திங்கள், ஜூலை 25, 2011

சுயநலம்.

வணக்கம், ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக,

"சுயநலம்".பொதுவாக இந்த வார்த்தையை நாமோ, இல்ல நம்ம நண்பர்களோ அதிகம் பிறரைப்பார்த்து உபயோகிப்பதுண்டு, ஆனால் எந்த நேரத்திலும் நாம் நம்முடைய சுயந்லனைப்பற்றி பேசியதோ ஏன் யோசித்திருப்பதோ இல்லை. பகட்டுக்கு வேண்டுமென்றால் நான் அந்தமாதிரி இல்லைனு சொல்லிக்கொள்ளலமே ஒழிய உண்மையிலேயே அப்படி இருக்காது. 

ஒரு தவறு செய்துவிட்டு பின் அதில் மாட்டிக்கொண்டு முழிக்கும் போதும் நாம் நம்மை காப்பாற்ற மீண்டும் மீண்டும் பொய் சொல்லுவது கூட ஒரு சுயநலம்தான், ஆம் நான் தான், நான் மட்டும்தான் யோக்கியன் என்ற சுயநலம். என் பள்ளிப் பருவத்தில் என் நண்பனிடம் ஒரு புது பேனவை காண்பித்து பார்தியா இது ரொம்ப புதுசு, ஆனா வெரும் 3 ரூபை தானு சொல்லிவிட்டேன், ஆனால் அதின் உண்மையான விலை 8 ரூ மேல். இதை ரொம்ப பெருமையாக அனைவரிடமும் (பொய்) சொல்லி, சொல்லி ஆனந்தம் பேரானந்தம். அதில் மட்டும் ஒரு நண்பன் திடீர்னு பைல கைவிட்டு 3 ரூ எடுத்து நாளைக்கு எனக்கு ஒன்னு வாங்கி வானு சொல்லிட்டான், ஆனால் அதின் உண்மையான விலை 8 ரூ மேல். இதை ரொம்ப பெருமையாக அனைவரிடமும் (பொய்) சொல்லி, சொல்லி ஆனந்தம் பேரானந்தம். அதில் மட்டும் ஒரு நண்பன் திடீர்னு பைல கைவிட்டு 3 ரூ எடுத்து நாளைக்கு எனக்கு ஒன்னு வாங்கி வானு சொல்லிட்டான், அவ சொன்னதுதான் தாமதம் கண்னுலாம் இருட்டிடுச்சு, கை, காலு எல்லாம் ஒரே பொசிசன்ல நின்னுரிச்சு. அவனிடம் வாக்கு கொடுத்தா நம்ம கைல இருந்து 5 ரூவா போயிடுமே, என்னை நான் காப்பத்திக்க அவனிடம் சொன்ன பொய் என் வாழ்க்கையில என் அப்பாகிட்ட கூட சொன்னது இல்ல, அந்த கடை ரொம்ப தூரம், கடகாரன் அப்பா செத்துட்டான் 10 நாள் கடைக்கு லீவு, இப்படி பல கிலோ பைட்ல ஆரம்பிச்சு, மெகா, ஜிகா, டெகா பைட் அளவுக்கு பொய் சொல்லி அவனிடம் தப்பிக்கிரதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்திடுச்சு. அதன் பிறகு கொஞ்ச நாளைக்கு அவன பார்த்தா அய்யா 10 ச்டெப் பேக்.

தான் என்று சுயநலமா ஒருத்தன் இருக்கிரன்னா கண்டிப்பா அவன் ரொம்ம்ப பொய் சொல்லவேன்டியிருக்கனும். ஆக பொயின் பிறப்பிடம் அதுதாங்க அப்பன், ஆத்தா சுயந்லமகத்தான் இருக்கவேண்டும். ஒருவகைலனு சொல்லுரதே தவறு, பல வகைல நாமும் சுயந்லத்துடன் தான் இருக்கிரோம். நம்மல்ல பல பேர் பாத்திரிக்கை படிக்கும் போது பல செய்திகள் பார்க்கல்லாம், ஒரு சின்ன சண்டை ஒரு கொலைல முடிந்தது என்று, ஆன அது நேற்று அந்த இடத்தில் அது சின்ன சண்டயா இருக்கும் போதே நாம பர்த்துக்க்கொண்டு இருந்திருப்போம்

அத தடுக்காம நம்ம பிகரு வெய்ட்டு பண்ணிக்கிட்டு இருக்கும்னு சுயனலம இருந்துருப்போம் அதன் விலை அல்லது விளைவு ஒரு உயிர்.

இன்ன ஒன்று சுயநலம் டரக்ட்லி புரப்போசனல் டு அவசரம். ஒருவன் ஒரு பேருந்து நிலயத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்தான் அவனும் நம்ம மாதிரிதான், தானக்கு தான் முதல்ல சீட்டுகிடைக்கனும்னு, அவசர அவசரமா, முன்டியடிச்சு ஜன்னலோர சீட்டுல உட்காந்து 10 கி.மீ போனதுக்கப்புரம், சுரண்டைக்கு 1 டிக்கெட்னு நீட்டுனா, சொங்கி இது செங்கோட்ட போறதுலனு பாதிவலில இறக்கிவிட்டுடாங்க, அதுக்கப்புறம் என்ன 200 ரூக்கு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்தாரு. அவனுக்கு நமக்கு பஸ்ஸுல சீட் கிடக்கனும்னுதான் நினச்சான், ஆன எந்த பஸ்ஸுலன்கிரத பாவம் அவசரத்துல பாக்க விட்டுட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக