Standing applaud for Ajith’s Speech by Rajnikanth in Pasathalaivarukku Parattu Vizha
|
வணக்கம், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக.
நடிகர் விஜய் இராஜபக்சேக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவக கையெழுத்து
போடாததற்கு விடுதலைச்சிருத்தைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல்
படிக்கக் கண்டேன். என்ன மடத்தனமான ஒரு விஷயம், இவர்களுக்கு முதலமைச்சரிடமோ, அல்லது
தமிழகத்தில் இருக்கும் எம்.எல்.ஏவிடமோ வாங்க துப்பில்லை, பாவம் இலங்கையை மேப்பில் மாட்டுமே பார்த்து பழகிய ஒன்றும்
தெரியாத நடிகர்களின் கையெழுத்தை வைத்து என்ன செய்துவிடப்போகிறார்கள் என்றே
தெரியவில்லை. இந்த இயக்கத்த்தின் தலைவர் திரு தொல். திருமாவளவன் இலங்கை
சென்றிருந்தபோது அந்த ராஜபக்சேவிடம் ஒரு கேள்வி கேட்கவே துப்பில்லாமல், அவர் கொடுத்த ப்ரியாணியை ஒரு கட்டு கட்டிவிட்டு, தமிழகம் வந்ததும், சிங்களர்கள் சரியில்லை, அந்த பிரதமர் அப்படி இழக்காரமாக பேசுகிரார்
இப்படி அசிங்கப்ப்டுத்திப் பேசுகிரார் என்று தன் வீரத்தை காட்டியவர். சரி நீஙகள்
அப்பொது அந்த சந்திப்பினை கண்டித்து வெளிநடப்பு ஏன் செய்யவில்லை என்று கேட்டால், என் நாட்டு பெயரை காப்பற்றவே அவ்வாரு செய்யவில்லையாம். என்ன
ஒரு பச்சோந்தி தனம்.
இவரைப் பற்றி ஒரு முகப்புபுத்தகம் (FACEBOOK) விமர்சன்ம் நான் படித்தது, "நல்ல வேளை இவர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெரவில்லை, இல்லயென்றAல் பல
கோணங்கலில் இவர் போஸ் கொடுக்கும் ப்பளக்ஸ்கள் சென்னை சாலையை நிரப்பிருக்கும்".
ஆக இவர்களின் வீரம் என்பது வெரும் ப்பளக்ஸில் மட்டும் தான். தன் கூட்டணிக்
கட்சிகளைக் கூட புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க முடியவில்லை
இவர்களால்.என்ன செய்ய போகிரார்கள் இந்த கையெழுத்தை மட்டும் வைத்து கொண்டு????. கண்டிப்பாக இந்த மாதிரியான கட்சிகள் அல்லது இயக்கங்கள்
நடத்தும் இது போன்ற பேனa மை ஏன் குருதி கையெழுத்து காகிதங்கள் கூட
அவர்களின் காக்கூஸில் சுத்தம் செய்யமட்டுமே பயன்படுத்தப்படும். நான் அனைத்து
இயக்கங்களையும் சொல்லவில்லை இது போன்ற தனக்கு ஒரு கொள்கை, மக்களுக்கு ஒரு கொள்கைனு இருக்கிரவர்களை மட்டும் தான்.
சரி இதுபோன்ற முதுகெலும்பில்லாதவர்கள் ஏன் மீண்டும், மீண்டும், சினிமா
பிரபலங்களையே தொந்தரவு செய்ய வேன்டும், ஏனில் அவர் போன்றவர்களால் தான் மக்களின் கவணத்தை ஈர்க்க முடியும், மேலும் முக்கியமனது தங்களின் எதிர்ப்பை அவர்களிடம் உடனடியாக
காட்டிவிடமுடியும், சூட்ட்ங் நடத்தும் இடத்திற்கு போய் ரகளை
செய்வது, இலலனா திரைப்பட்த்தை எதிர்ப்பது போன்றவை.
உதாரணத்திற்கு ரஜினியின் பாபா படம், அது என்னமோ ப.ம.க எதிர்ததால் தான் ஓடவில்லை என்று, ஆனால் ப.ம.க ஆதரித்தால் கூட அது ஓடியிருக்காது என்பது
நம்மில் பலருக்கும் தெரியும். எதாவது ஒரு எதிர்ப்பை பதிவு செய்யனும்னா உட்னே
நடிகர், நடிகைகளை கூப்பிடு.... என்ன இது, கஜால் அகர்வாலுக்கு, காவிரி பிரச்சனை என்னனு தெரியும், இல்ல இலியானாவுக்கு இலங்கை பிரச்சனை பற்றி என்ன தெரியும்????. சரி போராட்டத்துக்கு போகுரதுக்கு எதுக்குயா மேக்கப்பு, ஏதோ பாஷன் சோவுக்கு வர்ரமாதிரி உடைவேர. கூப்பிட்டவனுக்கு
அவங்க எப்படி வரனும்னு கூடவா சொல்லதெரியல?.
என்னைக்காவது நமிதாகிட்ட மைக்க கொடுக்க போறானுங்க, அது, காவ்ரி தண்ணிக்கு மக்கல் சாவ்து, வெல்ல பில்லை பிரபாகரன் மச்சான் அதுக்கு போர்ராடுத்துன்னு
சொல்ல போகுது அதோட இவங்க ஆட்டம்முடியுது.
இதுக்கு காரணமா இந்த மாதிரியான அரசியல்வாதிகளை மட்டும் சொல்ல முடியாது, முக்கிய காரணமே மக்கள் தான் (நாம தான்). அஜித்குமரா படத்துல
ரசிக்கிரொதோட விடாம, தினசரி வழ்க்கையெலும் ரசிக்க ஆரம்பிசிடுரான். 50 ரூபா டிக்கெட் கொடுத்து 50 கோடி படத்த மக்களுக்கு இனி அந்த நடிகர் அடிமைய்னு அரசியல்வாதி அதவெச்சு
அரசியல் பண்ன ஆரம்பிச்சுக்குரான். கேரளவில அந்த மக்கள் ரொம்ப தெளிவா இருக்கான், இதனலத்தான் அங்க அரசியலும் நல்லா இருக்கு, படங்களும் நல்லா இருக்கு. அங்க எந்த நடிகனும் எந்த
கட்சிக்கும் ஓட்டுபோட சொல்லமாட்டான், அதேநேரத்துல எந்த கட்சியும் ஒரு நடிகனோட வீட்டுல போய் திக்காது, ஏன்ன அவனுக்கு தெரியும் இவன் சொன்னான்னா விழுர ஓட்டும்
விழாதுன்னு. நம்ம மட்டும் தான் ஒரு மணிநேரம் பேசினா 60 நிமிசம் சினிமாபற்றியே பேசி தொலைக்கிரோம். தமிழ் நாட்டு
முதல்வர் யாருன்னு கேட்டா, மன்மோகன் சிங்குன்னு கரெக்டா சொல்லுறது
நம்மாலுங்க தான், அதயும் மீறி ஜெயலலிதானு சொன்னா எப்போ மாத்தினaனுங்கனு கோபம் வேரு (மாற்றும்போது இவர்ட கேக்கலனு).
அப்புறம், நடிகர்கலின் அரசியல் சார்புத்தன்மை, ஆளும்கட்சிக்கு ஆதரவ இருக்கலாம், ஆன ஆளுங்கட்சிக்கு ஜால்ராவா இருக்குறது தான். முதல்வர்
படுத்தா பாராட்டு விழா, நடந்தா நன்றி விழா...... இப்படி எடுத்தா, பிறகு கேணய கூட உங்கல வச்சு கேரம்போர்டு விளையாடத்தான்
செய்வான். தெலுங்கான விவகaரத்துல்ல கூட மக்கள் அவங்களா தான் போரடுராங்கலே
ஓழிய எந்த நடிகனிடமும் கைகெட்டி நிக்கல, ஆனா அது மட்டும் நம்ம் மாநிலத்துல்ல நடந்திருக்கட்டும், ரஜினி உணணாவிரதம் இருக்கனும், கமல் ஆதரவா அறிக்க விடனும், பிறகு எல்ல
நடிகர், நடிகைகளும் கைகோர்த்து மனித சங்கிலி
அமைக்கனும்னு அல்லோலப்பட்டிருக்கும். கேரளaவில் நடிகர் சங்கம் முதல்வருக்கு எதிரா அறிக்கை விட்டு கமலஹாசனின் விருது விழாவையே புரக்க்கணித்தது, ஒரு நடிகரும் செல்லவில்லை அவ்வள்வு ஒற்றுமை, எனக்கு தெரிந்து உலகத்திலயே ஒரு நடிகனுக்கு சக கலைஞர்கள்
ஒருவரும் இல்லாமல் வெரும் அரசியல்வாதிகள் மட்டுமே எடுத்த பாராட்டு விழான்னா அது
அந்த விழாவாகத்தான் இருக்கும்.இதுமாதிரி ஒன்னு இங்க நடந்தா, அறிக்க விட்டவன் நடக்கமுடியாது!!!!.
எதோ வி.சி, ப.ம.க போன்ற கட்சிகளின் தோல்வியால், மக்கள் ஜாதி கட்சிகளை புரக்கணித்துவிட்டார்கள் என்று
சொல்லுவதெல்லாம் சும்மா. வேண்டும் என்றால் இந்த முறை இந்த கட்சிகளை
புரக்கணித்திருக்கலாம் ஆனால் ஜாதியை மட்டும் புரக்கணிக்கவில்லை. ஆம் ஒரு கட்சியின்
செட்டியார் தோற்று இன்னொரு கட்சியின் செட்டியார் வெற்றி பெற்றார், அதுபோலதான் தேவர், பள்ளர், கோனார், அய்ய்ர்.......