வியாழன், ஜூன் 28, 2012

ஆடைக் கலா(அப)ச்சாரம்.


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
1980 களில் ஒரு பெண் கல்லூரிக்குப் போகும் போது, தன்னுடய தாயாரிடம் கேட்பதுண்டு, “அம்மா நான் இன்னைக்கு தாவணி உடுத்தவா? இல்லை சேலை உடுத்தவா?. இந்த கலாச்சாரம் 1990-2000 க்கு இடைப்பட்ட காலங்களில் மாற்றம் கண்டு, ஒரு பெண் தன் தாயிடம் “அம்மா நான் இன்னைக்கு சுடிதார் போடவா? இல்லை ஜீன்ஸ் போடவா? என்றானது. ஆனால் இந்த காலகட்டத்தில் ஒரு பெண் அம்மாவிடம் கேட்பதற்கு முன்பாக அம்மாவே கெஞ்சிக்கொண்டிருப்பாள் “ஏதாவது கொஞ்சமாவது போட்டுக்கிட்டு போமா.

பெண்களைப் பொருத்தவரை, பெண்ணுரிமை என்பது பாதி உடை அணிவது என்பதாகிவிட்டது. காலத்தின் மாற்றம் என்று சொல்லுபவனை கல்லால் அடித்தே சாகடிக்கவேண்டும். கால மாற்றம் என்பது பெண்களுக்கு மட்டும் தானா? ஏன் ஆண்களுக்கு இல்லையா?. ஆண்களின் மாற்றம் என்பது கோமளத்தில் இருந்து வேஷ்டியாக மாறி இப்போது பேண்ட் என்று முற்றும் மூடிய ஆடையாக உருமாறியிருக்கின்றது. பெண்களுக்கு அப்படியா? சேலை, ஸ்கெர்ட்டாகி இப்போது ஜட்டிலெவலுக்கு வந்திருக்கின்றது.

துபாய், 75% வேற்று நாட்டு மக்கள் மட்டுமே நிரம்பிவழியும் பூமி. இங்கு ஒரு தியேட்டரில் டிரஸ் கோடு உண்டு, எந்தமாதிரி என்றாள், யார் வேண்டுமானாலும் அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டுவரலாம், அல்லது அதை கையில் எடுத்துக் கொண்டு, அம்மணமாகக் கூட வரலாம், ஆனால் முழுதாக மூடிய கைலியோ, அல்லது வேஷ்டியோ உடுத்திக்கொண்டு வரக்கூடாது என்பது. என்ன கொடும சார் இது. மேற்கத்திய நாட்டுப் பெண்கள், அவர்களது நாட்டில் அணியும் ஆடையை விட ரொம்ப குறைவு, இங்கு அணிந்து கொண்டு திரியும் ஆடைகள். ஆட்டுனா, அவிழ்ந்து விழுந்து விடும், ஆட்டாவிட்டாள், அதுவே விழுந்திரும், என்றாக இருக்கிறது அவர்களின் ஆடை.
ஒரு முறை துபாய் மெட்ரோவில் ஏறிய போது, ஒரு குடும்பம் என்னொப்பம் ஏறியது, இரண்டு மகள்களுடன் ஏறிய அந்த தந்தையின் கையில் மட்டும் ஆறு, ஏழு கைப்பைகள் இருக்கும், அதை வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை. அவர் மனைவிக்கு உட்கார இடம் கிடைத்தும் கூட, அந்த வயதிலும் லிப்ஸ்டிக்கை அப்பியபடி இருந்த அவள், அந்த கைப்பைகளைப் பற்றிய கவலையின்றியே இருந்தார். அவர்களது இரண்டு மகள்களின் ஆடை என்பது அத்தனை மோசம், காற்று ஓங்கு அடிச்சா, ஒன்றும் காணாது போய்விடும் அளவிற்குத்தான் இருந்தது. அவர்களின் மூத்த மகள் எனக்கு எதிர் ஸீட், மேலாடை, என் கைக்குட்டை அளவை விட குறைவு. இரண்டாவது மகள் மேலாடை பராவாயில்லை என்ற அளவில் இருந்தது. அவளுக்கு உட்கார இடம் கிடைக்காததால், எனக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அவளின் அம்மா மடியில் உட்கார்ந்தாள். என் மூஞ்சு அவள் முதுகை ஒட்டியிருந்தது. அப்போது தான் பார்த்தேன் பின்னாடி ஒன்னுமேயில்லை, சத்தியமா சொல்லுகிறேன், அந்த ஒரு மணி நேர ரயில் பயணத்தில் அந்த மேலாடை எப்படி நிற்கின்றது, எங்கு முடிச்சு இருக்கிறது என்று கண்டுபிடிக்க நான் படாத பாடு பட்டேன், ஆனா கடைசி வரை என்னால் அதை கண்டே பிடிக்க முடியவில்லை.

இப்போது டுவிட்டர் எனும் சமுக வளைதளத்தில், சிலரது முயற்சியால் துபாயில் டிரஸ் கோடு எனும் ஆடை கலாச்சாரத்தினைப் பற்றி விழுப்புணர்ச்சி ஏற்படுத்த, அதற்கு ஆதரவாக அதிக மக்கள் விருப்பம் தெரிவிக்க, இப்போது அரசாங்கம் கையில் சாட்டையை எடுத்துள்ளது. மேற்கத்திய பெண்கள் இந்தமாதிரியான ஆடை அணியவதற்கு சொல்லும் காரணம் இங்குள்ள வெப்பமே என்றாலும், அவர்களின் இடிப்பில் கைபிடித்து நிற்கக்கூடிய கணவன் கோர்ட், சூட் போட்டு நிற்கமுடிகிறது என்றாள், ஏன் இவர்களால் முடியாது?. முன்னாடி டிரஸ் கோடு என்றாள் ஒழுக்கமான ஆடை அணிவது பற்றியாக இருந்தது, இப்போது டிரஸ் கோடு என்றாள் டிரஸ் போடு என்ற அர்த்தமாகிவிட்டது பெரிய அபத்தம்.
இந்தியாவிலும் இந்த மாதிரியான கலாச்சாரங்கள் வர ஆரம்பித்துவிட்டது, நான் கண்டதாக, மேல் கூறிய சம்பவம் ஒரு வட நாட்டு இந்திய குடும்பமே!. பெங்களூர், மும்பை போன்ற நகரங்கள் எல்லாம் அத்தனை கொடுமை. அண்டர்வியர் அணிந்து நடக்கும் ஒரு ஆணுக்கு இருக்கும் கூச்சம் கொஞ்சம் கூட, உள்ளாடை தெரிய நடக்கும் பெண்களுக்கு இல்லை. தொடைதெரிய நடப்பதா நாகரீகம்?. மால்களில் இந்த கொடுமைகள் ரொம்ப அதிகம். மாலுக்கு வரும் சில பெண்களுக்கு ஏனோ பீச்சுக்கு குளிக்க வருவது போன்ற நினைப்பில் டிரஸ் போட்டுக்கொண்டு வருகின்றார்கள்.

இதற்கு முந்தய கால கட்டங்களில், பெண்கள் வயதுக்கு வரும் வயது 20தை ஒட்டி இருந்தது. ஆனால், காலமாற்றம், உணவு பழக்க மாற்றம், வானிலை மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம் என எல்லா மாற்றத்தினாலும் இப்போது பெண்கள் 15ஐ ஒட்டியே வயதுக்கு வந்துவிடுகின்றார்கள். ஆனால் நம் நாட்டில் இன்னும் அதிக பள்ளிக்கூடங்களில் அந்த பாழாய் போன குட்டப்பாவாடை கலாச்சாரம் மட்டும் ஓயவில்லை. மாற்றங்கள் வரத்தான் வேண்டும், எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். செயல் படுத்தத்தான் வேண்டும்.

துபாயில் இந்த டிரஸ் கோடு சட்டத்திற்கு, “இது இங்கு வந்தவர்களை அடிமையாக்கும் செயல், “முட்டாள்தனமானது என்று வரும் எதிர்மறைவிமர்சனங்களுக்கு ஒருவரின் பதில் “நாம் ஒரு வீட்டிற்கு விருந்து சாப்பிட செல்கிறோம், அங்கு வாசற்படியில் “உங்கள் காலணிகளை இங்கு களட்டவும் என எழுதியிருக்கின்றது, அங்கு நீங்கள் உங்களது செருப்பினை விடுகின்றீர்கள், வரவேற்பரையில் “புகை பிடிக்காதீர் என எழுதியுள்ளது, ஆகையால் நீங்கள் அதை தவிர்த்துவிடுகின்றீர்கள். இது எப்படி சாத்தியமோ அதே போல இதுவும் சாத்தியமே.

----------------------------------------------------------------------------------யாஸிர். 

4 கருத்துகள்:

 1. நல்ல விஷயம்தான். ன் நான் ட்ரெஸ் கோட் ஃபாலோ பண்றதை சொன்னேன். அப்போ இனிமே மால்ல போயி ரிலாக்ஸ் பண்ண மாட்டீங்களா!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாலு பேரு நல்லாயிருக்கனுமுன்னா நாம செய்ற எதுவும் தப்பில்லை.

   நீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  என‌க்குள் இருக்கும் ஆதங்கமும் உங்களைப்போன்றுதான் சகோ.இங்கே பெண்கள் ஆண்களின் குறைந்த பட்ச உள்ளாடைகளை தங்களின் அதிகப்பட்ச மேலாடையாக ஆக்கிகொண்டு வலம் வருகின்றார்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று பலமுறை நான் என் நண்பர்களிடத்தில் குமுறியதுண்டு.
  இவளுங்களைப்போல நாமும் அரை நிர்வாணமாக திரிவோம் அப்படியாவது இந்த அரசாங்கம் ஒரு ஆடை கட்டுபாடு வைக்கும் என்றும் நினைப்பதுண்டு.
  நீ யோக்கியனா? என்று என்னைப்பார்த்து கேட்காதீர்கள் சகோ. யோக்கியனாக இருக்க முயற்சி செய்கிறேன் ஆனால் இந்த முக்கால் நிர்வாணிகள்(அரை நிர்வாணம் என்பது முழு பொய்) விடவேமாட்டிகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம பாதியா திரிஞ்சா "ஓஹ் ஷிட்" ன்னு சொல்லும் இதே உலகம், பெண்கள் பாதியாக திரியும் போது "ஓஹ் ஸ்மார்ட்" ன்னு சொல்லும்.

   நீக்கு