையும்
                            கவிதையின் பெயரால் வாசிக்கும் என் வாசகியே
                            எவர் அன்பு உயர்ந்தது என்ற எதிரிடையில்
                            எப்போதும் எனை வீழ்த்தி வெல்பவளே

                            என எத்தனை எத்தனை காரணம் கூற
                            நான் கொடுத்துவைத்தவன் - என
                            எண்ணி, எண்ணி பெருமைகொள்ள.
                            உன் ஜனனத்தால் – என்
                            ஜென்மத்தை மீட்டவளே
                            மறவேனோ இந்நாளை – என்
                            மனைவியின் பிறந்த நாளை.

                            என்னைப் பெற்றவரின் மருமகளே,
                            என் மாமியின் மகளே,
                            என் மானசீக காதலியே,
                            தாய்மொழி தமிழ் வாழும் வரை
                            தரணியில் நீ வாழ்க,
                            வாழிய பல்லாண்டு வாழிய வாழியவே.

----------------------------------------------------------------------------------யாஸிர்.

செவ்வாய், ஜூன் 05, 2012

........டுமீல்........டுமீல்........டுமீல்................


நம் அனைவரின் மீதும், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
அதிகாலை பதினோரு மணி, எழுந்திருக்க இஷ்டமில்லாமல் எழுந்திருந்தான் மோகன். தூக்க கலக்கத்துடன், காபி மேக்கரில் காபியை போட்டு, கையில் எடுத்து குடித்துக் கொண்டே, காலண்டரில் தேதியை கிளித்தான்.

தேதியைக் கண்டதும், அவசர அவசரமாக, குளித்து முடித்து, பைக்கை ஒரு பொக்கே ஷாப்புக்கு விட்டு, ரோஜா பூங்கொத்தினை வாங்கிக்கொண்டான்.

பெயர் = ப்ரியா
தோற்றம் = 10.10.1982
இறப்பு = 05.06.2011

மேற்படி செதுக்கியிருந்த ஒரு கல்லரையின் மீது, வைத்து, பிராத்தனை செய்துவிட்டு, அதனருகில் அமர்ந்து, பழய ஞாபகத்தினை அசைபோட ஆரம்பித்தான்.

சரியா ஒருவருசத்துக்கு முன்னாடி.

@@@@@@@@@@@@

தம்பி, விமல் இருக்கானா?

இருக்காரு சார், நீங்க யாரு?

நான் மோகன் வந்திருக்கன்னு சொல்லு. அவனோட ஸ்கூல் ப்ரண்ட்.

என ஆபிஸ் பாயிடம் கூறி, விமலின் அழைப்பிற்காக காத்திருந்தான். விமல் ஒரு பெரிய வக்கீல். திருமணத்திற்குப் பின்பு அவ்வளவாக இருவரும் சந்தித்துக் கொண்டது இல்லை.

டேய் மோகன், மச்சி எப்படிடா இருக்க, என்ன திடீரென, அதுவும் ஆபிஸ்ஸுக்கே வந்திருக்க. வீட்டுக்கு வந்திருக்கலாமுல்ல.

இல்லடா, ஆபிஸ்ல சந்திக்குற மேட்டர் அதனாலதான்.........

அப்படி என்னடா மேட்டரு, சரி உள்ள வா.

படத்துல பாத்தது மாதிரியான சாட்ஜாத் அப்படியே இருந்தது அவனுடைய ரூம். எந்த பக்கம் பார்த்தாலும் புத்தகங்கள். ஆனா மோகனுக்குத் தெரியும் இது எல்லாம் சும்மா ஷோவுக்குத்தான், ஏனென்றால் விமலை பத்தாவது பாஸாக்கிவிட்டதே மோகன் கொடுத்த பிட் பேப்பர் தான்.

சொல்லுடா என்ன விஷயம்?

எனக்கு, எனக்கு..............

என்னட தயங்குற, எதுவானாலும் சொல்லு

எனக்கு விவாகரத்து வேணும்.

என்னடா சொல்லுற, உன் பொண்டாட்டி எவ்வளவு அழகு, அவகிட்ட இருந்து விவாகரத்து வேணும்னு கேட்குற அளவுக்கு என்ன ஆச்சு, அதுவும் ஒரு வருசத்துக்குள்ள?

மச்சி, இந்த ஷீ எப்படி இருக்கு?

என்னடா சம்பந்தமே இல்லாம கேள்வி கேட்குற.

சொல்லுடா, எப்படி இருக்கு, இந்த ஷீ?

ரொம்ப நல்லா இருக்குதுடா, காஸ்டிலியானதா இருக்கும்.

ம்ம்ம்ம். பாக்கத்தாண்டா எல்லாம் அழகு, போட்டிருக்குற எனக்குத்தான் தெரியும் அது காலைக் கடிக்கிற வலி. அதுமாதிரித்தான் என் பொண்டாட்டியும்.

அதுவும் சரிதான், ஆனா, புது செருப்பு எல்லாம் காலை கடிக்கத்தான் செய்யும், கொஞ்ச நாள்ல சரியாப் போயிடும். அதயெல்லாம் விட்டு விட்டு, போயி வேலையைப் பாரு எல்லாம் சரியாகும். அப்பப்ப உன் மனைவியுடனான சந்தோசமான வாழ்க்கையை நினைத்துப்பாரு எல்லாம் சரியாகிவிடும்.
சந்தோசமான தருணங்களா????, அப்படீன்னா என்னன்னு கேட்கும் அளவுக்கு இருந்தது அவனது வாழ்கை, முதல் ராத்திரியில் இருந்து, முந்தின ராத்திரி வரைக்கும் பிரட்சனை, பிராபளம், கோபம், கஷ்டம், இப்படியாகத்தான் போய்கொண்டிருந்தது.

நயன்தாரவ, சீதா வேஷத்துல ஏத்துக் கொள்ளவே முடியாத மோகனுக்கு, இந்த அறிவுரை ஏற்றுக்கொள்ளக்கூடியதா?. குழப்பத்துடனே வீட்டிற்குச் சென்றான்.

நாமாக ஏதும் இவளிடம் சண்டை போடக்கூடாது, என்று முடிவெடுத்துக்கொண்டான். அதுவும் அவள் டீ கொண்டுவந்து கொடுக்கும் வரை மட்டுமே நிலைத்திருந்தது. டீயை கொஞ்சம் குடித்தவுடனேயே

சனியனே, ஒரு வருசம் ஆச்சு, இன்னும் ஒழுங்கா டீ கூட போடத்தெரியல, உன்னயப் போயி, பஸ்டாண்டு, பஸ்டாண்டா சுத்திவந்து காதலிச்சு கட்டிகிட்டேன் பாரு என்ன சொல்லனும்.

பொண்ணு பார்க வந்தப்போ மட்டும், நான் கொடுத்த டீய, நாய் மாதிரி நக்கி நக்கி குடிச்ச. இந்த மாதிரியான ஆளுன்னு தெரிஞ்சிருந்தா, அன்னைகே, அந்த டீயில விஷத்த கலந்திருப்பேன்.

ங்க்க்க்கும், உன் கேரக்டர் இந்த மாதிரின்னு தெரிஞ்சிருந்தா, அந்த விஷம் வச்ச டீய சிரிச்சிக்கிட்டே குடுச்சிருப்பேன். நான் ஒரு முட்டாள், நான் ஒரு முட்டாள்.

இப்ப சொல்லி என்ன புண்ணியம், நீ முட்டாளுன்னு அப்பவே எனக்கு தெரிந்திருந்தால், என் வாழ்கையாவது நல்லா இருந்திருக்கும்.

இப்படி முடிவேயில்லாமல், ஆளுக்கொரு கதவை சாத்திக்கிட்டு ரூமுக்குல்லேயே கிடந்தனர்.

அரை மணி நேரம் கழித்து.

டக், டக், டக், பிரியா, பிரியா, கதவத் திற.

5 நிமிடம் ஆகியும், கதவைத் திறக்காத்தால், மோகனுக்கு பதற்றம் அதிகமானது, மீண்டும் வேகமாக கதைவைத்தட்ட

என்ன, இப்படி கதவ உடைக்கிற, செத்துட்டேன்னு பயந்துட்டியா?

அப்படி சீக்கிரம் போறவளா நீ, என்னைய எல்லாம் தூக்கிவிட்டுட்டுத்தான் நீயெல்லாம் போவ

பிறகு, 5 நிமிசம் லேட் ஆனா நீ ஏன் பதறனும்?

நான் உன்ன நினெச்சு பதறல, என் பணத்த நினெச்சு பதறினேன். நேற்று சொன்னேன்ல, நீ போட்ட கையெலுத்து உன் மூஞ்சி மாதிரி இருந்ததால, பாங்க்ல பணத்த கொடுக்கமாட்டேனுட்டானுங்க. ஆள நேருல கூட்டிக்கிட்டு வரச் சொன்னானுங்க. கிளம்பு, இப்பவே லேட்டு, எனக்கு பணம் கொஞ்சம் அவசரமா தேவை.

பேங்கில்.

இருவரும் நுழைந்த நேரத்தில், ஒரு பத்து பேர், முக மூடி அணிந்து, துப்பாக்கியும் கையுமாக வந்து பேங்கை கொள்ளையிட. அங்கிருந்த அத்தனை பேரும் என்ன செய்வதென அறியாது விழித்தனர்.
டேய் மேனேஜர், அந்த ரூம திறந்து எல்லா ஸ்டாப்களையும் அனுப்பு, கஸ்டமர்ஸ் மட்டும் இங்க நிக்கட்டும். ம்ம்ம் சொல்லுறத செய். என மிரட்டும் தோனியில் கட்டளையிட, மேனேஜரும் அதன்படி செய்தார்.

மிச்சம் இருக்குறவனுங்க எல்லோரும், எங்க வேலை முடியுற வரைக்கும் அமைதியா, கைய தூக்கிக்கிட்டு நிக்கனும், எவனாவது சப்தம் போட்டீங்க, அவ்வளவுதான். என தூப்பாக்கியை நீட்ட, அனைவரும் கைய மேலே தூக்கி நிக்க, டைமிங் கரெக்டாக இருந்தது.

பரதேசி, பரதேசி இப்படி மாட்டிவிட்டுடியே? இன்னைக்குன்னு பார்த்தா பேங்குக்கு கூப்பிடுவ, நாசமா போவ. இந்த நேரத்துலயும் எப்படி, பகுமானமா நிக்குது பாருன்னு பிரியா, மோகனைப் பார்த்து குறைத்துக்கொண்டிருந்தாள்.

உங்கிட்ட இருக்குறதுக்கும், இவங்ககிட்ட இருக்குறதுக்கும் எனக்கு ஒன்றும் பெருசா வித்தியாசம் தெரியல. நான் கூப்பிட்ட உடனே கிளம்பி வந்தப்பவே நான் யோசிச்சியிருக்கனும். சும்மாயிருந்த மாரியாத்தாவ, வேப்பில அடிச்சு வா ஆத்தான்னு கூப்பிட்டதுமாதிரி ஆகிடுச்சு. எல்லாம் என் நேரம், சனியன நான் வண்டியில கொண்டுவந்தேன். தர்தினியம் துப்பாக்கியோட அதுவா வந்து நிக்குது.

கொண்டுவந்த, 5 பைகளிலும் பணத்தை நிறப்பி, கொள்ளையர்கள் கிளம்பும் சமயத்தில், ஒரு காகித பேப்பர், கொள்ளைத் தலைவனின் முகத்தில் வந்து விழுந்தது. அந்த பேப்பரை எடுக்கும் சமயத்தில், முக மூடி களண்டு விழ. அவனது முகம் அனைவருக்கும் தெரிந்தது.

பேர் போன கொள்ளையன் ரிவால்வர் ராஜா!!!!!!!!!!!!!

கொள்ளையன் ராஜா, துப்பாக்கியுடன் பேங்கில் இருந்தவர்களிடம் ஒருவனை அழைத்து கேட்டான்.

போலிஸ் வந்து, கொள்ளையடிச்சவன நீ பார்தீயான்னு கேட்டா என்ன சொல்லுவ?

நான் பார்த்தேன்னு சொல்லுவேன்.

அப்படியா, அப்படின்னா, செத்துப்போ

..............டுமீல்..............

மற்றொருவனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டான் ராஜா.

அவனும் அதே பதிலை சொல்ல, அதே சன்மானம் கிடைத்தது.

..............டுமீல்..............

இப்போது மோகனைப் பார்த்து, ரிவால்வர் ராஜா கேட்டான்.

ம்ம்ம் சொல்லு நான் இங்க கொள்ளையடிச்சதை நீ பார்த்தீயா?

இல்லை.

சபாஷ். நீ தாண்ட பிளைக்கத்தெரிந்தவன் என ராஜா புகழ,

மோகன் தயங்கியபடியே, ஆனா, ஆனா..........

என்னடா ஆனா, ஆவன்னான்னு,

நீங்க கொள்ளயடிச்சதை நான் பார்க்கவில்லை. ஆனா என் பொண்டாட்டி பார்த்துவிட்டாள்.

*

*

*

*

..............டுமீல்..............

----------------------------------------------------------------------------------யாஸிர்.