நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
கவிதை இதுவரை எழுதியதில்லை,
எழுதுமளவிற்கு எவளையும் கண்டதில்லை.
பாவை நீ, என் மனையாளாகிப் போனாய்,
பாவம் நான் பாவலனாகிப் போனேன்.
உறவாய் நீயிருந்தும் – நாம்
உறையாடிய நாளில்லை.
முறைப்பெண்ணாய் நீயிருந்தும் – ஏனோ
மோகம்தான் வந்ததில்லை.
காணும் தூரத்தில் நீயிருந்தும்,
காதல் அன்று எனக்கில்லை.
சொந்தத்தில் இல்லை (திரு)மணம் – என
சொல்லிக்கொண்டிருந்த அக்கணம்,
சொக்கித்தான் போனதடி பாவிமனம் – உன்,
சுற்றும் விழியழகினைக் கண்டவுடன்.
பேருந்துக்கா நின்றிருந்தேன், பேருந்து நிலையத்தில்?
பேரழகி உனைக்காணவே - எனும்
போதம்தான் இன்னும் உனக்கு புலப்படவில்லையோ?
ஆயிரமாயிரம் நன்றியுரைப்பேன்
அனைத்து சொந்தக்கார நல்வுள்ளங்களுக்கும்
அழகே!, உன்னை எனதாக்கியமைக்கு.
துணையே!, யுன் துதிபாட,
துடிக்கிறேன் – இருந்தும், முதல் முறையென்பதால்,
தவிக்கிறேன், வார்த்தைகளைத் தேடித் தேடி.
எதையெடுத்துறைப்பேன் இவ்வுலகிற்கு
என்னவள், இன்னவளென்று. - அவையெல்லாம்
எண்ணிக்கையில் அடங்கியிருந்தால்,
எளிதாய் போயிருக்கும்.
கோடி கொட்டிக் கொடுப்பினும்,
கிட்டாத, உன் குணம் அறிந்தும் - நான்
கேலிபேசி, கடுப்பேற்றினும் – வைத்த அன்பு
குறையாது என்மேல் எப்போதும்.
கவலை மறக்கச் செய்யும்- உன்
கற்கண்டு குரலின் கனிவுப் பேச்சு.
அறியாது பேசிபின் நா கடித்து, கூறும்
“அஸ்தஹ் பிருல்லாஹ்’
எரிவு கொண்டினும், நான் ரசிக்கும்
“என்னை எவ்வளவு பிடிக்கும்?” கேள்வி,
கிருக்கிக்கொண்டிருக்கும் இந்த கிருக்கலையும்
கவிதையின் பெயரால் வாசிக்கும் என் வாசகியே
எவர் அன்பு உயர்ந்தது என்ற எதிரிடையில்
எப்போதும் எனை வீழ்த்தி வெல்பவளே
என எத்தனை எத்தனை காரணம் கூற
நான் கொடுத்துவைத்தவன் - என
எண்ணி, எண்ணி பெருமைகொள்ள.
உன் ஜனனத்தால் – என்
ஜென்மத்தை மீட்டவளே
மறவேனோ இந்நாளை – என்
மனைவியின் பிறந்த நாளை.
என்னைப் பெற்றவரின் மருமகளே,
என் மாமியின் மகளே,
என் மானசீக காதலியே,
தாய்மொழி தமிழ் வாழும் வரை
தரணியில் நீ வாழ்க,
வாழிய பல்லாண்டு வாழிய வாழியவே.
----------------------------------------------------------------------------------யாஸிர்.
கவித,கவித! அருவியாக் கொட்டுது, மானே,தேனே அங்கங்கே போட்டுகுடனும்.
பதிலளிநீக்குஅடுத்த பிறந்தநாளைக்கு ஞாபகப்படுத்தி சேத்துக்குறேன்.
நீக்குஅருமை. யாசிர். ப்ரவினுக்கு ஒரு போட்டி ரெடி.
பதிலளிநீக்குநான் ஏதோ வைரமுத்து, வாலி லெவல்லுக்கு டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன். மகா கவிஞர் பிரவின் அளவுக்கு வருவதற்கு எனக்கு ஆசையும் இல்லை, யோக்கியதையும் இல்லை.
நீக்கு