வியாழன், நவம்பர் 24, 2011

நெஞ்சு பொறுக்கதில்லையே (Dam999).......


நம் அனைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக...

சத்தியமாக இது சினிமா விமர்சனம் இல்லை. அப்படி எண்ணிவந்தவர்களிடம் தங்களின் மேன்மையான நிமிடத்தினை எடுத்துக்கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு பொதுவாக சினிமா நாட்டம் அதிகம், ஆனால் நான் பிளாக் தொடங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட போது, கண்டிப்பாக சினிமா விமர்சனமோ, அல்லது என் பிடித்தமான நடிகர் (அஜித்) பற்றியோ எதுவும் எழுதக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏன்னா, கிட்டத்தட்ட என் நண்பர்களுடனான விவாதங்களில் ஆகட்டும், கேலிப் பேச்சிகளிலாகட்டும் இந்த இரண்டு விஷயங்களே மேலோங்கியிருக்கும். பிளாக்கிலும் இந்த மாதிரியான விசயத்தில் விரயம் செய்வதில் என் மனம் உடன்படவில்லை. சினிமா சம்பந்தமான விசயங்களின் மூலமாகத்தான் அதிக பார்வையாளர்களை கவரமுடடியும் தான், இருந்தாலும் அவ்விதமான பார்வையாளர்களின் மூலமாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

கடந்த சில நாட்களாகவே, Dam999 படத்தைப் பற்றியதான ஒரு செய்திகள், பத்திரிக்கைகளில் ஆகட்டும், தொலைக்காட்சிகளில் ஆகட்டும் ஆக்கிரமைத்துக் கொண்டிருக்கின்றன. முல்லை பெரியார் அணைக்கட்டு சம்பந்தமான ஒரு சர்சைக்குரிய படம். எனக்கு தெரிந்து முதல் முதலில் நாடாளுமன்றத்தில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒன்றாக இணைந்து ஒரு விசயத்திற்காக போராடுகின்றது என்றால் அது இந்த படத்தின் தடை பற்றியது தான். இருவரையும் இணைத்த்தற்காக வேண்டுமென்றால் இந்த பட்த்தினைப் பற்றி பாராட்டிக்கொள்ளலாம்.

நான் தமிழ் சினிமாவைவிட அதிகளவு மதிக்கும் சினிமா, இயக்குனர்கள், ரசிகர்கள் அனைவரும் மலையாள மொழியினரே. ஒரு மேன்மையான சினிமாவை கொடுக்கமுடியும் என்றால், அது கண்டிப்பாக அந்த மொழிக்காரர்களால் தான் முடியும் என்பது என் நிலைப்பாடு. தமிழ் சினிமாவிலும் இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அளவுக்கு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை.

நம்மாளுங்களுக்கு எப்போதுமே கண்ணுகெட்டதுக்கப்புரம் தான் சூரிய நமஸ்காரம். இந்த படத்தைப் பற்றியதாக இருக்கட்டும், அல்லது கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியதாக இருக்கட்டும், முதலிலோ அல்லது பாதியிலோ போராட யவனும் வரமாட்டான். சாகுர நேரத்துல சங்கரா சங்கரான்னா எப்படி?. இவ்வளவு தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தினைப் பற்றி நமக்கு இப்போதுதான் தெரிகின்றது என்பது வெக்கக்கேடு மற்றும் நம்பும்படியானதாக இல்லை. கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சென்னையில் தான் நடந்திருக்க வேண்டும், அதற்கான வசதிகள் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகமாக உள்ளது. ஹிந்தி திரைப்படத்தின் முக்காவாசி கிராபிக்ஸ், எடிடிங் எல்லாம் சென்னையில் நடந்துகொண்டிருக்கும் போது, ஏன் அவதார் படத்தின் கிராபிக்ஸே சென்னை நடந்திருக்கும் போது இது மட்டும் எப்படி வேறுமாநிலத்தில் நடந்திருக்க முடியும்?

சரி விஷயத்துக்கு வருவோம்.....

இன்று என் முகப்பு புத்தகத்தில், “டாம்999 படத்தினை இந்தியாவில் தடை செய்யுன்னு ஒரு வாக்கியத்தை பதிவுசெய்திருந்தேன். அதை கண்டு எனது ஒரு மலையாள நண்பர், அவருடைய முகப்பு புத்தகத்தில் அதிகமாக உலாவிக்கொண்டிருந்த ஒரு விசயத்தினை எனக்கு கூகுள் மூலமாக மொழிமாற்றம் செய்து அனுப்பியிருந்தான்.

அது “டாம் உடைந்து நிறைய மலையாளிகள் இறந்து போனாலும், அவர்களின் அடுத்த தலைமுறை சிறிது காலமானாலும் திரும்ப வரும், ஆனால் தமிழர்களின் 5 மாவட்டங்களில் நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு, பாலைவனமாகும், அவர்களின் இந்த தலைமுறைகள் பட்டினியால் உயிர்விடுவார்கள். மேலும் உடைந்த இடத்தில் மீண்டும் அணைகட்ட ஒரு மலையாளிகளும் அனுமதிக்கமாட்டார்கள். தமிழகத்துக்கு வேரு எந்த மாநிலமும் தண்ணீர் தராது. முல்லை பெரியார் அணைக்கட்டு ஒரு பாடமாக அமைந்து விடும். கேரள அரசு புதிய அணைகட்டியிலிருந்து நீர் கொடுக்க தயாராக உள்ளது. ஆகவே தமிழர்களே சிந்திப்பீர்”

மலையாளி நம்மள சிந்திக்க சொல்லுர அளவுக்கு ஆகிடிச்சு நம்ம நிலம.

ஒரு விவகாரமான விசயம் சர்சயில் நீதிமன்றத்தில் இருக்கும் போது அதை படமாக எடுக்க எத்தனை துணிவு?. 
இன்னும் பெரியார் அணையைப் பற்றிய ஆய்வரிக்கை சமர்பிக்கப்படாத நிலையில் இவர்கள் யார், அதை வலிமையில்லை என்று சொல்ல?. 
எத்தனையோ வருடங்களுக்கு முன்னறே ஆய்வு செய்ய தொடங்கிய கேரள அரசாங்கம், இன்னமுமா இது உடைந்து போகும் என்று வாய்வழியாக சொல்லிக் கொண்டிருக்கும் விசயத்தை, அவர்கள் எடுத்த டெஸ்ட்களின் மூலமாக அறிகையாக வலிமையில்லை என்று நிருபித்துக் காட்டமுடியுமா?.

ஒருத்தனுக்கு நோய் வந்தா, அவன் செத்துருவான் அவன் குடும்பம் இப்படியாகிடும்னு சொல்லுரது ஓகே. இது என்னடான்னா,  நல்லாயிருக்குரவன படையில கொண்டுபோகுறமாதிரில இருக்கு.

நம்ம தண்ணீரை எடுத்துகிட்டு, அவன் அணைகட்டி, நமக்கே தருவானாம்!!!!!!!!!!!!!! (அடடா ஆச்சிரிய குறி).

இவனுங்களுக்கெல்லாம் பவர் ஸ்ட்டார் நடிச்ச லத்திகா படத்தை, “என்டே லத்திகா சேச்சி னு மொழிமாற்றம் செய்து பார்கவச்சாத்தான் தெரியும் ஒரு தமிழனின் வலி.

---------------------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக