சனி, நவம்பர் 26, 2011

அடிடா அவன, உதடா அவன...(பளார் பவார்)


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

ஹர்விந்தர் சிங், இவரை பாராட்டுவதா, இல்லை நம் நாட்டினுடய பாதுகாப்பு பற்றி குறை சொல்லுவதா இல்லை, அன்னா ஹஸாரே சொன்ன கமெண்டுக்கு கண்டனம் தெரிவிப்பதா என்றே புரியவில்லை.

சரத் பவார் சொன்ன சொல்லுக்கு கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதத்திற்கு முன்பே அடி வாங்கியிருக்க வேண்டும். இவருக்கும் ராமதாசுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. சோனியாவை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி அப்போதைய சபாநாயகர் சங்மாவுடன் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி இன்று அதே காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் கொள்கையில்லா அரசியல் தலைவர்.

ஹர்விந்தர் சிங் சொன்னதுல ஒரு உண்மையிருக்கு, விலைவாசி உயர்வுக்கு கண்டிப்பா இவரும் ஒரு முக்கிய காரணம் . இவரிடத்திலுள்ள தனித்தன்மையே 100க்கு 95 கேள்விக்கு “ஐசா நை, “மாலும் நகி (அப்படியில்லை, தெரியவில்லை) என்ற இரண்டு பதில்கள் மட்டும் வரும். அடிவாங்கின அன்றும் கூட பத்திரிக்கையாளருக்கு அந்த பதிலைமட்டுமே சொல்லிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அதில் கடுப்பாகித்தான் என்னவோ, பத்திரிக்கையாளர்கள் கூட, தாக்கியவருக்கு எதிராக ஒரு செயலிலும் ஈடுபட்வில்லை. இன்றும் வடக்கிலுள்ள பத்திரிக்கைகள் அதிகமாக தப்பாக எதுவும் எழுதவில்லை.

ஆறுமாசத்துக்கு முன்னாடியே அடிபட்டிருக்கனும்னு எதுக்கு சொன்னனு சொல்ல்லியே, பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஒருவர் சக்கரை விலையுயர்வைப் பற்றி கேட்க, அதற்கு இவரின் பதில், “இந்திய மக்கள் இப்போது அதிக அளவில் சர்கரை எடுத்துக்கொள்கின்றார்கள், ஆகவே தான் இந்த விலை உயர்வு. மேலும் விலை குறைய மக்கள் அனைவரும் இனி டீ, காபியில் பாதி சீனி போட்டுகுடிக்கவும். இப்படி சொன்னதற்கான அடியாகத்தான் நான் இதை எடுத்துக்கொள்கின்றேன்.

ஒரு தனிமனிதன் மத்திய அமைச்சரையே, அதுவும் ஒரு தேசிய கட்சியின் தலைவரை பளேருன்னு கன்னத்துல் குடுத்திருந்திருக்கான்னா அப்போ அவன் எவ்வளவு வெம்பிப்போயிருந்திருக்கனும். கண்டிப்பா இந்த அடி, நாட்டப்பத்தி சிந்திக்கின்ற ஒவ்வொருவனும் கொடுத்த அடி. அடிபட்ட பின்னாடியாவது ரேட்டு குறையுதானு பார்க்கவேண்டாம் (ஏன்னா அது குறையாது) புத்திவருதான்னு பார்க்கலாம்.

அதே நேரத்துல, நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்குதுன்னு நமக்கு இப்ப விழங்குகின்றது. ஒரு சாதாரண மனிதனின் தாக்குதலில் இருந்து ஒரு அமைச்சரைக் காப்பாற்ற தவறிய நமக்கு, பாக்கிஸ்தாக்காரனிடம் இருந்து நாட்ட எப்படி காப்பாற்ற?. இந்த செய்தி கேள்விப்பட உடனே, ஓஹோ இவ்வளவுதான் இவனுங்கன்னு நினைத்து, 10 பேர் கொண்ட குழுவ அமைச்சி, மறுபடியும் நாடாளுமன்றத்துக்கு வந்திரப்போரானுங்க. ஏற்கனவே ஒரு அமைச்சரை நீதிமன்றம் முன்னாடி அடித்தவர் இவர் என்பது கூடுதல் தகவல், சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் இதேபோல் செயலில் ஈடுபட்போவதாக அரிவித்துள்ளார். (அப்போ அடுத்து ப.சி, இல்ல பிரனாப், இல்ல இல்ல அவங்களுக்கெல்லாம் சீனியர் மன்மோகன் சிங்க்தான்). பன்னிங்க தான் படையோட வரும், ஆனா சிங்கம் "சிங்"கிலாத்தான் வரும்.

அந்த மனிதர், சரத் பவாரை ஒரே ஒரு அடிதான் அடித்தாரா? என்று கேட்டு தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார் அன்னா ஹசாரே. அவர் கேட்டதுல என்ன தப்புன்னு பலபேர் கேட்கலாம், ஒரு காந்தியவாதியாக இருந்து கொண்டு இப்படி சொல்லக் கூடாது. அது காந்தியத்திற்கு இழுக்கு.
.
.
.
அதே நாம கேட்கலாம்

என்ன அந்த மனிதர், சரத் பவாரை ஒரே ஒரு அடிதான் அடித்தாரா?

ஏன்னா நாம “நேதாஜிவாதி


-----------------------------------------------------------------------------------யாஸிர்

வியாழன், நவம்பர் 24, 2011

நெஞ்சு பொறுக்கதில்லையே (Dam999).......


நம் அனைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக...

சத்தியமாக இது சினிமா விமர்சனம் இல்லை. அப்படி எண்ணிவந்தவர்களிடம் தங்களின் மேன்மையான நிமிடத்தினை எடுத்துக்கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு பொதுவாக சினிமா நாட்டம் அதிகம், ஆனால் நான் பிளாக் தொடங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட போது, கண்டிப்பாக சினிமா விமர்சனமோ, அல்லது என் பிடித்தமான நடிகர் (அஜித்) பற்றியோ எதுவும் எழுதக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏன்னா, கிட்டத்தட்ட என் நண்பர்களுடனான விவாதங்களில் ஆகட்டும், கேலிப் பேச்சிகளிலாகட்டும் இந்த இரண்டு விஷயங்களே மேலோங்கியிருக்கும். பிளாக்கிலும் இந்த மாதிரியான விசயத்தில் விரயம் செய்வதில் என் மனம் உடன்படவில்லை. சினிமா சம்பந்தமான விசயங்களின் மூலமாகத்தான் அதிக பார்வையாளர்களை கவரமுடடியும் தான், இருந்தாலும் அவ்விதமான பார்வையாளர்களின் மூலமாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

கடந்த சில நாட்களாகவே, Dam999 படத்தைப் பற்றியதான ஒரு செய்திகள், பத்திரிக்கைகளில் ஆகட்டும், தொலைக்காட்சிகளில் ஆகட்டும் ஆக்கிரமைத்துக் கொண்டிருக்கின்றன. முல்லை பெரியார் அணைக்கட்டு சம்பந்தமான ஒரு சர்சைக்குரிய படம். எனக்கு தெரிந்து முதல் முதலில் நாடாளுமன்றத்தில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒன்றாக இணைந்து ஒரு விசயத்திற்காக போராடுகின்றது என்றால் அது இந்த படத்தின் தடை பற்றியது தான். இருவரையும் இணைத்த்தற்காக வேண்டுமென்றால் இந்த பட்த்தினைப் பற்றி பாராட்டிக்கொள்ளலாம்.

நான் தமிழ் சினிமாவைவிட அதிகளவு மதிக்கும் சினிமா, இயக்குனர்கள், ரசிகர்கள் அனைவரும் மலையாள மொழியினரே. ஒரு மேன்மையான சினிமாவை கொடுக்கமுடியும் என்றால், அது கண்டிப்பாக அந்த மொழிக்காரர்களால் தான் முடியும் என்பது என் நிலைப்பாடு. தமிழ் சினிமாவிலும் இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அளவுக்கு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை.

