சனி, நவம்பர் 26, 2011

அடிடா அவன, உதடா அவன...(பளார் பவார்)


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

ஹர்விந்தர் சிங், இவரை பாராட்டுவதா, இல்லை நம் நாட்டினுடய பாதுகாப்பு பற்றி குறை சொல்லுவதா இல்லை, அன்னா ஹஸாரே சொன்ன கமெண்டுக்கு கண்டனம் தெரிவிப்பதா என்றே புரியவில்லை.

சரத் பவார் சொன்ன சொல்லுக்கு கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதத்திற்கு முன்பே அடி வாங்கியிருக்க வேண்டும். இவருக்கும் ராமதாசுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. சோனியாவை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி அப்போதைய சபாநாயகர் சங்மாவுடன் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி இன்று அதே காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் கொள்கையில்லா அரசியல் தலைவர்.

ஹர்விந்தர் சிங் சொன்னதுல ஒரு உண்மையிருக்கு, விலைவாசி உயர்வுக்கு கண்டிப்பா இவரும் ஒரு முக்கிய காரணம் . இவரிடத்திலுள்ள தனித்தன்மையே 100க்கு 95 கேள்விக்கு “ஐசா நை, “மாலும் நகி (அப்படியில்லை, தெரியவில்லை) என்ற இரண்டு பதில்கள் மட்டும் வரும். அடிவாங்கின அன்றும் கூட பத்திரிக்கையாளருக்கு அந்த பதிலைமட்டுமே சொல்லிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அதில் கடுப்பாகித்தான் என்னவோ, பத்திரிக்கையாளர்கள் கூட, தாக்கியவருக்கு எதிராக ஒரு செயலிலும் ஈடுபட்வில்லை. இன்றும் வடக்கிலுள்ள பத்திரிக்கைகள் அதிகமாக தப்பாக எதுவும் எழுதவில்லை.

ஆறுமாசத்துக்கு முன்னாடியே அடிபட்டிருக்கனும்னு எதுக்கு சொன்னனு சொல்ல்லியே, பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஒருவர் சக்கரை விலையுயர்வைப் பற்றி கேட்க, அதற்கு இவரின் பதில், “இந்திய மக்கள் இப்போது அதிக அளவில் சர்கரை எடுத்துக்கொள்கின்றார்கள், ஆகவே தான் இந்த விலை உயர்வு. மேலும் விலை குறைய மக்கள் அனைவரும் இனி டீ, காபியில் பாதி சீனி போட்டுகுடிக்கவும். இப்படி சொன்னதற்கான அடியாகத்தான் நான் இதை எடுத்துக்கொள்கின்றேன்.

ஒரு தனிமனிதன் மத்திய அமைச்சரையே, அதுவும் ஒரு தேசிய கட்சியின் தலைவரை பளேருன்னு கன்னத்துல் குடுத்திருந்திருக்கான்னா அப்போ அவன் எவ்வளவு வெம்பிப்போயிருந்திருக்கனும். கண்டிப்பா இந்த அடி, நாட்டப்பத்தி சிந்திக்கின்ற ஒவ்வொருவனும் கொடுத்த அடி. அடிபட்ட பின்னாடியாவது ரேட்டு குறையுதானு பார்க்கவேண்டாம் (ஏன்னா அது குறையாது) புத்திவருதான்னு பார்க்கலாம்.

அதே நேரத்துல, நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்குதுன்னு நமக்கு இப்ப விழங்குகின்றது. ஒரு சாதாரண மனிதனின் தாக்குதலில் இருந்து ஒரு அமைச்சரைக் காப்பாற்ற தவறிய நமக்கு, பாக்கிஸ்தாக்காரனிடம் இருந்து நாட்ட எப்படி காப்பாற்ற?. இந்த செய்தி கேள்விப்பட உடனே, ஓஹோ இவ்வளவுதான் இவனுங்கன்னு நினைத்து, 10 பேர் கொண்ட குழுவ அமைச்சி, மறுபடியும் நாடாளுமன்றத்துக்கு வந்திரப்போரானுங்க. ஏற்கனவே ஒரு அமைச்சரை நீதிமன்றம் முன்னாடி அடித்தவர் இவர் என்பது கூடுதல் தகவல், சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் இதேபோல் செயலில் ஈடுபட்போவதாக அரிவித்துள்ளார். (அப்போ அடுத்து ப.சி, இல்ல பிரனாப், இல்ல இல்ல அவங்களுக்கெல்லாம் சீனியர் மன்மோகன் சிங்க்தான்). பன்னிங்க தான் படையோட வரும், ஆனா சிங்கம் "சிங்"கிலாத்தான் வரும்.

அந்த மனிதர், சரத் பவாரை ஒரே ஒரு அடிதான் அடித்தாரா? என்று கேட்டு தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார் அன்னா ஹசாரே. அவர் கேட்டதுல என்ன தப்புன்னு பலபேர் கேட்கலாம், ஒரு காந்தியவாதியாக இருந்து கொண்டு இப்படி சொல்லக் கூடாது. அது காந்தியத்திற்கு இழுக்கு.
.
.
.
அதே நாம கேட்கலாம்

என்ன அந்த மனிதர், சரத் பவாரை ஒரே ஒரு அடிதான் அடித்தாரா?

ஏன்னா நாம “நேதாஜிவாதி


-----------------------------------------------------------------------------------யாஸிர்

4 கருத்துகள்:

  1. யாசிர், இது வரை எழுதினதிலேயே இது தான் மிகச்சிறந்த பதிவு(மற்ற பதிவுகளும் அருமையே!!). மேலும் மேலும் இது போன்ற பதிவுகள் எழுதவும். அருமையான நடை, சரியான கருத்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  2. சரத் பவர் மும்பையின் பெரிய கோடீஸ்வரர் . இன்றைய விலைவாசிக்கு காரணகர்த்தகளில் முக்கிய அங்கத்தினர். கரும்பு வெட்டும் இயந்தரங்களின் உள்நாட்டு வியாபாரி . லாவசா என்ற நகரியம் ஒன்று மும்பை-- புனே இடையில் உருவாகுகின்றது . இதை உருவாக்கும் நிறுவனத்தின் மறைமுக இயக்குனர் . வட மாநிலத்தில் வருடந்தோறும் கோதுமை விளைச்சலுக்கு ஆதார விலையை உயர்த்தி தருவது இவரது வாடிக்கை. ஆனால் கரும்பின் கொள்ள முதல் விலைதனை ஏற்றவே மாட்டார். காரணம் இவர் சர்க்கரை ஆளை நிறுவனர் மற்றும் இவர் மதிய அரசில் அங்கம் வகிப்பது சர்க்கரை ஆளை முதலைகளின் தயவால் தான் . நாட்டை குட்டி சுவராக்கி மக்களை முட்டாளாக்கும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் கூட.. எவ்வளவு அறை வாங்கினாலும் இவர் துடைத்து போட்டு விடுவார் . பணம் அய்யா பணம் .pay me forty call me thotti .
    இதுதான் இவர்களின் சித்தாந்தம்

    பதிலளிநீக்கு
  3. @ புன்னைவனத்திற்கு,

    மறுமொழியிட்டமைக்கு நன்றி.தங்களின் ஆசிர்வாதத்தோடு தொடரும்
    ------------------------------------------------
    @ அண்ணன் கிரிகுமாருக்கு,

    இவையனைத்தும் நான் அறிந்திராத தகவல். அற்புதமான தகவலும் கூட. மறுமொழியிட்டமைக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  4. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

    .

    பதிலளிநீக்கு