ஞாயிறு, ஜூலை 26, 2015

இஸ்க்கு இஸ்க்கு என்றா கேட்கிறது?

என்றும் போல இன்றும் ஒரு சிறந்த நாளாகவே இருந்தது, ஆம்,  எங்கு செல்கிறான்? என்ன செய்கிறான்? என்பதை என் மனைவியின் மெகா பிக்ஸல் கண்ணாடி அளவைவிட அதிகம்கொண்ட வானம், மேல் நின்று நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது. நல்லவை சில செய்து இந்த நாட்டின் குடியுறிமை பெற்றுவிட அனுமதிக்கக்கூடாது என்ற கொள்கை உணர்வுடன், விதிக்கப்பட்ட வழியில், பூமி எனை கீழ் இருந்தது வழி நடத்தியது. சாலைகளில், சுமாரான பிகர்கள் காற்றோட்டமாகவும், சூப்பரான பிகர்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டும் வஞ்சனை செய்துகொண்டிருந்தனர். விரதம் முடிந்து வீரு கொண்டு பலபேர் சுற்றித்திறிந்து கொண்டிருந்தார்கள். எல்லா திசையிலிருந்தும் இஸ்க்கு இஸ்க்கு என்றே கேட்டது. ஆனால், நண்பர்களுடன் ஹாலிடேக்கலில் கூட ஜாலிடே கொண்டாட இயலாத அளவிற்கு உடம்பு ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது.

அபுதாபியிலேயே ஆகச்சிறந்த, அழகான நர்ஸ்கள் இருக்கும் ஹாஸ்பிடலில் சென்று வைத்தியம் பார்த்தேன். பட், நர்ஸ் பக்கத்தில் இருந்ததால் வைத்தியரை பார்க்கதோன்றவில்லை. வாலு படம்போல ‘’வரவே வராது’’ என இருமாப்புடம் இருந்தவனை இருமல் மருந்துடன் உட்காரவைத்துவிட்டது காய்ச்சல். பாபநாசம் படமும் நோயும் ஒன்றாக வந்தது, பாபநாசம் போய் ஒருவாரம் ஆகுது ஆனால் நோயோ ஆஸ்கார் வாங்கிவிட்டுத்தான் போவேன் என்று அடம்பிடிக்கின்றது. பிட்டியில் ஊசி போட பின் பக்க அறைக்கு போய் நின்றேன். செண்டிமீட்டர் அளவில் பேண்டை இறக்கினால் போதும் என்றது மனது, மில்லிமீட்டர் அளவு போதும் என்றது மூளை.

எனக்கு முன்பாக ஊசி போட நின்ற ஒரு பங்காளி (பங்களாதேஷி), பேண்டை கழட்டி அக்குளில் வைத்துக்கொண்டிருந்தான். பேண்டை திரும்ப போட அந்த பிலிப்பைன் நாட்டு நர்ஸ் ஆங்கிலத்தில் சொல்ல, புரிந்தும் புரியாமல் நின்றான். பெரிய குசும்புக்காரனாக இருப்பான் போல. இன்னும் ஜஸ்ட் இரண்டு நிமிடம் பேசியினால் ஜட்டியை கழட்டிவிடுவானோ என்ற பயம் அந்த நர்ஸுக்கு. இந்த அலப்பறையில் எனக்கு பின்னால் மறுபடியும் ஒரு பங்காளி ஊசி போட லைனில் வந்து நிற்க. நர்ஸ் என்னை மட்டும் தனியாக கூப்பிட்டது. அந்த ஒரு நொடி.......ஊசி போடாமல் காய்ச்சல் காணாமல் போனது. பின்புதான் தெரிந்தது, என்னை வைத்து அந்த பங்காளிகளுக்கு ‘’டெமோ’’காட்டவென்று. பேசாம நாமளும் அக்குள்ள கழட்டி வச்சிருந்திருக்கலாம்.

காய்ச்சல் வெள்ளிவிழா கொண்டாடியதால் மூன்று, நான்கு முறை ஆஸ்பிட்டலுக்கு போகவேண்டியதாயிற்று. பேண்ட் சம்பவம் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன். அன்றிலிருந்து பின்னாடி ஊசி என்றால் டாக்டர்தான் முன்னாடி வந்து நின்றார். அட்லீஸ்ட் பங்காளிகளுக்காக மட்டும் அந்த நடைமுறையை கொண்டுவந்திருக்கலாம். பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற இந்தியர்கள் எத்தனை பேர்? பிளாக் எழுதிக்கொண்டிருக்கின்றார்களோ???????.

பல முறை படையெடுத்தாலும், டாக்டர் எனக்கு பிடித்த ஒன்றையும், பிடிக்காத ஒன்றையும் மட்டும் திரும்ப திரும்ப சொல்லுவார், ஒன்று கஞ்சி சாப்பிடு, இன்னொன்று ரெண்டு நாள் குளிக்காத. இதுல எது புட்ச்சது, புடிக்காதது என்று படித்த நல்லுலகத்திற்கு அறிவிக்க தேவையில்லை. அதன் விளைவாக, தங்கவிலை போல குறைந்துகொண்டுவந்த காய்ச்சல், ஒரே இ மெயிலில் மீண்டும் உச்சத்தை தொட்டது. யாரோ ஒரு புண்ணியவான், என் பிளாக்கை படித்துவிட்டு பயங்கர பாராட்டு. (சென்றவரியில் ‘’என் பிளாக்கை எல்லாம் படித்துவிட்டு’’ என்று யாராவது படித்திருந்தால் தயவுசெய்து வாசிப்பை தொடரவேண்டாம்).

ஒரு பதிவை அவருடைய தளத்தில் பகிர்ந்துகொள்ள என்னிடம் அனுமதி வேறு?. அதைப் படித்துவிட்டு எனக்கு ஒரு படபடப்பு. நான் போட்ட 100 போஸ்ட்டுகளில் ஆக மொக்கயே அந்த பதிவுதான். நகைச்சுவை சூப்பர் என்ற பாராட்டும். மக்களிடம் நகைச்சுவை உணர்வு எவ்வளவு குன்றிப்போச்சு?????. பிரேம்ஜி அமரன் எல்லாம் காமெடியன் என்றால் வடிவேலு எல்லாம் வைகுண்டம் போகவேண்டியதுதான். என்னத்த சொல்ல. அனுமதி வழங்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்து இணையத்தில் தேடிப்பார்த்தேன். அவர் அனுமதி கேட்ட அந்த பதிவு ‘’கடல்லய்யே இல்லையாம்’’ ரேஞ்சில் இருந்தது. பயபுள்ள பொறுமையா மறுபடியும் வாசிச்சு பார்த்திருப்பான் போல.......... அதுதான் முடிவை மறுபருசீலனைக்கு செய்திருக்கிறான்.

எங்க ஊர்காரனா இருக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு. சமுதாய, சமூக அவலத்தைப் பற்றி எழுதனுமாம் (ஏதோ பிளான் பண்ணியிருக்கானுங்க). ஏற்கனவே கசாயத்தை பத்தி எழுதுனக்கு நம்மள காய்ச்சி எடுத்துட்டானுங்க. இந்த முறை ஏதோ நோம்பு கஞ்சிக்கு பஜ்ஜி போட பத்து லட்சம் பிரிஞ்சதை பெருமையா பீத்துறானுங்க?. ஜமாத் எலிமெட்ரி ஸ்கூல் ஒரு லட்ச ரூபாய்க்கு வழியில்லாம மூடிக்கெடக்குது. இதக்கேட்டா “”நீ காஃபீர்””ங்குறானுங்க இல்லன்னா ‘’சமுதாய விரோதி””ன்றாங்குங்க. ஊர் இப்படி இருக்க, ‘’எதுக்குடா சிலிண்டெர் மான்யத்தை நாங்க விட்டுதரணும், முதல்ல நாடளுமன்ற கேண்டினில் எம்.பி துண்ற மானியத்தை கட் பண்ணுங்கடா?’’ என முழங்கினா ‘’தேச துரோகி’’ன்னு சொல்லுறானுங்க.

நமக்கு எதுக்கு வம்பு. ஏதோ நம்மால் ஆன சமூகசேவையை மட்டும் பண்ணினா போதும்ன்னு இருக்கேன். இப்ப கூட பாருங்க. பக்கத்து ஆபிஸ் ஸ்டோர் ரூமை திறக்கமுடியாம ஒரு தாய்குலம் தள்ளாடுது. இஸ்க் இஸ்க் என்றுவேறு கேட்கிறது. ஸோ, கடமை அழைக்கிறது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

வியாழன், மே 21, 2015

‘’கார்’’ காலப் பெண்கள்.

நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டரில்தான் நான் வேலைபார்க்கும் சைட். முன்பெல்லாம் என்னுடய சைட்டின் வாசல் கேட் வரை அரசு பஸ் வரும். ‘’அதுதான் லைசென்ஸ் வச்சிருக்குறீயே!! கார் வாங்கு, கார் வாங்கு’’ன்னு காறி துப்பாத குறையாக நட்பு வட்டாரங்கள் இம்சித்தாலும், மேல் கூறிய காரணங்களுக்காக காரின் தேவை எனக்கு அவசியமானதாகத் தோன்றவில்லை. ‘’கார் ஓட்டுறதுக்கு பயமா கொமாரு’’ என்று யாரவது கேட்கும் போது, நான் கார் ஓட்டுவதும், பஸ்ஸில் போவதும் ஒன்றுதான் என சொல்லிவிடுவேன். எப்படி? என்றால், கார் ஓட்டும் போது சுத்திமுத்தி பார்க்கமல் நேராக பார்த்து ஓட்டவேண்டும், பஸ்ஸில் போகும் போதும் அப்படித்தான் சுத்திமுத்தியெல்லாம் பார்ப்பது இல்லை, நேராகத்தான் பார்ப்பேன். ஏனென்றால் பெண்கள் முன் பகுதியில்தான் இருப்பார்கள்.

ஐஸ்வர்யா ராய் அம்பது கிலோ தங்கத்தோட வந்து நிக்கும்போது, அருக்காணிக்கு அஞ்சு பவுன் போட்டு கட்டிக்கமுடியுமா? சொல்லுங்க. கார் எடுத்தால்?, எனக்காக,  ஜனவரி குளிரில் கூட மினி ஸ்கர்ட் போட்டுவரும் வெள்ளக்காரி பெண், பட்டனே தெரிச்சாலும் பரவாயில்லை என நினைத்து டைட்ட்டா ஆணின் சட்டையை போட்டுவரும் மொராக்கோ பெண், சுருட்ட முடியை சுருட்டிக்கொண்டே ரெண்டு வருசமா ஒரே நாவலை படித்துக்கொண்டுவரும் வட இந்திய பெண், லிப்ஸ்டிக் கம்பெனியை லீசுக்கு எடுத்து பூசிக்கொண்டுவரும் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்....Etc என பலதரப்பட்ட பெண்களை என் மனசறிந்து எப்படி ஏமாற்றமுடியும்?. நான் ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கூட நாடாவில் நாண்டுகொண்டல்லவல்லா உயிர்விட்டுவிடுவார்கள்.

பெண்களைப் பற்றிமட்டுமே சொல்லுறியே அந்த பஸ்ஸில் உன்னைத்தவிர வேறு ஆம்பளைங்களே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அந்த அயோக்கிய ராஸ்கல்களைப் பற்றி நாமக்கு என்ன கவலை?. அபுதாபி பஸ்களில் முன்னாடி உண்டியல் ஒன்று இருக்கும், 2 திர்ஹம்ஸ் போட்டால் போதும், பஸ் எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு தூரம் போகலாம். முன்பகுதி 3+3 வரிசை பெண்களுக்கான இடம். அந்த இடத்தில் ஆண்கள் உட்கார ஏன், நிற்க கூட அனுமதியில்லை. பின்புறத்தின் (பஸ்ஸின்) இருந்துகொண்டு ரசிப்பதற்கு அனுமதிதேவையில்லை.

அன்று ஒருநாள், நான் பஸ் ஏறவேண்டிய இடத்தில், ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்குட்டியிடம் 2 திர்ஹம்ஸ் சில்லரை இல்லை. தாய்குலத்திற்கு ஒரு இன்னல் என்றால் இடியே விழுந்தாலும் முன்நிற்பவன் நான். சுமாரான தாய்குலத்திற்கே அப்படி என்றால் சூப்பரான தாய்குலத்திற்கு கேட்கவா வேண்டும். அதுவும் ஹன்ஸிகா மாதிரியான தாய்குலமாக இருந்ததால் ஒரே குதுகலம்தான். ‘’முகம் மெய்யாலுமே ஹன்ஸிகா மாதிரி இருந்துச்சா?’’ என்று கேட்காதீர்கள், ஏனென்றால் நான் கழுத்துக்கு மேலே பார்க்கவில்லை. மேட்டருக்கு வருவோம். காசு இல்லாததால், எக்ஸ்ராவாக என்னிடமிருந்த 2 திர்ஹம்ஸை கொடுத்து உதவினேன்.

உதவு செய், பலனை எதிர்பாராதே என்ற கீதாச்சாரத்தை கீதா மேடம் சொல்லி கேட்டிருக்கிறேன். பலனை எதிர்பாரத எனக்கு பலான பலன்..... ச்ச்சீ சாரி, பலனோ பலன். இதுமாதிரியான உதவியை நம்ம நாட்டுக்காரிகளுக்கு செய்திருந்தால் ‘’நன்றி தம்பி’’ என்ற சொல்லை நாலுமுறை கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் அந்த ஹன்ஸிகா, ரெண்டு சீட் காலியாக இருந்த (ஆண்கள் சைடு) இடமாக பார்த்து உட்கார்ந்துகொண்டு, என்னையும் அவள் அருகில் அமர கை அசைத்தால். 2 திர்ஹம்ஸ்கே பக்கத்துல உட்காரலாம் என்றால், 20 திர்ஹம்ஸ்க்கு?.....

இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்கொண்டிருந்தது. ரோடு போடுகிறோம் என்ற பெயரில் எனது சைட் வரை வந்த பஸ் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே நின்றுவிட்டது. மீண்டும் ரோட்டை விரித்து போட அடுத்த ஒரு கிலோ மீட்டர் என பஸ் நிறுத்தம் எனது ரூமில் வாசலுக்கே வந்துவிடும் நிலை வந்ததால், காரின் தேவையை நாடவேண்டியதாயிற்று. ரொம்ப கஷ்டப்பட்டு தேடி ஒரு பழைய காரை சொந்தமாக்கிக் கொண்டேன். பழைய காரே ஒழிய, ரொம்ப பழ்ழ்ழைய்ய்ய கார் இல்லை. வாங்கிய காசுக்கு நிகராக ‘’பட்டி’’, ‘’டிங்கரிங்’’க்குக்கான காசு செலவானது.

முதல் நாள் காரை எடுப்பதற்கு முன்பு, விஞ்ஞான பூர்வமாக எலுமிச்சி பழத்தை வைக்கவேண்டுமே? என ஆசைப்பட்டு ஃபிர்ட்ஜை திறந்து பார்த்தால் இருந்தது இரண்டு எலுமிச்சி பழங்கள். அதுதான் நாளைய எலுமிச்சை சாதத்திற்கான கோர் மெட்டீரியல் என நியாபகம் வரவே, காரா? சோறா? என்று பார்த்தால், நமக்கு சோறுதான் முக்கியம். டயருக்கு அடியில் எலுமிச்சை வைக்காததால், தெய்வகுத்தம் ஏற்பட்டு துபாய் அலைவரிசை எஃப். எம் அபுதாபியில் விடிவி கணேஷ் குரலில் கேட்கிறது. USP ஆடாப்டர் வாங்கினால் மெமரி கார்டு போட்டு பாட்டுகேட்கலாம் என ஒருவனின் ஆலோசனைப்படி வாங்கிமாட்டப்பட்டது.

முதல் பாடல். எனது இசை ஆசான் இளையராஜா பாடல்தான் போடுவேன் என அடம்பிடித்து ஆன் செய்தால்....... வண்டி மூவ் ஆகவும், கரகாட்டகாரன் சொப்பனசுந்தரி தீம் மியூசிக் ஸ்டார்ட் ஆகவும் நேரம் சரியாக இருந்தது. ‘’என் கூட இருந்தவனுங்க எல்லாம், ரஹ்மான், ஹரிஸ், ஜி.வி பிரகாஷ் என தலைமுறைக்கு தகுந்தது போல் மாறினாலும் ராஜா, ராஜான்னு சொன்னேனே அதுக்காகவா எனக்கு இந்த தண்டனை?’’.  ‘’காலேஜில் பக்கத்து ரூம் கம்யூட்டரில் ‘’♫♪முஸ்தபா, முஸ்தபா....♪♫” பாட்டு ஓடும் போது, எங்க ரூமில் இருந்த தகரமும், தகரம் சார்ந்த பொருட்களாலும் செய்யப்பட்ட ரேடியோ என எங்களுக்கு நாங்களே அழைத்துக்கொண்ட அதில் இருந்து மோகன், ராமராஜன் பாடல்களை போட்டிக்கு போட்டு ராஜாடா....ராஜாடா என தொண்டை கிழிய கத்திய உம்முடைய இசைபக்தனுக்கு இதுவா தண்டனை?’’ என இளையராஜாவை திட்டினேன்.

இன்று.

பஸ்ஸில் வருபவர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்துதான் சைட்டுக்கு வரவேண்டும், ஆகையால் நான் காலையில் வரும்போது நடந்துவருபவர்களை எனது வண்டியில் அழைத்துக்கொண்டுவருவேன் (யாராவது இருந்தால்). இன்று கொஞ்சம் லேட்டாகிவிட்டதால் அந்த பஸ்ஸ்டாண்டில் யாரும் இல்லை, அதாவது அயோக்கிய ஆம்பள பசங்க யாரும் இல்லை. ஒரு பெண். அவள் லிப்ட் கேட்கவே இல்லை, ஆனால் என்னை அறியாது கார் அவள் முன்பாக போய் நின்றது. அந்தநேரம்  காரில் ஆத்மா படத்தில் இருந்து ♫♪ கண்ணாலே காதல் கடிதம் சொன்னாலே எனக்காக.....♫♪♫  ஓடிக்கொண்டிருந்தது ‘’ ச்சே இளையராஜா, இளையராஜாதான் என்னமா செட் பண்ணிவிடுறாரு’’ என மனது ராஜாவுக்கு நன்றிக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தது.

அவள் ‘’நீங்க சைட்டுக்குள்ளா போறீங்க?’’ என வாய்திறந்துகேட்டாள். ‘’நீ காருக்குள்ள வந்தா எங்கனாலும் போகலாம்’’ என என்மனது பதில்கூறியது. ஆமாம் என தலையசைத்ததால், கதவை திறந்து காருக்குள் ஒரு காலை தூக்கிவைக்க, ஆத்மா பட பாடல் முடிந்து, தர்மதுரை படத்தில் இருந்து மாசி மாசம் ஆளான பொண்ணு பாடல் தொடங்கியது  ♫♪ ஸ்ஸ்ஸ்....ஆஆங்....ம்ம்ம்........ ஸ்ஸ்ஸ்....ஆஆங் ♫♪♫ இந்த சவுண்டை கேட்டவுடனே காரில் வைத்த காலை தூக்கிவிட்டாள் (அதாவது எடுத்துவிட்டாள்). பதட்டத்தில் ஆப் செய்ய பட்டனை அழுத்த நினைத்தவன், சவுண்டை கூட்டிவிட்டேன். பிறகு என்ன?............. தெரித்து ஓடியவள்தான், என் காரின் வேகத்தைவிட வேகமாக ஓடி மறைந்துவிட்டாள். அந்த சவுண்டை கேட்டவுடன் அவள் கண்ணால் கேட்ட அத்தனை கெட்டவார்த்தைக்கும் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

இருந்தாலும், ‘’இளையராஜா செட் பண்ணிவிடுறாரு’’ன்னு சொன்னதுக்காக இம்புட்டு பெரிய தண்டனையா?.  டூமச் இளையராஜா.


-----------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், மார்ச் 10, 2015

ஒரு புலம்பல்

5 வருசத்துக்கு முன்னாடி, தினமும் ஏதாவது எழுதவேண்டும் என்ற கொடிய கொள்கையோடுதான் இந்த பிளாக் ஆரம்பிக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு மோசம் இல்லை, அப்புறம் வாரத்திற்கு ஒரு பதிவு என்றாகி பின்பு மாதத்திற்கு ஒன்று என்று பரிணாம வளர்ச்சியடைந்து, இறுதியாக ‘’எப்பவாவது’’ என்ற மோட்ச நிலையில் நிலைகொண்டிருக்கின்றது. பிளாக்கில் தொடர்ந்து இருக்கலாமா? வேண்டாமா? என்பது ப.சிதம்பரம் காங்கிரஸில் இருக்கும் நிலைபோல பரிதாபத்துக்குரியதாகவும், பெரிய கேள்விக்குறியாகவும் இருக்கிறது.

‘’ஏண்டா இப்பவெல்லாம் பிளாக் எழுதுறது இல்ல?’’ என்று ஒருவன் கேட்டுவிட்டான், ‘’அதுவும் கடைசியா எழுதிய சீன் பதிவு செம சூப்பர்’’ என்ற பாராட்டு வேறு. ‘’சீன்’’ பதிவா? இருக்காதே...... நாமதான் நல்ல பேமிலியில் பிறந்த பையனாச்சே? என்ற பல கேள்விகளோடு, கடைசியாக போட்ட பதிவை, பதிமூன்றாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியை பொருமையாக படித்து ஆராய்வது போல ஆராய்ச்சி செய்தேன். நடிகை நதியா கவர்ச்சிக் கன்னி என்றால் சில்க் ஸ்மிதாவையெல்லாம் என்னவென்று சொல்வது?. அதை ‘சீன்’ பதிவு என்று சொன்னவனுக்கு சத்தியமாக சன்னி லியோன் என்றால் யாரென்றே தெரிந்திருக்காது. இருந்தாலும் ‘’ஏண்டா எழுதுற? என்ற பல கேள்விகளுக்கிடையில் ‘’ஏண்டா எழுதல?’’ என்று கேள்விகேட்ட அந்த அந்நியன் அம்பிக்காக...........

‘’எட்டு நாள் லீவில் சொந்த ஊருக்கு சென்றிருந்தேன்’’ என்றவுடன் உங்களுக்கு புரிந்திருக்கும், நாளுக்கு பத்து பதிவு வீதம், எண்பது பதிவு வரப்போகிறது என்று. ஆனால் அம்புட்டையும் எழுதினால் மற்றுமொரு ‘’மாதொருபாகன்’’ ஆகிவிடும். அந்த ஊர்காரர்களோடு ஒப்பிட்டால் எங்க ஊர்காரனுங்க ரொம்ப மோசம், வூடுகட்டி அடிச்சாக்கூட தாங்கிக்கொள்ளலாம், ஆனால் வூடு புகுந்து அட்வைஸ் பண்ணியே கொல்லுவானுங்க. இம்முறை சொந்த ஊருக்கு எதுக்கு போனேன் என்றால் @@@@@@@@@ (ஒரு சின்ன பிளாஸ்பேக்.......)

என்னோட பக்கத்து ஆபிஸில் ஒரு பாக்கிஸ்தானி பெண், ரொம்ம்ப அழ்ழ்ழகா பேசும், அதுவும் நான் என்றால் அந்த பெண்ணுக்கு அவ்வளவு பிரியம். நான் எங்கடா இருக்கேன்னு தேடி வந்து மொக்க ஜோக்கா சொல்லும், அதுவும் ஹிந்தியில். தலைவி தமன்னாவுக்கு தமிழ் தெரிஞ்ச அளவுக்கு சற்று குறைவாகவும், இலியானாவின் இடையளவுக்கு கொஞ்சம் அதிகமாகவும்தான் எனக்கு ஹிந்தி தெரியும். கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் ஜோக்கை, பாக்கிஸ்தானில் நேத்து நடந்ததாக சொல்லும், அதையும் நான் முதல் மரியாதை சிவாஜி ‘கிருக்குபயபுள்ள’ ரேஞ்சுக்கு கேட்டு சிரிப்பேன்.

எங்களுக்குள் ஹிந்தியில்தான் கம்யூனிகேசன் கேப் அதிகம். அதையும் மீறி எங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது, ஆம், ஆங்கிலத்தில் நாங்க ரெண்டு பேருமே, கேப்டன் கட்சி. ‘’முதல் தடவை பார்த்தப்ப நான் உங்களை அரபி என்று நினைத்தேன்’’ என்று அவள் சொன்னபோது நெஞ்சோடு.... இல்லை நெஞ்சு மட்டுமே வலித்தது. பதிலுக்கு நாமளும் ஏதாவது சொல்லனுமே என்று ‘நீ இங்கிலீஷ் பேசுறதை கேட்டபோது உன்னை அமெரிக்கனோன்னு நினைச்சேன்’’ என்று சொல்லித் தொலைத்துவிட்டேன். அதுக்கு ‘’கிழக்கே போகும் ரயில்’’ படத்தில்வரும் ராதிகா மாதிரியே அப்படி ஒரு சிரிப்பு. இப்படி எல்லாம் ஷேமமாக சென்றுகொண்டிருந்தது நவம்பர் 2 வரை.

அந்த நாள் நவம்பர் 3.

‘’எனக்கு பையன் பொறந்திருக்கான், சாக்லேட் எடுத்துக்க’’ என சாக்லைட்டை நீட்ட

‘’க்க்க்க்க்கியா? ப்ப்பச்சா? ப்ப்ப்பச்சா உவா? சாதீ ஓஹி?’’ என்று பதட்டமானாள். எப்போதும் பெண்களின் முகத்தைப் பார்த்து பேசியே பழக்கப்பட்ட (?!?!) எனக்கு அவளின் முகத்தில் படர்ந்திருந்த பதட்டத்தில் அரைகுறையாக வரும் ஹிந்தி அலைவரிசை சுத்தமாக ஆஃப்வாகிவிட்டது.

‘ஹிந்தி புரியல ஹே, இங்கிலீஸில டெல்’’ என்றதும். அவள் அப்படியே ஆங்கிலத்தில் டெல்லியது டமிழில்

‘‘எஎஎன்ன்னது? ப்ப்பையனா? ப்ப்பையன் பிறந்திருக்கா? கல்யாணம் ஆயிடுச்சா?’’.

‘’அட பக்கி, அட பக்கி, பையன் பிறந்திடுச்சு, கல்யாணம் ஆயிடுச்சு இல்ல, கல்யாணம் ஆனதால பையன் பிறந்திடுச்சு’’ என்று அவள் டிசண்டிங்க் ஆர்டரில் சொன்னதை அசண்டிங்க் ஆடரில் கூறி புரியவைத்தேன். அவ்வளவுதான். அப்புறமாக ஒரு ஹாய் கூட இல்லை. ##### (பிளாஸ்பேக் ஓவர்).

இப்படி, பிறந்த முதல் நாளே அப்பனுக்கு கிடைத்துக்கொண்டிருந்த அற்ப சந்தோசத்தில் ஆப்பு வைத்த, எனது புதல்வனைக் காணத்தான் ஊர் சென்றேன். ஊர் எப்போதும் போல அப்படியே.......

மூன்று நாளுக்கு ஒரு முறை ‘’நிலவேம்பு கசாயம்’’ காய்ச்சி கொடுக்கின்றார்கள். விசாரித்ததில் அதை குடித்தால் பன்றி காய்ச்சல் வராதாம். (குடித்தபின்பு அந்த காய்ச்சலே வந்திருக்கலாம் போலிருந்தது). வயல்வெளிகளில் கட்டிய வீட்டின் கழிவுநீர்கள், எதிர் மனையில் தேங்கிக் கிடக்கின்றது. கசாயத்திற்கான காசில் கால்வாய் அமைத்திருக்கலாம்.

நபி வழித் திருமணம் எனும் பெயரில் திருமணச் சடங்குகள் எளிமையாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சர்தார்ஜி ஏரியாவில் சலூன் கடை வைக்க, ஐடியா கொடுத்த அதிபுத்திசாலி ஒருவனின் அறிவுறைப்படி, கோடிக்கணக்கில் ஜமாத் கல்யாண மண்டபத்தை கட்டிமுடிக்க இன்னும் கால் நூற்றாண்டு தேவைப்படும். ஜமாத் பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கைவிகிதம் பல் இழித்துக்கொண்டிருக்கிறது, அதுபற்றிய கவலை கடுகளவுகூட எவரிடமும் இல்லை.

தமிழ்/திராவிடத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் இயக்கங்கள் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு குரூப்பிற்கென்று ஒரு ஆட்டோ ஸ்டாண்ட், ஒரு ஆம்புலன்ஸ். சேவை என்பதை சேட்டு கடையில் அடகுவைத்த இவ்வியக்கங்கள் புகழுக்காக போஸ்டரும், பேனர்களும் வைத்துக்கொண்டிருக்கின்றன.

சுவரெங்கும் ‘’காமகொடூறர்களின் கண்டுபிடிப்பு இந்த காதலர் தினம்’’ என்ற போஸ்டர். கணக்கெடுத்துப் பார்த்ததில் கூட்டிக்கொண்டு ஓடியவர்களில் பல பேர் இயக்கத்தின் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டவர்கள். கேட்டால் ‘உண்மைக்காதல் என்றால் உயிர் கொடுப்பர்களாம்’ பேச்செல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் பாய்கள் பேரவை மாதிரி இருந்தது. 

‘’பேச்சில் கண்ணியம் பேணல்’’ என்ற தலைப்பில் ஹதீசை கேட்டாலே காதில் ரத்தம் வந்துவிடுகிறது. பத்து வருசத்துக்கு முன்னாடி, எங்களது வீட்டு பின்புறத்தில் நின்று இமாம்களின் பயானை எங்கள் வீட்டுப்பெண்கள் கேட்க முடியும், ஆனால் இப்போது நாலாபுறமும் இருந்து ஒரே இரைச்சல். (எங்க இருந்துடா புடிக்கிறீங்க உங்களுக்கென்று அந்த ஸ்பீக்கர?). எந்த பள்ளிவாசல்? என்ன சொல்கிறார்கள்? என எதுவும் விளங்காது.

தனி ஜமாத்துக்காக தலைகீழாக நின்று தண்ணி குடித்துக்கொண்டிருக்கும் தாலிபான்கள், முக்குக்கு மூன்று பள்ளிவாசல் நிறுவிக்கொண்டிருக்கின்றார்கள். ‘’எங்கள் கொள்கை அப்படி’’ என்று வீரமுழக்கம் வேறு. இடுகாட்டுக்கு இறந்தவரை அடக்கம் செய்யும் போது மட்டும் அவர்களின் கொள்கை குப்புற விழுந்துவிடும். மையவாடியுடன் புதிய பள்ளிவாசல் கட்டுவோம் என்று மூன்று வருடத்திற்கு முன்பு ஒருவர் கூறியபோது, ‘‘ரோசக்காரனுங்க’’ என்று நினைத்தேன். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக யாரும் உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதில்லை போல.

இவ்வளவு பேசிறியே செவ்வாள.............. நீ மட்டும் என்ன யோக்கியமா? என்று நீங்க கேட்கலாம். அப்படி நீங்க கேட்டீங்கன்ன என்னோட பதில்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

வியாழன், நவம்பர் 06, 2014

--ஜோலிக்கே பீச்சே கியா ஹே?--

+2வில் நல்ல மதிப்பெண்களின் மூலமாக காலேஜில் சீட் பெற்ற பழங்கள், டப்பின்னால் சீட் பெற்ற கோமான்களின் புதல்வர்கள், சிபாரிசின் பெயரால் சீட் வாங்கிய சீமான், சீமாட்டிகளின் பிள்ளைகள் எல்லாம் முதலாமாண்டில் A, B, C, D என அனைத்து பிரிவுகளிலும் இடம்பெற்றுவிட, E பிரிவு மட்டும் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. அது பின்பு தமிழகத்தில் பல பகுதிகளில் தேடிப் பொருக்கிய மகா புருஷோத்தம பொறுக்கிகளால் முழுமை பெற்றது. அதில் ஒருவன், 1990 களில் நடிப்பில் கோலாய்ச்சிக் கொண்டிருந்த நடிகரின் பெயர் கொண்டவன், ஒரு தமிழக முதல்வரின் தொகுதிக்கு உட்பட்ட சமையல் (குக்) கிராமத்துக்காரன். அந்த வகுப்பின் மற்றொருவன்தான் இதை எழுதிய யோக்கிய குல விடிவெள்ளி.

ஆங்கிலத்தில் புலமைவாய்ந்த ‘ஆல் அப்பாட்டக்கர்ஸ்’ எல்லாம் A, B, C, D யை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துவிட, E  பிரிவில் முக்கால்வாசிப் பேர் அப்போதுதான் தன்னுடய பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் பழக பயிற்ச்சி எடுத்துக்கொண்டிருந்தோம். எல்லோரும் டிக்சனரி சைசுக்கு இங்கிலீஸ் கில்மா புக் படித்துக்கொண்டிருக்கும் போது 15 பக்கம் கொண்ட ‘சரோஜா தேவி’க்கு கூட வழியில்லாமல் வாடிக்கொண்டிருந்தோம். இப்படி ஆங்கிலத்தின் அட்ரோசிட்டியினால் நொந்துபோயிருந்த எங்களுக்கு ஒரே அறுதல் நடிகரின் பெயர்கொண்டவன் மட்டும்தான். சொந்த கதை, சொந்தக்காரர்களிடமிருந்து கடன்வாங்கிய கதை, நண்பர்களின் கதை, நாட்டாமைக்காரரின் கதை.... என பல வெரைட்டியில் பலான பலான கதைகள் வைத்திருந்தான்.

அதைக் கேட்பதற்காகவே அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். இவன் கூட்டிக்கொண்டு சென்ற கதை, இவனைக் கூட்டிக்கொண்டு சென்ற கதை என அவனுடய ஆட்டோ பயோகிராஃபிக்கு ஏக கிராக்கி. அவனுடய ‘முதல் அனுபவ கதை’ மட்டும் முன்னூறு முறைக்குமேல் சொல்லியிருப்பான். அவனுக்கு அதை சொல்லுவதில் அவ்வளவு ஆனந்தம், எங்களுக்கு அதை கேட்டு கிரங்கி கிடப்பதற்கு பேரானந்தம். என்னிடம் யாராவது ‘உனக்கு தமிழ்ல புடிச்ச பாட்டு என்ன?’ என்று கேட்டால், உடனே நான் ‘‘குக்குக்....குக் ஜோலிக்கே பீச்சே கியா ஹே... ஜோலிக்கே பீச்சே’’ என்றுதான் சொல்வேன். ‘’அது தமிழ் இல்லடா, தெலுங்கு’’ என்று என் அறிவுக்கண்ணை திறந்தது மட்டும் அல்லாது, அந்த பாடலின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் விளக்கி வகுப்பெடுத்த மகான் அவன், சாரி அவர்ர்ர்ர்.

ஒரு கட்டத்தில், நண்பனின் ‘’டெண்டுகொண்டாய்’’ பற்றி கேள்விப்பட்டு, ஆங்கில பீட்டர்கள் எல்லாம் ‘ஹேய் யூ...டமில்ல நீ காமம் டிராப்பாக, டிராப்பாக சொல்லும் ஸ்டோரிய எங்களுக்கும் சொல்லு’ என லுங்கியில் வந்து நிற்க, காலேஜில் தன் பெயர் பரவுவதற்காக பெருமைப்பட்ட நண்பன் முதல்முறையாக தன் பெயர் நாரிக்கொண்டிருப்பதை உணர்ந்து தன்னுடைய கொட்டாயை மூடி சீல் வைத்தான். சில்க் ஸ்மிதா செத்தபோது எப்படி கோட்டானக்கோடி ரசிகர்கள் திகைத்து நின்றார்களோ அதே போன்ற திகைப்பு எங்களுக்கு.

பின்பு இரண்டாவது வருடம், மெக்கானிகல், எலக்ரிக்கல், கம்யூட்டர்,.... என முதலாமாண்டு நண்பர்கள் அவர்ரவர் பிராஞ்சுகளுக்கு சென்றபின்பு, சிவில் டிப்பார்ட்மெண்ட்க்கு மட்டும் அவன் சொந்தாமாகிவிட்டான். நாங்க எல்லாம் இளையராஜாவின் ரசிகர்களாக இருந்தபோது, அவன் மட்டும் ராஜாவின் வெறியனாக இருந்தான். நாங்கள் கதைக்காக காத்திருந்து ‘‘அதெல்லாம் சொல்லமுடியாது’’ என அவன் முறுக்கிகொண்டு நிற்கும்போதெல்லாம் ராஜாதான் எங்களுக்கு உதவினார். ‘‘சே, ராஜா, ராஜாதாண்டா முதல்மரியாதை படத்துல எல்லாப் பாட்டுக்கும் என்னமா மியூசிக் போட்டிருக்காரு’” என்று ஆரம்பித்துவிட்டால் போதும், கொஞ்ச நேரம் இளையராஜா பெருமைகளை போற்றிவிட்டு, எங்களை கரும்புக்காட்டு இதிகாசத்துக்கும், சோளக்காட்டு சொர்க்கலோகத்துக்கும் அழைத்துச்செல்வான். நாங்களும் ஆளுக்கொரு தலவாணியை அமுக்கிப் பிடித்துக்கொண்டு, வாயில் வண்டி வண்டியாக நீர் வடிய (வாயில் மட்டும்) கேட்டுக்கொண்டிருப்போம்.

நான்காவது வருடம் ஹாஸ்டலில் கம்யூட்டர் வைப்பதற்கு அனுமதி கிடைத்தது. கம்யூட்டர், ஐ.டி டிப்பார்ட்மெண்ட் பசங்க எல்லோரும் புராஜெக்ட் ஒர்க் என்ற பெயரில் ’சகீலாவின் சபல சல்லாபங்களையும், ரேஷ்மாவின் ரகசிய இரவுகளையும் கண்டுவிட்டு கேண்டினில் நின்று அடுத்த சில்க் சகிலாவா? ரேஷ்மாவா? என்று பட்டிமன்றம் நடத்தி எங்களை வெறியேற்றிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் காதுவழியாக கதைகேட்பது, புத்தகமாக படிப்பது என்ற பரினாமவளர்ச்சியின் இறுதியில் சி.டியில் வந்து நின்றாலும், அதைக் காண கம்யூட்டர்?. ‘’சிவில் பசங்களுக்கு எதுக்குடா கம்யூட்டர்?’’ என்று எங்களுடய கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டு, பின்பு ‘’ஆட்டோக்காடில் புராஜக் பண்ணுவதால் கம்யூட்டர் வேண்டும்’’ என்ற பலகட்ட போராட்டத்திற்கு இறுதியாக வெற்றிகிடைத்தது.

