நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
ஒரு வழியா துபாய் வந்து மூன்று வருடம் முடிந்துவிட்டது. துபாய்ன்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் புரியும் என்பதற்காக நான் அப்படி சொன்னேன், ஆனால் துபாய் என்பது யு.எ.இ (United Arab Emirates) என்ற ஒரு நாட்டின் ஒரு மாநிலம் என்பது இன்றுவரை 85% இங்கு வேலை செய்யும் எங்க ஊரு குடும்பத்தாருக்கு கூட தெரியாது. எனக்கே இங்க வந்து தான் தெரியும்.
வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல, துபாய்ல எங்க? அபுதாபியா, சார்ஜாவான்னு கேட்கும் போது சிரிச்ச பல பேரில் நானும் ஒருவன். யு.எ.இ என்பது அபுதாபி, துபை, சார்ஜா, ராசல் கைமா, புஜைரா, உமல் குயின், அஜ்மன் என்ற ஸ்டேட்களின் கூட்டமைப்பு. சுதந்திரத்திற்கு முன்னாடி இவை எல்லாம், தனி தனியாகவே செயல்பட்டு வந்தன, பின்பு யு.எ.இ யின் தேச தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் ஷாகித் அல் நகியான் முயற்சியால் ஒன்றினைக்கப்பட்டது.
மூன்று வருடத்திற்கு முன்பு........
பல கனவோடு துபாய் வந்தேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், துபாய் வந்தேன் அவ்வளவு தான். திருவனந்தபுரத்து விமான நிலையத்தில், கண்ணீரோடு விடை கொடுத்த குடும்பத்தை, தேம்பி தேம்பி ஆருதல் படுத்தி உள்ளே சென்றேன். விமான நிலையத்தில் எல்லா சடங்குகளும் முடிய ஒரு மணி நேரம் ஆனது. அடுத்த ஒரு மணி நேரம் வெயிட்டிங் ஏரியாவில் உட்கார வைக்க, நாம யாருன்னு காட்டனும்னு, லேப்டாப்பை எடுத்து சும்மான்னாலும் சீன் காட்டிக் கொண்டு இருந்தேன். அப்ப லேப்டாப் என்பது பெரிய விசயம். ஆனால் துபையில் அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல என்பது இங்க வந்த பின்னாடி தான் தெரிந்தது. கம்பி கெட்ட வந்தவங்க எல்லாம் கம்யூட்டர் வச்சிருந்தத பார்த்து, அடுத்த மூனாவது மாசமே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.
மீண்டும் விமான நிலையத்திற்கு வருவோம்.
திருவனந்தபுரத்தின் பழைய விமான நிலையம் |
வெயிட்டிங் ஏரியாவே, ஏதோ எழவு வீடுமாதிரி இருந்தது. எல்லோரும் கண்ணீரோடு வீட்டிற்கு செல் போனில் சம்சாரித்து (பேசிக்) கொண்டிருந்தார்கள். அங்க ஓரளவுக்கு சிரித்தமாதிரி இருந்தவர்களில் நானும், எனக்கு ஒரு வரிசையில் தள்ளியிருந்த ஒரு பையனும் தான்.
விமானத்துல ஏறி, என் இருக்கையில் இருக்கும் வரைக்கும் எதுவுமே தோனாத எனக்கு, அப்ப தான் துபை பற்றிய பயம் எனக்கு வந்தது. விமானத்த பார்த்து இல்ல என் இருக்கையின் அருகில் இருந்த எங்க ஊருக்கார பயபுள்ள சொன்னத கேட்டதுலயிருந்து.
ஆறடி உயரம், அழகிய உருவம் ஆனால் அழுகிய ஆப்பில் போல இருந்தான்.
எந்த ஊரு?
கடையநல்லூர், நீங்க?
ம்ம்ம்ஸ்ஸ்ஸ் (பெரும் மூச்சிவிடுராராமா) நானும் தான், உங்க ஊடு எங்க?
வீடு எங்கிறத ஊடுன்னு கேட்ட போதே தெரிஞ்சி போச்சி, நம்ம தெருக்கார பங்காளின்னு (தெரு, பேட்டைன்னு இரண்டு வகையான மக்கள் உண்டு எங்க ஊருல்ல, இன்னும் டீடயில் வேணும்னா, எங்க ஊரு..... தலைப்பை படிங்க)
நான் பேட்டை.
புதுசாவா துபைக்கு போற?
ஜோசியக்காரனா இருப்பானோ?, சட்டுன்னு கண்டுபிடிச்சிட்டானேனு நெனச்சி, அட ஆமா, எப்படி தெரிஞ்சிது உங்களுக்கு?
இப்படிதான் நானும் சிரிச்சிக்கிட்டே, 12 வருசத்துக்கு முன்னாடி போனேன். (நமக்கு முன்னாடி வெயிட்டிங் ஏரியாவில் சிரித்து கொண்டு இருந்த பையனும் புதுசாத்தான் போரான்னு அப்ப தான் தெரிஞ்சுது.)
போச்சுடா அப்ப நாம சிரிக்கிர கடைசி சிரிப்பு இது தானான்னு நெனச்சிகிட்டே. ஏண்ணே என்ன ஆச்சு இப்போ, நீங்க சந்தோசமாதான இருக்கீங்க?
சிக்குனாண்டா ஒரு சின்னப் பயன்னு, பிளைட்டை தூக்கும் போது ஆரம்பிச்சவன், துபாயில வந்து இறக்குர வரைக்கும் ம்ம்ம்ம் விடலியே.
கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சி இப்ப தான் எனக்கு குழந்த பாக்கியமே கிடச்சிருக்கு, அந்த குழந்தயக் கூட நான் முழுசா பாக்கல, அதுக்குள்ள லீவு முடிஞ்சிருச்சின்னு ஓ ஓன்னு ஒரே ஒப்பாரி.
துபாய்னா அப்படி, இப்படின்னு, நாசம்மா போறவன் கெட்டதா சொல்ல ஆரம்பிச்சான், உன் வாழ்க்கை அவ்வளவு தான்னு என்னும் படி வச்சிட்டான். இப்படி சொல்லி, சொல்லி பாவம் ரொம்ப டயடாகி இருந்தவனை “அதெப்படி டயடாவிங்கன்னு” விமான பணிப்பெண் கட்டிங்கோட கண்ண சிமிட்டிக்கிட்டு நிக்க, என் கணக்குல உள்ள ரெண்டு பாட்டலயும் அவனுக்காக வாங்கியடிசிட்டு அமோகமா அலப்பரைய ஆரம்பிச்சுட்ட்டான் (மீண்டும் முதல்லயிருந்தா!!!!!!!!!!!!!!!)
வெயிலு அடிக்கும் பாரு, நரகத்துல எண்ணச்சட்டியில போட்டு பொறிக்கிர மாதிரி இருக்கும், சொந்தகாரனுங்க எல்லாம் “மாப்பிள வான்னு” சொல்லி முதல் நாள் டீ வாங்கி கொடுப்பான் அப்புறம் உன்ன கண்டாலே எவனும் பார்காதமாதிரி போயிருவான்,.......... இந்த மாதிரியா அவன் லிஸ்ட் ரொம்ப பெருசா போட்டுகிட்டே போக, அவன் அடிச்ச தண்ணிக்கு எனக்கு கிரு கிருன்னு வந்திடுச்சு.கண்டிப்பா துபாய்க்கு மட்டும் பஸ்ஸுல வந்திருந்தேன், வண்டிய பாதில நிறுத்தி அங்கயிருந்து நடந்தே ஊருபோயி சேந்திருப்பேன்.இம்ச, இறங்கும் போதும் விடல,
சரி தம்பி பார்கலாம்.
சரிண்ணே துவா (பிராத்தனை) செய்யுங்க.
ம்க்கும் (சலிப்பா).... 12 வருசமா துவா கேட்டுப் பார்த்து எனக்கே ஒன்னு நடக்கல, உனக்கு வேரயா?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (உனக்கு தேவையா, தேவையாடா)
மறந்துட்டனே...... ம்ம்ம்ம் உன்னோட சம்பளம் எவ்வளவு?
-------ன்னு உண்மையான சம்பளத்தின் முக்கால்வாசியைத் தான் சொன்னேன்.
அப்படித்தான் சொல்லித் தான் கூப்பிடுவானுங்க, ஆனா அவ்வளவு தருவானுங்களா.....................?
போச்சுடா அதுவேறயா. (அடுத்து இந்தியாவுக்கு எத்தன மணிக்கு பிளைட்ன்னு கேட்க தோனும் அளவுக்கு கொண்டுபோயிட்டான்)
பரந்து விரிந்த இடம், இரவுன்னு தெரியாத அளவுக்கு வெளிச்சம், கிட்டத்தட்ட அனைத்து உலகநாட்டு விமானங்களும் ஒரே இடத்தில், வெள்ளை, மாநிறம், கருப்பு, அட்ட கருப்புன்னு அனைத்துவிதமான மக்கள்....... இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த, துபாய் விமான நிலையத்த பார்த்து ரசிக்கும் நிலையில நான் அப்போ இல்ல.
பாஸ்போர்ட் செக்கிங்க் ஏரியாவில் என்ன பார்த்து ஒரு அரபி “புதுசா இந்தியாவுல இருந்து வர்ரவயெல்லா சிரிச்சுகிட்டு வருவான், ஆனா நீ ஏன் உம்முன்னு இருக்கன்னு" ஆங்கிலத்துல கேட்க ,
ஆங்ங்ங்ங் வேண்டுதலுன்னு தமிழ்ழயே சொல்லிக் கொண்டு, பாஸ்போர்டயும், லக்கேஜயும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
“அரபாத், டேய் அரபாத் (என்னுடய இன்னொரு பெயர்) இங்க டா” என் அண்ணனும், மச்சானும் கத்த
திரும்பி அவங்கள, பார்த்த பின்பு தான் கொஞ்சம் கண்ணு பளிச்சின்னு தெரிஞ்சது.
என் முகத்த பார்ததும் என் அண்ணனுக்கு புருஞ்சிருச்சி, “ஆகா ஆட்ட யாரோ கலச்சிட்டானுங்க”
தேமேன்னு நின்னவன பார்த்து கேட்டான். என்ன ஆச்சில இப்படி இருக்க?
மறுபடியும் திருவனந்தபுரத்து விமான நிலைய, விமான சீட்டுல இருந்து ஆரம்பிச்சேன்........
“கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சி இப்ப தான் எனக்கு குழந்த பாக்கியமே கிடச்சிருக்கு, அந்த குழந்தயக் கூட நான் முழுசா பாக்கல, அதுக்குள்ள லீவு முடிஞ்சிருச்சி”. ன்னு அவன் சொன்னத சொல்லிக்கிட்டு இருக்கும் போதே, தலையில இடிவிழுந்த மாதிரி ஒரு அடி,
யாருன்னு பார்த்தா எங்கண்ணன், அடுத்த அடி கொடுக கைய ஓங்கிய படி, பொறம்போக்கு, கல்யாணம் ஆகி, பிறகென்ன அவனுக்கு ஒரு மாசத்துலயால புள்ள பொறக்கும்.....
ஆமா இல்லா, ச்சீ இப்படி ஏமாந்துட்டமேன்னு, என்ன நானே கரச்சி கொட்டிகிட்டேன்.
குளிர்காலத்துல குஜாலாகவும், வெயில் காலங்களில் வெம்பிப் போயும், அப்படி இபடியுமா வருசம் மூனு முடிஞிருச்சு. இன்ன்னும் எத்தன வருசமோ.........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
.
.
ஆப்பிரிக்கா, அமெரிகான்னு
எவ்வளவோ நாட்டுக்கு போறவனெல்லாம், நல்லா இருக்கான்.
ஆனா நாங்க
இந்த துபாய்க்கு வந்திட்டு படுற பாடு இருக்கே
அய்யய்யய்யோ......
-----------------------------------------------------------------------------யாஸிர்.
உங்க எழுத்து நடை அருமையாக உள்ளது அராபத். நன்றாக எழுதுங்கள்
பதிலளிநீக்கு@ ஆரூர் முனா செந்தில்
பதிலளிநீக்குநன்றிகள் பல அண்ணா.
super-na (I hd almost same blood be4 four years!!!!????
பதிலளிநீக்கு@ ரமேஷ்
பதிலளிநீக்குஅப்போ கிரேட் எஸ்கேப்பா நீங்க.
மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி