சனி, ஜூலை 23, 2011

தொடக்கம்

அனைவரின் மீதும் ஆண்டவனின் சந்தியும் சமாதானமும் உண்டாவதாக

நண்பர்கள் சில பேர் பிளாக் வைத்திருந்த போது நாமும் ஏன் முயற்சி செய்து பார்க்ககூடாதுன்னு ஒரு ஆர்வம், எதற்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒரு சோம்பேறித்தனம் இப்படியாக இருந்த சமயம் தொலைபேசியில் என் அப்பாவுடனான உரையாடலில் என் அப்பா சொன்னது ஒரு புது தொடக்கம் தான் நம்மை நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று காட்டும் என்ற ஒரு வார்த்தை. சரி அப்பா பேச்சை எப்போதும் கேட்டு (சரி சரி...) வளர்ந்த பய்யன் என்பதால் இந்த பிளாக் ஆரம்பம் எந்த விஷயத்தை கற்று கொடுக்கப்போகிறது என்ற மமதையோடு ஆரம்பிதேன். 

முதல் நாலு பூர்த்தி செய்ய வேண்டிய கட்டங்கள் முடிந்த பின் அடுத்த கேள்விக்கு தயார் ஆனேன். அது தான் "உங்களைப்பற்றி" என்ற ஒரு கேள்வி. என்ன எழுதுவது............ அதை எழுதலாமா, சே, சே, அது மோசம் சரி இதை எழுதலாம் என்று நினைத்தால் அது அதை விட மோசம். இப்படியாக யோசித்து யோசித்து ஒரு வாரங்களுக்குப் பிறகு  நான் என்னைப்பற்றி எழுதியது தான் என் புகைப்படத்துக்கு அருகில் உள்ள தேடிக்கொண்டு  இருக்கிறேன். ஆகா ஒரு வாரம் கழித்து தான் நான் அறிந்து கொண்டேன் எனக்கு என்னைப்பற்றியே தெரியவில்லை என்று. ஆகா எங்க அப்பா சொன்னதுபோல இந்த பிளாக் தொடகத்தினால் எனக்கு தெரிந்தது எனைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்பது, அதோடு அப்பாக்கள் எல்லோரும் கிரேட் என்றும்.

என் இருக்கைக்கு அருகில் ஒரு எகிப்து நாட்டு நண்பரிடம் நான் ஒரு சமயம் ஒரு கேள்வி கேட்டேன் ஏன் உங்கள் மக்கள் சந்தோசமாக இருக்கும் போது எங்களப்போற்று பாடல்களை முனுமுப்பது இல்லை என்று அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் உடனே சொன்னார் உங்களுடைய வாழ்க்கை நிறைய கலை, இசை சம்பத்தப்பட்டது என்று, அட ஆமா இல்லன்னு எனக்கு நானே சொல்லுக்கொண்டு இடத்தை காலி செய்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நம் சினிமாக்களில் கடந்த ஒரு எட்டு வருடங்களாகதான் அப்பாக்களை கொஞ்சம் frienlya காட்ட தொடங்கினார்கள் அதற்கு முன்பு, அப்பான்னா கைல தடி, மூஞ்சி நிறைய சிடு சிடு, பெரிய மீசை, அவரு சொல்லுவாரு பையன் எதிர்த்து பேசாம கேட்டு நடப்பாரு....... இப்படி காட்டியே நாம அப்பாகள  கெடுத்து வசிட்டனுங்க. அப்பாகள போலிஸ் மாதிரியே பார்த்து பழகிவிட்ட நமக்கு எதாவது கேள்வி கேட்டு பதில் சொல்லும்போது வார்த்த வராம வெறும் காத்து தான் வந்து அடி வாங்கின அனுபவம் பல பல. அப்பா என்ன சொன்னாலும் கேக்கணும் நாங்க எதுவும் பேசகூடதா என்று அம்மா கிட்ட வீரத்தை காமிக்கும் 24 ம் புலிகேசிதான் நாம்.எந்த நேரத்திலும் நாம் என்ன சொன்னோம் அவரு கேக்காம போயிட்டாருன்னு யோசிச்சதே இல்ல (அட  நாம எதுவும் சொல்லாமலேயே அவரு கேக்கலைன்ன எப்படி)


முடிவாக அப்பவ லவ் பண்ணுங்க சார் லைப் நல்ல இருக்கும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக