நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஒருவனுக்கு எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்பம் அமைவதில்லை. சந்தர்பம் தான் அதிஷ்டம், என்ற பெயரில் சிலரால் அழைக்கப்படுகின்றது. சந்தர்பம் கிடைத்துவிட்டால் போதும், என் திறமைகளை வெளிப்படுத்தி நான் வாழ்வில் வெற்றிபெற்றுவிடுவேன் என்று நம்மில் பலர் கூறுவதுண்டு. ஆனால் அந்த சந்தர்பத்தினை அமைத்துக்கொள்ள அனைவருக்கும் துணிவு வேண்டும். எதற்கும் துணிந்தால் தான் சந்தர்பத்தினை ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்பது நான் சொல்லதில்லை கவிஞர் கண்ணாதசனே சொன்னது. அவருடைய வாழ்க்கயில், அவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவர, திருச்சியை நோக்கி அவர் ஊரைவிட்டு ஓடிவந்தது கூட துணிவே.
அமிரகத்தினை பொருத்தவரை, இந்தியர்களில் அதிகமாக சுயதொழில் செய்பவர்கள், மலையாளிகள் தான். அதற்கு காரணம் அவர்களின் துணிவு. நமக்கே ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என்று தோன்றினால் நாம் முதலில் யோசிப்பது, எவ்வளவு முடக்கம் செய்யவேண்டும், மாதம் மாதம் எவ்வளவு திரும்ப கிடைக்கும், இருக்குற காச இதுல போட்டுட்டா வீட்டுக்கு எப்படி இந்தமாதம் செலவுக்கு காசு அனுப்புவது.... இப்படியான ஒரு சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.
எனது உறவினர் இங்கு ஒரு கட்டிடத்தின், செக்கியூரிட்டியாக இருக்கின்றார். அவருடன் ஒரு மலையாளியும் வேலை செய்கின்றார்கள். அன்று எனது உறவினருக்கு மாலை சிப்ட் வேலை என்பதால் காலையில் சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அப்போதும் அவர் பணியில் இருந்தார், நான் கேட்டேன் ‘இன்று காலை அந்த மலையாளியின் டுடி தானே, நீங்கள் இருக்கின்றீர்கள்?’ என்று. அதற்கு அவர் சொன்னது ‘இன்று அவன், அவனுடைய கடை திறப்பு விழாவிற்கு சென்றிருகின்றான் அதனால் அவனுடைய டுடியை நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்’ என்றார். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆம், கிட்டத்தட்ட அவன் அமிரகம் வந்து 4 வருடங்கள் தான் இருக்கும். அவனுடைய சம்பளம் எனது உறவினரின் சம்பளம் அளவுதான்.
‘எப்படி மச்சான்?’ என்று எனது உறவுகாரரிடம் கேட்டேன். அப்போது அவர் சொன்ன ஒரே வார்த்தை ‘துணிவு’தான். மேலும் அவர் சொன்னார், ‘தமிழனுக்கும், மலையாளிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு, தமிழன் வியாபாரம் ஆரம்பிக்கும் போது நஷ்டப்பட்டுவிட்டால் என்ன செய்வது? என்று யோசிப்பான், ஆனால் அதே மலையாளி, வியாபாரத்தில் வரும் லாபத்தினைக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிப்பான்’.
மலையாளிகளைப் பொருத்தவரை, இங்கிருந்து செல்லும் பணம் எல்லாம் அவர்களின் சேமிப்புதான். தினசரி வீட்டு செலவிற்கு அவர்களின் கைத்தொழில் அல்லது ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் கொண்டு ஓட்டிவிடுவார்கள். நமக்கு அப்படி இல்லை, 20,000 அனுப்பினாலும் அடுத்தமாதம் கொஞ்சம் சேர்த்து அனுப்புபா என்று 25,000க்கான கணக்கு காண்பிப்பார்கள். இந்த மாதிரி இருந்தா நமக்கு எப்படி துணிவு வரும்?.
எனது திருமணத்திற்காக என்னுடைய நண்பர்களை, தொலைபேசியில் அழைக்கும் போது, என்னிடம் அனைவரும் கேட்கும் கேள்வி ‘மச்சி, கல்யாணம் முடிந்த பின்னாடி என்ன செய்யப் போற?’ ‘இந்தியாவில் செட்டிலாகப் போறியா? இல்ல, மீண்டும் துபைதானா?, .......... இப்படியான பல கேள்விக்ளுக்கு மவுனம் மட்டுமே எனது பதிலாக இருக்கும். இல்லன்னா ‘இன்னும் முடிவுபண்னலடா, என்கிற பதிலாகத்தான் இருக்கும். ஆனால் என் பதிலுக்கு அர்த்தம் என்னவோ, இன்னும் துணிவு/தைரியம் வரவில்லை என்பதுதான்.
எங்க ஊருக்குன்னு ஒரு வலைதளம் உண்டு, அதில் துபை கணவனுக்கு அங்குள்ள மனைவிகள் எழுதுவது போல கவிதைகள், விடுமுறை கழித்து விட்டு துபைக்கு வருபர்களின் மனநிலை பற்றிய கட்டுரைகள், 40 வருடம் துபையில் இருந்தவரின் வாழ்க்கை வரலாறுன்னு போட்டு வண்டி, வண்டியா எங்கிட்ட இருந்து வாயத்தான் வாங்குவானுங்க. இத FACEBOOK ல வேற போஸ்டு பண்ணுறது, அத ஒரு 100 பேரு லைக் பண்ணுறதுன்னு ஒரே அலப்பரையா இருக்கும். சரி இத பார்து துணிந்து எவனாவது ஊருக்கு போயிருக்கானான்னு பார்த்தா எவனும் கிடையாது. ஒன்லி போஸ்டிங்க், லைக்கிங்க் தான். அந்த வலைதளத்தில் ‘வாருங்கள் துபை நண்பர்களே, உள்ளூரில் வியாபாரம் தொடங்க, ஏஜென்சி எடுக்கன்னு எந்த விளம்பரமும் வராது, மாறாக, குவைத்துக்கு ஆட்கள் தேவை, சவுதிக்கு இஞ்சினியர் தேவை தான் வரும். திருந்துங்க பாஸ்!!!!!!!!!!
துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தைன்னு வசனமெல்லாம் பேசுவதற்கு நல்லாத்தான் இருக்கு, ஆனா..................................................
-------------------------------------------விடியும் புத்தாண்டு அனைவருக்கும், துணிவை கொடுக்கும் ஆண்டாக அமைய பிராத்தனை செய்தவனாக----யாஸிர்.