வியாழன், நவம்பர் 17, 2011

சிவில் இன்ஞினியர்னா என்னனு கேளேன்........மச்சி நீ கேளேன்!!!!!


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.


பொதுவா நமக்கு, நாம சார்ந்திருக்கக் கூடிய துறைபற்றி யாராவது ஒரு சின்ன கமெண்ட் அடிச்சாலும் நம்மால தாங்கிக்க முடியாது. இது காலேஜிலேயே ரொம்ப நடக்கும். என் எலக்டிரிகல் நண்பன் என்னை கொத்தனாருன்னு சொல்லுரதும், அவன நான் வயர்மேன்னு சொல்லுரதுமா சண்ட ஆரம்பம் ஆகும். பிறகு என்ன அவன் என்ன அடிக்க, நான் அவங்கிட்ட திருப்பி அடிவாங்கன்னு சாதா சொந்தம், ரத்த சொந்த்ததில் முடியும்.

சிவில் இன்ஜினியர் எப்போதுமே ரொம்ப ரொம்ப சிறப்பு, எப்படிங்கிறீங்களா?,

சொர்கத்துல இருக்குறவங்களுக்கும், நரகத்துல இருக்குறவங்களுக்கும் நடந்த பேச்சிவார்த்தயின் இறுதியில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. அது என்னன்னா

சொர்கத்துல சேட்ட பண்ணுர சேட்டக்காரங்களை நரகத்துக்கும், நரகத்துல நல்லா புள்ளையா இருக்குறவனுங்களை சொர்கத்துக்கும் மாத்தும் போது, பல மைல் தூரம் சுத்தி கடந்து போவது சிரமமாக இருப்பதால், இரண்டிற்கும் இடைப்பட்ட 200 கி,மீல் பாலம் போடுவதற்குண்டான தீர்மானம் தான் அது.

அதில், 100 கி,மீ சொர்கத்துக்காரங்க போடனும், மிச்சமுள்ள 100 கி.மீ தூரத்தை நரகத்துல உள்ளவங்க போடுவாங்கன்னு பேசிமுடிவாகுது. 6 மாதம் டைமும் கொடுக்கப்படுகின்றது.
6 மாசம் முடியுது.

தீர்மானத்தின் படி, சொர்கத்துல இருக்கின்றவர்கள் தங்களுடைய பங்கான 100 கி.மீட்டரை முடிச்சபின்னாடி பார்த்தா, நரகத்துல ஒரு இம்மியளவும் பாலம் ஆரம்பிக்காம இருந்தது கண்டு, சொர்கத்தின் தலைவருக்கு சரியான கோபம்.

இதவிசாரிக்க மறுபடியும் சபை கூடுச்சு,

கோபத்துல சொர்கத்துக்காரங்க எல்லோரும், நரகத்து தலைவரை கட்டி ஏற, ந.தலைவர் வாய திறக்காம நின்னாரு.

சொ.தலைவர் ஒழுங்கு மரியாதையா காரணத்த சொல்லலைனா நடக்குறதே வேரன்னு மிரட்ட, கடைசியா வாயத்திறந்தார் நரகத்துத் தலைவர்.

“நாங்களும் இந்த 6 மாசத்துல எங்க நரகத்துல தேடாத இடமில்ல, கேட்காத ஆள் இல்ல, ஆனா, ஒரு சிவில் இஞ்சினியரக் கூட கண்டுபிடிக முடியல நாங்களும் இன்னைக்கு யாராவது வந்திருவான், நாளைக்கு யாராவது வருவான்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த்து போனதுதான் மிச்சம். னு சொல்லி பாவம் கண்ணுல தண்ணிவச்சுண்டார்.

தன் ஆதங்கத்தை கதறி கதறி சொன்னதுகேட்டு. சொர்கத்து தலைவரே மனசு இறங்கி “சரி மிச்சமுள்ள தூரத்தையும் நாங்களே போட்டுத்தருகின்றோம்னு ஆருதலா சொல்லி அனுப்பிவச்சார்.
.

இத கேட்டும் சிவில் இஞ்சினியர்கள் தான் சிறந்தவர்கள்னு ஒத்துக்க முடியலையா, அப்ப இதயும் கேளுங்க

மூணு சிவில் இன்ஜினியர்ஸ் ஒரு மீட்டிங்கிற்காக சென்னையில் இருந்து, டெல்லிக்கு போகுறதுக்கு டிக்கெட் வாங்குறதுக்கு வரிசையில் நிற்கும் போது, இதுமாதிரியான வேற ஒரு மீட்டிங்கிற்காக மூணு வக்கீல்களும் போறங்க. அவர்களுடன் நட்பு ஏற்படுகின்றது.

முதலாவதாக, அந்த மூணு வக்கீல்களும் ஆளுக்கு ஒரு டிக்கெட் எடுக்க, மீதமுள்ள மூணு இன்ஜினியர்களும் சேர்ந்து ஒரு டிக்கெட் எடுக்க, வக்கீல்களுக்கு ஆச்சர்யம்,

என்ன சார் நீங்க மூணு பேரு, ஆனா ஒரு டிக்கெட் மட்டும் எடுத்திருக்கீங்க?

அதுக்கு நம்மாளு “போதும் ஸார் பார்த்துக்கலாம்

எப்படி சார்?

ரயில்ல எங்க கூடத்தான வர்ரீங்க, பாருங்க புருஞ்சிவிக்கீங்கன்னு சொல்லிட்டு, வண்டியில் ஏற
வக்கீல்கள் மூவரும் அடித்து பிடித்து கிடைத்த இடத்தில் இருந்தாலும், அவங்க மனசு பூராவும், அந்த மூணு பேரு என்ன செய்யுரானுங்கன்னு பார்த்துக்கிட்டே இருந்தது.

டிக்கெட் செக்கர் வந்து, டிக்கெட் கேட்கும் நேரமா பார்த்து, அவருக்கு தெரியாம இன்ஜினியர்ஸ் மூவரும் பாத்ரூமில் முட்டிக்கொண்டு நின்று கதவடைகின்றார்கள்.

அந்த வழியாக வந்த பரிசோதகர், கதவைத் தட்ட

உள்ளே இருந்து ஒரே ஒரு கை மட்டும், அந்த ஒரு டிக்கெட்டுடன் வெளிவர, டிக்கெட்டை வாங்கி சரி பார்த்துவிட்டு கிளம்புகின்றார். இதைக் கண்ட வக்கீல்களுக்கு ஒரே அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.

டெல்லியில் மூண்று நாள் இருந்துவிட்டு, அந்த வக்கீல்கள் மீண்டும் சென்னைக்கு வரும் சமயத்தில், இரயில்வே ஸ்டேசனில் மறுபடியும் அதே மூண்று சிவில் இன்ஜினியர்களை சந்திக்கின்றனர்.

வக்கீல்களுக்கு ஒரு யோசனைவர, அவர்களது பார்முலாவையே நாமளும் கடைபிடிக்கலாம் என்று கூடி பேசி, ஒரே ஒரு டிக்கெட் எடுக்கின்றார்கள்.

ஆனால், இந்த முறை இஞ்சினியர்களின் பார்முலாவில் மாற்றம், ஆம், அந்த ஒரு டிக்கெட்டை கூட எடுக்காமல், மூணு சிவில் இன்ஜினியர்களும் ரயில் ஏற, வக்கீல்கள் மூவருக்கும் பைத்தியமே புடிச்சிருச்சி.

என்ன ஸார் இது, ஒரு டிக்கெட் கூட எடுக்கல, எப்படி?

அது அப்படித்தான், பார்த்துக்கலாம்.

இல்ல எப்படின்னு தெரின்ஞ்சிக்கல்லாமுன்னு........?

ரயில்ல எங்க கூடத்தான வர்ரீங்க, புருஞ்சிவிக்கீங்கன்னு சொல்லிட்டு, வண்டியில் ஏற,

இஞ்சினியருக்களுக்கு முந்திக்கொண்டு ஒரு பாத்ரூமில் வக்கீல்கள் மூவரும் பதுங்க, சிறிது நேரம் விட்டு, பொறுமையாக அதற்கு எதிர்தாப்புல இருந்த மற்றொரு பாத்ரூமில் பதுங்குவதற்கு முன்பு, ஒரு சிவில் இஞ்சினியர் மட்டும், வக்கீல்கள் இருந்த பாத்ரூம் கதவை தட்ட,

டக், டக், டக்.....

உள்ளே இருந்து ஒரே ஒரு கை மட்டும், டிக்கெட்டுடன் வெளியில் வந்தது!!!!!!!!!!!!
.
.
.
.
.
------------------------------------------------------------பொறியாளர் யாஸிர் (கட்டடவியல்)

புதன், நவம்பர் 16, 2011

இண்டர்வியூயெனும் கொடுமை.



நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.


நான் சிவில் இன்ஞினியரிங் படித்து முடித்து 7 வருடங்கள் ஆகின்றன, இன்னும் முதல் கம்பெனியில் இண்டர்வியூவிற்காக சென்றது மறக்கமுடியாதது. அந்த இண்டர்வியூவிற்காக, எடுத்த டிக்கெட் கூட கன்பார்ம் ஆகலன்னு தெரிந்தவுடனேயே பின் வாங்கியிருக்கனும். ஆனாலும் என்னமோ நல்லா படிச்சவன் மாதிரி அன்-ரிசர்வேசன் கம்பார்ட்மெண்ட்ல ஏறி சென்னை வந்தேன். என் வாழ்க்கயிலயே மோசமான ஒரு பயணம்னா அது அந்த இரயில் பயணம் தான்.

உட்கார இடம் கிடைக்கலானும் பரவாயில்ல ஆனா நிக்கிறதுக்குக் கூட எனக்கும், என் நண்பனுக்கும் இடம் கிடைக்காமல் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நின்னுக்கிட்டே வந்தோம். சென்னை எனக்கு அதிகம் பழக்கமில்லாத்தால், ஒரு ஸ்டேசனில் உட்கார இடம் கிடைத்ததேன்னு எண்ணி உட்காரும் போது தான் சொன்னான் என் நண்பன்,
“மச்சி இது தாம்பரம், அடுத்த ஸ்டாப்பில் நாம இரங்கனும்

அப்போ அடுத்த ஸ்டாப் தான் சென்னையா?

டேய், இதுவே சென்னைதான்டா, திருநெல்வேலியில எப்படி ஜங்சன், பேட்டை, பாளயங்கோட்டையோ அது மாதிரி இங்கே, தாம்பரம், குரோம்பேட்டை, எழும்பூர். அப்படின்னு சொல்லிமுடிக்குறதுக்குள்ளே நாங்க இறங்கும் இடம் வந்தது.

அடிச்சி புடிச்சி, இண்டர்வியூக்கு போனா, நாம என்ன கண்டிசனில் இண்டர்வியூக்கு வந்திருக்கமுன்னே தெரியாம, கேள்வியா கேட்டு பார்த்தார்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம். வாயே தொரக்கலியே. பிறகு என்ன கொஞ்ச நேரம் கழித்து திறந்தேன், வாய இல்ல கதவ, தொரந்து வெளியே வந்தேன்.

அப்ப முடிவானது தான். இனி ஒருத்தன் கேள்வி கேட்டு அதில் பாஸாகித்தான் வேலைக்குப் போகனும்னா அது இந்த காலத்துல நடக்காதுநன்னு தெரிஞ்சி போச்சி.

ஆக, கேள்வியே கேட்காம எந்த கம்பெனியில் சேரலாம்னு, அந்த மாதிரியான ஒரு கம்பெனியை தேட ஆரம்பித்தேன். அப்படி தேடுனதுல ஒரு வருசம் போயிடுச்சு.

அப்படி கண்டுபிடிச்ச கம்பெனிதான், என் முதல் கம்பெனி. இருந்தாலும் அப்பாயின்மண்ட் ஆர்டர் வாங்கப்போகின்ற சமயம் பார்த்து.

ஜஸ்ட் பார்மாலிடிக்காக எங்க முதலாலி ஒன்னு, ரெண்டு கேள்வி கேட்ட்துக்கப்புறம், ஆர்டர வந்து வாங்கிக்கங்க ன்னு ஒரு அம்மா சொல்லிட்டு போக, போச்சுடா சென்னைக்கு வந்த காசு நாசமா போச்சுன்னு மனசுக்குள்ள நினச்சிகிட்டு, எப்படின்னாலும் அந்த ஆளு கேக்குற கேள்விக்கு பதில் சொல்லமாட்டோம், மாத சம்பளம் வாங்குனவனே போன தடவ அப்படி கேட்டான், இவன் கம்பெனியோட ஓனர்வேர, செத்தடா யாஸிருன்னு, மனசாட்சி வெளியில வந்து எனக்கு மட்டும் காது கேட்கின்ற மாதிரி சொல்லிகிட்டு இருக்கும் போதே,

தம்பி, ஸார் கூப்பிடுறாருன்னு, ஆபிஸ் பாய் சொல்ல,

வந்தது வரட்டும்னு தையிரியத்த வரவழைத்துக் கொண்டு, நேர வேகமா போய் கேட்டேன் ஆபிஸ் பாய்கிட்ட “பாத்ரூம் எங்க இருக்கு?

“அது இருக்குற இடத்துலயே தான் இருக்கு ன்னு சொல்லுற மாதிரி ஒரு முரப்பு முரச்சிட்டு, முதல்ல அவர போய் பார்த்துட்டு அப்புரமா பாத்ரூம் போகலாம், வெயிட் பன்னுராருன்னு சொல்லி, கழுத்த பிடிச்சு வெளியில தான் தள்ளிவிடுவாங்க, ஆனா உலக வரலாற்றிலேயே கழுத்த பிடிச்சு உள்ள தள்ளிவிட்டான் அந்த ஆளு.

போனா, காதல் பட சந்தியா அப்பன் மாதிரி ஒரு ஆளு.

இரு,

எந்த ஊரு?

கடையநல்லூர்.

பாயா?, இது முதலாலி

இல்ல சார், 3 பாய்ஸ், ஒரு கேள்ன்னு. நான் சொல்ல

என்னது? ன்னு திரு திருன்னு முழிச்சிகிட்டே (அவரும்) முதலாலி கேட்டாரு.

ஆமா சார் எங்க வீட்டுல 3 பாய்ஸ், ஒரு கேள் ன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள,

அடச்சீ, நான் உன்ன முஸ்லீம் பாயான்னு கேட்டேன்யா? ன்னு விஜயகாந்த் ஸ்டைல்ல, கண்ணு சிவந்து கேட்க,

நானும் “ஆமா சார் நான் பாய் தான், நான் பாய் தான்னு அவரே போதும், போதுன்னு சொல்லுர அளவுக்கு சொல்லிக்கொண்டே இருந்தேன்.

பிறகு என்ன அப்பாய்ண்டட்.


இப்போ நான் இருக்கின்றது எனது கேரியரில் இரண்டாவது கம்பேனி. இதுவும் எந்த வித இண்டர்வியூ இல்லாமல் என் நண்பன் பிரவினின் முயற்சியால் வாங்கிக் கொடுக்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு வந்து இன்றுடன் (15.11.2011) மூன்றாம் வருடம் முடிகின்றது.

என்னுடையா I.T நண்பர்கள் அவர்களுடைய இண்டர்வியூ அனுபவத்தை கேட்கும் போது, அப்பாட கம்யூட்டர் டிபார்ட்மெண்ட் எடுக்கலன்னு தோனும். தோனாதவனுக்கும் தோன வச்சுருவானுங்க.

பொதுவா அங்க மூணு வகையான இண்டர்வியூ இருக்கும் (கேள்வி ஞானம் தான்)

1.       டெக்னிகல் அறிவு,
2.       அறிவு / பொது அறிவு.
3.        பொறுமையின் அளவு.


முதல்ல உள்ள டெக்னிகல் அறிவு விசயத்த நாம் “Pass” ந்னு சொல்லி விட்டுடலாம். அதுக்கும் நமக்கு ஏற்கனவே வாய்க்கா தகறாரு.

இரண்டாம்மமாவது,

எப்படிபட்ட அறிவாளின்னு சோத்திக்கிற சோதிப்புக்கு ஒரு உதாரணம்,

ஒரு இண்டர்வியூ ரூம்மில்,

இண்டர்வியூ எடுப்பவர் : சரி இது தான் என்னுடைய கடைசி கேள்வி, இதற்கு நான் கேள்வி கேட்ட உடனே பதில் சொல்ல வேண்டு, கொஞ்சம் தாமதித்தாலும் உனக்கு வேலை இல்லை.

நான் உனக்கு ஒரு ஒரு பேனாவ தாரேன், அதை நீ சரியாக இந்த டேபிலின் துல்லியமாக மைய புள்ளியில் வைக்கவேண்டும் என்றால், அந்த மைய பகுதி எது? 

துலியும் யோசிக்காமல் இது தான் சார்ன்னு நம்ம ஆளு டேபிலில் ஒரு இடத்தில் கைவைத்து காண்பித்தான்.

அவன் தப்பாக இருந்தும்

அப்பாயிண்டட்.

எப்படிடா? ன்னு இந்த கதைய சொன்ன நண்பனிடம் கேட்டேன்.

இது தான் என்னுடய கடைசி கேள்வின்னு அவன் சொன்னதுக்கப்புறம், நாம தப்பாக எது சொன்னாலும், செஞ்சாலும் எப்படின்னு அவன் கேட்க மாட்டான். அது தான் மேட்டர்ன்னு அவன் சொல்லும் போதே கோட்டர் போட்ட கிரக்கம் நமக்கு.

இதுக்கே இப்படின்னா எப்படி பொறுமைக்கு வைக்குற டெஸ்ட் இருக்கே, அதுக்கு போகுறதுக்கு ஒரு மாதம் முன்னாடியே, சோத்துல உப்பு போட்டு சாப்பிடுவதை நிறுத்திடனும்.

அப்படி நம்ம என்னடா பொறுமையை சுரண்டி பாக்குர மாதிரி அவன் கேள்வி கேட்பான்?

உன் தங்கச்சிய நான் இழுத்துக்கிட்டு ஓடுன்னா நீ என்ன பன்னுவே? ன்னு இண்டர்வியு எடுக்குறவன் உன்கிட்ட கேக்குறான்னு வச்சிக்கோ நீ என்ன பதில் சொல்லுவன்னு என் நண்பன் என்ன பார்த்து கேட்டான்.

இது என்னடா சிம்பில், எனக்கு தங்கச்சியே இல்லயேன்னு உண்மையை சொல்லுவேன்.

ச்சீ து, பரதேசி,

இருக்குன்னு வச்சிக்கோ என்ன செய்யுவ?

டையோட அவன் கழுத்தை சேர்த்து புடிச்சி, காதோட ஒன்னு விடுவேன்.

இப்படி மட்டும் இல்ல, “ச்சீ என்ன மானங்கெட்ட கேள்வி, “போலிஸில் கம்லெண்ட் கொடுப்பேன்”. “கொஞ்ச நாள் குடும்பத்தோட அழுவோம்”....... இப்படி சொல்லுறவங்கலுக்கு எல்லாம் வேல கிடைகாது. அப்படி என் நண்பன் சொல்ல

இந்த கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்னா எவனுக்கும் வேலை கிடச்சிருக்காதே!!!!!
நான் சொன்னத கேட்டுவிட்டு என் நண்பன் சொன்னான்

அது தான் இல்ல, அப்படியும் ஒருத்தன் அந்த வேலையை வாங்கினான்.

எப்படிடா, என்னடா சொன்னான்???????

இததான் நானும் அவங்கிட்ட கேட்டேன், அவன் சொன்னான்

“என் தங்கச்சிக்கு உங்கள விட ஒரு சிறந்த மாப்பிள்ளை, இந்த உலகத்தில் இல்ல,எந்த உலகத்துல தேடுனாலும் கிடைக்கமாட்டான்.................... ம்மாமா, என் தங்கை ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும் ..........ம்மாமா

இத கேட்டுவிட்டு வாய பொழந்துகிட்டு நின்னவனிடம்,

யாரு சீனியர் உங்க பிரண்டா?,

ஹலோ பாஸ் நான் பால சுப்பிரமணியன்னு சொல்லிகிட்டே எங்கிட்ட அறிமுகப்படுத்திக் கொண்டான், என் நண்பனுடன் பணிபுரிபவன். பார்க கண்ணாடி போட்ட அந்நியன் அம்பி மாதிரி இருந்தான்.

சீனியர் என்ன காபி ஆர்டர் பன்னட்டா? ன்னு சொல்லிக் கொண்டே எங்களுக்கு பின்னால் இருக்கும் டீ கடைக்கு போனான்.

அந்த பதிலின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல், அலுப்பாய் சொன்னேன் என் நண்பனிடம் “கொஞ்சம் ஸ்ட்ராங்க போட்டு வாங்க சொல்லுடா

பொறம்போக்கு இத அவ போகும் போதே சொல்ல வேண்டியதுதானடா

தூரமா போனவனிடம் கத்தி சொன்னான்

ஒரு டீ ஸ்டாங்கா போட்டு வாங்குடா, டேய் ம்மாமா , டேய் ம்மாமா ............
......
......
......

படார்ன்னு திரும்பி என் நண்பனிடம்

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இவனாடா அவன்..............................
......
......
......

அவனே தான் இவன் என்பது போல தலையாட்டினான் நண்பன்.


இண்டர்வியூக்கு வர்ர தனிஒருத்தன
நாலு பேரு கேள்வி கேட்டே கொல்லுறதுக்கு பேரு
வீரமில்ல,
துரோகம்


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.



   

புதன், நவம்பர் 09, 2011

நட்பைக் கூட கற்பாகத்தான் எண்ணுவேன்........


ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும், நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக.


இரண்டு நண்பர்கள் வியாபாரம் சம்பந்தமாக ஒரு பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர், கடுமையான வெயிலின் காரணமாக இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்ட்து, அதே வழியில் இருவரும் ஒரு தண்ணீர் ஊற்றை கண்டு ஆவலுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு தண்ணீர் குடிப்பதில் தகறாரு ஏற்பட, ஒருவர் தன்னுடைய நண்பனை அடித்துவிடுகின்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த நண்பர், அந்த பாலைவன மணலில் ஏதோ எழுதிவிட்டு, அந்த இட்த்தை விட்டு நகர்கின்றார், அதை கண்ட பின் தொடர்ந்து வந்த அவரது நண்பர், என்ன எழுதினான் என்று பார்க்கையில் “என் நண்பன் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டான் என்ற வார்தையைப் பார்கின்றார்.

ஒருவருக்கொருவர் பேசாமலேயே, மீண்டும் பயணத்தை தொடர்கின்றார்கள்

சற்றும் எதிபாரத நேரத்தில், அடி வாங்கிய நண்பர் ஒரு புதைகுழியில் மாட்ட, கன்னத்தில் அறைந்த நண்பனோ, தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நண்பனை காப்பாற்றுகின்றார். இந்த சம்பவம் நடந்த பின்பு, ஒரு பாறையில், புதைகுழியில் விழுந்த அந்த நண்பன் மீண்டும் ஏதோ எழுதுவதைக் கண்ட அவருடைய நண்பர், அருகில் வந்து பார்த்தார் “என் நண்பர் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுதியிருந்த்தைக் கண்டு, அவரிட்ம் வினவினார்.

நான் உன்னை அடித்ததை மணலில் எழுதிவிட்டு, உயிரைக் காப்பாற்றியதை மட்டும் பாறையில் ஏன் எழுதினாய்?

என்ன இருந்தாலும் நீ என் நண்பன், ஏதோ ஒரு கோபத்தில் அடித்துவிட்டாய், அது நான் பாலைவனத்தில் எழுதிய எழுத்து போல, கொஞ்ச நேரத்தில் என் மனதில் இருந்துவிட்டு மறைந்துவிட வேண்டும் என்றும், என் உயிரைக் காப்பாற்றியதை நான் என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில், இந்த பாறையில் எழுதிய எழுத்து போல மறையாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படி செய்தேன் என்று சொன்னாராம்.

இது நட்புன்னா எந்த மாதிரியான மனதோடு இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு சின்ன கதை. இந்த மாதிரி பல கதைகள் நம்மள்ள பல பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்த உலகத்தில் பல விதமான உறவுகள் இருந்தாலும் கூட நட்பு என்றும் எல்லோருக்கும் சிறப்பான விஷயம் தான். பல விதமான உறவுகளில் மாற்றம் வந்தாலும் கூட நட்பு என்றும் நட்பாகவே தொடர்கின்றது.

கணவன்-மனைவி, அண்ணன்-தம்பி, பெற்றோர்-பிள்ளைகள், காதலன்-காதலி..... இந்த வித உறவுகளில் வார்த்தைகள் கூட ஒன்றாக இருப்பதில்லை, ஆனால் நட்புக்கு, நண்பன்-நண்பன், தோழன்-தோழன், தோழி-தோழியாகத்தான் இருக்க வேண்டும். வார்த்தைகளில் கூடத்தான் எத்த்தை பிணைப்பு!.

நண்பனை அழைக்கும் முறை வேண்டுமென்றால், தோழா, நண்பா என்பதில் இருந்து, மச்சி, மாம்ஸ், சித்தப்புன்னு மாறியிருக்கலமேயொழிய, அதன் இலக்கணம் என்றுமே ஒன்றாகத் தான் இருக்கின்றது, இருந்த்து, இருக்கும்.

மாற்றங்கள் இந்த காலத்துக்கு தேவையான ஒன்றுதான். அது எந்த மாதிரியான மாற்றம் என்பது தான் முக்கியம். அப்பாவை மாற்றி இப்போ பெருசுன்னு சில பிள்ளைகள் அழைப்பதுவும் மாற்றம் தான், அது நல்லவிதமான மாற்றமா?. தன் நண்பனை உறவுகளின் பெயரில் அழைப்பது என்பது அவனையும் என் குடும்பத்தில் ஒருத்தனாக நினைக்கின்றேன் என்பதாக நினைக்கத் தோன்றும்.

தன் நண்பனை அவன் மச்சான்னுதான் அழைப்பான், அனால் அவனின் தங்கை முறைப் பெண்ணாக இல்லாமல் தங்கச்சியாகத்தான் இருக்கும், அவனின் பெற்றோர் இவனுக்கு அப்பா-அம்மாவாகத்தான் இருக்கும். வித்தியாசம்னு பார்த்தா, ரஜினிகாந்த் நடிச்ச பில்லாவுக்கும், அஜித் நடிச்ச (சரி நடந்த) பில்லாவுக்கும் உள்ள வித்தியாசம் தான், கூலிங்க் கிளாஸ், கோட் வேணும்னா மாறி இருக்கும். ஆனா கரு என்னமோ ஒன்னு தான்.

ரத்த சொந்தங்களினால் ஏற்படும், பயனைவிட, துயரம் அதிகமானதாக இருக்கும், அல்லது சரி சம்மாக இருக்கும். நட்பில் மட்டும் தான், துயரத்தை விட, பயன்கள் அதிகமானதாக இருக்கும். வேலையாகவோ, கடனாகவோ என்பது அது அவனின் நண்பன் மூலமாகவோ, அல்லது அவனிட்த்திலோ தான் இருக்கும்.

ரஜினிகாந்துக்கு, சத்திய நாராயனா என்ற அண்ணன் மட்டும் இருந்திருந்தாலும் அவர் “ஸ்டார் ஆகியிருந்திருப்பார். ஆனால் ராஜ் பகதூர் என்ற நண்பனின் நட்பால் மட்டுமே அவர் இப்போது “சூப்பர் ஸ்டாராக இருக்கின்றார்.

எனக்கு தெரிந்து சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி தவிர்த்து, எந்த ஒரு கல்லூரியிலும் எவரும் ஜாதி, மதம் பார்த்து நட்பு கொள்வதில்லை. “நீயா நானா கோபிநாத் ஒரு கல்லூரி மேடையில் சொன்னது போல முன்னாடி நீ, மறவர், கோனார், ஜயர், பள்ளர்...... நான் வன்னியர், யாதவர், துலுக்கர் .... என்றால், கல்லூரிக்கு வந்த பின்னாடி நீ மாமன், நான் மச்சான் தான் அவ்வளவு தான்.

என் நண்பன்.
7ம் வகுப்பு, புது ஊர், புதிய பள்ளியில் முதல் நாள், மதிய வேலை மூன்றாம் பாடவகுப்பு, உடற்கல்வி பாடம், விளையாட்டிற்காக அங்குள்ள ஒரு சிறு மைதானத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள், யாரும் அறிமுக இல்லாத காரணத்தால், நான் தனியாக இருந்து அங்குள்ள கரடி மாட சாமி சிலையை வெரித்து பார்த்துக்கொண்டிருக்க,

“உனக்கு கபடி தெரியுமா? வா எங்க கூட வந்து விளையாடு ன்னு ஒரு குரல், அவன் முகம் கூட பார்க்காமல், “வேண்டாம் அடுத்து பார்கலாம் என்று அனுப்பிவைத்தேன்.

“ம்ம்ம்ம் சரி கோ கோ விளையாடத்தெரியுமா மீண்டும் அதே குரல், நான் தனியாக உட்கார்ந்திருப்பதற்கு என்னைவிட அதிகம் வருந்தியவன்.

“தெரியும் ஆனா...... அடுத்து பார்கலாம் என்று மறுபடியும் முகம் பார்க்க்கூடத் தோனாமல் கிட்ட்த்தட்ட விரட்டிவிடும் தோனியில் சொல்லி அனுப்பினேன்.

மழையில் நினைந்து மைதானம் பாதி சேராகவும், மிச்ச பாதி முட்புதர்களாகவும் இருக்க, ஆத்திரத்தின் பங்காளி, முட்டிக்கொண்டு வர, வேறு வழியின்றி முட்புதருக்குள் சென்று, செடி கொடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கும் வேலையில், ப்ப்ப்ப்பீபீபீபீபீபீ.. ஒரு விசில் சப்தம் கேட்டு, வந்த ஒன்னுக்கு பாதியில் வந்த பாதையில் திரும்பி விட, எவண்டா அவன்னு திரும்பி பார்த்தா, விளையாட்டு வாத்தியார்.

காரடி மாட சாமி சிலை பக்கத்துல, அருவா இல்லாத அய்யனார் சாமி மாதிரி நின்னுகிட்டு அவர் நிக்கிற இடத்துக்கு வரச்சொன்னார். அவர் விசில் ஊதுன ஊதுல, பய்ந்து போயி ஆட்டுன ஆட்டுல, பேண்டுல எல்லாம் ஈரம் ஆகிடிச்சு. அப்படியே அவர்கிட்ட போன போது, காதை பிடிச்சு திருகிகிட்டே “இது மைதானமா இல்ல ஒன்னுக்கு போற கக்கூஸான்னு கேட்டார்.

“மைய்ய்ய்ய்ய்ய்தாஆஆஆஆனம்ம்ம்ம்ம்ம்ம்ம் னு அழுதுகிட்டே சொல்ல

எல்லா மாணவர்களும் பார்துக்கொடு இருக்க, மீண்டும் அதே குரல்

“சார் இவன் புது பையன், இன்னைக்குத்தான் வந்திருக்கான், அவனுக்கு தெரியாதுன்னு எனக்காக பரிந்து பேசி என் காதையும் என்னையும் காப்பாற்றினான். அவன் மட்டும் அந்த நேரத்துல அங்க வரலன்னா, அன்னைக்கு என்காதை சாப்பாடு கொண்டுபோன டிபன் பாக்ஸ்ல தான் கொண்டுவந்திருக்கனும்.

கண்கள் முழுவதும் கண்ணீர் இருக்க, அப்பதான் பார்த்தேன் அவன் முகத்தை.

சத்திய சீலன், என் நண்பன்.

ஏதாவது ஒரு நண்பனுடைய பிரிவு, நம்மளை உருத்திக் கொண்டே இருக்கும். எனக்கு இவனுடைய பிரிவு.

இரண்டு வருட பழக்கம் மட்டும் தான். அவனுடைய குடும்ப சூழ்நிலையால் அவனால் படிப்பைத் தொடர முடியவில்லை. இன்னும் என்பள்ளி நண்பர்களைப் பார்கச் செல்லும் போதெல்லாம் மீண்டும் அவனை பார்த்துவிட மாட்டோமா என்கின்ற ஆவலில் என் கண்கள் அவனைத் தேடிக்கொண்டே இருக்கும்.

இரண்டு வருட பழக்கத்தை புதுபித்துக் கொள்ள, 15 வருடமாக தேடிக் கொண்டிருப்பதிலிருந்தே புரிந்துவிட முடியும், அவன் எப்படி என்று, தனியாக லிஸ்ட் போட தேவையில்லை.
பிப்பிரவரியில் என் கல்யாணத்திற்கு எந்த விலை கொண்டும் அவனை அழைத்து வந்துவிட வேண்டும் என்பது என் ஆசை. (இன்ஷா அல்லாஹ்)



தோல்வியில் துவண்டால்
தோள் கொடுக்க ஆயிரம் தோழன் உண்டு.
தோல்வியை தோற்கடிப்போம்
தோழனின் துணைகொண்டு.
----------------------------------------------------------------------நட்புடன்-யாஸிர்