வெள்ளி, ஜனவரி 28, 2022

''2022 எனும் ஒரு ஆண்டு

போன வருசம் மாதிரி ஒரு கேவலமான வருசத்தை 2012க்கு அப்புறம் நான் அனுபவிக்கவேயில்லை. “ஊதியம் இல்லாமல் ஊளியர்கள் உயிர் ஊசல்…….” ரேஞ்சுக்கு கம்பெனி இருந்துச்சு. இந்த நாரப்பய வருசத்தை பல்லக் கடிச்சிக்கிட்டு எப்படியாவது கடந்திடனும்னு சூழுரை எடுத்து, வருசத்தோட கடைசி நாள்ல காரித்துப்பி அனுப்ப காத்துக்கிட்டு இருந்தேன். புது வருசத்தை வரவேற்பதை விட 2021 முடியப்போகுற சந்தோசம், பொண்டாட்டிய இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் போது ஏற்படும் ஆனந்தத்தை விட அதிகமா இருந்துச்சு.

டிசம்பர் 31, பால்கனியில் இருந்து புர்ஜ் கலிபாவில் புது வருச வரவேற்பு வானவேடிக்கைகளை பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டு பால்கனிய பார்த்து “ஹேப்பி நியு இயர் ஆண்டி” ன்னு சொன்னேன். பதில் வரலியேன்னு உத்துப் பார்த்தா….. நாலு வேட்டி கட்டுன வெரும்பயலுங்க. ஸோ ஸேட், ஒரு ஹேப்பி நியு இயர் வேஸ்டாப்போச்சு. நைட்டு புல்லா 2021, கக்கத்துல கன்னி வெடி வச்சது, பாதையில பள்ளம் வெட்டிவச்சது, அம்மணமாவுட்டு ஆசிட் அடிச்சதுன்னு…. நானும் என்னோட நண்பரும் நினைவுகூர்ந்து கொண்டே இருந்தோம். 

ஜனவரி 1, அதிகாலை 11 மணிக்கு தூங்கிக்கிட்டு இருக்கும்போது கத்துன போனை காதுகிட்ட வச்சி “ஹலோ”ன்னு சொன்னேன். தெரிஞ்சவரோட அப்பா இறப்பு செய்தி. முதல் நாள், முதல் போன் கால், முதல் செய்தி. “சிறப்பு”. ரெண்டு மணி நேரம் கழிச்சு வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ், பிரண்டோட அம்மா இறப்பு செய்தி. அடுத்து வெங்காயம் வெட்டும் போது விரல்ல கத்தி குத்து. சில பல மி.லிட்டர் பிளட் பிளீடிங். ‘’என்ன ரத்தக் காவெல்லாம் வாங்குது?, ஆங்க்… ஒரு சிறந்த வருசம்னா சில தடங்கள்கல் இருக்கத்தான் செய்யும்’’னு நானே சாமாதானப் பட்டுக்கிட்டேன்.

இதன்ன பெரிய பிரமாதம், இதவிட ஒரு ஸ்பெசல் ஐட்டம் ஒன்னு இருக்குன்னு ஒரு தோணல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அன்னிக்கு நைட்டு தூங்குற வரைக்கும் வேற ஒன்னும் நடக்கல (முதல் நாள்ல இதுக்கு மேல என்ன நடக்கவேண்டியிருக்கு?). ஜனவரி 2, ஆபிஸ் போய் பன்ச் பண்னிட்டு, கம்யூட்டர் ஓப்பன் பண்ணினா HR ல இருந்து மெயில் வந்திருஞ்சு. ‘’ஹேப்பி நியு இயர்’’ அனுப்பி இருக்கானுங்கன்னு நம்பி ஓப்பன் பண்ணுனேன்.

“தாங்கள் கடந்த நாலு வருசமா புடுங்குனத, நாங்க நாற்பது பேரைக்கொண்டு அள்ளிக்கிட்டு இருக்கோம். இதுக்கு மேல முடியாது. வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்” ன்னு மெயில் அனுப்பி இருந்தாங்க. ஓ இது தான் அந்த ஸ்பெசல் அய்ட்டமான்னு மிரண்டு போய்யிருந்தேன். ‘இந்த கம்பேனிக்காக நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்க, உங்களப் போயி தூக்கிட்டானுங்களே?’ ன்னு எல்லோரும் துக்கம் விசாரிக்க கண்ணுல தண்ணிவச்சிண்டு வந்துட்டா. ஆனா மனசுக்குள்ள பூராப் பயலுங்களுக்கும் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ தான்.

லெட்டர் குடுத்த அடுத்த 2 நாள், கம்யூட்டர தட்டுரது, பிரிண்டர் மிசின்கிட்ட நின்னு பிரிண்ட் எடுத்து அடுக்கி வைக்கிறது, வலது கையால சாப்பிட்டுகிட்டே இடது கையால கீ போர்டுல டைப் பண்ணுறதுன்னு பேய் மாதிரி வேலை பார்த்தேன். இத பார்த்துட்டு என்னோட மேனஜரே பாலகிருஷ்னா டபுள் ஆக்ட் பண்ணின படத்த பார்த்தமாதிரி மிரண்டு போய் நின்னாரு. எங்கிட்ட வந்து ‘அதுதான் தம்பி ஒரு மாசம் நோட்டீஸ் பிரியட் இருக்குல்ல, எல்லா வேலையையும் ஒரே வாரத்துல முடிச்சிட்டா எப்படி?’ன்னு கேட்டாரு. ‘’எதே….. வேலையா? யோவ் நான் ரெசூம் ரெடிபண்ணி பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு இருக்கேன்’’ன்னு சொல்லலாம்னு தோனுச்சு, பட் அந்த மனுசனோட நெனப்புல எதுக்கு மண் லாரிய ஏத்தனும்னு “இது என்னோட கடமை, என்னய தடுக்காதீங்க”ன்னு சொல்லிட்டேன். நம்பிட்டான். இவனெல்லாம் ஒரு மேனஜரா?ன்னு உங்களுக்கு தோனுதுல்ல, இத நான் பலதடவ சொல்லியிருக்கேன் இருந்தும் 4 வருசம் வச்சியிருந்தானுங்க.

புதுவருசம் ஆரம்பிச்ச கையோட துபாயில கொரோனா கேஸ் எண்ணிக்கை அதிகமாகிடுச்சு. கம்பெனியில பாதிப் பேருக்கு காய்ச்சல், இருமல். ஆபிஸுக்கு வந்தாலே ஏதோ கொரோனா வார்டுக்குள்ள வந்த பீளிங்க். கம்பெனி ‘’பூராப்பயலும் டெஸ்ட் எடுக்கனும்’’னு சொல்லிடுச்சு. யானையே எதிர்ல வந்தாலும் ஏறி அடிப்பாண்டா இந்த யாசிர்ன்னு சிறு இருமலுடன் இருமாப்போடு இருந்தேன். கங்குராச்சுலேசன்….. உங்களுக்கு கொரோனான்னுட்டானுங்க. அடுத்த பத்து நாள் ஆரும் இவங்கூட அன்னந்த் தண்ணி பொழங்கக்கூடாது, அத மீறினா அவுங்களு பத்து நாள் கோரண்டைன் இருந்துட்டு வரணும், நீதிடா, நேர்மைடா, ஞாயம்டா…..ன்னு கம்பெனி சொல்லிடுச்சு.

போனை கீழ வைக்க முடியல, கருணை மனுவோட எல்லோரும் கால் கடுக்க லைன்ல நின்னானுங்க. போன் பண்ணவன் எல்லாம் “அது எப்படி பாய், உங்களுக்கு பாஸிட்டிவ் வந்திருக்கு, ஆனா செகரட்ரிக்கு நெகட்டிவ் வந்திக்கு?”னு கேட்குறான். இன்னொருத்தன் “கம்பெனிய விட்டு போகும் போது, எல்லாத்தையும் கேண்ட் ஓவர் பண்ணனும், செகரட்ரிய யாருட்ட கேண்ட் ஓவர் பண்ண போறீங்க?’’ன்னு கேட்குறான்.  புருஞ்சுபோச்சு இவனுங்க இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வாரானுங்க.

கோரண்டைன்ல நேரம் போகனுமேன்னு ராஜ வம்சம்னு ஒரு படம் பார்த்தேன். கொரோனால செத்திருவோமோன்னு பயந்த எனக்கு, தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணிடுச்சு. சரி போகுற உசிரு கொரோனாவுலேயே போகட்டும்னு முடிவு பண்ணி, கொம்பு வச்ச சிங்கமடா, அன்பறிவு……படங்களை தவிர்த்திட்டேன். கோரண்டைன் முடிஞ்சு பல எதிர்பார்ப்போடு ஆபிஸ் போனேன், அந்த செகரட்டரிகிட்ட என்ன சொன்னானுங்களோ தெரியல, நான் சொன்ன “குட் மார்னிங்”, ஈவினிங் வரை அனாதயா கெடந்துச்சு. கேண்ட் ஓவர், கேண்ட் ஓவர்னு பேசுனானுங்க இப்ப அவனுங்களே டேக் ஓவர் பண்ணி டேங்கர் லாரிய ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க, ப்ளடி 5மாச சம்பள பாக்கி கம்பெனி எம்ப்ளாயர்ஸ்.

என்னடா இந்த 2022 போர்பிளே பண்ணாம நேர டாங்கி ஸ்டைல்லுக்கு போகுதேன்னு அப்பப்ப ஒரே மிரட்சியா இருக்குது. இதுக்கு 2021ன்னே பரவாயில்லை. தமிழ்ல ஒரு கதை இருக்கு ‘’முன்னாடி இந்தியாவ மைக்மோகன் சிங்குன்னு ஒரு மன்னன் ஆண்டு வந்தாராம், அவர எல்லோரும் மோசம் மோசம்னு திட்டுனாங்களாம்……………………’’ சரி விடுங்க டைம் வேஸ்ட். பை த பை எனக்கு 2012ல கல்யாணம் ஆச்சு. 

---------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

 


வியாழன், பிப்ரவரி 08, 2018

தண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும்.


2007 பெங்களூர்ல வேலை பார்த்த போது, எங்க கம்பெனியில ஒரு ஸ்டோர் இன் சார்ஜ் இருந்தார். தண்டபானியோ, தண்டாயுதபானியோன்னுதான் அவரோட பெயர், நாம தண்டபானின்னு பிக்ஸ் பன்னிக்குவோம்.  வயசு 35 மேல இருந்தாலும் 25 வயசுன்னு சொல்லிக்கிட்டு திரியுவாரு. நாங்களும் நம்புற மாதிரியே நடிப்போம். நடிச்சுத்தான் ஆகனும், ஏன்னா? எங்களுக்கெல்லாம் கதை சொல்லுற ஒரே ஜீவன் (24 வயசுல என்ன கதைய கேட்டிருப்போம், அந்த கதைதான்). ஆளு பாக்குறதுக்கு அச்சு அசல் ‘’தல நம்ம பூச்சுப் பாண்டிய அந்த கட்டத்துர ஆளுங்க அடிக்குறாங்க’’ன்னு வின்னர் படத்துல வடிவேலுக்கு ஓப்பனிங் கொடுக்குறவன் மாதிரியே கருப்பா குள்ளமா இருப்பாரு.
புதுசா ஒரு சைட் ஆரம்பித்த நேரம், ஆள் இல்லாததால, எல்லாருக்குமே ரெண்டு, மூனு வேலை கூடுதலா இருந்துச்சு. ஆபிசில் இருப்பவன் சைட்டையும் பார்க்கனும், சிலருக்கு சைட் வேலையும் பார்த்துட்டு வாடகைக்கு வீடு தேடனும்.....இப்படி பல இருந்துச்சு. அப்படி அடிசனல் வேலையா தண்டபானிக்கு அக்கவுண்ட்ஸ் வேலைய கொடுத்தாங்க. அந்த கம்பெனியில இஞ்சினியருக்கு மெஸ் சைட்டுலேயே இருந்துச்சு. மெஸ்ஸோட வரவு, செலவு கணக்கு எல்லாத்தையும் தண்டபானி வச்சிருந்தாரு. மெஸ்ஸ ஒரு தென்காசிக்கார பாய் வச்சிருந்தாரு. மெஸ்ஸுல ஒரு பொண்ணு வேல செஞ்சுச்சு அத இந்த ரெண்டு பேரும் ..........................
அப்போ, இண்டெர் நெட் பார்க்க ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய். சி.டி வாங்கினா வாடகை 75 ரூபாய், ஆனா, தண்டபானி சொல்லுற கதைக்கு மட்டும் காசே இல்ல, சில சமயம் அவரே டீ வாங்கிக்கொடுத்து கத, கதையா சொல்லுவாரு. ‘’ஒரு தடவ ரானி மேரி காலேஜ் பொண்ணு என்னயவே லுக் உட்டுச்சு, பத்து நிமிசத்துல பிக்கப் பண்ணி, ஒரே வாரத்துல ‘’ப்ப்பிஷ்க்’’ ‘’னு சொல்லி வெட்டுற மாதிரி கையால சைகை செய்வாரு (அதாவது சோலிய முடிச்சுட்டாராமா). நான் சொல்லுறது ஒன் லைன், இந்த ஒன் லைன மூனு நாளா விருச்சு வெளா வெரியா சொல்லுவாரு. நாங்க வேற ரொம்ப காஞ்சி போயி இருந்தமா, அதனால் கண்ண விருச்சு எச்சிய முழுங்க முடியாம முழுங்கி ஒரு மாதிரியான போதையில அந்த காவியத்த கேட்போம். ‘’போன வாரம் பெங்களூர் வரும்போது பஸ்ஸுல .......’’ன்னு ஆரம்பிச்சா ‘’தெய்வமே போது தெய்வமே, இதே ஒரு மாசத்துக்கு தாங்கும்’’னு கும்பிடு போட்டு போவோம்.
மேனஜர் ரூமுக்கும், தண்டபானி இருக்கும் ஸ்டோருக்கும் ஒரு 300 அடி தூரம் இருக்கும். மேனஜர்கிட்ட டெய்லி ஸ்டாக் ரிப்போர்ட் காட்டி கையெழுத்து வாங்கனும். கையெழுத்து வாங்க வரச் சொல்லி போன் பண்ணினா அரை மணி நேரம் தாமதமாகத்தான் வருவாரு. இப்படி லேட்டா வர்றதுக்கு டெய்லி திட்டு வாங்குவாரு ‘’நடந்து வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகிடுச்சு சார்’’னு காரணம் சொல்லுவாரு. ‘’அப்ப நாளையில இருந்து ஓடி வா’’ன்னு மேனஜர் சொல்லிட்டாரு. மறுநாள் ஓடி வந்த வேகத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிய படியே கையெழுத்து வாங்குனாரு. அன்னைக்கு மேனஜர் திட்டல, கையெழுத்தெல்லாம் போட்ட பின்னாடி ‘’நீ இனிமே ஓடியெல்லாம் வரவேண்டாம், நடந்து வந்தாலே போதும்’’ னு சொன்னாரு. தண்டபானிக்கு, நம்ம கடமை உணர்ச்சிய பார்த்துத்தான் அப்படி சொன்னாருன்னு நெனச்சி முடிக்கிறதுக்குள்ள ‘’ஓடி வந்தா கூட 15 நிமிசம் ஆகுது, அதுதான் நடந்தே வான்னு சொன்னேன்’’ன்னு மேனஜர் சொல்லிட்டாரு. இப்படி நிறைய அசிங்கப்பட்டாலும் ‘’ஹேய் ஹலோ நேத்து அசிங்கப்படுத்த வாரேண்டு வரவேயில்ல’’ந்னு தில்லா சொல்லுற ஆளு.
மெஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, சைட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல் இருந்துச்சு. அங்க ரெண்டு பருவ பொண்ணுங்கதான் சப்ளை செய்யும். ஒரு நாள் சாப்பிட போன போது ‘’வாங்க அங்கிள்? என்ன சாப்பிடுறீங்க அங்கிள்?’’ன்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அங்கிள் போட்டு பேசுச்சு. அன்னைக்கு சாப்பாடு தொண்டைக்கு கீழ இறங்கல. 24 வயசுல ஒரு 18 வயசு பொண்ணு நம்மள அங்கிள்ன்னு சொல்லிருச்சேன்னு நினைச்சு நினச்சு ரொம்ப பீல் பண்ணினேன். அதுக்கு அப்புறம் அந்த பக்கமே போகல, ஆனா தண்டபானி காலையில ‘டீ’யில இருந்து நைட் டின்னர் வரை அங்கதான்னு கேள்விப்பட்டு, நான் தண்டபானிக்கிட்ட ‘’24 வயசுக்காரன் என்னயையே அங்கிள்னு கூப்பிடுதே, அப்போ உங்கள என்னன்னு கூப்பிடும்?’’ன்னு கேட்டேன்’ அத கேட்டதும் அவருக்கு  ரொம்ப கோபம் வந்திருச்சு. அதுனால எல்லோருக்கும் சொன்ன ‘’பரிமளா’’ கதைய எங்கிட்ட மட்டும் கடைசிவரைக்கும் சொல்லல.
மெரினா பீச்சில், நியூ இயர் பார்ட்டிக்கு வந்த பொண்ண உசார் பண்ண கதைய சொன்னார். அதுக்கு முன்னாடி நாங்களும் நியூ இயர் பார்டி, டான்ஸ், அந்த மாதிரி, இந்த மாதிரின்னு நிரய கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனா போகுறதுக்கு பயம். தண்டபானி இந்த வருசம் உங்களுக்காக நான் இங்க இருக்குறேன், எல்லோரையும் எம்.ஜி.ரோடு கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரு. அதிலிருந்து, ‘’எப்படா நியூ இயர் வரும், எம்.ஜி ரோடு போகலாம்’’ன்னு வெறியோடு இருந்தோம். நியூ இயருக்கு ரெண்டு மாசம் முன்னாடியே தண்டபானி தலமையில 8 பேர் கொண்ட குழு அமைச்சு, ‘’ஒவ்வொருத்தனயும் தாக்குறோம், கெடைக்கிற பொண்ணுங்கள தூக்குறோம்’’ந்னு சூழுரை எடுத்துக்கொண்டோம். நியூ இயர் பக்கத்துல வர வர ஒவ்வொருத்தனுக்கு ஆர்வம் பீரிக்கிட்டு வந்துச்சு, தண்டபானிக்கு மரியாதையும் கூடிக்கிட்டுப் போச்சு.
எதிர்பாராத விதமா, நியூ இயருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவசர வேலையா நான் ஊருக்கு போகும்படியா ஆகிடுச்சு. உடல்தான் ஊருக்கு போச்சே ஒழிய மனசு பூரா எம்.ஜி.ரோட்டுலயே இருந்துச்சு. நியூ இயர் முடிஞ்சு சைட்டுக்கு போனேன். எவனையும் பார்க்க முடியல. அதே நேரத்துல நியூ இயர் பார்ட்டியில ஒரு பொண்னோட டிரஸ்ஸ உருவிட்டானுங்கன்னு கேள்விப்பட்டு, ரொம்ப ஆர்வத்தோட, நேரா ஸ்டோருக்கு போய் தண்டபானிய பார்த்து ‘’என்னாச்சு சார்? எப்படி இருந்துச்சு?’’ன்னு கேட்டு நச்சரிச்சேன். எப்போதும் உட்கார்ந்து வேலை பார்க்கும் த.பானி அன்னைக்கு நின்னுக்கிட்டே எல்லாத்தையும் எழுதிக்கொண்டிருந்தார். ‘’போயா அப்புறமா சொல்லுறேன்’’ ன்னு மாறி மாறி சொல்லி அனுப்பிவிட்டார்.  
மதிய சாப்பாட்டில் ஒருத்தனை பிடித்து ‘’என்னடா எப்படி இருந்துச்சு, ஏதோ ஒரு பொண்ண டிரஸ்ஸ கழட்டிட்டானுங்களாமுள்ள’’ என கண்களை விரித்து கேட்டேன். ‘’அத எல்லாம் கேட்டியே, அதுக்கு அப்புறம் லத்தி சார்ஜ் பண்ணினத கேள்விப்பட்டியா?’’ந்னு எதிர் கேள்வி கேட்டுவிட்டு ‘’தண்டபானியா போய் பார்த்தியா?’’ன்னு கேட்டான். ‘’ஆமா, ஒன்னுமே சொல்லல, நின்னுக்கிட்டே வேலை செய்றாரு’’ன்னு சொன்னேன். ‘’எப்படி உக்காருவாரு, அதுதான் குண்டியிலேயே போட்டானுங்கள்ள’’ன்னு சொல்லி போலிஸிடம் அடிவாங்குன கதையை சொன்னான். மனசு கேட்காம தண்டபானிய போய் ஸ்டோரில் பார்த்தேன். பாவம் மனுசன் நின்னுக்கிட்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

வெள்ளி, டிசம்பர் 29, 2017

விவேகம் அட்ராசிட்டீஸ்.


இந்த படத்த பாக்குறதுக்கு முன்னாடி நான் அஜித்தின் ‘’தீவிர ரசிகன்’’னா இருந்தேன். இப்ப தீ போயி ‘’விர ரசிகனா’’ இருக்கேன் (எஸ், அந்த பயர் போயிருச்சு). இது பரவாயில்ல, அஞ்சிநேயா, ஜி, ஜனா.....ன்னு ஒரு காலம் இருந்துச்சு. அப்பெல்லாம் தீ, வி, ர என எல்லாம் போயி ‘’கன்’’ மட்டும் இருந்துச்சு. சுப்ரமணிய புரம் சித்தன் மாதிரி ஏதாவது கோவில் திருவிழா காண்ராக்ட் கெடக்காதான்னு தலயில துண்டு போட்டு காத்துக்கிட்டு இருந்தோம். வரலாறுன்னு ஒரு படம் வந்த பின்னாடி மறுபடியும் தீவிர ரசிகனா மீண்டு எழுந்தோம்.
எனக்கு, அஜித்தோட எல்லா படத்தையும் முதல் நாளே பாக்குறது வழக்கம் ஆழ்வார், அசல் பார்த்தபின்னாடி கூட அந்த எண்ணம் மாறல. விவேகம் படம் வருவதற்கு முன்னாடியே படம் ஹாலிவுட் ரேஜ்சுக்கு இருக்கும், தல அப்படி பண்ணியிருக்காரு, இப்படி பிண்ணியிருக்காருன்னு ரொம்ப ஓவரா ஊசுப்புனாய்ங்க. அடுத்து அனிரூத் ‘’சர்வேவா’’ பாடலை ரிலீஸ் பண்ணவுடனே ஒட்டுமொத்த தமிழ்நாடும் ‘’வ்வ்வ்வாவ் வாட்ட சாங்க்’’ன்னு சொல்லுச்சு. ஆனா எனக்கு ‘’**த்தா என்னடா சாங்கு இது’’ன்னு தோனுச்சு, அவ்வளவு இரச்சல். ஆனா அத வெளிய சொன்னா, சுத்தியிருக்குற எஸ்.பி.பி, ஜேசுதாஸ்கள் ‘’போடா, ஞான சூனியம்’’னு சொல்லுவானுங்க, எதுக்கு வம்புன்னு இருந்துட்டேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அஞ்சாநேயாவுக்கு ஒரு டஃப் கொடுக்கப் போறாய்ங்கன்னு.
விவேகம் வந்த முதல் நாள், ரோட்டுல ஒருத்தன நாலு பேரு அடிக்கும் போது, அந்த வழியில போறவ, வாறவ எல்லாம் சைக்கிள நிப்பாட்டிட்டு வந்து அடிச்சிட்டுப் போறமாதிரி சோசியல் மீடியாவுல ஒன்னு கூடிட்டானுங்க. ‘’நான் அஜித் ரசிகன் இல்ல, அஜித்த புடிக்கும் அவ்வளவுதான்’’ அப்படின்னு சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தேன். அதெல்லாம் கெடயாது ‘’பச்ச சட்ட போட்ட அடிப்போன்’’னு உறுதி மொழி எடுத்துட்டு வந்து கும்முனானுங்க. பதிலுக்கு நம்ம ஜாதிக்காரனுங்க புளு சட்ட, சாரு நிவேதிதான்னு ஓட்டர் லிஸ்டுல இருந்து பேர எடுத்து வன்முறை வெறியாட்டம் நடத்துனானுங்க.
படம் ரீலிஸாகி ரெண்டு வாரம் கழிச்சு, தஞ்சாவூருக்கு ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன். நண்பர் எதார்த்தமா ‘’நைட்டு படத்துக்கு போகலாமா?’’ ன்னு கேட்க, நானும் பதார்த்தமா ‘’விவேகத்துக்கு போகலாம்’’னு சொன்னேன்.  அவருக்கு ‘’ஏண்டா கேட்டோம்’’னு ஆயிடுச்சு பாவம். நைட்டு சாப்பிடும் போது நண்பரோட அம்மா, ‘’கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ ‘’படத்துக்கு வேற போற, கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ன்னு மருக்கா மருக்கா சொல்லுச்சு. அதுக்கு அர்த்தம் அப்ப புரியல, படம் பார்த்த பின்னாடிதான் புரிஞ்சுது. ‘’அடி வாங்குறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா’’ன்னு நேரடியா சொல்லி இருந்தா, கூட ரெண்டு இல்ல நாலு சப்பாத்தி சாப்பிட்டுருப்பேன். என்னா அடி.
படம் வந்து ரெண்டு வாரமாகியிருந்தாலும் ஓரளவு கூட்டம் இருந்துச்சு. தியேட்டர சுத்தி தீனா குமார், பில்லா பாலா, வரலாறு வசந்த்...........ன்னு கொஞ்சப்பேரு பேனர், பிளக்ஸ் எல்லாம் வச்சிருந்தானுங்க. ஒரு லொல்லு சபா எபிசோட்டில், எம்.ஜி.ஆர் டபுள் ஆக்ட் படத்தில் ஒரு எம்.ஜி.ஆரா சந்தானமும், இன்னொரு எம்.ஜி.ஆரா மண்ட மனோகரையும் போட்டு, இவங்க ரெண்டு பேரும் ரெட்டப் பிறவி, பாக்குறதுக்கு ஒன்னுபோல இருப்பாங்கன்னு சொல்லியிருப்பானுங்க. அதுமாதிரி பிளக்ஸ்ல இது அஜித்தா இல்ல அவர் ரசிகர் விவேகம் வினோத்தான்னு சந்தேகம் வர்ர மாதிரி ரெண்டு பேரும் ராணுவ யூனிபார்மில் போஸ் கொடுத்திருந்தாங்க. படத்தப் பார்த்த பின்னாடியும், எப்படி அந்த பிளக்ஸ கழட்டாம இருக்கான்னு? எனக்கு ஒரே அசுவையா இருந்துச்சு.
தியேட்டருக்குள்ள போனவுடனே தேசிய கீதம் போட்டானுங்க. எழுந்து நின்ன என்னப் பார்த்து ‘’எழுந்து நிக்கனுமா என்ன?’’ன்னு நண்பர் கேட்டார். ‘’சிவான்னு பேரு வச்சவங்களுக்கு எப்படின்னு தெரியல, ஆனா முஹம்மது யாசிர்னு பேர வச்சிக்கிட்டு நான் உக்கார்ந்திருக்க முடியாதுன்னு’’ சொல்லிட்டேன்.
இங்கிலீஷ் படமாட்டம் இருக்குன்னு எந்த அடிப்படையில சொன்னானுங்கன்னு தெரியல. அத நம்பி நாலு ‘’சீன்’’னாவது இருக்கும்னு நம்பி போனேன். ‘’ச்சீ’’ன்னு ஆயிடுச்சு. ஹாலிவுட் படத்துல ஹீரோ கோர்ட் சூட் போட்டு கவர் பண்ணி வருவாரு, ஹீரோயின் அவர கவர் பண்ணுறமாதிரி டிரஸ் போட்டுக்கிட்டுவரும். ஆனா, இந்த படத்துல அது உல்டா. கடைசி பைட்டுல அஜித் கழட்டி நிக்குறாரு, காஜல் அகர்வல் கழண்டு போய் நின்னுச்சு. ஒரு முத்த சீன், பயங்கர எதிர்பார்ப்போட இருந்தேன், தல அந்தப்புள்ள நெத்தியில முத்தம் கொடுத்து மொத்தத்தையும் கெடுத்துட்டாரு.
படத்துல ஹீரோ பஞ்ச் பேசலாம் தப்பில்ல, ஆனா பேசுறது எல்லாம் பஞ்சா இருந்தா எப்படி தாங்கிக்குறது?. அதுவும் ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு படத்துக்கு வர்ற கதி என்னவாகும்?னு எவனாவது யோசிக்கிறானா?. காஜல் கூட ‘’வாழ்க்கன்னா என்ன தெரியுமா?’’, ‘’குடும்பம்னா என்ன தெரியுமா?’’ ‘’குடும்ப கட்டுப்பாடுன்னா என்னன்னு தெரியுமா?’’ந்னு பாடம் எடுக்குது. ஒரு கட்டத்துல சுகி சிவம் நிகழ்ச்சிக்கு எதுவும் வந்திட்டமோன்னு டவுட் வந்திரிருச்சு. படத்துல ஒரே ஒரு ஆருதல் அக்ஷரா ஹாசன் தான். அது எப்படியோ டைரக்டருக்கு தெரிஞ்சு போச்சு, இண்டெர்வெல்லேயே அந்த கேரக்டர் சோலிய முடிச்சிட்டானுங்க.    
மற்ற படத்துலயெல்லாம், கதையை எழுதிட்டுத்தான் வசனம் எழுதுவானுங்க. இந்த படத்துல வசனம் எழுதிட்டு கதை எழுதியிருக்கானுங்க போல. வசனம் எல்லாம், டி.வி விவாத நிகழ்ச்சிகள்ல பி.ஜே.பிக்காரனுங்க பதில் சொல்லுற மாதிரியே ‘’இத எதுக்குடா இப்ப சொல்லுறானுங்க’’ந்னு இருந்துச்சு. அதுவும் கன் பாயிட்டுல 500 வெளிநாட்டு போலிஸ்கிட்ட மாட்டுனதுக்கு பின்னால ‘’இந்த உலகமே உன்ன பெயில் ஆயிட்டன்னு சொன்னாலும் நீ ரி வேலுவேசன் போட்டு பாஸாகுற வரக்கும் நெவர் எவர் கிவ் அப்’’ந்னு தமிழ்ல வசனம் பேசுவாரு.  அவனுங்க டிக்ஸ்னரி எடுத்து அர்த்தம் பாக்குற கேப்புல இவர் பெரிய்ய்ய்ய்ய பாலத்துல இருந்து குதிச்சுருவாரு. கலகலப்பு படத்துல வர்றமாதிரி ‘’இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?’’ந்னு ஒருத்தன கேட்டேன். ‘’முதல்ல நானும் நம்பல, ஆனா இத நம்புனாத்தான் அஜித் ரசிகன்னு சொன்னாங்க, அதனால நானும் நம்பிட்டேன்’’னு சொன்னான். ‘’வாவ் வாட்ட ஜம்ப்’’ந்னு நானும் ஜம்ப் அடிச்சுட்டேன்.
பரபரப்பா வேல பாக்குறோம்ங்குற பேர்ல விவேக் ஓபராய் கும்பல் கத்துறத நிருத்துன உடனே, பேக் ரவுண்ட் மியூசிக்னு கதறவுடுரானுங்க. ‘’உங்க தம்பி பசுபதி நம்ம டீச்சர வச்சிருக்காருங்க’’ந்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள கவுண்டர் காதுல ‘’குய்ய்ய்ய்ய்’’ந்னு ஒரு சவுண்ட் வருமே அதே சவுண்டு கொஞ்சம் A+ ரத்தத்தோட சேர்ந்து வந்துச்சு. ஐஸ்வர்யா ராய உசார் பண்ணி வச்சிருந்த விவேக் ஓபராயா இப்படி ? ரொம்ப டெலிகேட் பொசிசன்.
படம் முடிஞ்சுதேன்னு எல்லோரும் ஒருவழியா வெளிய வந்தானுங்க, நான் மட்டும் ஒரே (உடல்) வலியா வந்தேன். அஜித்துக்கு அடுத்த படமும் சிவா கூடத்தானாம், இவனுங்க மறுபடியும் நம்மள ‘’கன்’’ல கொண்டுவந்து நிப்பாட்டாம அடங்கமாட்டானுங்க போலிருக்கு.
வெயிட்டிங் பார் விஸ்வாசம்
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

செவ்வாய், ஜூலை 25, 2017

அவர் பீட்டி (P.T) வாத்தியார்.

எவ்வளவு அவசர வேலையாக வெளியே சென்றாலும் சரி, ஏதாவது ஒரு விளையாட்டுத் திடலைக் கண்டால் ஒரு நொடியாவது நம்முடய வேகம் தடைபடும். அங்கு யாராவது விளையாடினால், 5 நிமிடமாவது பார்க்கத் தோன்றும். அதுவும், நாம் விரும்பும் விளையாட்டு என்றால் ‘’ஸ்கோர் என்னாச்சு தல?’’ என்று கேட்டுவிட்டு நம்மை அறியாமலேயே அரை மணி நேரமாவது ரசித்து நிற்போம். எனக்கு, ஜித்தாவில் ரொம்ப பிடித்த விஷயமே ஒரு ஏரியாவில் குறைந்தது 4 புட்பால் திடலாவது இருக்கும். சாயங்காலங்களில் வயது வித்தியாசமே இல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
உடல் எடையை குறைப்பதற்காக மாலை நேரங்களில் ஜாக்கிங்க் போகிறேன். போகும் வழியில் இருக்கும் கிரவுண்டில் அரபிக்காரர்கள் புட்பால் விளையாடுவார்கள். ‘’பார்ப்பதற்கே மனசுக்கு சந்தோஷ் சுப்ரமணியமா இருக்கே, கொஞ்ச நேரம் விளையாடினால் மனசு லேசா லேசாகுமே’’ என ஏங்கிய நாட்கள் உண்டு. அன்று, ஜாக்கிங்க் போகும் போது பந்து மைதானத்தை விட்டு பறந்து என் பக்கத்தில் வந்தது.  பந்தை தூக்கிப் போடும்படி ஒரு அரபி பையன் சைகை காட்டினான். நானும் ரொம்ப சந்தோசமாக பந்தை உதைத்தப் பின், கால் ரொம்ப லேசாக இருந்தது. “அதெப்படி? மனசுதானே லேசாகனும்’’னு நீங்க யோசிப்பது புரிகிறது. பட், பறந்தது பந்து அல்ல என்னோட வலது கால் ஷு (SHOE). கடைசியில் நான் பந்தை கையில் எடுத்துக்கொண்டு போய் கொடுக்க, அவன்  ஷுவை எத்தி தள்ளினான். அந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்பு, அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.
எல்லாப் பள்ளிகளிலும் மைதானம் இருக்கும் ஆனால் நான் 9 டு 12 வரை படித்த பள்ளிமட்டும்தான் மைதானத்திற்கு உள்ளே இருந்தது. எங்க விளையாட்டு வாத்தியார் பெயர் நெல்லை நாயகம். பல மாணவர்களோட ஆதர்ச நாயகன். எங்க செட்டிலும் சரி, எங்கள் முன்னாடி செட்டிலும் சரி +2 முடித்தபின்பு, குறைந்தது 4 மாணவர்களாவது விளையாட்டு வாத்தியாருக்கு (Physical Training) படித்தார்கள் என்றால் அது, இவருடய இன்ஸ்பிரேசனால் தான். பெரிய சைஸ் கடாயை கவுத்தி வைத்தது போல இருக்கும் அவர் வயிறு. சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், தும்பிக்கையில்லா புள்ளையார் மாதிரி இருப்பார்.  ஆனால், குனிந்து முட்டி மடங்காமல் கால் விரலைத் தொட்டு விடுவார். கெட்ட வார்த்தை பேசினால் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது, ஏனென்றால் அனைத்து கெட்டவார்த்தையையும் அவர் மட்டும்தான் பேசுவார்.
பாடங்களை முடிக்கவில்லை என்பதற்காக, பீட்டி வகுப்புகளை யாருக்கும் கொடுக்க மாட்டார். ‘’போன மாசம் எவனும் நல்லா விளையாடல, அதனால உங்க கிளாஸ தாங்கன்னா, உ கெமிஸ்ட்ரி வாத்தியான் தருவானால? பெற என்ன மயித்துக்கு அவனுக்கு நாங் குடுக்கனும்?’’ என்று கெத்தாக பேசக்கூடிய மனிதர். கெமிஸ்ட்ரி வாத்தியாருக்கு பீட்டி பிரியடை கொடுக்கமாட்டார் என்பதைத் தாண்டி, இவரை கொண்டாட ஒரு மாணவனுக்கு வேறு என்ன காரணம் வேண்டும். நாங்கலெல்லாம் கொண்டாடினோம் அந்த மனிதரை. மழைக் காலங்களில் கூட யாருக்கும் தன்னுடய கிளாஸை கொடுப்பதில்லை. மழை நாட்களில் கிளாஸ் ஈஸா தியான மண்டபமாக இருக்கும். நிறைய அட்வைஸ் கொடுப்பார், விளையாட்டு சம்பந்தமாக பேசுவார். ‘’ஒரு நாளைக்கு இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை படி, வருச கடைசில உனக்கு 365 வார்த்தை கிடைக்கும், அவ்வளவுதாம்ல இங்கிலீஷு’’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அப்படிக் கத்துக்கொண்டதுதான் ‘’ஏக் காவ்மே ஏக் கிஸான் ரெஹதாத்தா’’
அந்த ஸ்கூலில் பெரிய பேஸ்கட் பால் கிரவுண்ட் உண்டு. சேர்ந்த பல மாணவர்கள் அந்த கிரவுண்டைப் பார்த்து அதில் விளையாடுபவர்களைப் பார்த்து சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும். நான் உட்பட. 9ம் வகுப்பு சேந்த புதிதில் யார், யாருக்கு எந்த விளையாட்டில் இஷ்டம் என்று தெரிந்து கொண்டு, லிஸ்ட் எடுத்தார். கிளாஸில் எல்லோரையும் உயரப்படிதான் உட்கார வைப்பார்கள். 9டி கிளாஸில் முதல் பெஞ்சில் நான் இரண்டாவது ஆள், அப்போ நான் கொஞ்சம் குள்ளமா இருப்பேன் (“இப்பவரைக்கும் நீ அப்படித்தானடா இருக்க?”ங்குற உங்களோட மைண்ட் வாய்ஸ் கேட்சிங்). என்னவிட குள்ளமா இருந்தவன் பெயர் மகாராஜா. பேஸ்காட் பால் விளயாட கை தூக்கினான். ‘’எந்திச்சு நிக்க வக்கில்லாதவனுக்கு வப்பாட்டி வக வகயா கேக்குதாம்’’ன்னு சொல்ல, அவனைப் பார்த்து கை தூக்க நினைத்தவன் அப்படியே கையை இறக்கிவிட்டேன். என்னவென்றே தெரியாமல் வாலிபாலுக்கு பெயர் கொடுத்தேன்.
வாலிபாலுக்கு எங்கள் பள்ளியில் முன்பாகவும், பின்பாகவும் இரண்டு கிரவுண்ட் உண்டு. பின்னாடி இருக்கும் கிரவுண்டில் மேடைபோன்ற திண்டு இருக்கும். அதில் இருந்துதான் நாங்கள் விளையாடுவதைப் பார்ப்பார். அவர் வயிறு இருக்கும் சைசிற்கு, பத்து மீட்டருக்கு சுத்தி கீழே என்ன இருந்தாலும் தெரியாது. அந்த திண்டின் மீது ஏறினால் 100 மீட்டர் சுற்றளவிற்கு எதுவும் தெரியாது. ஒரு தடவ சுந்தர்ராஜன் என்பனை கூப்பிட்டார்.  கூப்பிட்டு முடிப்பற்குள் திண்டின் பக்கத்தில் போய்விட்டான். சாரோட வயிரு சுந்தர்ராஜனை மறைக்க, அவன் நிர்பது தெரியாமல், மறுபடியும் ‘’அந்த அருதலிய வரச் சொல்லுல’’ன்னு சொல்ல, நாங்க எல்லோரும் ‘’அவ கீழதான் சார் நிக்கான்’’ன்னு சொன்னோம். ‘’மூதி, கூப்புட்டா, கண்ணு முன்னாடி வந்து நிக்கனும், அதவுட்டுட்டு காலு முன்னாடி, பூ# (18+) முன்னாடி வந்து நிக்கக்கூடாது’’ என்ற செம்மதுர தமிழோசை இன்னும் காதில் தேனாக சொட்டுகிறது.
‘’காலும், கையும் நம்ம இடத்தில் இருந்தாலும், கண்ணு மட்டும் எதிரி இடத்தில் எப்போதும் இருக்கனும்’’, ‘’கண்ணு ஒருத்தன பார்க்கனும், ஆனா கை, மூளை சொல்லுறத கேட்டு பந்த இன்னொருத்தங்கிட்ட அனுப்பனும்’’.......என பல டெக்னிக் எல்லாம் சொல்லுத் தருவார். அதை எல்லாத்தையும் கேட்டுவிட்டு கரெக்டா தப்பு பண்ணுவோம். சுத்தி இருக்கும் எல்லா ஊர் ஸ்கூலுக்கும் கூட்டிப் போய் மேட்ச் ஆடவைப்பார். மூன்று பிரியட் பெர்மிஷன் கேட்டுச் சென்றாலும் முதல் பிரியட் முடிவதற்குள் அடிச்சு துவச்சு மீன்பாடி வண்டில ஏத்திவிட்டுருவானுங்க. தோத்துப் போன பின்னாடி சார் திட்டுவாரோன்னு பயந்து போய் நின்னா ‘’விடுங்கல, ஜெயிச்சிட்டா அதுல கத்துக்க ஒன்னு இருக்காது, தோல்விலதாம்ல நெறய பாடம் தெரிஞ்சிக்கலாம், அடுத்த வாரம் வடகர மேட்சுல பாத்துக்கலாம்’’ என ஆருதல் சொல்லுவார்.  மூனு நாளு கழித்து கூப்பிட விடுவார் ‘’மேட்சுப் %&$%@& யாடா விளையாண்டிங்க, சூப்பிப் போனவ %*&%#க்கு எண்ண தடவுன மாதிரி.....................’’ன்னு ‘’டோட்டல் பேமிலி டேமேஜ்’’ஆகுற மாதிரி அர்ச்சனை நடக்கும்
எந்த ஊரு மேட்ச்சுக்குப் போனாலும், சாப்பாடில் மட்டும் குறையே இருக்காது. ஆம்லேட் என்றால் டபுள் ஆம்லேட்தான், புரோட்டா என்றால் கொத்து புரோட்டாதான். ஒவ்வொரு ஸ்கூலும் காலாண்டு இடைவெளியில், இவ்வளவு போட்டி நடத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் போட்டி நடத்தாமலேயே அவர்களுக்குள்ளாகவே, நீங்க வின்னர், நீங்க ரன்னர் என முடிவெடுத்து கல்வி விளையாட்டுத் துறையில் இருந்து சர்டிபிக்கேட் வாங்கிவிடுவார்கள். அதை காலை பிரேயரில் வைத்து எல்லோரயும் கை தட்டச் சொல்லி கொடுப்பார்கள். அந்த மாதிரியான அசிங்கம் கலந்த ஆனந்தம் கூட  ஒரு விதமான அனுபவம்தான். எங்க பீட்டி சாருக்கு வாலிபாலை விட பேஸ்கட் பால் கேமில்தான் அதிக ஆர்வம். அவர்களுக்கு தனி கோச்சிங்க் எல்லாம் கொடுப்பார். இப்போது எப்படி என்று தெரியவில்லை, நான் படிக்கும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் பாஸ்கட் பால் ஸ்கூல் டீம் மொத்தம் பத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு டிஸ்டிக் லெவல் மேட்ச் எல்லாம் கிடைக்கும். அதுல நிறைய கப் வாங்கியிருக்கிறார்கள். வாலிபாலுக்கு எல்லாம் மேலே சொன்னா மாதிரி  ஏதாவது கிடைத்தால்தான் உண்டு. அவர் ரூமில் இருக்கும் கப்புகளை பார்க்கும் போது சொன்னார் “கப்பு வெயிட்டு கையோட நிக்கனும், தலைக்கு கொண்டு போனா, துதான் நம்ம கடைசி கப்பு”
வாலிபால் மேட்ச் என்றால் அதற்கு இரண்டு நாள் முன்பாக, ஸ்கூல் முடிந்தவுடன் சீனியருடனோ, அல்லது ஸ்டாப் டீம்வுடனோ பயிற்சி மேட்ச் நடக்கும். ஸ்டாப் டீமில் முருகன் சார்னு ஒருத்தர் இருந்தாரு. சத்தியராஜ் தோளில் ரகுவரன் ஏறி நின்றால் என்ன உயரம் இருக்குமோ அந்த உயரம். என்னோட உயரத்துக்கு நானெல்லாம் குறுக்கால கட்டியிருக்கும் நெட்டை டச் பண்ணாமலேயே அடுத்த கோர்ட்டிற்கு போய்விடுவேன். அவர்களோடு மேட்ச் ஆடச் சொல்லி கதற விடுவானுங்க. ‘’எத்தன பேருக்குள்ளது அத்துக்கிட்டு உருண்டு ஓடப்போகுதோ....’’ங்குற பீதிலேயே விளையாடுவோம். முருகன் சார் அவர் இருக்குற ஹைட்டுக்கு ஜம்ப் பண்ணி வேற அடிப்பாரு. 8000 கி.மீ ஸ்பீடுல பால் இறங்கும். அவரு ஜம்ப் பண்ண போறாருன்னு தெரிஞ்சுச்சுனாலே நாங்க கோர்ட்டுக்கு வெளியே போயிருவோம்.
என்னோட ஹைட்டுக்கு நான் ஒன்பதாவது வகுப்பில் இருந்து பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் வரை வாலிபால் ஜீனியர் டீமில்தான் விளையாடினேன். பனிரெண்டாவது படிக்கும் போது ஒன்பதாவது, பத்தாவது படிக்கிறவனுங்க கூட விளையாடனும். மேட்ச் எங்காவது போனால், நாயகம் சார் என்னை ஒன்பதாவது வகுப்பு மாணவன் என்றே பெயர் கொடுக்கச் சொல்லுவார். மற்றவர்களிடம் ‘’இவன ஒம்பதாப்புன்னு சொல்லித்தான் இறக்கியிருக்கேன், வெளயாடும் போது அண்ணே நொண்ணேன்னு கூப்பிட்டு என்னய மாட்டிவுட்டுராதியல’ன்னு சொல்லிவிடுவார். இதுதான் சந்தர்பம்னு, நேத்து வரை அண்ணன்னு கூப்பிட்ட பயலுக எல்லாம் ‘’எல’’, ‘’டேய்’’, ‘’மச்சி’’ன்னு கூப்பிட்டு வஞ்சம் தீர்ப்பானுங்க.
எங்களோட விளையாட்டு பீரியடுக்காக மற்ற வாத்தியார்களிடம் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாதவர். யாரும் இவர், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி வாத்தியார்களிடத்தில் பேசிப் பார்த்ததே இல்லை. தனக்கான இருக்கையை ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் ரூமிலேயே போட்டு அவர்களிடமிருந்து தனியாகவே இருந்தார். நான் காலேஜ் படிக்கும் போது எதேச்சயாக விளையாட்டு வாத்தியாருக்கு படித்த என் ஸ்கூல் சீனியரை சந்தித்தேன். விழுப்புரம் பக்கத்தில் வேலை கிடைத்தவுடன் நெல்லை நாயகத்தை சந்தித்தபோது அவர் சொல்லியதைச் சொன்னார். ‘’ரொம்ப சந்தோசண்டே, சில மயிராண்டிய வந்து ஒம்ம கிளாச தாரும் சிலபஸ் கவர் பண்ணனும்னு வருவான், எந்த கூ$#யானுக்கும் கொடுக்காத’’

வி மிஸ் யூ சார். 
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.