ஞாயிறு, ஜூலை 24, 2011

முயற்சி திருவிணையாக்கும்

வணக்கம், ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவுவதாக

பிளாக் ஆரம்பிப்பதற்கு என் அப்பா சொல்லிய ஒரு விஷயத்தை என் முந்தய பதிவின் போது சொல்லி இருந்தேன், இன்று என் அப்பா சொல்லாத ஒன்றை என் முயற்சியால் கண்டுபிடித்துள்ளேன். அது, ஒரு விஷயம் ஆரம்பிகிறது எவ்வளவு கடினமோ அதை விட கடினம் அதை நடத்துவது. 

பிளாகில் எழுதுவதற்காகவாவது அதிக புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்து நேற்று ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன், சொன்ன நம்ப மாட்டிங்க முதல் பக்கம் தான் அதக்கூட முழுசா முடிக்கல அப்படி ஒரு தூக்கம். எப்போ தூங்கினம்னே எனக்கு தெரியல னா பாருங்களேன். ஆக புத்தக வார்த்தைகளை மேற்கோள் காட்டி எதுவும் எழுத வாய்ப்பு இல்லை. சரி காலேஜ் ல் நடந்த விஷயத்த எழுதலாம்னா ம்ம்மம்ஹும் அச்சிலேயே ஏத்த முடியாது. அதையும் மீறி பல விஷயங்கள் எனக்குள்ள பீறிக்கிட்டு வருது ஆனா குணா படத்துல சொல்லுற மாதிரி வார்த்த, வார்த்த தான் வரமாட்டேன் என்கிறது. டைப் அடிக்கும் போது வார்த்தை வரலன்னாலு பரவா இல்ல பேப்பர்ல எழுதிவச்சு அடிச்சிடலாம், அனா ஆஆஆஅ டைப் அடிக்கவே வரலன்னா எப்படி?, பல விஷயம்னு டைப் பண்ணினா, பலான விஷயம்னு டைப் ஆகுது, நிவாரணம்னு அடிச்சா நிர்வாணம்னு வருது கணினில பிரச்சனையா?  இல்ல என்கிட்டயானு? முடிவுக்குவரவே இரண்டு டி ஒரு பிஸ்கட் பாக்கெட் காலியாகிடுது. ஒரு முடிவுக்கு வந்து பேபெர்ல எழுதிவச்சு, டைப் அடிக்கிறதுக்கு முன்னாடி பாத்ரூமுக்கு போய்வருவோம்னு போய்விட்டு திரும்பினா, என்னைக்கும் இல்லா மகராசன் ஆபீஸ் பாய் அன்னைக்கு தான் என் மேசைய காண்ணாடி மாதிரி தொடசிகிட்டு இருந்தான், அவன் கடமை உணர்சிய கட்டி பொரண்டு  கட்டுபடுத்தி இங்க இருந்த பேப்பேர கேட்டா பே பே நு முழிசிகிட்டே அவன் கைல இருந்த கசிங்கிபோனத என் கைக்கு கைமார்த்திவிட்டான், அந்த முயற்சியும் தோல்வியில் வெற்றிகரமாக முடியவே, இனி நாட்டாம டு பங்காளி, பங்காளி டு நாட்டாம நு முடிவு பண்ணி நேரடிய டைப் பண்ண ஆரம்பிச்சு, பாத்து லைன் போனதுக்கப்புறம், அடுத்த புண்ணியவான் எலெக்ட்ரிக் கரெண்ட கட் பண்ணிட்டான். அக அந்த பத்து லைன் ஸ்வாகா ..........

ஒரு விஷயத்த பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தவுடனேயே எழுதிவிட வேண்டும், இல்லனா கக்கூஸ் போயி காரியம் நடக்குற சமயத்துல கதவ தட்டுனா, காரியம் முடியாம கைய மட்டும் கழுவிட்டு போகுறமாதிரி ஆகிவிடும் ஒரு நாலு வரிக்கே நாக்கு தள்ளுது எப்படித்தான் நாலாயிரம் பக்க புத்தகம் அடிக்கிரங்கலோவ்வ். காலேஜ் பரீட்சைக்கு படிக்கும் போது, இந்த புக் எழுதுனவ ..................................... (அட ஆமா சென்சாறுதான்  கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க)நு சொன்னதுக்கு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்குற வாய்ப்பா இத எடுத்துக்கலாம். இந்த கஷ்டத்த எல்லாம் என் நண்பன்ட சொல்லலாமுன்னா அவன் சொல்லுறான், முதல்ல நினக்கனுமாம் அப்புறம் வார்த்தைகள் எல்லாம் வாயில இருந்து கொட்டுமாம். என்வாயில வேற எதாவது வந்திரப்போகுதுன்னு அவன பார்வயாலயே காரிதுப்பி அனுப்பிவிட்டு,மீண்டும் கடைசி சீன்ல வருகிற போலிஸ்ங்க மாதிரி கடமையுணர்ச்சியோடு ஆரம்பித்தது தான் இந்த வெளியீடு.

நாம ஒன்னு நெனச்சா ஆண்டவன் ஒன்னு நெனப்பானு சொல்லுறாங்க, ஆனா இங்க போஸ்ட் பண்ண நான் பத்து விஷயம் நெனச்சேன் ஆனா ஆண்டவன் தடுக்கனும்கிற ஒரே நெனப்பதான் இருந்திருக்கான்.

அது சரி தமிழ் சினிமா மாதிரி நீ போட்டுருக்குற தலைப்புக்கும் போஸ்டுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கலாம். சிங்கத்துக்கும், சிங்கம் மார்க் ஊருகாய்க்கும் உள்ள சம்பந்தம் தான்.

இந்த தலைப்பை பற்றி தான் எழுதவேண்டும் என்று நினைத்து டைப் செய்தது, ஆனால்  படித்தது எல்லாம் கேள்வி தாளைப்பார்ததும் மறந்து போகுமே அதுமாதிரி ஆகிடிச்சு. இங்க உள்ள எல்லாத்தையும் இரண்டு முறைக்கு மேல் டைப் செய்தது அந்த தலைப்பைத் தவிர, குறிப்பா முதல்சொன்ன வணக்கம் எண்ணிக்கையில் அடங்காது, இனி என்னால் அந்த வார்த்தையை மட்டும் கிபோர்ட் பார்க்காமல் அடிக்கமுடியும். இருந்தாலும் என் முயற்சி எனக்கு விணையாகாமல் திருவிணயனதாக எடுத்துக்கொண்டு, நம் வழ்க்கையெனும் தோட்டத்தில், துன்பம் என்ற துர்நாற்றம் தூரம்போகட்டும், சந்தோஷம் என்ற சந்தனக்காற்று வீசட்டும் என்று கூறி இந்த பதிவிற்கு முற்று.

வாழிய யாம்,

வாழிய யெம்மொழி பல்லாண்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக