வெள்ளி, டிசம்பர் 29, 2017

விவேகம் அட்ராசிட்டீஸ்.


இந்த படத்த பாக்குறதுக்கு முன்னாடி நான் அஜித்தின் ‘’தீவிர ரசிகன்’’னா இருந்தேன். இப்ப தீ போயி ‘’விர ரசிகனா’’ இருக்கேன் (எஸ், அந்த பயர் போயிருச்சு). இது பரவாயில்ல, அஞ்சிநேயா, ஜி, ஜனா.....ன்னு ஒரு காலம் இருந்துச்சு. அப்பெல்லாம் தீ, வி, ர என எல்லாம் போயி ‘’கன்’’ மட்டும் இருந்துச்சு. சுப்ரமணிய புரம் சித்தன் மாதிரி ஏதாவது கோவில் திருவிழா காண்ராக்ட் கெடக்காதான்னு தலயில துண்டு போட்டு காத்துக்கிட்டு இருந்தோம். வரலாறுன்னு ஒரு படம் வந்த பின்னாடி மறுபடியும் தீவிர ரசிகனா மீண்டு எழுந்தோம்.
எனக்கு, அஜித்தோட எல்லா படத்தையும் முதல் நாளே பாக்குறது வழக்கம் ஆழ்வார், அசல் பார்த்தபின்னாடி கூட அந்த எண்ணம் மாறல. விவேகம் படம் வருவதற்கு முன்னாடியே படம் ஹாலிவுட் ரேஜ்சுக்கு இருக்கும், தல அப்படி பண்ணியிருக்காரு, இப்படி பிண்ணியிருக்காருன்னு ரொம்ப ஓவரா ஊசுப்புனாய்ங்க. அடுத்து அனிரூத் ‘’சர்வேவா’’ பாடலை ரிலீஸ் பண்ணவுடனே ஒட்டுமொத்த தமிழ்நாடும் ‘’வ்வ்வ்வாவ் வாட்ட சாங்க்’’ன்னு சொல்லுச்சு. ஆனா எனக்கு ‘’**த்தா என்னடா சாங்கு இது’’ன்னு தோனுச்சு, அவ்வளவு இரச்சல். ஆனா அத வெளிய சொன்னா, சுத்தியிருக்குற எஸ்.பி.பி, ஜேசுதாஸ்கள் ‘’போடா, ஞான சூனியம்’’னு சொல்லுவானுங்க, எதுக்கு வம்புன்னு இருந்துட்டேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அஞ்சாநேயாவுக்கு ஒரு டஃப் கொடுக்கப் போறாய்ங்கன்னு.
விவேகம் வந்த முதல் நாள், ரோட்டுல ஒருத்தன நாலு பேரு அடிக்கும் போது, அந்த வழியில போறவ, வாறவ எல்லாம் சைக்கிள நிப்பாட்டிட்டு வந்து அடிச்சிட்டுப் போறமாதிரி சோசியல் மீடியாவுல ஒன்னு கூடிட்டானுங்க. ‘’நான் அஜித் ரசிகன் இல்ல, அஜித்த புடிக்கும் அவ்வளவுதான்’’ அப்படின்னு சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தேன். அதெல்லாம் கெடயாது ‘’பச்ச சட்ட போட்ட அடிப்போன்’’னு உறுதி மொழி எடுத்துட்டு வந்து கும்முனானுங்க. பதிலுக்கு நம்ம ஜாதிக்காரனுங்க புளு சட்ட, சாரு நிவேதிதான்னு ஓட்டர் லிஸ்டுல இருந்து பேர எடுத்து வன்முறை வெறியாட்டம் நடத்துனானுங்க.
படம் ரீலிஸாகி ரெண்டு வாரம் கழிச்சு, தஞ்சாவூருக்கு ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன். நண்பர் எதார்த்தமா ‘’நைட்டு படத்துக்கு போகலாமா?’’ ன்னு கேட்க, நானும் பதார்த்தமா ‘’விவேகத்துக்கு போகலாம்’’னு சொன்னேன்.  அவருக்கு ‘’ஏண்டா கேட்டோம்’’னு ஆயிடுச்சு பாவம். நைட்டு சாப்பிடும் போது நண்பரோட அம்மா, ‘’கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ ‘’படத்துக்கு வேற போற, கூட ரெண்டு சப்பாத்திச்ச் வச்சுக்கப்பா’’ன்னு மருக்கா மருக்கா சொல்லுச்சு. அதுக்கு அர்த்தம் அப்ப புரியல, படம் பார்த்த பின்னாடிதான் புரிஞ்சுது. ‘’அடி வாங்குறதுக்கு உடம்புல தெம்பு வேணாமா’’ன்னு நேரடியா சொல்லி இருந்தா, கூட ரெண்டு இல்ல நாலு சப்பாத்தி சாப்பிட்டுருப்பேன். என்னா அடி.
படம் வந்து ரெண்டு வாரமாகியிருந்தாலும் ஓரளவு கூட்டம் இருந்துச்சு. தியேட்டர சுத்தி தீனா குமார், பில்லா பாலா, வரலாறு வசந்த்...........ன்னு கொஞ்சப்பேரு பேனர், பிளக்ஸ் எல்லாம் வச்சிருந்தானுங்க. ஒரு லொல்லு சபா எபிசோட்டில், எம்.ஜி.ஆர் டபுள் ஆக்ட் படத்தில் ஒரு எம்.ஜி.ஆரா சந்தானமும், இன்னொரு எம்.ஜி.ஆரா மண்ட மனோகரையும் போட்டு, இவங்க ரெண்டு பேரும் ரெட்டப் பிறவி, பாக்குறதுக்கு ஒன்னுபோல இருப்பாங்கன்னு சொல்லியிருப்பானுங்க. அதுமாதிரி பிளக்ஸ்ல இது அஜித்தா இல்ல அவர் ரசிகர் விவேகம் வினோத்தான்னு சந்தேகம் வர்ர மாதிரி ரெண்டு பேரும் ராணுவ யூனிபார்மில் போஸ் கொடுத்திருந்தாங்க. படத்தப் பார்த்த பின்னாடியும், எப்படி அந்த பிளக்ஸ கழட்டாம இருக்கான்னு? எனக்கு ஒரே அசுவையா இருந்துச்சு.
தியேட்டருக்குள்ள போனவுடனே தேசிய கீதம் போட்டானுங்க. எழுந்து நின்ன என்னப் பார்த்து ‘’எழுந்து நிக்கனுமா என்ன?’’ன்னு நண்பர் கேட்டார். ‘’சிவான்னு பேரு வச்சவங்களுக்கு எப்படின்னு தெரியல, ஆனா முஹம்மது யாசிர்னு பேர வச்சிக்கிட்டு நான் உக்கார்ந்திருக்க முடியாதுன்னு’’ சொல்லிட்டேன்.
இங்கிலீஷ் படமாட்டம் இருக்குன்னு எந்த அடிப்படையில சொன்னானுங்கன்னு தெரியல. அத நம்பி நாலு ‘’சீன்’’னாவது இருக்கும்னு நம்பி போனேன். ‘’ச்சீ’’ன்னு ஆயிடுச்சு. ஹாலிவுட் படத்துல ஹீரோ கோர்ட் சூட் போட்டு கவர் பண்ணி வருவாரு, ஹீரோயின் அவர கவர் பண்ணுறமாதிரி டிரஸ் போட்டுக்கிட்டுவரும். ஆனா, இந்த படத்துல அது உல்டா. கடைசி பைட்டுல அஜித் கழட்டி நிக்குறாரு, காஜல் அகர்வல் கழண்டு போய் நின்னுச்சு. ஒரு முத்த சீன், பயங்கர எதிர்பார்ப்போட இருந்தேன், தல அந்தப்புள்ள நெத்தியில முத்தம் கொடுத்து மொத்தத்தையும் கெடுத்துட்டாரு.
படத்துல ஹீரோ பஞ்ச் பேசலாம் தப்பில்ல, ஆனா பேசுறது எல்லாம் பஞ்சா இருந்தா எப்படி தாங்கிக்குறது?. அதுவும் ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு படத்துக்கு வர்ற கதி என்னவாகும்?னு எவனாவது யோசிக்கிறானா?. காஜல் கூட ‘’வாழ்க்கன்னா என்ன தெரியுமா?’’, ‘’குடும்பம்னா என்ன தெரியுமா?’’ ‘’குடும்ப கட்டுப்பாடுன்னா என்னன்னு தெரியுமா?’’ந்னு பாடம் எடுக்குது. ஒரு கட்டத்துல சுகி சிவம் நிகழ்ச்சிக்கு எதுவும் வந்திட்டமோன்னு டவுட் வந்திரிருச்சு. படத்துல ஒரே ஒரு ஆருதல் அக்ஷரா ஹாசன் தான். அது எப்படியோ டைரக்டருக்கு தெரிஞ்சு போச்சு, இண்டெர்வெல்லேயே அந்த கேரக்டர் சோலிய முடிச்சிட்டானுங்க.    
மற்ற படத்துலயெல்லாம், கதையை எழுதிட்டுத்தான் வசனம் எழுதுவானுங்க. இந்த படத்துல வசனம் எழுதிட்டு கதை எழுதியிருக்கானுங்க போல. வசனம் எல்லாம், டி.வி விவாத நிகழ்ச்சிகள்ல பி.ஜே.பிக்காரனுங்க பதில் சொல்லுற மாதிரியே ‘’இத எதுக்குடா இப்ப சொல்லுறானுங்க’’ந்னு இருந்துச்சு. அதுவும் கன் பாயிட்டுல 500 வெளிநாட்டு போலிஸ்கிட்ட மாட்டுனதுக்கு பின்னால ‘’இந்த உலகமே உன்ன பெயில் ஆயிட்டன்னு சொன்னாலும் நீ ரி வேலுவேசன் போட்டு பாஸாகுற வரக்கும் நெவர் எவர் கிவ் அப்’’ந்னு தமிழ்ல வசனம் பேசுவாரு.  அவனுங்க டிக்ஸ்னரி எடுத்து அர்த்தம் பாக்குற கேப்புல இவர் பெரிய்ய்ய்ய்ய பாலத்துல இருந்து குதிச்சுருவாரு. கலகலப்பு படத்துல வர்றமாதிரி ‘’இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு?’’ந்னு ஒருத்தன கேட்டேன். ‘’முதல்ல நானும் நம்பல, ஆனா இத நம்புனாத்தான் அஜித் ரசிகன்னு சொன்னாங்க, அதனால நானும் நம்பிட்டேன்’’னு சொன்னான். ‘’வாவ் வாட்ட ஜம்ப்’’ந்னு நானும் ஜம்ப் அடிச்சுட்டேன்.
பரபரப்பா வேல பாக்குறோம்ங்குற பேர்ல விவேக் ஓபராய் கும்பல் கத்துறத நிருத்துன உடனே, பேக் ரவுண்ட் மியூசிக்னு கதறவுடுரானுங்க. ‘’உங்க தம்பி பசுபதி நம்ம டீச்சர வச்சிருக்காருங்க’’ந்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள கவுண்டர் காதுல ‘’குய்ய்ய்ய்ய்’’ந்னு ஒரு சவுண்ட் வருமே அதே சவுண்டு கொஞ்சம் A+ ரத்தத்தோட சேர்ந்து வந்துச்சு. ஐஸ்வர்யா ராய உசார் பண்ணி வச்சிருந்த விவேக் ஓபராயா இப்படி ? ரொம்ப டெலிகேட் பொசிசன்.
படம் முடிஞ்சுதேன்னு எல்லோரும் ஒருவழியா வெளிய வந்தானுங்க, நான் மட்டும் ஒரே (உடல்) வலியா வந்தேன். அஜித்துக்கு அடுத்த படமும் சிவா கூடத்தானாம், இவனுங்க மறுபடியும் நம்மள ‘’கன்’’ல கொண்டுவந்து நிப்பாட்டாம அடங்கமாட்டானுங்க போலிருக்கு.
வெயிட்டிங் பார் விஸ்வாசம்
---------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

3 கருத்துகள்:

  1. அஜித்தை பழிவாங்கனும் என்று நாடி நரம்பு மற்றும் ரத்த நாளங்களில் வெறிபிடித்த ஒருவனால்தான் இப்படி எல்லாம் படம் எடுக்க முடியும் அப்படி எடுத்தும் அஜித் அவரோட அடுத்த படத்துல நடிக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு தைரியம் மிக அதிகம்தான்

    பதிலளிநீக்கு
  2. //சிவான்னு பேரு வச்சவங்களுக்கு எப்படின்னு தெரியல, ஆனா முஹம்மது யாசிர்னு பேர வச்சிக்கிட்டு நான் உக்கார்ந்திருக்க முடியாதுன்னு//

    நெத்தி அடி...

    //வெயிட்டிங் பார் விஸ்வாசம்//

    அடியேன் பேரை வைச்சி ஒரு படம். நல்லாத்தான் இருக்குங்குறேன்,

    இதெல்லாம் இருக்கட்டும்.. உங்களை யாரு சினிமா எல்லாம் பாக்க சொல்ற? என்னை போல ஓதுகிடுங்க.

    பதிலளிநீக்கு
  3. ji naaalu maasam gap lam romba jaasthi...neraya yeluthunga

    பதிலளிநீக்கு