நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
சோனியா காந்தி ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு மாணவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதித்திருந்தார். அதன்படி மாணவர்கள் தத்தம்
கேள்விகளுடன் தயாராகி இருந்தனர். சோனியா சொன்னபடி துள்ளியமாக சொன்ன
நேரத்திலிருந்து தாமதமாக வந்தார்.
சோனியா : உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் பெருமகிழ்சியடைகின்றேன்,
அத்துடன் உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு
நன்றி கூறுகின்றேன். உங்களது கேள்விகளை நீங்கள் கேட்களாம்.
பாபர் : எனக்கு 3 கேள்விகள் உள்ளன, அதற்கு உங்களது பதிலை அறிய
ஆசைப்படுகின்றேன்.
கேள்வி 1. இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அதிக அளவில் நடந்தும்,
இந்திய அரசாங்கம் அதற்கு ஆதரவாக லோக்பால் மசோதாவை இன்னும் நிறைவேற்றாதது ஏன்?
கேள்வி 2. இந்தியாவில் விவசாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, அதனை
மேம்படுத்த இதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
கேள்வி 3. வருமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு சோற்றுக்குப் பதிலாக,
செல்போன் வழங்குவதால் என்ன லாபம்? யாருக்கு லாபம்?
ட்ட்ரீங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் (ரீசர்ஸ் பெல் அடிக்கின்றது)
சோனியா : ஓஹோவ்................. ரீசர்ஸ் பெல் அடிச்சிடுச்சே. சரி எல்லோரும்
வெளியே போய்விட்டு வந்தவுடன் நம்ம நிகழ்ச்சி மறுபடியும் தொடரும்.
15 நிமிடம் கழித்து மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது.
சோனியா : ஓகே, நீங்கள் கேட்கும் கேள்விகளை கேட்களாம். அடுத்து யாரு?
ராமன் : எனக்கு 5 கேள்விகள் உள்ளன, அதற்கு உங்களது பதிலை அறிய
ஆசைப்படுகின்றேன்.
கேள்வி 1. இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அதிக அளவில் நடந்தும்,
இந்திய அரசாங்கம் அதற்கு ஆதரவாக லோக்பால் மசோதாவை இன்னும் நிறைவேற்றாதது ஏன்?
கேள்வி 2. இந்தியாவில் விவசாயம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, அதனை
மேம்படுத்த இதுவரை நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
கேள்வி 3. வருமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு சோற்றுக்குப் பதிலாக,
செல்போன் வழங்குவதால் என்ன லாபம்? யாருக்கு லாபம்?
கேள்வி 4. எப்போதும் அடிக்கும் ரீசர்ஸ் பெல் ஏன் இன்று அரை மணி நேரத்திற்கு
முன்பாகவே அடித்தது?
கேள்வி 5. முன்பு உங்களிடம் கேள்வி கேட்ட என் நண்பன் பாபர் இப்போது எங்கே?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக