வியாழன், ஆகஸ்ட் 25, 2011

தூக்கம் வராத இரவு.

இது புனித ரமலான் மாதம் என்பதால் இங்கு (யு.ஏ.இ) அனைத்து கம்பெனிகளுக்கும் பணிநேரம் குறைவாக இருக்கும். எனக்கு மற்ற நாட்களில் பொதுவாக காலை 7 மணி முதல் மாலை 6 வரை இருக்கும், இந்த மாதத்தில் மட்டும் மாலையில் 3 மணிவரைவாக்கில் முடிந்துவிடும். நோன்பு திறக்க 7 மணிவரை ஆகும் என்பதால் ஒரு குட்டி தூக்கம் தூங்குவதுன்டு, அப்படி தூங்குவதால் இரவில் என்னதான் புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. இந்த மாதிரியான் ஒரு இரவில் சுமார் 1 மணிக்கு, தூக்கம் வருகிர வரை ஏதாவது புத்தகம் படிக்கலாம்னு எண்ணி, தூங்கிய நல்லுள்ளம் கொண்ட நண்பர்களை தொந்தரவு செய்யாமல், புத்தக குவியலில் இருந்து கைக்கு கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். அது அந்த வார ஆனந்த விகடன், எந்த பக்கத்தை திருப்பினாலும், திரும்பி நின்னு போஸ் கொடுக்குற நடிகைகள் போட்டோ தான்.

ரமலான் மாதத்தில் நான் ரொம்ப ஸ்டிரிக்டு, ஸ்டிரிக்டுன்னு எல்லா நடிகைகிட்டயும் சொல்லி, ஏரெடுத்துக் கூட பாக்காம பக்கத்தை மாத்தி, மாத்தி புரட்ட ஆரம்பித்தேன் (நல்ல வேளையாக நமிதா படம் ஏதும் இல்லாமல் இருந்து என் விரதம் காப்பாற்றப்பட்டது).

ஆ.வி யில் பெண்களுக்கான இடை ஒதுக்கீடு, ச்சீ, இட ஒதுக்கீடு 75%க்கும் மேல். ஆம்புள பயலுகல தேடிதான் புடிக்கவேண்டியிருக்கு. இருந்த 4 ஆம்புல பயலுங்கள்ள, காஞ்சனா விமர்சனத்துல லாரன்ஸ் பெண்வேஷத்துல வேற.....ஆன ஒரு ஆச்சர்யம், ஆணான லாரன்ஸ சேலயில போட்டவனுங்க, மறந்து கூட பெண்களுக்கு சேலயில இருக்கிரமாதிரி ஒரு போட்டா கூட போடல. இதுல ஒரு பெண் பனியனோட வேற இருந்தது,  நோன்பு நேரம் என்பதால் என்ன கம்பெனி பனியன்னு கூட பார்க்காம பக்கத்தை திருப்ப ஆரம்பித்துவிட்டேன்.

கவிஞர் வைரமுத்து இந்த வாரத்தில் இருந்து எழுத ஆரம்ப்த்திருக்கும் மூன்றாம் உலகப் போரை, ஆரம்பித்து ஒரு பக்கம் படிக்கிரதுக்குள்ள பெரிய அக்கப் போராகிப் போச்சு. அதவிட்டு விட்டு அடுத்த பக்கங்களுக்கு போனால் "சந்தி சிரிக்கும் இந்திய மானம்" என்ற தலைப்பை பார்த்ததும், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிகெட் அணி பற்றிய கட்டுரையோ என்று நினைத்தால், பக்கத்தில் ஒரு போட்டாவுடன் கூடிய டிசைன் கண்டு ஆடிப்போனேன். அது ஒரு கருப்பு மைய்யாலான ஆணின் கை, ஒரு பெண்ணின் பிறப்புருப்பில் தொட்டிருப்பது போல. சரி எவர் மக்களுக்கு ஏதோ சொல்ல நினைக்குறாருன்னு எண்ணி படிக்க ஆரம்பித்தேன்.

இது நம் இந்திய ராணுவத்தின் பாலியல் வன்முறை பற்றியதாக இருந்தது. 2003ல் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள, காங்கோ என்ற நாட்டி ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தை ஒடுக்கும் பொருட்டு, 3896 பேர் கொண்ட அமைதிப் படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் போன வேலையை விட்டு விட்டு, அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வேலியே பயிரை மேய்ந்தது போலானது. இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னறே கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகத்திற்கு கசியத் தொடங்கியபோது, இதனை அடியோடு மறுத்த இந்திய ராணுவமும் சரி, இந்திய அரசும் சரி, இப்போது அதனுடைய நன்பகத்தன்மையை அறிந்து விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற விசரனைகள் நியாயமான முறையில் நடைபெருவதில்லை என்பது தான் வருத்தமான செய்தி. கடந்த 10 ஆண்டுகளில் ராணுவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த மாதிரியான வழக்குகளில் 95% உண்மைக்கு மாறனதுன்னு தீர்ப்பகியுள்ளதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

இந்த கேடுகெட்ட சம்பவம் காங்கோவில் மட்டுமல்லாது நம்முடைய எல்லையோர மாநிலங்களில் கூட நடந்துகொண்டு தான் இருக்கின்றதாம். இது போன்ற செயலால் பாதிக்கப்பட்டு, அதற்காக போரடு உயிர் நீத்த மனோரமா என்ற மணிப்பூர் பெண் பற்றியும் எழுதியிருந்தார் அந்த எழுத்தாளர்.

பொதுவா நான் எப்போதும் ஒரு விஷயத்தை படித்தால், அதோடு சரி எழுதியத்ய் யார் என்று எல்லாம் படிப்பது இல்லை. ஆனால் ஏனோ இவரைப் பாராட்டியே ஆக வேண்டிய கட்டாயம். நன்றி திரு. சமஸ்.

ராஜிவ் காந்தியின் படுகொலைப் பற்றி பேசுகின்ற நம்மில் பலர், அவரால் அனுப்பிவைக்கப்பட்ட அமைதிப்படை வீரர்கள் செய்த இது போன்ற மன்னிக்க இயலா காரியத்தை செய்ததயும் மறந்து விட முடியாது. அனுப்பிவர்களில் பாதிபேரை இழ்ந்து நாடு திரும்பிய வீரர்களுடன் வெற்றி விழா கொண்டடிய நம்மை என்னன்னு சொல்ல. அந்த வெற்றிக்குத்தானோ பிரபாகரன் மனித வெடிகுண்டுகள் மூலமாக பரிசு கொடுத்தார்? என்று எல்லாம் யோசனை தோன்றுகிறது.

ஆப்கான், ஈராக் நாடுகளில் இந்த நாசகாரியங்கள் அமெரிக்கப் படையின்ரால் அரங்கேருவது, அதை வீடியோவாக எடுத்து ரசிப்பது பொன்றவை கொடுமையின் உச்சகட்டம். இதனால் ராஜிவ் காந்திக்கு ஏற்பட்ட நிலைமை, கண்டிப்பாக ஒபாமாவுக்கும் ஏற்படுவது கூட நிச்சயம் என்பதை அவர்கள் எண்ணிக்கொள்ளவேண்டும்.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாலரும், சேப்பாக்கம் தொகுதியில் 2000 வாக்குவித்தியாசத்தில் தோற்ற திரு. தமிம் அன்சாரி அவர்கள் காஷ்மீர் மக்களின் வாழ்வுரிமை பற்றிய ஒரு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்குள்ள மக்களின் நிலை, நிலைப்பாட்டையும் பற்றி முக நூலில் கட்டுரைகளை எழுதிவருகின்றார். கிட்டத்தட்ட அவருடைய கருத்துக்கள் அனைத்தும் திரு சமஸ் சொன்ன கருத்துகளுடன் ஒத்தே காணப்ப்டுகின்றது. அவர் அந்த கூட்டத்தில் ஒருவர் கூறியதாக் எழுதியது " நம்ம நாட்டு ராணுவமே, எங்களை தீவிரவாதியாகத்த் தான் பார்க்கின்றது, எங்கள் பெண்களயும் தப்பான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றது."

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கருதி இந்திய அரசு குறைகளை தட்டிக் கேட்கவேண்டும், தண்டனை வழங்க வேண்டும். ஒரு வேளை அப்படி செய்தால் பாக்கிஸ்தான் போர்ற நாடுகளில் நடந்தது போல ஏதாவது இராணுவ ஜெனரல் ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோன்னு பயந்திருப்பார்கள் போல.

கண்டிப்பா இது இராணுவத்திற்கு எதிரான கட்டுரை இல்லை, இராணுவத்தில் இருந்துகொண்டு நம் நாட்டின் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கும் சில இராணுவ வீரர்களுக்கு மட்டுமே எதிரானது. இராணுவத்தினரின் சம்பளம்,மற்றும் சலுகைகளை குறைப்பதற்கு எதிராக அரசாங்கத்தை அசிங்க அசிங்கமாக திட்டிய பல கோடிபேரில் நானும் ஒருவன். இன்று மட்டுமல்லாது, என்னுயிர் உள்ளவரை, அவர்கள் கண்விழித்திருப்பதால் தான் நான் இரவு கண்மூடித்தூங்க முடிகிறது என்ற உண்மையுனந்த ஒரு இந்திய பிரஜை.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்

1 கருத்து: