வியாழன், ஆகஸ்ட் 25, 2011

தூக்கம் வராத இரவு.

இது புனித ரமலான் மாதம் என்பதால் இங்கு (யு.ஏ.இ) அனைத்து கம்பெனிகளுக்கும் பணிநேரம் குறைவாக இருக்கும். எனக்கு மற்ற நாட்களில் பொதுவாக காலை 7 மணி முதல் மாலை 6 வரை இருக்கும், இந்த மாதத்தில் மட்டும் மாலையில் 3 மணிவரைவாக்கில் முடிந்துவிடும். நோன்பு திறக்க 7 மணிவரை ஆகும் என்பதால் ஒரு குட்டி தூக்கம் தூங்குவதுன்டு, அப்படி தூங்குவதால் இரவில் என்னதான் புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. இந்த மாதிரியான் ஒரு இரவில் சுமார் 1 மணிக்கு, தூக்கம் வருகிர வரை ஏதாவது புத்தகம் படிக்கலாம்னு எண்ணி, தூங்கிய நல்லுள்ளம் கொண்ட நண்பர்களை தொந்தரவு செய்யாமல், புத்தக குவியலில் இருந்து கைக்கு கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். அது அந்த வார ஆனந்த விகடன், எந்த பக்கத்தை திருப்பினாலும், திரும்பி நின்னு போஸ் கொடுக்குற நடிகைகள் போட்டோ தான்.

ரமலான் மாதத்தில் நான் ரொம்ப ஸ்டிரிக்டு, ஸ்டிரிக்டுன்னு எல்லா நடிகைகிட்டயும் சொல்லி, ஏரெடுத்துக் கூட பாக்காம பக்கத்தை மாத்தி, மாத்தி புரட்ட ஆரம்பித்தேன் (நல்ல வேளையாக நமிதா படம் ஏதும் இல்லாமல் இருந்து என் விரதம் காப்பாற்றப்பட்டது).

ஆ.வி யில் பெண்களுக்கான இடை ஒதுக்கீடு, ச்சீ, இட ஒதுக்கீடு 75%க்கும் மேல். ஆம்புள பயலுகல தேடிதான் புடிக்கவேண்டியிருக்கு. இருந்த 4 ஆம்புல பயலுங்கள்ள, காஞ்சனா விமர்சனத்துல லாரன்ஸ் பெண்வேஷத்துல வேற.....ஆன ஒரு ஆச்சர்யம், ஆணான லாரன்ஸ சேலயில போட்டவனுங்க, மறந்து கூட பெண்களுக்கு சேலயில இருக்கிரமாதிரி ஒரு போட்டா கூட போடல. இதுல ஒரு பெண் பனியனோட வேற இருந்தது,  நோன்பு நேரம் என்பதால் என்ன கம்பெனி பனியன்னு கூட பார்க்காம பக்கத்தை திருப்ப ஆரம்பித்துவிட்டேன்.

கவிஞர் வைரமுத்து இந்த வாரத்தில் இருந்து எழுத ஆரம்ப்த்திருக்கும் மூன்றாம் உலகப் போரை, ஆரம்பித்து ஒரு பக்கம் படிக்கிரதுக்குள்ள பெரிய அக்கப் போராகிப் போச்சு. அதவிட்டு விட்டு அடுத்த பக்கங்களுக்கு போனால் "சந்தி சிரிக்கும் இந்திய மானம்" என்ற தலைப்பை பார்த்ததும், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிகெட் அணி பற்றிய கட்டுரையோ என்று நினைத்தால், பக்கத்தில் ஒரு போட்டாவுடன் கூடிய டிசைன் கண்டு ஆடிப்போனேன். அது ஒரு கருப்பு மைய்யாலான ஆணின் கை, ஒரு பெண்ணின் பிறப்புருப்பில் தொட்டிருப்பது போல. சரி எவர் மக்களுக்கு ஏதோ சொல்ல நினைக்குறாருன்னு எண்ணி படிக்க ஆரம்பித்தேன்.

இது நம் இந்திய ராணுவத்தின் பாலியல் வன்முறை பற்றியதாக இருந்தது. 2003ல் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள, காங்கோ என்ற நாட்டி ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தை ஒடுக்கும் பொருட்டு, 3896 பேர் கொண்ட அமைதிப் படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் போன வேலையை விட்டு விட்டு, அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வேலியே பயிரை மேய்ந்தது போலானது. இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னறே கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகத்திற்கு கசியத் தொடங்கியபோது, இதனை அடியோடு மறுத்த இந்திய ராணுவமும் சரி, இந்திய அரசும் சரி, இப்போது அதனுடைய நன்பகத்தன்மையை அறிந்து விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற விசரனைகள் நியாயமான முறையில் நடைபெருவதில்லை என்பது தான் வருத்தமான செய்தி. கடந்த 10 ஆண்டுகளில் ராணுவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த மாதிரியான வழக்குகளில் 95% உண்மைக்கு மாறனதுன்னு தீர்ப்பகியுள்ளதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

இந்த கேடுகெட்ட சம்பவம் காங்கோவில் மட்டுமல்லாது நம்முடைய எல்லையோர மாநிலங்களில் கூட நடந்துகொண்டு தான் இருக்கின்றதாம். இது போன்ற செயலால் பாதிக்கப்பட்டு, அதற்காக போரடு உயிர் நீத்த மனோரமா என்ற மணிப்பூர் பெண் பற்றியும் எழுதியிருந்தார் அந்த எழுத்தாளர்.

பொதுவா நான் எப்போதும் ஒரு விஷயத்தை படித்தால், அதோடு சரி எழுதியத்ய் யார் என்று எல்லாம் படிப்பது இல்லை. ஆனால் ஏனோ இவரைப் பாராட்டியே ஆக வேண்டிய கட்டாயம். நன்றி திரு. சமஸ்.

ராஜிவ் காந்தியின் படுகொலைப் பற்றி பேசுகின்ற நம்மில் பலர், அவரால் அனுப்பிவைக்கப்பட்ட அமைதிப்படை வீரர்கள் செய்த இது போன்ற மன்னிக்க இயலா காரியத்தை செய்ததயும் மறந்து விட முடியாது. அனுப்பிவர்களில் பாதிபேரை இழ்ந்து நாடு திரும்பிய வீரர்களுடன் வெற்றி விழா கொண்டடிய நம்மை என்னன்னு சொல்ல. அந்த வெற்றிக்குத்தானோ பிரபாகரன் மனித வெடிகுண்டுகள் மூலமாக பரிசு கொடுத்தார்? என்று எல்லாம் யோசனை தோன்றுகிறது.

ஆப்கான், ஈராக் நாடுகளில் இந்த நாசகாரியங்கள் அமெரிக்கப் படையின்ரால் அரங்கேருவது, அதை வீடியோவாக எடுத்து ரசிப்பது பொன்றவை கொடுமையின் உச்சகட்டம். இதனால் ராஜிவ் காந்திக்கு ஏற்பட்ட நிலைமை, கண்டிப்பாக ஒபாமாவுக்கும் ஏற்படுவது கூட நிச்சயம் என்பதை அவர்கள் எண்ணிக்கொள்ளவேண்டும்.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாலரும், சேப்பாக்கம் தொகுதியில் 2000 வாக்குவித்தியாசத்தில் தோற்ற திரு. தமிம் அன்சாரி அவர்கள் காஷ்மீர் மக்களின் வாழ்வுரிமை பற்றிய ஒரு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்குள்ள மக்களின் நிலை, நிலைப்பாட்டையும் பற்றி முக நூலில் கட்டுரைகளை எழுதிவருகின்றார். கிட்டத்தட்ட அவருடைய கருத்துக்கள் அனைத்தும் திரு சமஸ் சொன்ன கருத்துகளுடன் ஒத்தே காணப்ப்டுகின்றது. அவர் அந்த கூட்டத்தில் ஒருவர் கூறியதாக் எழுதியது " நம்ம நாட்டு ராணுவமே, எங்களை தீவிரவாதியாகத்த் தான் பார்க்கின்றது, எங்கள் பெண்களயும் தப்பான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றது."

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கருதி இந்திய அரசு குறைகளை தட்டிக் கேட்கவேண்டும், தண்டனை வழங்க வேண்டும். ஒரு வேளை அப்படி செய்தால் பாக்கிஸ்தான் போர்ற நாடுகளில் நடந்தது போல ஏதாவது இராணுவ ஜெனரல் ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோன்னு பயந்திருப்பார்கள் போல.

கண்டிப்பா இது இராணுவத்திற்கு எதிரான கட்டுரை இல்லை, இராணுவத்தில் இருந்துகொண்டு நம் நாட்டின் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கும் சில இராணுவ வீரர்களுக்கு மட்டுமே எதிரானது. இராணுவத்தினரின் சம்பளம்,மற்றும் சலுகைகளை குறைப்பதற்கு எதிராக அரசாங்கத்தை அசிங்க அசிங்கமாக திட்டிய பல கோடிபேரில் நானும் ஒருவன். இன்று மட்டுமல்லாது, என்னுயிர் உள்ளவரை, அவர்கள் கண்விழித்திருப்பதால் தான் நான் இரவு கண்மூடித்தூங்க முடிகிறது என்ற உண்மையுனந்த ஒரு இந்திய பிரஜை.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

இழப்பு


வாழ்க்கையில இரண்டு விஷயங்களை நாம தேர்ந்தெடுக்க முடியாது ஒன்னு பிறப்பு இன்னொன்னு இறப்பு, இத நாம பல படத்துல கேட்டிருக்கலாம். இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் கூட நமக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாது. பிறப்பதற்கு முன் அம்மா வயிற்றில் அதற்கு முன்?, இறந்ததற்கு பின் மண் குழியில் அதற்கு பின்?. ஒரு பிறப்பு என்பது இரு பேரின் (பாலியல்) சந்தோஷத்தில் உண்டாவது, ஆனால் இறப்பு என்பது பல பேரின் துக்கத்தில் முடிவது. என்னதான் ஒருவன் எவ்வளவு பெரிய கெட்டவனா இருந்தாலும் அவனுடைய இறப்புக்கு கவலைப்படுவது தான் நம்ம இயல்பா இருக்கும்.

சும்மா ரோட்டுல விபத்துல இறந்துபோகுற, யாருன்னே தெரியாத ஒரு ஆளுக்காக நம்ம மனது கஷ்டப்படும்போது, நமக்கு உதவிய, நம்ம கூட இருந்த உயிருடைய இறப்பு ரொம்ப பேரிடியாக இருக்கும், அது எத்தனை வருடம் ஆனாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவங்கள, நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.

அந்தமாதிரியான இரண்டு பேர பத்தி இந்த கட்டுரை.

1) ஜனாப். சாகுல் ஹமீது. B.A
நான் மேல சொன்னது மாதிரி, சில சமயங்களில் நாம சிலரை மறந்தாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பம், அல்லது ஒரு நிகழ்வு அவங்களை நமக்கு ஞாபகப்படுத்தும். அதுமாதிரியான சந்தர்ப்பம் தான் எனக்கு இவங்கள ஞாபகப்படுத்தியிருக்கு, ஆம் இதுமாதிரியான ஒரு நோன்பு மாதத்தில் தான், இவங்க இறப்பு நடந்தது.

இவங்க என்னுடைய வீட்டுக்கு தொட்டடுத்த வீட்டுக்கரங்க, எனக்கு தெரிஞ்சு, எங்க தெருவுல ஹிந்து பேப்பர் வாங்குர இரண்டுபேர்ல இவங்க ஒரு ஆள். அந்த காலத்து பி.ஏ,ன்னு ரொம்ப மதிப்பும் அதிகம். வெளிநாட்டுல இருக்குற (வேலை செய்கிற)வங்களுக்கு ஏதாவது எமர்ஜன்சி பேக்ஸ் அனுப்பனும்னா எந்த நேரத்திலும் இவங்க வீட்டு கதவ தட்டலாம்.

எங்க வீட்டுக்கும், அவங்க வீட்டுக்கும் ஒரு வித்தியாசமான உறவுமுறை இருக்கும், என் அப்பா அவங்கல மச்சான்னு கூப்பிடுவார்கள் அதனால நான் அவங்கல மாமானு கூப்பிட்டாலும் அவங்க பசங்களை, அண்ண்னுதான் கூப்ப்ட்டேன், இப்பவும் அது மாதிரிதான். இறந்து 11 வருஷம் ஆகுது, இன்னும் எதாவது அழகான எழுத்துப்பார்த்தாலும் இவங்க ஞாபகம் வரும், கையெழுத்து அப்படி அழகா இருக்கும், கண்ணுல ஒத்திக்கலாம், அங்க எழுதிய குரான் தமிழ் வசனம் இன்னும் என் அப்பாகிட்ட இருக்குது. எங்க அப்பாவோட ஒரு நல்ல நண்பராகவும் இருந்ததால, பள்ளி முடிந்தவுடன் ஆங்கில டியூஷன் அவங்க கிட்ட போய் படிச்சேன். இப்போ எனக்கு ஒரு 50% வாது ஆங்கிலம் தெரியுதுன்னா கண்டிப்பா அவங்க ஒரு பெரிய காரணம்தான். நான் வேண்டா வெருப்புக்கு படிச்சபோது எனக்கு தெரியல, ஆனா ஆங்கிலத்துல பிச்சு உதரனும்னு முடிவெடுத்தப்போ அவங்க இல்ல. வெயில்ல போனப்பத்தான் நிழலோட அருமை தெரியும்னு சும்மவா சொன்னாங்க. நான் கண்முன்ன பார்த்த முதல் இறப்பும் அவங்களுடையது தான். நோன்பு எல்லாம் திறந்துவிட்டு, இரவு சாப்பாடும் முடிந்த நிலையில், பக்கத்து வீட்டுல இருந்து ஒரே அழுகை சப்தம் கேட்டு நானும், என் அப்பாவும் ஒருவித பயத்துடன் ஓடினோம். எங்கப்பவோடு சிரித்துப்பேசிய ஒருவரை, எந்த அசைவும் இல்லாமல் பார்த்தவுடனே எனக்கு அழுகை வந்தது. டாக்டருக்காக்காக ஒரு கூட்டம், காத்து வீசிவிட, காலில் தைலம் தேக்க ஒரு கூட்டம்னு பரபரப்பா இருந்தப்ப அவருடய கடைசி மூச்சி ஒரு சத்தத்தோட முடிந்தது.

அவங்க வீட்டுல டி.வி இருந்தாலும், எங்க அப்பாகூட பேசியபடியே டி.வி பாக்குரதுக்குன்னு எங்க வீட்டிலதான் சாய்ங்காலம் நேரம் கழியும். எங்க அண்ணன்மார்கள் படிக்காத காரணத்தினால் என் அப்பா என் படிப்பு மேல ரொம்ம சிரத்தயெடுத்தது எல்லாம், இவங்க மூலமாகத்தான் எனக்கு தெரியும். அப்ப நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன், என் உடம்ப பார்த்துவிட்டு, இஞ்சினியரிங்ல மெக்கானிக் இல்லாம வேற ஏதாவது பிராண்ஜ்ல தான் சேர்க்கனும்னு (அப்பவே இஞ்சினியர்தானு முடிவுபன்னியிருந்ததும் அவங்க தான்)சொல்லிக்க் கொண்டே இருந்தாவங்க. நான் நல்லா படிக்கனும்னு நினைத்த சில பேர்களில் இவர்கள் முக்கியமானவர். நான் +2 படிக்கும் போது இறந்துவிட்டார்கள்.

2) ஜனாப். முஹம்மது அலி ஜின்னா. M.A

இது எனக்கு மச்சான் முறை, என் பெரியப்பா மகளின் கணவர். எங்க தெருவில் ஹிந்து பேப்பர் வாசிக்கின்ற அந்த இரண்டாவது நபர். மத்தவர்களுக்கு எப்படின்னு என்க்கு தெரியாது, என்னப் பொருத்தவரையிலும், என் குடும்பத்தை பொருத்த அளவிலும் இவர் ஒரு ஞாயஸ்த்தர். பெரும்பாலான எங்க குடும்ப விவகாரமானாலும் சரி, குடும்பத்தில உள்ள உறுப்பினர்கள் விவகாரம்னாலும் சரி, பேசி முடிச்சு வெக்கிற ஆள்.

எங்க அப்பா, சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் இவங்கல விட வயதுல பெரியவர்களாக இருந்தாலும் கூட, சொன்ன முடிவுக்கு எதிரா யாரும் நின்னது இல்ல. தப்பு தப்புத்தான்.
இவர் மறைந்து 7 வருடம் இருக்கும். எங்க குடும்பத்துல முக்கியமான ஆள இழந்திட்டோம்முங்கிரது தான் நிஜம்.

இவர் மறைவிற்க்குப் பிறகு, இவர் இடத்துல இருக்க தகுதியா யாருமே இல்லாததுனால, எங்க குடும்பத்துக்குல்ல அதிக பிரட்சணை, அதன் காரணமாக எங்களுக்குள் அதிக இடைவெளி. என்னால் மட்டும் இல்ல எங்க எல்லாராலயும் கண்டிப்பா சொல்ல முடியும், அவங்க இருந்திருந்தா எங்களுக்குள் இவ்வளவு பெரிய இடைவெளியே வந்திருக்காது.

பெரியவங்களுடைய விஷயத்துல ஒரு மரியாதையோடு, என் அண்ணன் வயது ஒத்தவர்களிடம் ஒரு நட்புடனும், என் மாதிரியானவர்களோடு ஒரு பாசத்துடனும் விஷயங்களை கையாலுவதால், எந்த பிரட்சனைனாலும் அங்க தான் பொதுக்குழு கூடும். அவங்க இறந்த நாள் நான் ஊரில் இல்லை, என் நண்பர் சொல்லி கேட்டது அவருடைய ஜனாஸா ஊர்வலத்துக்கு அவ்வளவு கூட்டமாம். ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது நம்முடைய இறுதி ஊர்வலத்துல தான் தெரியும்னு அப்போ தான் புரிந்தது. அவர் இறந்து ஒரு வாரம் விட்டு ஒரு தயிர் விக்கும் பெண், இவர் இறந்தது தெரியாமல் தயிர் வாங்க கூப்பிட்ட போது பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னது கேட்டதும் கதரி அழுதது கண்டு திகைத்துதுப் போனது, பின்பு அந்த பெண் தனக்கு அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய தொகையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்கி கொடுத்த விஷயத்தை சொல்லிவிட்டு மறுபடிய்ம் அழ ஆரம்ப்த்துவிட்டது. தனக்கு அந்த தொகை 2 நாளுக்கு முன் கிடைத்துவிட்டதாக கூறி, நன்றி சொல்லவந்ததாக அவள் சொல்ல, கனத்த இதயத்துடனையே இருந்திருந்தது என் சொந்தங்கள்.


இவ்விருவரின் மருமைநாளின் நல்வாழ்க்கைக்காக ஆண்டவனிடம் பிராத்தித்தவனாக, இதை முடிக்கிறேன்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்

புதன், ஆகஸ்ட் 17, 2011

எங்க ஏரியா உள்ள வாங்க



நான் சிவில் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்.கலேஜில் படிக்கும் போது கூட எனக்கு ச்சீ ஏன் தான் இந்த டிப்பர்ட்மென்டை எடுத்தமோன்னு நினைத்தது இல்ல ஏன்னா எங்க செட்டுல மொத்தமே 33 பேருதான் (அதுலயும் ரெண்டு கோஷ்டி இருந்தது அது தனி)பெரும்பாலும் நாங்க சேர்ந்துதான் இருப்போம்.படிப்பு முடிந்தவுடன் எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது மற்றவர்களுக்கு சென்னையிலையே வேலை. சென்னை பசங்க எல்லோரும் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தான் தங்கியிருந்தாங்க.ஞாயிற்றுக்கிழமையில ஒரு கெட் டுகதர் இருக்கும், என்னால அதுல கலந்துக்க முடியாதனால நான் அப்போ அப்போ போன் பண்ணி எந்த வாரம் யார் வந்தா யார் வரலை, என்ன விஷயம் நடந்ததுன்னு எல்லாம் கேட்டு அப்டேட் செய்துகொள்வேன். இந்த மாதிரியான ஒரு ஞாயிற்றுக்கிழமயில் என் நண்பர்களை எங்கள் சக டிப்பார்ட்டுமென்ட் நண்பன் பார்க்க நேர்ந்தது. "டேய்..... இன்னும்மாடா ஒன்னா சேர்ந்து இருக்கேங்க..."னு அவன் சொன்னதா என் நண்பன் சொன்னத கேட்டு ரொம்ப பெருமையா இருக்கும்.

எங்க டிப்பார்ட்மென்ட் தான் மத்த டிப்பார்ட்மென்டை விட மாணவர்கள் மிகவும் குறைவு, மத்த டிப்பர்ட்மென்ட்ல குறைந்தது 60 டு 70 பேர் இருப்பங்க. அப்படி குறைவா இருந்ததாலத்தானோ என்னவோ எஙகளுக்குள்ள அதிக ஒற்றுமை இருந்தது, அதுக்கு நாங்க ரொம்ப சந்தோசப்பட்டோம் ஒரே ஒரு விசயத்த தவிற. அது தான் ஸ்போர்ட்ஸ். பல விளையாட்டு வகுப்பறையில விளயாடிருக்கோம் ஆனா..... மைதானத்துல.... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டோம். விளயட்டுப்போட்டி ஆரம்ப நாள் அன்னைக்கு கொடி பிடிச்சுட்டு நடக்கும் தலைவருக்கு பின்னாடி போரதுக்கு கூட 10 பேர் கிடைக்கமட்டானுங்க. புட்பால், வாலிபால், பேஸ்கட் பால், கிரிக்கெட், ........ இப்படி பல விளையாட்டு இருந்தாலும் எங்கள்ள 10 டு 15 பேர்தான் (முதல் வருடம் டு கடைசி வருடம் வரை சேர்த்து) எல்லாத்தயும் விளையாடுவார்கள். ஒரே நேரத்துல இரண்டு மேட்ச் வந்துருச்சுன்னா அவ்வளவு தான் ஆள் பற்றாக்குறையினால எதிரணி விளையாடாமலே வெற்றின்னு அறிவிப்பாகிவிடும். விளையான்டு தோக்குரதுக்கு இது எவ்வளவோ மேலுன்னு நீங்க நினைப்பது புரிகிரது. சரி விளையாடுற பசங்களாவது நல்ல விளையாடுவனுங்கனு பார்த்தா அதுவும் கிடையாது, புட்பாலுக்கு போய் ஸ்டம்ப் எங்கன்னு கேப்போம். இது என்ன பிரமாதம் எங்க கிரிக்கெட் டீம்முக்கு ஓப்பனிங் பவுலரே நான் தான்னா பாருங்களேன். ஒரு ஓவர 11,12 ...... பால் வீசி ரெக்கார்ட் வச்சிருக்கேன், அத இன்னைக்கி வரைக்கும் எவனும் ப்பிரேக் பன்னினது இல்ல. ஒரு ஓவர ரொம்ப ஓவரா போட்டது நானாகத்தான் இருக்கும்.

சனிக்கிழமைனா ப்பிரி நைட், அதாவது 12 மணிவரைக்கும் வெளியில சுத்தலாம், இப்படியான ஒரு சனிக்கிழமையில சினிமாவுக்கு போயிட்டு, சாப்பாடு எல்லாம் முடிஞ்சு காலேஜுக்கு பஸ்சுல ஏறி (ஒரு 14 பேர் இருக்கும்) டிக்கெட்டு எல்லாம் எடுத்தாச்சு, ஜன்னல் ஓரமா இருந்த விமல் டிக்கெட்ட என்னுறன்னு சொல்லி எண்ணுர சமயத்துல காத்துல்ல ஒரு டிக்கெட்ட விட்டுட்டான், சரி பசங்கள சமலிக்கனுமேனு "12 மணிக்கு யாருடா வந்து டிக்கெட் செக் பன்னப் போறான்னான்" உடனே கணேசன் அப்படின்னா இது மட்டும் எதுக்குன்னு மத்தா 13 டிக்கெட்டயும் காத்துல் பறக்க விட, காமெடியா பேசி சிரிச்சுக்கிடே வந்தா அடுத்த ஸ்டாப்புல செக்கர் ஏறிட்டாரு, நல்ல வேல அவரு முன் பாதை வழியா வந்தாரு. பஸ்ஸுல யாருக்கும் அல்லே இல்ல. என்ன செய்யுரதுன்னு யாருக்கும் ஒன்னும் ஓடல, இந்த சமயத்துல அடுத்த நிறுத்த்ம் வர செக்கருக்கு தெரியாம என்ன விட்டுட்டு மற்றவர்கள் எல்லாரும் ஓட ஆரம்ப்த்து விட்டார்கள். என் நேரம் வரவும் அவரிடம் 'ஸார் டிக்கெட் காத்துல பற்ந்திடுச்சுன்னு சொல்ல, என் காலேஜ் புண்ணியத்துல்ல 10ரூ மட்டும் பைன் போட்டு கலேஜ் ஸ்டாப்புல இறக்கிவிட்டுட்டாறு. பஸ் ஸ்டாப்பிலயே ஒரு 1 மணி வரை நண்பர்களுக்காக நின்னா யாரை காணோம், நமக்கு பின்னாடி நம்ம நண்பன் தான் வர்ரானு கூட தெரியாம, செக்கர் தான் துரத்திக்கிட்டு வர்ராருன்னு திரிப்பி பாக்காம இருட்டுக்குல்ல ஒரே ஓட்டம். வாழ்க்கயோட எல்லைக்கே ஓடிட்டனுங்க. பின்னாடி ஒவ்வொருத்தனா வந்து கூடி ஹாஸ்டலுகு நடந்த்து இருட்டுல போகுர சமயத்துல ஒரு சாக்கட நாத்தம், முனங்கல் வேர, என்னனு பார்த்தா ஒருத்தன் சாக்கடையில விழுந்து எந்திச்சு விந்திருக்கான் பாவம்.

இப்போ எங்கள்ள பல பேருக்கு திருமணமாகி வேர வேர இடத்துல இருந்தாலும் இன்னும் தொலைபேசில தொடர்பு அதிகம் உள்ளது. சம்பர்தாயத்துக்கு பேசுர மாதிரி எல்லாம் இல்லாம, நீ எப்படி இருக்க, அவன் என்ன செய்யுரான்... அவன்கிட்ட அன்னைக்கு பேசினேன் உன்ன பத்தி கேட்டான்... இப்படி எல்லோரயும் பத்தி பேசுரது, யாரயும் யாரும் மறக்கலங்கிரத மட்டும் தெரியப்படுத்திக்கிட்டே இருக்கும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்


ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

எங்க ஊரு....

.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வரும்ம.. என்ற பாடலின் வரிகளை கேட்ட பொது, எல்லோருக்கும் அவர் அவர் ஊர் கனாபகம் வருவது போல எனக்கும் என் ஊர் ஞாபகங்கள் கீழ் காணும் வரிகளாக.

எங்க ஊருல யாரிடம் ரேஷன் கார்டு இருக்குதோ இல்லயோ எல்லாரிடமும் பாஸ்போர்ட்டு கண்டிப்பா இருக்கும், 80% வெளிநாட்டு சம்பாத்தியம் தான். வெளிநாட்டு புண்ணியத்துல, வேல இல்லன்னாலும் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணு கிடைக்காதுங்கிற கவலை இல்ல. 


திருமணத்தின் போது வேலையோட இருந்தா சூப்பர் பிகர் இல்லன்னா என்ன கொஞ்சம் சுமார் ரகம் தான் (இது சில சமயங்களில் மாருதல்லுக்குட்பட்டது). அரக்கிலோ கத்தரிக்காய் வாங்கிட்டு அசால்டா 1000 ரூபா நோட்ட நீட்டுனா, கவலைப்படாம கேளுக்க நீங்க கடயநல்லூருக்காருதாநேநு. அந்நிய செலவாநிக்கும் அடியேன் ஊருக்கும் அப்படி ஒரு ஆணித்தரமான தொடர்பு, ரேங்க்ல முதல் 5 இடத்திற்குள்ள இருக்கும் . கொஞ்சம் பழைய  காலத்துக்கு  டாடாய்ஸ்  கொசு  சுருள  சுத்தவிட்டு  பின்னாடி  போய்  பார்த்தா , ஊரோட  முக்கியத்  தொழிலே  விவசாயம்  தான் .......... அப்படின்னு  சொல்லுவன்னு  நெனச்சிங்களா .. அது தான் இல்ல , தறி  நெய்யுறது  தான் . வருமையில  கஞ்சித்  தொட்டியெல்லாம்  திறந்திருக்கான்கலாம். இப்ப அந்த  தரிய  எல்லாம்  கீழேயுள்ள  படத்துல  தான் பார்க்க  முடியுது

முன்னாடி  கடையநல்லூர் லுங்கி , கைலினா  அவ்வளவு பேமஸ்ஸாம் . அதுனாலத்தான்  என்னவோ  எங்களுக்கு  கைலி , லுங்கி உடுத்துரதுலா  அலாதி  பிரியம் . என் பள்ளிக்  காலங்களில்  எனது  ஊர் பள்ளி  அனைத்திலும்  கைலி உடுத்திக்கொண்டு  கிளாசுக்குள்ள  போகலாம் , லுங்கி  உடுத்தியிருக்கும்  வாத்தியாரும்  ஒன்னும்  கேக்கமாட்டார்.

நான்  நல்லா  படிக்கணும்னு  எங்கப்பா  என்ன பக்கத்து  ஊர் இடைகாலில் சேர்த்துவிட்டார்,  7m வகுப்பில்  இருந்து  அய்யா  பஸ்ஸுல  பிரயாணம்  பண்ணித்தான்  படிச்சது .அப்படி  சேர்த்துவிட்டதுனாலத்தான் நான் இஞ்சினியர்  படிச்சேன்னு  எங்கப்பாவுக்கு  நினைப்பு , ஆனா  எங்க ஊருல படிச்சிருந்தா டாக்டர்  ஆகியிருப்பேன்னு  அவருக்கு தெரியாம  போச்சு. ஊரு பசங்க கூட சாய்ந்தரம் தான் மீட்டிங், உங்க ஸ்கூல்ல என்ன நடந்தது எங்க ஸ்கூல்ல என்னனு ரொம்ம சுவாரஸ்சியமான பேச்சுகல்லோடு ஓடும். பரீட்சய்க்கு பிட் அடிக்கும் முறைய அவனுங சொல்லும் போது அதாவது பிட்ட கைலிலா போட்டு கால விரிச்சு பார்த்து எழுதனும், வாத்தியார் வந்திட்டா, சிம்பிள் கால மடக்கி வச்சிடனும், இப்படியா பல விஷயஙல சொல்லி அவனுங்க ஸ்கூலுதான் பெருசுன்னு சொரிஜ்ஜிவிடுவானுங்க. அத விட உச்சகட்ட வேதனை லீவுதான். அவனுங்க எல்லோரும் முஸ்லீம் பள்ளிக்கூடம்கிறதுனால வியாழன், வெள்ளிக்கிழமைகலிள் லீவு, நமக்கு சனி, ஞாயிறு தான்.வியழன், வெள்ளியில் பள்ளிக்கு போகும் போது நண்பர்கள் அணைவரும் பேட், பலோடு நின்னு வெருப்பேத்துவானுங, அந்த நேரத்துல எங்கப்பா எனக்கு நம்பியாரா தெரிஞ்ஞாரு.

ரமலான் மாததில் எங்க ஊரு பள்ளிகளுக்கு மதியம் வரை தான், எனக்கு எப்போதும் போல தான், இருந்தாலும் கூட எனக்கு அதுல எல்லாம் பெரிய வெறுப்பா தெரியல, ஏன்னா என் பள்ளியில் மொத்தமே 3 முஸ்லீம் பசஙதான். அதனால நமக்கு அந்த மாசத்துல மட்டும் ஏக மரியாதை கிடைக்கும், படிக்கலனாலும் சரி, வீட்டுப் பாடம் செய்யலானானும் சரி வாத்தியார் அடிக்கவர்ர சமயத்துல மொத்த வகுப்புமே சேர்ந்து கோரசா சொல்லும் " சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவன் நோன்பு வச்சிருக்கான்ன்ன்ன்ன்ன்ன்ன்" ஸோ தோழர்கள் தயவில் கிரேட் எஸ்கேப். ஸ்பெஷல் கிளாஸ் இருந்தாலும் நம்மக்கு கிடையாது, வேக வேகமா பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வந்து, நோன்பு திறக்க எந்த பள்ளிவாசலுக்குப் போகலாமுன்னு நண்பர்களுடன் விவாதம். அப்போ அவங்க அவங்க கலெக்ட் பண்ணின இன்பர்மேசன் படி சொல்ல ஆரப்பிபானுங்க. அங்க இன்னய்க்கு பாயாசம், தெரு பள்ளில கரி, மதினா நகர் பள்ளியில பஜ்ஜி...... இப்படி போகும் லிஸ்ட்டு. அதுல ஒன்ன தேர்ந்தெடுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாலயே போய் ஆஜராகி எல்லாம் முடின்ஞ்சு அரைமணி நேரம் கழித்து, விழவை சிரபித்தமைக்காக எங்களுக்குல்லேயே மாறி மாறி நன்றி தெரிவித்து விட்டுத் தான் இடத்த காலி பண்ணுரது.இந்த மாதத்துல்ல (ரமலான்) ஹீரோனு சொன்னா வாண்டுங தான், பள்ளிவாசலில் அவனுங்க இராஜ்ஜியம் தான், எவனும் கேக்க முடியாது. அதிகாலை தொழுகைக்கு பெரியவங்க மட்டய போட்டலும், இவனுன்க தான் பள்ளிவாசலுக்கு ஹவுஸ் புல் போர்டு போடுரது. சின்ன தொப்பி, சின்ன லுங்கி சகிதமா பள்ளிவாசலுக்கு அந்த பசங்க குரூப் குரூபா வர்ரது பாக்குரதுக்கு அவ்வளவு அழகு (பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும்). நோன்பு கஞ்ஞி எடுக்குரதுக்கு அவஙளுக்குத்தான் முன்னுரிமை. இப்போ அது எல்லாம் மாறிப்போச்சு, பேன்ட், சர்ட்டோட, தொப்பியில்லாம இப்போ உள்ள பசங்கல பாக்குரது அத்தனை சுகமா இல்ல.

மாவட்டம் திருநெல்வேலின்னாலும் எங்க ஊருக்குன்னு ஒன்று இல்ல ரண்டு பாஷை இருக்கு, ஒன்னு கிட்டத்தட்ட திருநெல்வேலி பாஷயா இருக்கும், இன்ன ஒன்னு கொஞம் வித்தியாசமா இருக்கும். உதாரணத்துக்கு இரண்டை மேல சொன்னது மாதிரி ரண்டுனுதான் சொல்லுவாங்க. முதல் வகை அத்தா, அம்மானு பேசுர ஹனபி வகை, ரண்டாவது, ச்சீ இரண்டாவது வாப்பா, உம்மானு பேசுர ஷாபி வகை. ரோட்டுக்கு மேக்கால ஹனபி, கிழக்கால ஷாபி. 

ஷபி யின் சில வார்த்தைக்கள் அர்த்தத்துடன்.

1. ஒக்குடு = ரிப்பேர் பண்ணு
2. பய்தா = சக்கரம்
3. ஓட்டயாபோச்சு = ரிப்பேராகிவிட்டது
4. எல்லூட்டம்மா = எதிர் வேட்டு அம்மா......

ஷாபி இப்படின்னா, ஹனிபி ஏரியால பேமஸ், வீட்டுக்கு ஒரு பேர் இருக்கும் அது தான். பொதுவா எங்க வீட்டு பட்டப் பேரு "காத்தரிக்காச் சட்டி". இதுமாதிரி, உதாரணத்திற்கு

1. அணுகுண்டு
2. காணாத்தி
3. புளுவனி
4. பொத்தக்கனி.....

மேல சொன்ன பேரு எல்லாம் எழுதுர வகை பேர்கள். எழுதமுடியாத அளவிற்கு எல்லாம் பேர்கள் இருக்கிறது. 

எங ஊருக்குனு பல பஞ்ச் டயலக்கெல்லாம் இருக்கு

"கடையநல்லூருக்கான் 
குழிக்கனும்னு நெனச்சா, குற்றாலதிலயும்,
கழுவனும்னு நெனச்சா கம்மாயிலயும் தண்ணிவரும்லே..."

"கடையநல்லுருக்கு வந்தா, கழுதகூட திரும்ப போகாது"

சப்பாடு விஷயத்துல நங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டு ஸ்டிரிக்ட்டு ...

காலை = புரோட்டா, சால்னா, முட்டை.
மதியம் = சால்னர், முட்டை, புரோட்டா.
இரவு = முட்டை, புரோட்டா, சால்னா.
இந்தமாதிரி வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவோம்.

நேரம் இருந்தா எங்க ஊருக்கு வந்திட்டு போங்க....... (ச்சே, ச்சே, மேல சொன்னது கழுதைக்குத் தான்)

Courtesy: For Photos Poochai Sha

வாழிய யாம்
வாழிய யெம்மொழி பல்லாண்டு
வாழிய வழியவே..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அரபாத்.