நான் சிவில் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்.கலேஜில் படிக்கும் போது கூட
எனக்கு ச்சீ ஏன் தான் இந்த டிப்பர்ட்மென்டை எடுத்தமோன்னு நினைத்தது இல்ல ஏன்னா
எங்க செட்டுல மொத்தமே 33 பேருதான் (அதுலயும் ரெண்டு கோஷ்டி இருந்தது அது
தனி)பெரும்பாலும் நாங்க சேர்ந்துதான் இருப்போம்.படிப்பு முடிந்தவுடன் எனக்கு
பெங்களூரில் வேலை கிடைத்தது மற்றவர்களுக்கு சென்னையிலையே வேலை. சென்னை பசங்க
எல்லோரும் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தான் தங்கியிருந்தாங்க.ஞாயிற்றுக்கிழமையில
ஒரு கெட் டுகதர் இருக்கும், என்னால அதுல கலந்துக்க முடியாதனால நான் அப்போ அப்போ
போன் பண்ணி எந்த வாரம் யார் வந்தா யார் வரலை, என்ன விஷயம் நடந்ததுன்னு எல்லாம் கேட்டு அப்டேட் செய்துகொள்வேன். இந்த
மாதிரியான ஒரு ஞாயிற்றுக்கிழமயில் என் நண்பர்களை எங்கள் சக டிப்பார்ட்டுமென்ட்
நண்பன் பார்க்க நேர்ந்தது. "டேய்..... இன்னும்மாடா
ஒன்னா சேர்ந்து இருக்கேங்க..."னு அவன் சொன்னதா என் நண்பன் சொன்னத கேட்டு
ரொம்ப பெருமையா இருக்கும்.
எங்க டிப்பார்ட்மென்ட் தான் மத்த டிப்பார்ட்மென்டை விட மாணவர்கள் மிகவும்
குறைவு, மத்த டிப்பர்ட்மென்ட்ல குறைந்தது 60 டு 70 பேர் இருப்பங்க. அப்படி குறைவா இருந்ததாலத்தானோ என்னவோ எஙகளுக்குள்ள அதிக ஒற்றுமை இருந்தது, அதுக்கு நாங்க ரொம்ப சந்தோசப்பட்டோம் ஒரே ஒரு விசயத்த தவிற.
அது தான் ஸ்போர்ட்ஸ். பல விளையாட்டு வகுப்பறையில விளயாடிருக்கோம் ஆனா.....
மைதானத்துல.... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டோம். விளயட்டுப்போட்டி
ஆரம்ப நாள் அன்னைக்கு கொடி பிடிச்சுட்டு நடக்கும் தலைவருக்கு பின்னாடி போரதுக்கு
கூட 10 பேர் கிடைக்கமட்டானுங்க. புட்பால், வாலிபால், பேஸ்கட் பால், கிரிக்கெட், ........ இப்படி பல விளையாட்டு இருந்தாலும் எங்கள்ள 10 டு 15 பேர்தான் (முதல் வருடம் டு கடைசி வருடம் வரை
சேர்த்து) எல்லாத்தயும் விளையாடுவார்கள். ஒரே நேரத்துல இரண்டு மேட்ச்
வந்துருச்சுன்னா அவ்வளவு தான் ஆள் பற்றாக்குறையினால எதிரணி விளையாடாமலே வெற்றின்னு
அறிவிப்பாகிவிடும். விளையான்டு தோக்குரதுக்கு இது எவ்வளவோ மேலுன்னு நீங்க
நினைப்பது புரிகிரது. சரி விளையாடுற பசங்களாவது நல்ல விளையாடுவனுங்கனு பார்த்தா
அதுவும் கிடையாது, புட்பாலுக்கு போய் ஸ்டம்ப் எங்கன்னு கேப்போம்.
இது என்ன பிரமாதம் எங்க கிரிக்கெட் டீம்முக்கு ஓப்பனிங் பவுலரே நான் தான்னா
பாருங்களேன். ஒரு ஓவர 11,12 ...... பால் வீசி
ரெக்கார்ட் வச்சிருக்கேன், அத இன்னைக்கி வரைக்கும் எவனும் ப்பிரேக் பன்னினது
இல்ல. ஒரு ஓவர ரொம்ப ஓவரா போட்டது நானாகத்தான் இருக்கும்.
சனிக்கிழமைனா ப்பிரி நைட், அதாவது 12 மணிவரைக்கும் வெளியில சுத்தலாம், இப்படியான ஒரு சனிக்கிழமையில சினிமாவுக்கு போயிட்டு, சாப்பாடு எல்லாம் முடிஞ்சு காலேஜுக்கு பஸ்சுல ஏறி (ஒரு 14 பேர் இருக்கும்) டிக்கெட்டு எல்லாம் எடுத்தாச்சு, ஜன்னல் ஓரமா இருந்த விமல் டிக்கெட்ட என்னுறன்னு சொல்லி
எண்ணுர சமயத்துல காத்துல்ல ஒரு டிக்கெட்ட விட்டுட்டான், சரி பசங்கள சமலிக்கனுமேனு "12 மணிக்கு யாருடா வந்து டிக்கெட் செக் பன்னப்
போறான்னான்" உடனே கணேசன் அப்படின்னா இது மட்டும் எதுக்குன்னு மத்தா 13 டிக்கெட்டயும் காத்துல் பறக்க விட, காமெடியா பேசி சிரிச்சுக்கிடே வந்தா அடுத்த ஸ்டாப்புல
செக்கர் ஏறிட்டாரு, நல்ல வேல அவரு முன் பாதை வழியா வந்தாரு. பஸ்ஸுல
யாருக்கும் அல்லே இல்ல. என்ன செய்யுரதுன்னு யாருக்கும் ஒன்னும் ஓடல, இந்த சமயத்துல அடுத்த நிறுத்த்ம் வர செக்கருக்கு தெரியாம
என்ன விட்டுட்டு மற்றவர்கள் எல்லாரும் ஓட ஆரம்ப்த்து விட்டார்கள். என் நேரம்
வரவும் அவரிடம் 'ஸார் டிக்கெட் காத்துல பற்ந்திடுச்சுன்னு சொல்ல, என் காலேஜ் புண்ணியத்துல்ல 10ரூ மட்டும் பைன் போட்டு கலேஜ் ஸ்டாப்புல இறக்கிவிட்டுட்டாறு. பஸ் ஸ்டாப்பிலயே
ஒரு 1 மணி வரை நண்பர்களுக்காக நின்னா யாரை காணோம், நமக்கு பின்னாடி நம்ம நண்பன் தான் வர்ரானு கூட தெரியாம, செக்கர் தான் துரத்திக்கிட்டு வர்ராருன்னு திரிப்பி பாக்காம
இருட்டுக்குல்ல ஒரே ஓட்டம். வாழ்க்கயோட எல்லைக்கே ஓடிட்டனுங்க. பின்னாடி ஒவ்வொருத்தனா
வந்து கூடி ஹாஸ்டலுகு நடந்த்து இருட்டுல போகுர சமயத்துல ஒரு சாக்கட நாத்தம், முனங்கல் வேர, என்னனு பார்த்தா ஒருத்தன் சாக்கடையில விழுந்து எந்திச்சு விந்திருக்கான்
பாவம்.
இப்போ எங்கள்ள பல பேருக்கு திருமணமாகி வேர வேர இடத்துல இருந்தாலும் இன்னும்
தொலைபேசில தொடர்பு அதிகம் உள்ளது. சம்பர்தாயத்துக்கு பேசுர மாதிரி எல்லாம் இல்லாம, நீ எப்படி இருக்க, அவன் என்ன செய்யுரான்... அவன்கிட்ட அன்னைக்கு பேசினேன் உன்ன பத்தி கேட்டான்...
இப்படி எல்லோரயும் பத்தி பேசுரது, யாரயும்
யாரும் மறக்கலங்கிரத மட்டும் தெரியப்படுத்திக்கிட்டே இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக