நான் இப்போது, ஜித்தாவில் ஒரு பர்னீச்சர் ஷோ ரூம்
புராஜெக்டில் இருக்கிறேன். அது ஒரு ஸ்வீடன் கம்பெனி என்றாலும் வியாபார
ஒப்பந்தப்படி சவுதி நாட்டில் ஒரு பெரிய பணக்காரரின் கீழ் வருகிறது. கான்ட்ராக்டரை
மேற்பார்வை இடும் வேலை எங்கள் கம்பெனிக்கு. எங்களை மேற்பார்வை இடுவதற்காக
கிளைண்டில் இருந்து இரண்டு பேர் உண்டு. அதில் ஒருவன் பெயர்தான் அப்துல்லா.
அப்துல்லா, சென்ற வருடம்தான் இஞ்சினியரிங் முடித்துள்ளான். வயது
என்ன 23 இருக்கும். எனக்கு அவனுக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசம். (‘’அப்படியென்றால்
உன்னோட வயது 13 தானா?’’ என்று கேட்கவேண்டாம்). ஆனால் பார்பதற்கு எனக்கு அண்ணன்
போல் இருப்பான். அவனுக்கு அரபி மொழியைத் தவிற எதுவும் தெரியாது. எனக்கு அரபியில்
எதுவுமே தெரியாது. என் பெயரையே நான் தமிழில்தான் சொல்லுவேன் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்.
என் மேனாஜர் என்னிடம் ‘’இன்று என்ன வேலை நடந்தது? நாளை என்ன
வேலை ஆரம்பம்? என்பதை அவனிடம் விளக்கவேண்டும்’’ என்றார்.
‘’விளங்கிடும்’’ என்றேன்.
‘’என்ன?’’ என்று திரும்பக் கேட்ட மேனஜரிடம், ‘’இல்ல,
விளங்குவது போல் விளக்கிவிடலாம்’’ என்று தலையை ஆட்டி ஆட்டிக் கூறினேன். சீமான் ‘’பச்சை
தமிழன்’’ என்றால், அப்துல்லா ‘’அடர் பச்சை அரபி’’. இஞ்சினியரிங்க் கூட அரபி மொழியில்தான்
படித்திருக்கிறான். ‘’டைல் புளோரிங்க்’’ ‘’வால் பிளாஸ்டரிங்க்’’ என்பது கூட
அவனுக்கு அரபியில்தான் தெரியும்.
அவனை சமாளிக்கும் வேலை என் தலையில் வந்தபின்பு, நான் செய்த
முதல் காரியம் அரபி டிரான்ஸிலேட்டர் டவுன்லோடு செய்ததுதான். ‘’ஆங்கிலம் தெரியாது,
இவனெல்லாம் என்ன படித்திருப்பான்’’ என்று எதிலும் அவனை அலட்சியம் செய்த என் போன்றவர்களுக்கு
செருப்பால் அடித்தது போல் ஒரு சம்பவம் நடந்தது. ஷோ ரூமில் சில மாற்றங்கள்
செய்யும்படி கிளைண்ட் சொன்னார்கள். நாங்களும் காண்டிராக்டரிடம் சொல்லி அதை
முடிக்கச் சொன்னோம்.
ஆனால் அப்துல்லா, ‘’இதை இப்படி செய்தால் இங்கிருக்கும்
மொத்த எடையும் இந்த பகுதிக்கு வரும், அங்கு ஒரு கதவு வேறு இருப்பதால் அதனால் அந்த
எடையை எடுத்துக்கொள்ள முடியாது.....................’’ என படம் வரைந்து பாகங்கள்
குறிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அரபியில் சொன்னாலும், எனக்கு அவன் வரைந்த
படத்தைப் பார்த்து புரிந்துகொண்டேன். எல்லோரும் ஆடிப் போய்விட்டோம். அன்னைக்கு
அவன் அதை தடுத்திருக்கவில்லை என்றால், இன்று மோடிக்கு ‘’சவுதி சிறையிலிருந்து
உயிரைக் காக்குமாறு’’ மனு அனுப்பிக்கொண்டிருந்திருப்பேன்.
மொழிக்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை என்று படித்திருந்தாலும்,
நேரில் உணர்ந்த தருணம் அது. அஞ்சு வருசம் அரியர் வைத்து எழுதும் சப்ஜெக்டை எல்லாம்
‘’இதெல்லாம் உங்க ஊருலதாண்ட பஸ்ஸு, சவுதியில இதுக்கு பேரு குப்ப லாரி’’ன்னு பிரிச்சு
மேய்வான். இதுக்கும் அவன் ஆவரேஜ் ஸ்டூடண்டாம். சீமான்னு நெனச்சவன் சர்.சி.வி.ராமனா
தெரிஞ்சான்.
அப்துல்லாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள பயங்கரமான ஆர்வம். ‘’நான்
உனக்கு அரபி கத்துத் தாரேன், நீ எனக்கு இங்கிலீஷ் கத்து கொடு’’ன்னு சொன்னான். ‘’அதுக்கு
முதல்ல உனக்கு இங்கிலீஷ் தெரிஞ்சுருக்கனுமே’’ன்னு உங்களுக்கு தோணுனதுமாதிரி
எனக்கும் தோனுச்சு. ‘’நான் பேசுவதுதான் இங்கிலீஷ்னு நெனக்கிறவன் ஆசையில ஏன்
மண்ணள்ளிப் போடனும்’’னு விட்டுட்டேன். அவன் என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவான், நான்
அவனிடம் அரபியில் பேச வேண்டும் என்பதுதான் டீல்.
ஒருமாதிரியான வேற்றுமொழிப் படங்களைத்தான் சப் டைட்டில்
இல்லாமல் பார்ப்பேன். சப் டைட்டில் இல்லாமல் அரபியை கற்றுக்கொள்வது எனக்கு பெரிய
கஷ்டமாக இருந்தது. ஆனால் அப்துல்லாவிற்கு அப்படி இல்லை. பய பயங்கர ஸ்மார்ட். அதிக
முன்னேற்றம். நம்மா நாக்கு இன்னும் ‘’அக்கிள் மாபி’’ ‘’சுகுல் கலாஸ்’’ ரேஞ்சிலேயே
நிக்குது.
அவனிடம் நிறைய பேசும்படி ஆனது. கிளைண்ட் கூட இருப்பதினால்,
மேனஜரும் ஒர்க் விசயமாக விவாதிப்பதாக நினைத்துக்கொள்வார். ஆனால் மியா கலீபா கலைச்
சேவையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்போம். பேசிய பின்புதான் தெரிந்தது, இன்னும் அப்துல்லா அந்த விசயங்களில் அப்டேட்
ஆகவில்லையென்று. லுசி சென், ஷாசா க்ரெய், சன்னி லியோன்....பற்றி சொல்லி சில வெப்
ஐடிகளையும் கொடுத்திருக்கிறேன்.
செல்லப் பெயராக அவனுக்கு நாங்கள் வைத்திருப்பது ‘’அதிர்ச்சி
அப்துல்லா’’. எதெர்கெடுத்தாலும் அதிர்ச்சியாகி, கண்களை விரித்து ‘’வல்லா...’’என்பான்.
எங்கள் கல்லூரியில் பெண்களும் படிப்பார்கள் என்றபோது ‘’வல்லா..’’ என்று
அதிர்ந்தான் பொருத்துக்கொண்டேன். ‘’வல்லா...உங்க அப்பாவிற்கு ஒரு மனைவிதானா’’
என்று அதிர்ந்தான் பொங்கிவிட்டேன்.
அப்துல்லாவின் அப்பாவிற்கு மூன்று மனைவிகள், சவுதி,
அபுதாபி, பஹ்ரைன் என ஒவ்வொரு நாட்டிலும் ஒன்று. நான்காவது என்று கேள்விப்பட்டால்
மவுத்தாகிவிடுவாய் என்று அவன் அம்மா எச்சரித்ததால் அடங்கியிருப்பதாக
சிரித்துக்கொண்டே சொன்னான். எனக்கு அவன் சிரிப்பைப் பார்த்து ஆச்சிரியமாக
இருந்தது. ‘’எப்படி உன்னால் இதை ஈஸியாக எடுத்துக்கொள்ள முடிகிறது?’’ என்று
கேட்டால், ‘’அது அவர் வாழ்க்கை, அவர் வாழ்கிறார், எந்த விதத்திலும் எங்களுக்கு
குறைவைக்கவில்லை. ஒரு வேளை என் அம்மாவிற்கு வருத்தம் இருக்கலாம், ஆனாலும் அவள்
சம்மதத்துடன்தான் மற்ற திருமணங்களும் நடந்தது’’ என்றான்.
அவன் அப்பா பெரிய பிசினஸ் மேன், கொஞ்சம் பணமுள்ள ஆளும் கூட,
அதனால் மூன்று மனைவிகள், அவர்களின் குழந்தைகளை எந்த குறையின்றி
கவனித்துக்கொள்கிறார். அப்பாவிடம் பணம் இருக்கிறது என்பதற்காக இங்கு யாரும்,
அப்பாவை நம்பி இருப்பதில்லையாம். அவனவன் சம்பாத்தியத்தில்தான் அவனவன் கல்யாணம்
செய்துகொள்ளவேண்டுமாம். நம் நாட்டின் முறைக்கு நேர் எதிர் இங்குள்ள கல்யாண
சம்பர்தாயம். எல்லா செலவும் மாப்பிள்ளயோடது. தனி வீடு, மணமகளுக்கான நகை, கல்யாண
செலவு.... என அனைத்தும். கல்யானத்திற்கே பெரிய தொகை தேவைப்படும் என்பதற்காகவே நான்
வேலக்கு வந்ததாகக் கூறினான் அப்துல்லா.
அடிக்கடி நம்பிக்கை இன்றி ‘’ஒரே கிளாஸ்?, கேள்ஸ்ஸும்
இருப்பாங்களா?’’ என்று கேட்டு அதிர்ந்தவனுக்கு என்னுடய கிளாஸ் குரூப் போட்டோவைக்
காட்டினேன். அதிலிருக்கும் அனைவரையும் பார்த்தபின்பு ‘’இதுக்கு பேசாம நீ
சவுதியிலேயே வந்து படிச்சிருக்கலாம்’’னு சொன்னான். ‘’உனக்கு எத்தனை தம்பி தங்கை’’
என்று கேட்டேன். இரண்டு மூன்று தடவைக்கு மேல் விரல்களை மடித்து மடித்து
எண்ணிக்கொண்டிருந்தான்.
அப்துல்லாவிற்கு இந்தியாவின் கடற்கரை சுற்றுலாத்
தளங்களுக்கு வர மிகவும் ஆசை. கல்யாணமாகி ஹனிமூனுக்கு கோவா வருவதாகச் சொன்னான்.
இப்படித்தான் இருக்கும் ‘’கோவா’’ என்று நெட்டில் சில போட்டோக்களை காண்பித்தேன். அதில்
சில பெண்கள் பிகினியில் குளிப்பது போல் இருந்தது. ‘’இப்படி இருக்குமா?’’ என்று
அதிர்ச்சியாய் கேட்டான். ‘’இது என்ன பிரமாதம் இத விட ஒரு ஸ்பெசல் அய்ட்டம் ஒன்னு
இருக்கு?’’ன்னு ஒன்னொரு போட்டோவைக் காண்பித்தேன். கல்யாணத்திற்கு முன்பாகவே கோவா
வருவதாக சொல்லியிருக்கின்றான்.
-------------------------------------------------------------------------------யாஸிர்
அசனப்பா.
hahahaahahaha
பதிலளிநீக்குஹா ஹா... நிச்சயம் நகைப்பைமட்டுமல்ல நல்ல புரிதலையும் தந்த பதிவு..
பதிலளிநீக்குஹோல்ட் யுவர் ஹார்சஸ் ...
தாய்மொழி அறிவு அற்புதங்கள் செய்ய வல்லது என்பதைத்தான் குறிப்பிட்டேன்
நல்ல எழுத்து நடை. இலகுவான அனுபவப்பகிர்வு. அருமை நண்பரே, அப்துல்லாவுக்கும் வாழ்த்துக்கள்! ��
பதிலளிநீக்குGood.
பதிலளிநீக்குSuper..
பதிலளிநீக்குsemmmmmaaa...........
பதிலளிநீக்குசூப்பரா எழுதிருக்கீங்க.. சீமான் ‘’பச்சை தமிழன்’’ என்றால், அப்துல்லா ‘’அடர் பச்சை அரபி’’. (ஹாஹா..)
பதிலளிநீக்குசூப்பர். வாழ்க அப்துல்லா!
பதிலளிநீக்குசூப்பர். வாழ்க அப்துல்லா!
பதிலளிநீக்குசூப்பரா எழுதிருக்கீங்க semmaa Bro' ... ( @Parisal - Thanks for sharing)
பதிலளிநீக்குநல்ல நடை அருமை !
பதிலளிநீக்குgreat brother :) good writeup :)
பதிலளிநீக்குநல்லா, சுவாரஸ்யமாக எழுதியிருக்கீங்க!
பதிலளிநீக்கு"வல்லா!"
பதிலளிநீக்கு😄😄😄😄😄
மிக அருமை.....
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு‘’வல்லா...உங்க அப்பாவிற்கு ஒரு மனைவிதானா’’ என்று அதிர்ந்தான் பொங்கிவிட்டேன். # இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.
பதிலளிநீக்குரொம்ப சிறப்பான பதிவு ப்ரோ...������
பதிலளிநீக்குரெண்டு விஷயம்..
பதிலளிநீக்குஜித்தாவில் ஐகியா வந்துடுச்சா?
மற்றும்..
அந்த போட்டோவை எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்களேன்..
எப்படி யாசீர்? On a serious note.. எந்த ஆத்து தண்ணி குடிச்சு வளந்தீங்க..
http://www.ikea.com/sa/en/store/jeddah_al_salam/indexPage
நீக்கு//இத விட ஒரு ஸ்பெசல் அய்ட்டம் ஒன்னு இருக்கு?’’ன்னு ஒன்னொரு போட்டோவைக் காண்பித்தேன்.// http://www.ikea.com/sa/en/store/jeddah_al_salam/indexPage
பதிலளிநீக்குஅதுக்கு இதுதான் பதிலா, சரியான குசும்பப்பா :)