நம்மாளுங்களுக்கு எப்போதுமே கண்ணுகெட்டதுக்கப்புரம் தான் சூரிய நமஸ்காரம். இந்த படத்தைப் பற்றியதாக இருக்கட்டும், அல்லது கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியதாக இருக்கட்டும், முதலிலோ அல்லது பாதியிலோ போராட யவனும் வரமாட்டான். சாகுர நேரத்துல சங்கரா சங்கரான்னா எப்படி?. இவ்வளவு தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தினைப் பற்றி நமக்கு இப்போதுதான் தெரிகின்றது என்பது வெக்கக்கேடு மற்றும் நம்பும்படியானதாக இல்லை. கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சென்னையில் தான் நடந்திருக்க வேண்டும், அதற்கான வசதிகள் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகமாக உள்ளது. ஹிந்தி திரைப்படத்தின் முக்காவாசி கிராபிக்ஸ், எடிடிங் எல்லாம் சென்னையில் நடந்துகொண்டிருக்கும் போது, ஏன் அவதார் படத்தின் கிராபிக்ஸே சென்னை நடந்திருக்கும் போது இது மட்டும் எப்படி வேறுமாநிலத்தில் நடந்திருக்க முடியும்?

சரி விஷயத்துக்கு வருவோம்.....

இன்று என் முகப்பு புத்தகத்தில், “டாம்999 படத்தினை இந்தியாவில் தடை செய்யுன்னு ஒரு வாக்கியத்தை பதிவுசெய்திருந்தேன். அதை கண்டு எனது ஒரு மலையாள நண்பர், அவருடைய முகப்பு புத்தகத்தில் அதிகமாக உலாவிக்கொண்டிருந்த ஒரு விசயத்தினை எனக்கு கூகுள் மூலமாக மொழிமாற்றம் செய்து அனுப்பியிருந்தான்.

அது “டாம் உடைந்து நிறைய மலையாளிகள் இறந்து போனாலும், அவர்களின் அடுத்த தலைமுறை சிறிது காலமானாலும் திரும்ப வரும், ஆனால் தமிழர்களின் 5 மாவட்டங்களில் நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு, பாலைவனமாகும், அவர்களின் இந்த தலைமுறைகள் பட்டினியால் உயிர்விடுவார்கள். மேலும் உடைந்த இடத்தில் மீண்டும் அணைகட்ட ஒரு மலையாளிகளும் அனுமதிக்கமாட்டார்கள். தமிழகத்துக்கு வேரு எந்த மாநிலமும் தண்ணீர் தராது. முல்லை பெரியார் அணைக்கட்டு ஒரு பாடமாக அமைந்து விடும். கேரள அரசு புதிய அணைகட்டியிலிருந்து நீர் கொடுக்க தயாராக உள்ளது. ஆகவே தமிழர்களே சிந்திப்பீர்”

மலையாளி நம்மள சிந்திக்க சொல்லுர அளவுக்கு ஆகிடிச்சு நம்ம நிலம.

ஒரு விவகாரமான விசயம் சர்சயில் நீதிமன்றத்தில் இருக்கும் போது அதை படமாக எடுக்க எத்தனை துணிவு?. 
இன்னும் பெரியார் அணையைப் பற்றிய ஆய்வரிக்கை சமர்பிக்கப்படாத நிலையில் இவர்கள் யார், அதை வலிமையில்லை என்று சொல்ல?. 
எத்தனையோ வருடங்களுக்கு முன்னறே ஆய்வு செய்ய தொடங்கிய கேரள அரசாங்கம், இன்னமுமா இது உடைந்து போகும் என்று வாய்வழியாக சொல்லிக் கொண்டிருக்கும் விசயத்தை, அவர்கள் எடுத்த டெஸ்ட்களின் மூலமாக அறிகையாக வலிமையில்லை என்று நிருபித்துக் காட்டமுடியுமா?.

ஒருத்தனுக்கு நோய் வந்தா, அவன் செத்துருவான் அவன் குடும்பம் இப்படியாகிடும்னு சொல்லுரது ஓகே. இது என்னடான்னா,  நல்லாயிருக்குரவன படையில கொண்டுபோகுறமாதிரில இருக்கு.

நம்ம தண்ணீரை எடுத்துகிட்டு, அவன் அணைகட்டி, நமக்கே தருவானாம்!!!!!!!!!!!!!! (அடடா ஆச்சிரிய குறி).

இவனுங்களுக்கெல்லாம் பவர் ஸ்ட்டார் நடிச்ச லத்திகா படத்தை, “என்டே லத்திகா சேச்சி னு மொழிமாற்றம் செய்து பார்கவச்சாத்தான் தெரியும் ஒரு தமிழனின் வலி.

---------------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், நவம்பர் 23, 2011

என்ன வாழ்கடா இது.......


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

ஒரு வழியா துபாய் வந்து மூன்று வருடம் முடிந்துவிட்டது. துபாய்ன்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் புரியும் என்பதற்காக நான் அப்படி சொன்னேன், ஆனால் துபாய் என்பது யு.எ.இ (United Arab Emirates) என்ற ஒரு நாட்டின் ஒரு மாநிலம் என்பது இன்றுவரை 85% இங்கு வேலை செய்யும் எங்க ஊரு குடும்பத்தாருக்கு கூட தெரியாது. எனக்கே இங்க வந்து தான் தெரியும்.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல, துபாய்ல எங்க? அபுதாபியா, சார்ஜாவான்னு கேட்கும் போது சிரிச்ச பல பேரில் நானும் ஒருவன். யு.எ.இ என்பது அபுதாபி, துபை, சார்ஜா, ராசல் கைமா, புஜைரா, உமல் குயின், அஜ்மன் என்ற ஸ்டேட்களின் கூட்டமைப்பு. சுதந்திரத்திற்கு முன்னாடி இவை எல்லாம், தனி தனியாகவே செயல்பட்டு வந்தன, பின்பு யு.எ.இ யின் தேச தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் ஷாகித் அல் நகியான் முயற்சியால் ஒன்றினைக்கப்பட்டது.

மூன்று வருடத்திற்கு முன்பு........

பல கனவோடு துபாய் வந்தேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், துபாய் வந்தேன் அவ்வளவு தான். திருவனந்தபுரத்து விமான நிலையத்தில், கண்ணீரோடு விடை கொடுத்த குடும்பத்தை, தேம்பி தேம்பி ஆருதல் படுத்தி உள்ளே சென்றேன். விமான நிலையத்தில் எல்லா சடங்குகளும் முடிய ஒரு மணி நேரம் ஆனது. அடுத்த ஒரு மணி நேரம் வெயிட்டிங் ஏரியாவில் உட்கார வைக்க, நாம யாருன்னு காட்டனும்னு, லேப்டாப்பை எடுத்து சும்மான்னாலும் சீன் காட்டிக் கொண்டு இருந்தேன். அப்ப லேப்டாப் என்பது பெரிய விசயம். ஆனால் துபையில் அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல என்பது இங்க வந்த பின்னாடி தான் தெரிந்தது. கம்பி கெட்ட வந்தவங்க எல்லாம் கம்யூட்டர் வச்சிருந்தத பார்த்து, அடுத்த மூனாவது மாசமே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.

மீண்டும் விமான நிலையத்திற்கு வருவோம்.
திருவனந்தபுரத்தின் பழைய விமான நிலையம்

வெயிட்டிங் ஏரியாவே, ஏதோ எழவு வீடுமாதிரி இருந்தது. எல்லோரும் கண்ணீரோடு வீட்டிற்கு செல் போனில் சம்சாரித்து (பேசிக்) கொண்டிருந்தார்கள். அங்க ஓரளவுக்கு சிரித்தமாதிரி இருந்தவர்களில் நானும், எனக்கு ஒரு வரிசையில் தள்ளியிருந்த ஒரு பையனும் தான்.

விமானத்துல ஏறி, என் இருக்கையில் இருக்கும் வரைக்கும் எதுவுமே தோனாத எனக்கு, அப்ப தான் துபை பற்றிய பயம் எனக்கு வந்தது. விமானத்த பார்த்து இல்ல என் இருக்கையின் அருகில் இருந்த எங்க ஊருக்கார பயபுள்ள சொன்னத கேட்டதுலயிருந்து.

ஆறடி உயரம், அழகிய உருவம் ஆனால் அழுகிய ஆப்பில் போல இருந்தான்.

எந்த ஊரு?

கடையநல்லூர், நீங்க?

ம்ம்ம்ஸ்ஸ்ஸ் (பெரும் மூச்சிவிடுராராமா) நானும் தான், உங்க ஊடு எங்க?

வீடு எங்கிறத ஊடுன்னு கேட்ட போதே தெரிஞ்சி போச்சி, நம்ம தெருக்கார பங்காளின்னு (தெரு, பேட்டைன்னு இரண்டு வகையான மக்கள் உண்டு எங்க ஊருல்ல, இன்னும் டீடயில் வேணும்னா, எங்க ஊரு..... தலைப்பை படிங்க)

நான் பேட்டை.

புதுசாவா துபைக்கு போற?

ஜோசியக்காரனா இருப்பானோ?, சட்டுன்னு கண்டுபிடிச்சிட்டானேனு நெனச்சி, அட ஆமா, எப்படி தெரிஞ்சிது உங்களுக்கு?

இப்படிதான் நானும் சிரிச்சிக்கிட்டே, 12 வருசத்துக்கு முன்னாடி போனேன். (நமக்கு முன்னாடி வெயிட்டிங் ஏரியாவில் சிரித்து கொண்டு இருந்த பையனும் புதுசாத்தான் போரான்னு அப்ப தான் தெரிஞ்சுது.)

போச்சுடா அப்ப நாம சிரிக்கிர கடைசி சிரிப்பு இது தானான்னு நெனச்சிகிட்டே. ஏண்ணே என்ன ஆச்சு இப்போ, நீங்க சந்தோசமாதான இருக்கீங்க?

சிக்குனாண்டா ஒரு சின்னப் பயன்னு, பிளைட்டை தூக்கும் போது ஆரம்பிச்சவன், துபாயில வந்து இறக்குர வரைக்கும் ம்ம்ம்ம் விடலியே.

கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சி இப்ப தான் எனக்கு குழந்த பாக்கியமே கிடச்சிருக்கு, அந்த குழந்தயக் கூட நான் முழுசா பாக்கல, அதுக்குள்ள லீவு முடிஞ்சிருச்சின்னு ஓ ஓன்னு ஒரே ஒப்பாரி.

துபாய்னா அப்படி, இப்படின்னு, நாசம்மா போறவன் கெட்டதா சொல்ல ஆரம்பிச்சான், உன் வாழ்க்கை அவ்வளவு தான்னு என்னும் படி வச்சிட்டான். இப்படி சொல்லி, சொல்லி பாவம் ரொம்ப டயடாகி இருந்தவனை “அதெப்படி டயடாவிங்கன்னு விமான பணிப்பெண் கட்டிங்கோட கண்ண சிமிட்டிக்கிட்டு நிக்க, என் கணக்குல உள்ள ரெண்டு பாட்டலயும் அவனுக்காக வாங்கியடிசிட்டு அமோகமா அலப்பரைய ஆரம்பிச்சுட்ட்டான் (மீண்டும் முதல்லயிருந்தா!!!!!!!!!!!!!!!)

வெயிலு அடிக்கும் பாரு, நரகத்துல எண்ணச்சட்டியில போட்டு பொறிக்கிர மாதிரி இருக்கும், சொந்தகாரனுங்க எல்லாம் “மாப்பிள வான்னு சொல்லி முதல் நாள் டீ வாங்கி கொடுப்பான் அப்புறம் உன்ன கண்டாலே எவனும் பார்காதமாதிரி போயிருவான்,.......... இந்த மாதிரியா அவன் லிஸ்ட் ரொம்ப பெருசா போட்டுகிட்டே போக, அவன் அடிச்ச தண்ணிக்கு எனக்கு கிரு கிருன்னு வந்திடுச்சு.கண்டிப்பா துபாய்க்கு மட்டும் பஸ்ஸுல வந்திருந்தேன், வண்டிய பாதில நிறுத்தி அங்கயிருந்து நடந்தே ஊருபோயி சேந்திருப்பேன்.இம்ச, இறங்கும் போதும் விடல,

சரி தம்பி பார்கலாம்.

சரிண்ணே துவா (பிராத்தனை) செய்யுங்க.

ம்க்கும் (சலிப்பா).... 12 வருசமா துவா கேட்டுப் பார்த்து எனக்கே ஒன்னு நடக்கல, உனக்கு வேரயா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (உனக்கு தேவையா, தேவையாடா)

மறந்துட்டனே...... ம்ம்ம்ம் உன்னோட சம்பளம் எவ்வளவு?

-------ன்னு உண்மையான சம்பளத்தின் முக்கால்வாசியைத் தான் சொன்னேன்.

அப்படித்தான் சொல்லித் தான் கூப்பிடுவானுங்க, ஆனா அவ்வளவு தருவானுங்களா.....................?

போச்சுடா அதுவேறயா. (அடுத்து இந்தியாவுக்கு எத்தன மணிக்கு பிளைட்ன்னு கேட்க தோனும் அளவுக்கு கொண்டுபோயிட்டான்)

பரந்து விரிந்த இடம், இரவுன்னு தெரியாத அளவுக்கு வெளிச்சம், கிட்டத்தட்ட அனைத்து உலகநாட்டு விமானங்களும் ஒரே இடத்தில், வெள்ளை, மாநிறம், கருப்பு, அட்ட கருப்புன்னு அனைத்துவிதமான மக்கள்....... இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த, துபாய் விமான நிலையத்த பார்த்து ரசிக்கும் நிலையில நான் அப்போ இல்ல.

பாஸ்போர்ட் செக்கிங்க் ஏரியாவில் என்ன பார்த்து ஒரு அரபி “புதுசா இந்தியாவுல இருந்து வர்ரவயெல்லா சிரிச்சுகிட்டு வருவான், ஆனா நீ ஏன் உம்முன்னு இருக்கன்னு" ஆங்கிலத்துல கேட்க ,

ஆங்ங்ங்ங் வேண்டுதலுன்னு தமிழ்ழயே சொல்லிக் கொண்டு, பாஸ்போர்டயும், லக்கேஜயும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

“அரபாத், டேய் அரபாத் (என்னுடய இன்னொரு பெயர்) இங்க டா என் அண்ணனும், மச்சானும் கத்த

திரும்பி அவங்கள, பார்த்த பின்பு தான் கொஞ்சம் கண்ணு பளிச்சின்னு தெரிஞ்சது.

என் முகத்த பார்ததும் என் அண்ணனுக்கு புருஞ்சிருச்சி, “ஆகா ஆட்ட யாரோ கலச்சிட்டானுங்க

தேமேன்னு நின்னவன பார்த்து கேட்டான். என்ன ஆச்சில இப்படி இருக்க?

மறுபடியும் திருவனந்தபுரத்து விமான நிலைய, விமான சீட்டுல இருந்து ஆரம்பிச்சேன்........

“கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சி இப்ப தான் எனக்கு குழந்த பாக்கியமே கிடச்சிருக்கு, அந்த குழந்தயக் கூட நான் முழுசா பாக்கல, அதுக்குள்ள லீவு முடிஞ்சிருச்சி. ன்னு அவன் சொன்னத சொல்லிக்கிட்டு இருக்கும் போதே, தலையில இடிவிழுந்த மாதிரி ஒரு அடி,

யாருன்னு பார்த்தா எங்கண்ணன், அடுத்த அடி கொடுக கைய ஓங்கிய படி, பொறம்போக்கு, கல்யாணம் ஆகி, பிறகென்ன அவனுக்கு ஒரு மாசத்துலயால புள்ள பொறக்கும்.....

ஆமா இல்லா, ச்சீ இப்படி ஏமாந்துட்டமேன்னு, என்ன நானே கரச்சி கொட்டிகிட்டேன்.

குளிர்காலத்துல குஜாலாகவும், வெயில் காலங்களில் வெம்பிப் போயும், அப்படி இபடியுமா வருசம் மூனு முடிஞிருச்சு. இன்ன்னும் எத்தன வருசமோ.........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
.
.
ஆப்பிரிக்கா, அமெரிகான்னு
எவ்வளவோ நாட்டுக்கு போறவனெல்லாம், நல்லா இருக்கான்.
ஆனா நாங்க
இந்த துபாய்க்கு வந்திட்டு படுற பாடு இருக்கே
அய்யய்யய்யோ......
 -----------------------------------------------------------------------------யாஸிர்.

ஞாயிறு, நவம்பர் 20, 2011

ஏ ஜோக்


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமமும் உண்டாவுவதாக.


ஒரு சர்தார்ஜி 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

சர்தார் : ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல.

நீதிபதி : அப்புறம்?

சர்தார் : எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்?

நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும்.

சர்தார் : அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க?

சர்தார் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் அப்படி ஆயிடுச்சு.

நீதிபதி : ????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
.
.
.
.

நான் நல்ல குடும்பத்துல பிறந்த பையன், “ஒரு நகைச்சுவை என்பதைத் தான் ஆங்கிலத்தில் தலைப்பாக போட்டுள்ளேன். அந்த மாதிரியான தப்பான நினைப்போடு வந்திருந்தால், நிர்வாகம் பொருபல்ல.

----------------------------------------------------------------------நல்ல பையன் – யாஸிர்.