‘மைசூர் மல்லிகே’, ‘மைடியர் மனீஷா’ போன்ற இதிகாசங்களைக் காண பத்து நாள் விரதம் இருந்து ஒருகையில் சி.டி, மறுமையில் தலையணையுடன் பதினொராவது நாள் கம்யூட்டர் முன்பு புட்பால், கார் ரேஸ் என விடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் சிருவர்களை தலையில் தட்டி படிக்க அனுப்பிவைத்துவிட்டு, படத்தை பார்த்து பரவச நிலையை அடைவதை சொன்னால் புரியாது அதை அனுபவிக்கவேண்டும். ஒரு நேரத்தில், அந்த கம்யூட்டர் இதுமாதிரியான சாமி சி.டி தவிர்த்து வேறு சி.டிகளைப் போட்டால் வேலைசெய்யவே இல்லை என்ற நிலைக்குப் போய்விட்டது. எவ்வளவுதான் படம்பார்த்து பாகம் குறித்தாலும், நடிகரின் பெயர்கொண்டவன் சொல்லும் கதை அளவிற்க்கு கிக் இருந்ததில்லை. களவாணி படத்தில் காட்டாத பல கோணங்களை எங்களுக்கு அந்த நண்பன் காட்டியிருந்தான் (சொல்லியிருந்தான்).

இவன் சொல்லும் கதைகளைக் கேட்ட பல பேர் மிரண்டு போய் நின்றார்கள், ‘’இவன் சாதாரண ஆள் இல்ல, நாடி, நரம்பு, சதை, ரத்தம், புத்தி என எல்லாத்துலயும் கில்மாங்கி கலந்திருக்கும் ஒருத்தனாலத்தான் இப்படி சொல்லமுடியும்’’ என பலபேரின் பாராட்டைப் பெற்ற இவனிடம் எக்கச்சக்க கதை இருந்தாலும், ஏட்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு தகுதியான அவன் சொன்ன ஒரு சம்பவம்.

அது ஒரு பலான விஷயத்துக்கான பஞ்சாயத்து. நாட்டாமை சொம்போடு வந்தார். சொம்புக்கு வலதுபுரம் பிராது கொடுத்த பெண், இடதுபுரம் குற்றம்சாட்டப்பட்ட ஆண். பிராது என்னவென்றால் பிராது கொடுத்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் இவந்தான் என்று எதிர்நிக்கும் ஆளைக் காட்டினால் அந்த பெண். சின்னஞ் சிருசுகள் ஒரு பக்கம், பெண்கள் ஒருபக்கம், என மொத்த ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்தது. ‘’எல்லோரு முன்னாடியும் பச்சையாக எப்படி இந்த விசயத்தை பேசுவது’’ என்று நாட்டாமை யோசித்து, அவருடைய சமயோஜித புத்தியினால் அந்த ஆணைப் பார்த்து ‘இங்க பாருப்பா, அந்த பாறையில நீ துவச்சதா அந்த பொண்ணு சொல்லுது, நீ துவச்சதுனால பாறை உடஞ்சு போச்சு அதனால நீதான் தெண்டம் கெட்டனும், என்ன சொல்லுற?” என கேட்க

அந்த ஆணும் “இல்ல சாமி, இத ஏத்துக்க முடியாது, நான் போகும் போதும், வரும் போதும் பாத்திருக்கேன், இந்த பாறையில நிரயப் பேரு துவச்சியிருக்கானுங்க. சரி எல்லோரும் துவைக்கிறாங்களேன்னு நானும் போயி துவச்சிட்டு வந்தேன். உண்மை இப்படி இருக்க நான் மட்டும் எதுக்குங்க தெண்டம் கெட்டனும்” என பதில் சொன்னான்.

பிராது கொடுத்த பெண்ணோ “இல்லீங்க நாட்டாமை, மத்தவனுங்க துவைக்குறதுக்கும், இந்தாளு துவைக்குறதுக்கும் ரெம்ப வித்தியாசமுங்க, பத்தாளு துவைக்குறத, இந்த ஒத்த ஆளு துவைப்பானுங்க. அதனால இவந்தான் பாறையைக் கெட்டிக்கணும் சாமி, பாறையப் பத்தி உங்களுக்கு தெரியாதது இல்ல... நீங்கதான் நல்ல தீர்ப்பு கொடுக்கணும்” என அவளுடய வாதத்தை ஸ்ட்ராங்காக வைக்க

இன்னும் கொஞ்ச நேரம் இவளை பேசவிட்டா ஊருப்பய பேரு பூரா வெளியவந்திடும் என பயந்து, நாட்டமை பெண்ணுக்கு சாதகமாக, அந்த ஆணை தெண்டம் கட்டவைத்து தீர்ப்பு வழங்கினார்.

இனி நாட்டாமை.....

“நீ சொன்னமாதிரி பல பேர் போய், வந்து துவச்சிருக்கலாம், ஆனா அவங்கெல்லாம் துவைக்கும் போது பாறை பாறையாத்தான் இருந்துச்சு, அந்த அளவுக்கு பதமா பார்த்து, பயந்து துவச்சிருக்கானுங்க. அதுபோக, அந்த பொண்ணு சொன்னதுமாதிரி, நீ துவச்சதுமாதிரி வேற யாரும் அடிச்சு துவைக்கலையாம், மேலும் நீ துவச்ச போதுதான் பாறை உடைஞ்சும் போயிருக்கு, அதனால நீதானப்பா தெண்டம் கட்டனும், இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு, பஞ்சாயத்தோட தீர்ப்பு”.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.