நம் அனைவரின் மீதும் இறைவனின், சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
சிலரை நமக்கு உடனே பிடிக்கும், சிலரை போக, போக பிடிக்கும்,
அதே போல ஒரு சிலரை, அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட பிடிக்கவே பிடிக்காது.
அதுக்கு, ஒருத்தன பிடிப்பதற்கு எப்படி காரணம் சொல்லமுடியாதோ அதேமாதிரித்தான் சில
பேரை பிடிக்காததற்கும் காரணம் சொல்லமுடியாது, அப்படீன்னு சொல்லியெல்லாம் எஸ்கேப்
ஆக நான் விரும்பல, அந்த காரணத்த இந்த பதிவின் இறுதியில் கண்டு பிடித்தே தீருவது
என்று கங்கணம் கட்டிக்கொண்டு இரங்கியுள்ளேன். எத்தன நாளைக்குத்தான் நாம, நமக்கு
பிடித்த பயபுள்ளைங்கலைப் பற்றியே எழுதுவது, ஒரு வித்தியாசத்திற்காக, எனக்கு
பிடிக்கவே பிடிக்காத ஒருவனைப் பற்றிய பதிவு இது.
“ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்ற வாக்கின்படி, நானும் பல முறை யோசனை செய்து
பார்த்துவிட்டேன், என்னை நானே கேட்டும் பார்த்தேன், அப்படி என்ன அவன் நமக்கு
செய்துவிட்டான் அவனை எனக்கு இந்த அளவிற்கு பிடிக்காமல் போனதற்கு?. அவனுடைய பேச்சு
என் நண்பர் கூட்டத்தில் எழும் போதெல்லாம், எழுந்து விடத் தோனுவது ஏன்?. ஒரு
பிடியும் கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட அவன் மூலமாகத்தான் என்னுடைய கேரியர் ஆரம்பித்தது
என்று கூட சொல்லலாம். ஒரே கம்பெனியில் வேலை செய்தோம், ஆனால் வேறு, வேறு திட்டங்களில்
இருந்தோம். வேறு, வேறான வேலையும் கூட. அவன் இருந்த திட்டத்தில் இருந்த எனது மற்ற
நண்பர்களைப் பார்க்கும் போது, இவனைப் பற்றிய செய்திகள் மேலோங்கும், காரணம் இவன் ஒரு
வெட்டி பந்தா, வெள்ங்காத சீண் பார்ட்டி. தன்னை ஒரு பெரிய பண்ணையார் வீட்டுப் பையன்
லெவலுக்கு இவன் விடும் கதைகளை என்னிடம் அவர்கள் கூறுவதுண்டு. ஆனாலும் நான், அவனை
தெரிந்தவன் போல் காட்டிக்கொள்வதில்லை. மேலும் எனக்கு அவனைப் பற்றி தெரியுமேயொழிய
அவனுடய குடும்பம் பண்ணையார் குடும்பமா? இல்ல பரதேசி குடும்பமா என்பது எனக்கு
அறியாது.
இவன் விடும் ஸீன்களை கேட்டு நம்பிய சில பேர், வாயடைத்துப்
போய் நின்றது கூட உண்டு, அதனை நேரில் கண்டு நான் ஆச்சர்யப்பட்டதுவும் உண்டு. அந்த
கம்பெனியில சில பொண்ணுங்களும் வேலை செய்தார்கள், கேட்கவா வேணும், பச்சத்தண்ணியில
பாயாசம் போடுறவன், பாக்கெட் பால் கெடச்சா சும்மாவா விடுவான், சும்மா, ஆத்து,
ஆத்துன்னு அவன் குல பெருமைகளை எல்லாம் ஆத்திட்டான். அதுவும் சுமாரான பிகரா
இருந்தாலும் பரவாயில்லை எல்லாம் அட்டு பிகருங்கன்னு மனசாட்சிய கொன்னுட்டு என்னால
சொல்லமுடியாது, ஏன்னா கரெக்ட் பண்ணுர கியூவியல் அவன் முதல் வரிசையில் முதலில்
நின்றாலும், நான் 4 வது லைனில் நின்றிருப்பேன். ஆனால், அவன் முதலில் நிற்பதற்கான
தகுதி அவனிடத்தில் இருந்தது அதில் மட்டும் நான் அவனை குறை கூறப்போவதில்லை
ஏனென்றால் அவன் உண்மையிலேயே கொஞ்சம் அழகு. அந்த மூலதனத்தினை பயன்படுத்திக்கொண்டு
இலாபம் அடைந்ததாகக் கூட அதிகாரப்பூர்வ தகவல் உண்டு. அதையெல்லாம் கேட்கும் போது, “சரி
அவனுக்கு பல் இருக்கு பக்கோடா சாப்பிடுகிறான்” என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன்.
அவனை பார்த்தவுடனேயே பிடிக்காமல் போன எனக்கு, அவனின்
இந்தமாதிரியான ஓவர் பில்டப்களும், ஸீன்களும் என்னை அவன் பக்கம் போகாமல், இருந்த இடைவெளியினை
அதிகப்படுத்தியது. ஒருமுறை என் அப்பாவை அவன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, அவன்
என்னமோ தானே, அந்த கம்பெனியை தூக்கி நிறுத்துவதாகவும், என்னை நம்பியே அவன்
இருக்கும் திட்டம் நடைபெருவதாகவும் அதற்கு காரணம் நான் சைட் இஞ்சினியராக
இருப்பதால் தான், உங்கள் பையன் ஆபிஸினுள் வேலை செய்வதால் அத்தனைக்கு பெரியதாக
சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என போகிற போக்கில் அவனால் முடிந்த அளவுக்கு அள்ளிப் போட்டுவிட்டு
போக, அதன் விளைவு, அடுத்த அரை மணி நேரத்தில் தொலைபேசியில் தெரிந்தது. “உடனே உன்
திட்டமேலாலரிடம் கேட்டு சைட்டுக்கு மாறிவிடு, ஆபிஸ் வேலை எல்லாம் வேணாம்” என்று என் தகப்பனார் கொந்தளிக்க அவன் மேல் கொஞ்ச நாள்
கொலைவெறியில இருந்தேன்.
கொஞ்ச காசை சுருட்டிக்கொண்டு, இதனை விட அதிக சம்பளம்
கிடைத்தவுடன் அவன் கம்பெனிக்கு கம்பி நீட்டிவிட, அவனுடனான தொடர்பு எனக்கு அரிதானது.
எப்போதாவது நேரில் காண்பதுண்டு, பார்த்தால் என் அருகில் வந்து பழைய கம்பெனியைப்
பற்றி கேட்டு, அந்த மேலாளரிடம் நேற்றுதான் பேசினேன் என்று என்னிடமே அள்ளிவிடுவான்.
நானும் ஓ, அப்படியா என்று நழுவி விடுவேன். அடிக்கடி கம்பெனி மாறினால், கேரியருக்கு
நல்லது இல்லை என எண்ணி அந்த கம்பெனியில் சுமார் 4 வருடங்கள் இருந்தேன். அதற்குள்
அவன் 4 கம்பெனி மாறி என்னிலிருந்து ஒருபடி மேலோங்கியே இருந்தான்.
பிற்பாடாக அவனுடைய தொடர்பு முற்றிலுமாக நின்றாலும்,
மூன்றாவது நபர் மூலமாக அவனுடைய செய்திகளை அறிவதுண்டு. அவனுடய வேலை, வாழ்கைத்
தரத்தினைப் பார்த்து நான் கொஞ்சம் பொறாமைப்பட்டதும் உண்டு. சில சமயங்களில்
எதிர்காலத்தினை கணக்கில் வைத்து, நாம் அன்று செய்தது தவறு என்று அவனுடன் என்னை ஒப்பிட்டு
நொந்ததுவும் உண்டு.
பிந்தய நாட்களில் என்னை அவனுடன் ஒப்பிட்டு பார்க்க்கும்
பழக்கம் அதிகமாகிப் போனது. அதனால் அவனை முற்றிலும் ஒதுக்கவேண்டும், அல்லது
ஒதுங்கிவிடவேண்டும் என்று எண்ணி அவனுக்கும் எனக்கும் உள்ள நடுத்தர நண்பர்களின்
நட்பினைக்கூட குறைத்துக்கொண்டேன். விதி விட்டது யாரை?, நாம ஓடி போனாலும், சனியன் கால்
டேக்ஸி பிடிச்சு நமக்கு முன்னால போய் நிற்கும், அது மாதிரி நானே வேண்டாம் என்று
ஒதுங்கினாலும், அவனுடைய எல்லா அப்டேட்களும் என்னிடம் வந்து சேர்ந்து என்னை பாடாய்
படுத்துகின்றது. கடந்தவாரமும் அதே போலத்தான் ஆகிவிட்டது, யாரோ ஒருத்தன், தன்னை
அறிமுகப்படுத்திக்கொள்ள, என்னை நானும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடனே அவன்
கேட்டான் “அப்படீன்னா, உங்களுக்கு _____________ அவனைத் தெரிந்திருக்குமே?.”........................................................................ நீண்ட அமைதிக்குப்
பின்பு “ஆம் தெரியும், ஆனா ரொம்ப பழக்கமில்லை” என்று கூறி இடத்தினை காலிசெய்தேன்.
ஏன் நாம் நம்மை இவனுடன் இப்படி ஒப்பிட்டு பார்கிறோம் என்று
எனக்கே ரொம்ப அசிங்கமாகப்பட்டது. ஆனா ஒரு விசயம், அவனை அறிந்த எவனும் அவனை
கெட்டவன் என்று சொல்லவில்லை. மனிதன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான், ஏன்
நீ என்ன யோக்கியமா, நீ அள்ளிவிடாதவனா?, பொண்ணுங்ககிட்ட இளியாதவனா? என்ற கேள்வியை
நான் கேட்டுப்பார்த்தேன். பதில் “ச்சீ நாம இவ்வளவு மோசமா” என்று தோனியது. ஒப்பிட்டு பார்பதினை கொஞ்சம், கொஞ்சமாக
நான் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றேன், எப்போது என்றால், கீழ்காணுவதை
கண்டபோதிலிருந்து.
--------------------------------------------------------------------------யாஸிர்.
அருமையான பதிவு... குறிப்பாக அந்த கடைசி வரிகள்.
பதிலளிநீக்கு@ராபர்ட்,
நீக்குகடைசி வரின்னா "------------------யாஸிர்" என்று இருக்குதே அதுவா????
தன்னிலை விளக்கம் சரளமான நடை!இறுதியில் அருமையான பொன்மொழி!
பதிலளிநீக்குசா இராமாநுசம்