அஜித் குமார் படங்கள்
உங்களுக்கு பிடிக்கும் என்றால், இந்த படம் உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காது. விஜய்
படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், தயவு செய்து இந்த படத்திற்கு செல்லவேண்டாம்.
ஏனென்றால் இது அவ்வளவு நல்ல படம். நீ அஜித் ரசிகன் உனக்கு மட்டும் எப்படி இந்த
படம் பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால், அஜித்தை
பிடித்தவர்களுக்கு அஜித்தின் படத்தை பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.
செவ்வாய், செப்டம்பர் 29, 2015
புதன், செப்டம்பர் 09, 2015
மச்சினி நமிதாவுக்கு.
குசலம், நான் அதிகமாக
யாருக்கும் கடிதங்கள் எழுதுவதில்லை, இதற்கு முன்பாக உங்கள் மாநிலத்துக்காரர்
ஒருவருக்குத்தான் கடிதம் எழுதினேன். நல்லவேளை, அது அவர் கையில் கிடக்கவில்லை.
ஒருவேளை அந்தக் கடிதம் அவருக்குப் போய் சேர்ந்திருந்தால் நானும் போய்
சேர்ந்திருப்பேன். இப்படி சிலருக்கு நான்
கடிதங்கள் எழுதினாலும், உங்களுக்கு மட்டும் தான் ‘’மனம் திறந்த’’ கடிதம் எழுத
தோன்றியது.
தமிழ் நாட்டில் பிறந்த
திரிஷா போன்ற நடிகைகள் கூட ‘’ஆக்சுவல்லி’’
என ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பிக்கின்றார்கள். ஆனால் நீங்கள், எங்களை மஞ்ச
மாக்கான்கள் என அறிந்தும் தமிழில் ‘’மச்சான்ஸ்’’ என்று அழைக்கின்றீர்கள். எல்லா
நடிகைகளுக்கும் ‘’குஞ்சும் குஞ்சும் தமில் தெரியும்’’’ ஆனால் உங்களுக்கு மட்டும்
தான் தமிழை கொஞ்சத் தெரியும்.
உங்களுடய சமீபத்திய
புகைப்படங்களைக் கண்டேன். அதில் சிலவற்றை பிரிண்ட் எடுத்து, பார்த்துப் பார்த்து
கதறி அழுது கண்ணீர் விட்டேன். 7 ஜி ரெயின்போ காலணியில் தன் உதவாக்கரைப் பையன் ஒரு
திறமையான மெக்கானிக் என்று அறியும் போது,
ஆபர் லெட்டரை கையில் வைத்துக்கொண்டு அந்த தகப்பன் வடித்தது போன்ற ஆனந்த கண்ணீர் அது. குஜராத்தில்
பிறந்தவர்களில் எனக்கு காந்திக்கு பிறகு உங்களைத்தான் பிடிக்கும். ஆனால் சில
காலம், இரண்டு பேர் சேர்ந்தால்கூட (கட்டி) பிடிக்கமுடியாத சைஸ்ஸில் நீங்கள் வீங்கிப்
போனதில் என் போன்றவர்களின் மனம் வாடிப்போனது.
‘’நயகரா நீர்
வீழ்ச்சிக்கு முன்பாக நமிதா நின்றால், நயகராவே தெரியாது’’ என்று கூறி என்னை கேலி
செய்தவர்கள் எல்லோருக்கும், முன்பு ஒரு
காலத்தில் நீங்கள்தான் வயகராவாக இருந்தீர்கள். ஏன் என்றே தெரியவில்லை!!! நான்
நேசிக்கும் அனைவரும், ஒன்று குண்டாகிறார்கள் இல்லை உண்டாகிறார்கள். நீங்கள் திரையில் தோன்றாத அந்த வறண்ட
நாட்களில், என் இதயத்தில் உங்களுக்காக
ஒதுக்கியிருந்த அந்த இடத்தை குறைந்த வாடகைக்கு அனுஷ்காவிற்கு ஒதுக்கியிருந்தேன்.
பாருங்கள் அவர்கூட குண்டாகிவிட்டார். அஜித், ஜோதிகா, மீனா,
குஷ்பு...........இப்படி அந்த லிஸ்ட் பெரியது.
என்னை ‘’மச்சான்’’ என்று
அழைப்பதற்கான உறவுமுறையில் பல அத்தை, /மாமன் மகள்கள் இருப்பினும் ஏனோ அவர்கள்
என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். அது அவர்கள் தவறு இல்லை. என்னைவிட வயது
மூத்தவர்களாகிவிட்டதால் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. அவர்கள் திருமணமாகி தியேட்டரில்
பார்த்த முதல் படம் ‘’தில்லானா மோகனாம்பாள்’’ என்றால் அவர்கள் என்னிலிருந்து
எத்தனை வயது மூத்தவர் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
என்னைவிட வயது குறைந்த
பெண்கள் அந்த லிஸ்டில் இருந்து மச்சான் என்று அழைத்தாலும், நீங்கள் “”ஸ்”” ஸோடு
சேர்த்து ‘’மச்சான்ஸ்’’ என்று அழைக்கும் அழகே தனி. ‘’ஸ்’’ஸோடு நீங்கள் அழைக்கும் போது பத்து கிஸ்
பெற்ற அல்ப சந்தோசம் எங்களுக்கு. அந்த வார்த்தைக்கு வசியப்பட்டு என் அத்தை மகளை
திருமணம் செய்துகொண்டேன். நீங்கள் அழைக்கும் மச்சான்ஸ்ஸுக்கும், அவள் அழைக்கும்
மச்சானுக்கும், ‘’♪♫அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட ♫♪’’ பாடலை
எஸ்.ஜானகி பாடியதற்கும், கானக்குயில் கல்பனா அக்கா பாடுவதற்கும் இருக்கும்
வித்தியாசம். கானக்குயில் கல்பனா அக்காவைப் பற்றி தெரியும் தானே? இல்லை என்றால் கூகுளில்
தேடி என்னுடய நிலையை தெரிந்துக்கொள்ளுங்கள்.
எங்கள் அண்ணா படத்தின்
போஸ்டரில் உங்களைப் பார்த்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. அதுவும் விஜயகாந்தின்
அருகில் நீங்கள் மேலும் அழகாகத் தெரிந்தீர்கள். ‘’ ♪♫ பம்பரக் கண்ணாலேய்ய்ய்ய்
பச்சக்குத்த வந்தாலே ♪♫.’’ பாடலில்
உங்கள் ஆட்டம் அபாரம் என்றால் ‘’ ♪♫ அர்ஜீனா,
அர்ஜீனா..... ♪♫..’’ பாடலில் நீங்கள் ஆசெம்.
அந்த பாடலில் பொத்தான் இல்லாத சட்டையணிந்து நின்ற புரட்சி திலகா...., ஓ சாரி,
புரட்சி திலகம் சரத்குமார் கொஞ்சம் டொங்கள் போல் தெரிந்தார். அடுத்த படத்தில் உங்கள்
அப்பாவாகவோ/தாத்தாவாகவோ நடிக்க வரும் பு.திலகாவிடம் ‘’இப்போதெல்லாம் ஏன் பூமக்ஸ்
பனியன் ஜட்டி விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதில்லை?’’ என்பதை கேட்டுச்சொல்லவும்.
நீங்கள் வரும் கிஸ் கிஸ்
கிஸ்கான் கம்பியைத்தான் நான் எல்லோருக்கும் ரெகமன்ட் செய்கிறேன். அவர்களை துபாயில்
ஒரு பிரான்ச் ஓப்பன் பண்ணச் சொல்லவும். ‘’கிஸ்கான் ஸ்டீல் மவ்ஜீத் ஆதா அல்இமராத்,
கிஸ் கிஸ் கிஸ்கான்’’ என ஒரு விளம்பரமும் நீங்கள் நடித்து கொடுத்துவிட்டால்
போதும். உங்களை, நாக்கில் நரம்பில்லாமல் பேசிய நயவஞ்சக கூட்டம் கொஞ்சம் துபாயில்
இருக்கின்றார்கள் அவர்களிடம் நீங்கள் அரபியில் பேசும் விளம்பரத்தை காட்டிக் காட்டி
எனது கோபத்தைக் குறைத்துக்கொள்வேன். எல்லோரையும் மன்னித்துவிடலாம், ஆனால் லட்சுமி
மேணனுக்கு எல்லாம் ரசிகனாக இருக்கும் ஒருவன் உங்களை குறை கூறியதை மட்டும் என்னால்
மன்னிக்கவே முடியவில்லை.
நீங்க எங்களை மச்சான்ஸ்
என்று அன்போடு அழைப்பதை விரும்பாத நடிகர்/இயக்குனர் சேரன், தமிழை
கேவலப்படுத்துகின்றார் என்றார். ஆனால் அவர் நடிகர் என்ற பெயரில் நடித்து சினிமாவை
கேவலப்படுத்துவதை விடவா இது கேவலம்?. அன்று நீங்கள் ஆணையிட்டிருந்தால் சேரனுக்கு
செருப்பு மாலை அணிவித்திருப்போம். ஆனால்
உங்களுக்கோ உள்ளேயும் வெளியேயும் வெள்ளை மனசு, நீங்கள் அதை விரும்பவில்லை.
அஜித்துடைய எவ்வளவு
மொக்கை படம் என்றாலும் அஜித் குமாரை படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது திட்டுவதில்லை,
உயிரை கையில் பிடித்துக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு மீதிப் படத்தையும்
பார்த்துவிடுவேன். நான் (படத்துக்கு) கூட்டிசென்றவர்கள் கேவலமாக திட்டுவார்கள்
(அஜித்தையும் என்னையும்) என்பது வேற விசயம். ராஜா என்ற படத்தையே பார்த்துவிட்டேன் என்றால் என்னுடய
பொறுமையையும், அஜித்தின் மேல் நான் வைத்திருக்கும் பாசத்தையும் நீங்கள்
புரிந்துகொள்ளவேண்டும். ராஜா என்ற ஒரு படம் வந்ததா? என்றால் வந்தது.
இவ்வளவு அஜித் வெறியனான
நானே ‘’பில்லா 1’’ ல் அஜித் உங்களை சுட்டுக்கொல்லும் காட்சியில் கட்டுப்பாட்டை
இழந்து கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டேன். நீங்கள் இல்லாத மிச்ச காட்சிகளைக் காண எனது மனம்
ஒப்பவில்லை. மேலும் ‘’பில்லா 2’’ படத்தில் உங்களை ஒப்பந்தம் செய்யாததை அறிந்த போது
தெய்வ குத்தமாகிவிடும் என்று கத்தினேன், கதறினேன். கடைசியில் படம் பப்படம் ஆனது
உலகம் அறிந்த செய்தி.
உங்களை எனக்கு எவ்வளவு
பிடிக்கும் என்பதற்கு, கத்தியால் என் கையை கிழித்து ரத்தத்தை இந்த லட்டரில் காட்ட
இயலாது என்பதால் ஒரு சின்ன சம்பவத்தை கூற ஆசைப்படுகின்றேன். என் நண்பர்கள், ‘’பாபநாசம்
படத்தில் வேறு யார் நடித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்’’ என்பதைப்பற்றிப்
பேசிக்கொண்டு இருக்கும்போது, நான் ‘’தலைவி நமிதாவை நடிக்க வைத்திருக்கலாம்’’ என்று
சொன்னேன். ‘’ஏன் கவுதமி நல்லாத்தானே நடிச்சிருக்குது?’’ என்று ஒருவன் கூறினான். அதற்கு
நான், ‘’கவுதமி கேரக்டருக்கு இல்ல, ஸ்கூல் படிக்கும் கமல்/கவுதமி பொண்ணு கேரக்டருக்குன்னு
என்று சொன்னேன். அதுல என்ன குத்தம் கண்டுபிடிச்சானுங்கன்னு தெரியல. ஒரு வாரம்
பொறுமையா வச்சி செஞ்சானுங்க.
உங்களின் உடல் எடை
குறைந்த லேட்டஸ்ட் போட்டோவைத்தான் இதில் இணைக்கவேண்டும் என்று நினைத்தேன், ஏனோ
அதிக நாட்கள் என் பர்சிலும், புத்தகங்களிலும், ரூம் சுவரிலும், பேண்ட்
பாக்கெட்களிலும் ஆக்கிரமைப்பு செய்த இந்த போட்டோவை இணைப்பதே அதனிலும் சாலச் சிறந்தது
என்று முடிவெடுத்தேன். அரசியலில் குதிப்பதற்கு
முடிவெடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். குதிக்கும் போது பார்த்துக் குதிக்கவும், அதிக உயரத்தில் இருந்து, ஸ்கர்ட்
போட்டுக்கொண்டு குதிக்கவேண்டாம், குறிப்பாக தி.மு.க பக்கம் குதித்திட வேண்டாம்.
குஷ்புவின் இடுப்பில் கை வைத்து, கடைசியில் கை சின்னத்தின் கட்சிக்கே கை
மாற்றிவிட்டார்கள்.
உங்களின் பெருமைகளைப்
பற்றி ஜொள்ளிக்கொண்டே போகலாம். உங்களின் எதிர்கால கணவர், பணக்காரராகவோ, அல்லது
ரொம்ப அழகனாவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் கொடுத்த பேட்டியில்
கண்டேன். மிகவும் சந்தோசம் இறுதியாக,
ஒரே ஒரு முறை கல்யாணம்
என்ற குற்றத்தை செய்தவர்களுக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?
-----------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)