‘’உடல் மண்ணுக்கு உயிர்
சிம்ரனுக்கு’’ என நாங்கள் வயதுக்குவந்த காலங்களில் முழங்கியபோது, குஷ்புவோ, காலம்
எனும் பேராற்றங்கரையில் கரை ஒதுங்கிய (நாட்டுக்)கட்டை போல் சினிமாவில் இருந்து
கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருந்தார். என்னதான் ‘’சிம்ரன்’’ ‘’ரம்பா’’ என
மனது குரங்குபோல தாவித் தாவி ஓடினாலும், குஷ்பு பெயரைக் கேட்டாலே பழத்தைப் பார்த்த
குரங்குபோல ஒரே இடத்தில் நிற்கும். ஹன்ஸிகா, கீர்த்தி சுரேஷ் என பலர் வந்தாலும்
கூட ‘’குஷ்பு குஷ்புதான்’’ என்பதை அறிந்தேயிருக்கிறோம்.
கேப்டன் மகளில் ‘’ஏதோ
உன்னிடம் இருக்கிறது....'' பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு ‘’இது’’ வரும் அந்த ‘’இது’’தான்
குஷ்புவிற்கு கோவில்கட்டும் வரை என் அண்ணன்மார்களை இழுத்துச்சென்றது.
‘’குஷ்புவிற்கு கோவில் கட்டியவன் முட்டாள்’’ என்று வாதிடுபவன் கண்டிப்பாக பாண்டித்துரையில் வரும் ‘’மல்லியே சின்ன முல்லையே........’’ பட பாடலையை (கேட்ட அல்ல) பார்திருக்க
மாட்டான் என்றே நினைக்கிறேன். அதைக் காணாத கண்கள் அவிஞ்சி போனால்தான் என்ன?.
பார்த்தால் அவர்களும் சொல்லுவார்கால் ‘’குஷ்பு குஷ்புதான்’’.
குஷ்புவை பிடிக்கக்
காரணம் குஷ்புதான். ‘’கல்யாண்’’ பிரபுவை பிடிக்காமல் போகக் காரணமும் குஷ்புதான்
என்பதை சொல்லத்தேவையில்லை. சச்சின் இருந்தால் இந்தியா வெற்றி உறுதி என்ற சம
காலத்தில்தான் குஷ்பு இருந்தால் ஹிட் உறுதி என்ற நிலையும் தமிழகத்தில் இருந்தது..
ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்துவரும் ஜாக்கெட்டுக்காக மொத்த குடும்பமும்
டி.வி முன் காத்திருக்கும் போது, எங்களுக்கோ ஜாக்கெட் இல்லையென்றாலும் (அய் மீன்
சுடிதாரில் வந்தாலும்) ‘’குஷ்பு வந்தா மட்டும் போதும்’’ என்று பைத்தியமாய்
இருந்தோம்.
குஷ்பு அரசியலுக்கு
வருகிறார் என்றவுடனே, அவர் காங்கிரஸ் கட்சியில்தான் சேர்வார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரியின் செல்ல மிரட்டலில் தி.மு.கவில் இணைந்தார்
என்பது நம்மில் எத்தினி பேருக்கு தெரியும்?. பிரபுவால் கைவிட்டு, தி.மு.க
பொதுக்குழுவில் இடுப்பில் கைவிட்டு, தேர்தலில் சீட் கொடுக்காமல் கைவிட்டு.................இப்படியாக
பலர் கைவிட்டு கைவிட்டு காலம் இறுதியில் ‘கை’க்கே கொண்டுவந்து விட்டது. இடையில் (அந்த ‘இடை’ இல்லை) திருச்சி விமானநிலையத்தில் செருப்படி வேறு.
கற்பு விஷயம் முதல் தலாக்
விஷயம் வரை குஷ்புவைச் சுற்றி எப்போதுமே பிரட்சனைகள் & சர்ச்சைகள்
இருந்துகொண்டே இருக்கும். சிலர் தவறான கருத்தை சொல்லும்போது அதை எதிர்த்து
கண்ணியமான முறையில் பதிலளிக்கும் அமைப்புகள், சினிமாக்காரர்கள் என்றால், அவர்கள்
வீட்டிற்கு முன்பாக விளக்குமாற்று போராட்டம், சாணி கரைப்பு போராட்டம் நடத்துவது
ஏன்னெற்றே தெரியவில்லை. இப்போது சில இஸ்லாமிய அமைப்புகள் குஷ்புவை கழுவி
ஊற்றுவதைக் கண்டு மனம் சகிக்கவில்லை. ஏன் என்றால்? எங்களுக்கு ‘’குஷ்பு
குஷ்புதான்’’.
அழகா இருக்கிற எல்லோரும் சரியான கருத்தைத்தான்
சொல்லவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இவ்வளவு ஏன்? நானே சில நேரங்களில் தவறான
கருத்துக்களை சொல்லியிருக்கிறேன்.?!?!?!. (லாஸ்ட் வரியை சைடில் விடவும்) குஷ்பு
சொன்ன கருத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை அதற்காக கழிசடை,
விபச்சாரி...........என்ற மூன்றாம் தர தாக்குதல்கள் மிகவுக் கண்டிக்கத்தக்கது. இப்படி
செய்வதின் மூலமாக தலாக், பலதார திருமணம் பற்றிய குஷ்புவின் தவறான எண்ணத்தை
மாற்றிவிட முடியுமா என்ன?. மாறாக ‘’இவனுங்க இப்படி பேசுறானுங்கன்னா குஷ் சொன்னது
உண்மையாகத்தான் இருக்கும்’’ என்ற தவறான எண்ணத்தையே பலரிடம் விதைக்கும்.
நீங்களெல்லாம் என்னத்த நபியின் வாழ்க்கையை படித்தீர்களோ?,
சரித்திரத்த கொஞ்சம் திருப்பிப் பாருங்க. இஸ்லாமிய வளர்ச்சியே இஸ்லாத்தின்
எதிர்ப்பினை சரியான முறையில் எதிர்கொண்டதுதான். எங்கெல்லாம் விமர்சனங்கள்,
எதிர்ப்புகள் வருகிறதோ அங்கெல்லாம் அவர்கள் இஸ்லாத்தில் அதற்கான காரணத்தையும்,
உண்மையையும் கண்ணியத்துடன் விளக்கிக்கூறி விளங்க வைத்தமைதான். இப்போது சிலர்
செய்வதைப் போலவே முஹம்மது நபியும் ‘’கழிசடை’’, ‘’கபோதி’’, ‘’கம்னாட்டி’’ என
திட்டியிருந்தால், முஹம்மது நபி இறக்கும் போதே இஸ்லாமும் இல்லாமல் போயிருக்கும்.
‘’சேலையை அவிழ்த்துக்காட்டும் குஷ்புவிற்கு இஸ்லாத்தைப்
பற்றி பேச அருகதையில்லை’’ என ஒரு ஆலிம் அழுகிறார். நான் பார்த்த வகையில் 27 குஷ்பு
படத்தில் சேலை அவிழ்க்கும் சீன்கள் (காட்சிகள்) வருகிறது, அதிலும்
‘’முத்துக்குளிக்க வாரிகளா’’ படம் பிரமாதம். எனக்கு அந்த ஆலிமிடம் இரண்டு கேள்விகள்தான்.
ஒன்று, ஆலிம் எந்த படம் என்பதை தெளிவாகக் கூறவேண்டும். அடுத்ததாக குரானில், சேலை
அவிழ்ப்பவர்கள் இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ளவோ அல்லது பேசவோ கூடாது என்று எங்கு
கூறியிருக்கிறது?. ஆலிமின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பலபேர் குஷ்பு கோவிலுக்கு
கல் சுமந்திருக்கக்கூடும், ஏனென்றால் கை தட்டல் ரொம்ப கம்மியாகவே இருந்தது.
குஷ் போலவே இங்கு பலபேர், இஸ்லாம் நான்கு பெண்களை திருமணம்
செய்யச் சொல்கிறது என்று நினைக்கின்றார்கள். ஆனால், இஸ்லாம் நான்கு பெண்கள் வரை
திருமணம் செய்துகொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. அதாவது சலுகைதானே தவிற கட்டாயம்
கிடையாது. ஏற்கனவே திருமணம் ஆனவரை கட்டிக்கொள்ள அந்த பெண்ணும் சம்மதிக்க வேண்டும்.
பெண் விருப்பமின்றி கல்யாணம் என்பது பாவச் செயல், ஒரு பெருங் குற்றம். ஆயிரம் பொய்
சொல்லி கல்யாணம், ரெண்டாயிரம் பொய் சொல்லி ரெண்டாம் கல்யாணம் என்ற பேச்செல்லாம்
கிடையாது.
நாலு மனைவிகள் என்றால், நால்வரிடமும் ஒரே போல்
நடந்துகொள்ளவேண்டும், வேறுபாடு காட்டலாகாது. அனுஷ்கா வீட்டில் ஆறு நாள், அருக்கானி வீடென்றால் ஒரு நாள் என்பதெல்லாம் நாட் அலவ்ட். ஒருவன் நான்கு திருமணம்
செய்யவேண்டும் என்றால் அவர்களுக்கு தாம்பத்தியம் முதல் மற்ற பிற தேவைகளையும் பூர்த்தி
செய்பவனாக இருக்கவேண்டும். நான்கு அல்ல ஒரு திருமணத்திற்குகூட ஆணுக்கு என்னென்ன
தகுதிகள் இருக்கவேண்டும் என்று இஸ்லாமில் ஒரு டேட்டா பேஸ்ஸே இருக்கிறது. நான்கு திருமணத்திற்கான ரூல்ஸ் & ரெகுலேசனைப் படித்தால் ‘’இதுக்கு பேசாம, பத்து நிமிடம்
பாத்ரூம் போய்விட்டு கைகழுவிவிட்டு வந்துவிடலாம்’’ என்று கூட தோன்றும்.
‘’அடங்காதவனுக்கு நாலு பொண்டாட்டியில்லை, நாலாயிரம்
பொண்ணாட்டி கட்டினாலும் அடங்காது’’ என்ற பழமொழி உண்டு. இன்றய சூழலில், ஒன்றைச் சாமாளிக்கவே பலர் பத்து
மணிக்குமேல் கேப்டன் டிவி பார்த்து லேகியம் ஆர்டர் செய்யும் நிலையில், நாலு பேர்
என்றால்.............???? ‘’சேகர் செத்துருவான்’’.
அடுத்ததாக, அவசரத்தில் விவாகரத்து செய்தவர்கள் மீண்டும்
சேர்ந்து வாழவேண்டும் என்றால் அந்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்து, கண்டிப்பாக
செக்ஸ் வைத்து, அவன் தலாக் சொல்லிய பின்புதான் முதல் கணவனுடன் இணையமுடியும்’’
என்ற கருத்து பேஸ்புக்கில் காணக்கிடைக்கிறது. இது முற்றிலும் தவறு. இதுபோல் ஒன்று
இஸ்லாத்தில் கூறியிருந்தால், பலபேர் ‘’இங்கு சிறந்த முறையில் முதல் கணவனுடன் சேர
ஆவனசெய்யப்படும்’’ என போர்டு வைத்து கடை திறந்து விடுவார்கள்.
இஸ்லாத்தின் படி, விவாகரத்து செய்த ஜோடிகள், தமிழ் பட
கிளைமாக்ஸில் வருவது போல ஓடும் ரயிலில் ஹீரோ நின்றுகொண்டு ஓடி வரும் ஹீரோயினை
தூக்கிக்கொண்டு செல்வதுபோல திரும்ப இணையமுடியாது. விவாகரத்து என்பதே திருமண
முறிவுதான். அவர்கள் மீண்டும் இணைய ஆசைப்பட்டால், மறுபடியும் திருமண முறைகள்
பின்பற்றி திருமணம் செய்யவேண்டும். இந்த இரண்டாவது திருமணமும் விவகாரத்தில்
முடிந்து, மீண்டும் இணைய ஆசைப்பட்டால், மறுபடியும் (எத்தனவாட்டி?) மேற்சொன்ன
திருமண முறைகளின் படி ஒன்று சேரலாம். இவ்வாறாக இரண்டு முறை மீண்டும் இணைந்து கொள்ள
அனுமதியுண்டு. மூன்றாவதாக விவாகரத்து நடைபெற்ற பின்பும் மீண்டும் ஒன்று
சேரவேண்டும் (மறுபடியும் முதல்ல இருந்தா..........) என்றால் மட்டுமே முடியாது*. (* கண்டிஷன்ஸ் அப்ளை).
இதை விடுங்கள், நாம் குஷ்பு மேட்டருக்கு
வருவோம். (எவனாவது ‘’குஷ்புவே……..’’ன்னு ஆரம்பிச்சீங்க பிச்சு, பிச்சு)
குஷ்பு அழகியா? பேரழகியா? என்று விவாதிப்பதை விட்டுவிட்டு
முஸ்லீமா? இல்லையா? என்பதெல்லாம் ஒரு பஞ்சாயத்தாடா?. இன்று ‘’முஸ்லீமே இல்லை’’
என்று சொல்லும் முஸ்லீம்கள், நாளை குஷ்பு பி.ஜே.பியில் சேர்ந்து அதை அழிக்க
தன்னுடய உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் அர்பணிக்கும் போது மூஞ்சை எங்கு கொண்டுபோய்
வைத்துக்கொள்வீர்கள்?. ஏதோ, ‘’தாலி புதுசு’’ படத்தில் மூன்று கணவர்களுக்கு
பொண்டாட்டியாக நடித்ததை வைத்துக்கொண்டு பலதார திருமணம் பற்றி தெரியாமல்
சொல்லியிருப்பார். அதை உங்கவீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துவிட்டுங்கள்.
மேலும் நாட்டாமை படத்தில் குழந்தை இல்லாத பெண்ணாக வரும்
குஷ்புவை நினைத்து கொஞ்சம் கருணையோடு எடுத்துக்கூறுங்கள். எச் ராஜா, தமிழிசை
போன்றவர்களுக்குத்தான் இதை புரியவைப்பது கஷ்டம், ஆனால் குஷ்புவிடம் எடுத்துச்
சொன்னால் அவர் கேட்டுக்கொள்வார். ஏனென்றால் ‘’குஷ்பு குஷ்புதான்’’.
------------------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
பதிலளிநீக்குகுஷ்பூ சொன்ன கருத்திற்காக குஷ்பூவை இழிவுபடுத்துவதாக சொல்லி பலர் இஸ்லாத்தை இழிவுபடுத்தி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை இதை இன்னொருபதிவிலும் அழுத்தமாக சொல்லி இருக்கிறேன். குஷ்பு சொன்னதற்கு மாற்றுகருத்து இருந்தால் அதை அழகாக் எடுத்துரைப்பதால் மட்டுமே இஸ்லாத்தை மற்றவர்கள் பார்வையில் அழகாக இட்டு செல்ல முடியுமே தவிர அவரை அசிங்கமாக பேசுவதால் இஸ்லாத்தில் ஒன்றுமே இல்லை என்று மற்றவர்கள் நினைக்க வைட்துவிடும் என்று எதிர்ப்பாளர்களுக்கு புரியவில்லை
இவனுங்களுக்கு குஷ்புவோட அருமை இன்னும் தெரியலை.
நீக்குஇவ்வளவு பிரியமா ஜி...? !!!!!
பதிலளிநீக்குஹி.ஹி. ஹி. லைட்டா......
நீக்குkushboo special cd is available with you sir ?
பதிலளிநீக்குஎந்த (மாதிரி) சி.டி?
நீக்குஇது தான் நாகரீகமான வழிமுறை...
பதிலளிநீக்குமிகவும் அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.. ஏசுநாதர் சொன்னது போல் தான், உங்களில் யார் யோக்கியரோ அவர்கள் குஷ்பு மீது கல்லெறியலாம்...
ஏசுநாதர் சொன்னாருன்னு போய் சொன்னா, ஏசுநாதர் இல்லை அது ஈஸா (அலை) நபி என்று வகுப்பு எடுப்பார்கள்.
நீக்குஏன்யா.. நான் என்னமோ இட்லி பத்தி தான் ஏதோ எழுதி இருக்கீங்கன்னு வந்தேன்.. இங்கே மண்டை காஞ்சிட்டுச்சே..
பதிலளிநீக்குஅது சரி இந்த தமிழியசை ராசா இவங்க எல்லாரும் யார்? விடுதலை போர் வீரர்களா?
இன்னும் பத்மினியையே நினைக்கிறவங்களுக்கு எங்க குஷ் பத்தி என்ன தெரியும்.
நீக்கு//தமிழியசை ராசா இவங்க எல்லாரும் யார்? விடுதலை போர் வீரர்களா?//
ஆமாங்குறேன்....