ஞாயிறு, ஜூலை 26, 2015

இஸ்க்கு இஸ்க்கு என்றா கேட்கிறது?

என்றும் போல இன்றும் ஒரு சிறந்த நாளாகவே இருந்தது, ஆம்,  எங்கு செல்கிறான்? என்ன செய்கிறான்? என்பதை என் மனைவியின் மெகா பிக்ஸல் கண்ணாடி அளவைவிட அதிகம்கொண்ட வானம், மேல் நின்று நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. நல்லவை சில செய்து இந்த நாட்டின் குடியுறிமை பெற்றுவிட அனுமதிக்கக்கூடாது என்ற கொள்கை உணர்வுடன், விதிக்கப்பட்ட வழியில், பூமி எனை கீழ் இருந்தது வழி நடத்தியது. சாலைகளில், சுமாரான பிகர்கள் காற்றோட்டமாகவும், சூப்பரான பிகர்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டும் வஞ்சனை செய்துகொண்டிருந்தனர். விரதம் முடிந்து வீரு கொண்டு பலபேர் சுற்றித்திறிந்து கொண்டிருந்தார்கள். எல்லா திசையிலிருந்தும் இஸ்க்கு இஸ்க்கு என்றே கேட்டது. ஆனால், நண்பர்களுடன் ஹாலிடேக்கலில் கூட ஜாலிடே கொண்டாட இயலாத அளவிற்கு உடம்பு ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது.

அபுதாபியிலேயே ஆகச்சிறந்த, அழகான நர்ஸ்கள் இருக்கும் ஹாஸ்பிடலில் சென்று வைத்தியம் பார்த்தேன். பட், நர்ஸ் பக்கத்தில் இருந்ததால் வைத்தியரை பார்க்கதோன்றவில்லை. வாலு படம்போல ‘’வரவே வராது’’ என இருமாப்புடம் இருந்தவனை இருமல் மருந்துடன் உட்காரவைத்துவிட்டது காய்ச்சல். பாபநாசம் படமும் நோயும் ஒன்றாக வந்தது, பாபநாசம் போய் ஒருவாரம் ஆகுது ஆனால் நோயோ ஆஸ்கார் வாங்கிவிட்டுத்தான் போவேன் என்று அடம்பிடிக்கின்றது. பிட்டியில் ஊசி போட பின் பக்க அறைக்கு போய் நின்றேன். செண்டிமீட்டர் அளவில் பேண்டை இறக்கினால் போதும் என்றது மனது, மில்லிமீட்டர் அளவு போதும் என்றது மூளை.

எனக்கு முன்பாக ஊசி போட நின்ற ஒரு பங்காளி (பங்களாதேஷி), பேண்டை கழட்டி அக்குளில் வைத்துக்கொண்டிருந்தான். பேண்டை திரும்ப போட அந்த பிலிப்பைன் நாட்டு நர்ஸ் ஆங்கிலத்தில் சொல்ல, புரிந்தும் புரியாமல் நின்றான். பெரிய குசும்புக்காரனாக இருப்பான் போல. இன்னும் ஜஸ்ட் இரண்டு நிமிடம் பேசியினால் ஜட்டியை கழட்டிவிடுவானோ என்ற பயம் அந்த நர்ஸுக்கு. இந்த அலப்பறையில் எனக்கு பின்னால் மறுபடியும் ஒரு பங்காளி ஊசி போட லைனில் வந்து நிற்க. நர்ஸ் என்னை மட்டும் தனியாக கூப்பிட்டது. அந்த ஒரு நொடி.......ஊசி போடாமல் காய்ச்சல் காணாமல் போனது. பின்புதான் தெரிந்தது, என்னை வைத்து அந்த பங்காளிகளுக்கு ‘’டெமோ’’காட்டவென்று. பேசாம நாமளும் அக்குள்ள கழட்டி வச்சிருந்திருக்கலாம்.

காய்ச்சல் வெள்ளிவிழா கொண்டாடியதால் மூன்று, நான்கு முறை ஆஸ்பிட்டலுக்கு போகவேண்டியதாயிற்று. பேண்ட் சம்பவம் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன். அன்றிலிருந்து பின்னாடி ஊசி என்றால் டாக்டர்தான் முன்னாடி வந்து நின்றார். அட்லீஸ்ட் பங்காளிகளுக்காக மட்டும் அந்த நடைமுறையை கொண்டுவந்திருக்கலாம். பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற இந்தியர்கள் எத்தனை பேர்? பிளாக் எழுதிக்கொண்டிருக்கின்றார்களோ???????.

பல முறை படையெடுத்தாலும், டாக்டர் எனக்கு பிடித்த ஒன்றையும், பிடிக்காத ஒன்றையும் மட்டும் திரும்ப திரும்ப சொல்லுவார், ஒன்று கஞ்சி சாப்பிடு, இன்னொன்று ரெண்டு நாள் குளிக்காத. இதுல எது புட்ச்சது, புடிக்காதது என்று படித்த நல்லுலகத்திற்கு அறிவிக்க தேவையில்லை. அதன் விளைவாக, தங்கவிலை போல குறைந்துகொண்டுவந்த காய்ச்சல், ஒரே இ மெயிலில் மீண்டும் உச்சத்தை தொட்டது. யாரோ ஒரு புண்ணியவான், என் பிளாக்கை படித்துவிட்டு பயங்கர பாராட்டு. (சென்றவரியில் ‘’என் பிளாக்கை எல்லாம் படித்துவிட்டு’’ என்று யாராவது படித்திருந்தால் தயவுசெய்து வாசிப்பை தொடரவேண்டாம்).

ஒரு பதிவை அவருடைய தளத்தில் பகிர்ந்துகொள்ள என்னிடம் அனுமதி வேறு?. அதைப் படித்துவிட்டு எனக்கு ஒரு படபடப்பு. நான் போட்ட 100 போஸ்ட்டுகளில் ஆக மொக்கயே அந்த பதிவுதான். நகைச்சுவை சூப்பர் என்ற பாராட்டும். மக்களிடம் நகைச்சுவை உணர்வு எவ்வளவு குன்றிப்போச்சு?????. பிரேம்ஜி அமரன் எல்லாம் காமெடியன் என்றால் வடிவேலு எல்லாம் வைகுண்டம் போகவேண்டியதுதான். என்னத்த சொல்ல. அனுமதி வழங்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்து இணையத்தில் தேடிப்பார்த்தேன். அவர் அனுமதி கேட்ட அந்த பதிவு ‘’கடல்லய்யே இல்லையாம்’’ ரேஞ்சில் இருந்தது. பயபுள்ள பொறுமையா மறுபடியும் வாசிச்சு பார்த்திருப்பான் போல.......... அதுதான் முடிவை மறுபருசீலனைக்கு செய்திருக்கிறான்.

எங்க ஊர்காரனா இருக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு. சமுதாய, சமூக அவலத்தைப் பற்றி எழுதனுமாம் (ஏதோ பிளான் பண்ணியிருக்கானுங்க). ஏற்கனவே கசாயத்தை பத்தி எழுதுனக்கு நம்மள காய்ச்சி எடுத்துட்டானுங்க. இந்த முறை ஏதோ நோம்பு கஞ்சிக்கு பஜ்ஜி போட பத்து லட்சம் பிரிஞ்சதை பெருமையா பீத்துறானுங்க?. ஜமாத் எலிமெட்ரி ஸ்கூல் ஒரு லட்ச ரூபாய்க்கு வழியில்லாம மூடிக்கெடக்குது. இதக்கேட்டா “”நீ காஃபீர்””ங்குறானுங்க இல்லன்னா ‘’சமுதாய விரோதி””ன்றாங்குங்க. ஊர் இப்படி இருக்க, ‘’எதுக்குடா சிலிண்டெர் மான்யத்தை நாங்க விட்டுதரணும், முதல்ல நாடளுமன்ற கேண்டினில் எம்.பி துண்ற மானியத்தை கட் பண்ணுங்கடா?’’ என முழங்கினா ‘’தேச துரோகி’’ன்னு சொல்லுறானுங்க.

நமக்கு எதுக்கு வம்பு. ஏதோ நம்மால் ஆன சமூகசேவையை மட்டும் பண்ணினா போதும்ன்னு இருக்கேன். இப்ப கூட பாருங்க. பக்கத்து ஆபிஸ் ஸ்டோர் ரூமை திறக்கமுடியாம ஒரு தாய்குலம் தள்ளாடுது. இஸ்க் இஸ்க் என்றுவேறு கேட்கிறது. ஸோ, கடமை அழைக்கிறது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.