திங்கள், மே 21, 2012

நாங்கெல்லாம் அப்பவே அப்படி...


நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
காலேஜில நடந்த விசயங்களைப் பத்து நிமிடம் நினைத்தாலே போதும், அது பற்றி ஒரு புத்தகமே போடமுடியும். அதுவும் நண்பர்கள் பத்து பேரு ஒன்னு சேர்ந்து பேசினா, அள்ள அள்ள விசயங்கள் வரும், ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் அந்த அளவிற்கு சுவாரஸ்யமான விசயங்கள் பொதிந்து கிடக்கும். எங்க காலேஜி ரொம்ப ஸ்ட்ரிக்டான காலேஜின்னாலும் எங்களோட டிப்பர்ட்மெண்ட் கலகலப்பானதாகவே இருக்கும். அதுக்கு எங்களுக்கு அமைந்த ஆசிரியர்கள், மற்றும் அவர்களை அந்த அளவிற்கு மரியாதையுடன் வைத்திருந்த சக மாணவ கண்மனிகள் (டொய்ங்ங்ங்)

அது இரண்டாம் வருடம், மூன்றாவது செமஸ்டர், “கன்ஸ்ட்ரெக்சன் மெட்டிரியல்ஸ் (construction materials)பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார் எங்கள் ஆசிரியர். அவர்கிட்ட ஒரு பழக்கம் உண்டு, புத்தகம் கொண்டுவருவார் ஆனா, புத்தகத்தை திறக்காமலே பாடம் நடத்திவிட்டு சென்றுவிடுவார். பொதுவா இந்த சப்ஜெட்டுக்கு புத்தகத்தை திறக்க தேவையும் கூட இருக்காது. இந்த சப்ஜெக்டில் சிமெண்ட், மணல், கல், செங்கள்...... இப்படியான ஐட்டங்கள் தான் வரும்.

“ம், எங்க சொல்லுங்க சிமெண்டுடய தனித்தன்மைகளை சொல்லுங்க பார்போம். உங்களுக்கே தெரியும் ம் சொல்லுங்கன்னு ஆசிரியர் சொல்ல

கட்டி சேரக் கூடாது, கைய விட்டு பார்த்தா தின்னாக இருக்க வேண்டும்........... என ஒழுங்கான பதிலை வகுப்புல இருக்கும் ஒழுங்க படிக்கும் 10 பேருதான் சத்தமா சொல்லுவானுங்க. மத்தவ எல்லாம் கூட்டத்தோட கோவிந்தாவாகத்தான் இருக்கும்.
கூட்டத்தோட கூட்டமா சில பேரு “வல்லரசு படம் சரியில்ல சார், “பழனியாண்டவர் தியேட்டர்ல ஸீன் படத்த தூக்கிட்டானுங்க. “பிட்டே ஓட்டல..........ன்னு வாய்க்கு வந்ததெயெல்லாம் சொல்லுவானுங்க. அதுவும் அப்படி சொல்லுறதுக்கு டைமிங்க் ரொம்ப முக்கியம். நாம சொல்லுறது லெக்சரருக்கு கேட்க கூடாது அதே சமயத்துல, மத்தவங்களுக்கு நல்லா கேக்கனும். கரெக்டான பதில சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவங்கள பின் தொடர்ந்தே நாமும் சத்தமா “சில்க் ஸ்மிதா வாழ்கன்னு சொல்லனும்.

நாம சும்மா இருந்தாலும், நம்ம கூட இருக்கும் பக்கிகள் எங்க நம்மள சும்மாவா இருக்க விடுதுங்க. அதே ஆசிரியர் வகுப்பு, அதே சப்ஜெக்ட், ஆனா இன்னைக்கு சிமெண்டுக்குப் பதிலாக மணல். எப்போதும் போல அவர்

“ம், எங்க சொல்லுங்க மண்ணுடய தனித்தன்மைகளை சொல்லுங்க பார்போம். உங்களுக்கே தெரியும் ம் சொல்லுங்க

நல்ல பதிலும், நார வாக்கியங்களும் வகுப்பறையை அல்லோலப்படுத்திக் கொண்டிருந்தது. அன்னைக்குன்னு பார்த்து எனக்கு மூடேயில்ல. என் அருகில் இருந்தவன்

“டேய் என்னடா ஆச்சு ஏதாவது வீம்புக்குன்னு சொல்லுடா,

இல்ல மச்சி எனக்கு மூடேயில்லடா, இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு பார்த்துக்கலாம்.

“இல்லடா ஏதாவது சொல்லுடா, எதையாவது சும்மாவாச்சும் சொல்லு

சொல்லு, சொல்லுன்னு அவன் கொன்னதால என்னத்த சொல்லனும்னு தெரியாம, “கார்பண்டை ஆக்ஸைடுன்னு சத்தமா சொல்லிட்டேன். சொன்னது தான் சொன்ன கூட்டத்தோட சொல்லாம, அவனுங்க சவுண்ட் நின்னவுடன் நம்ம “கார்பண்டை ஆக்ஸைடுதனி சவுண்டா டி.டி.எஸ் எபக்ட்ல வெளிவர, வாத்தியார் வாந்தியே எடுத்துட்டாரு.

“தம்பி, தம்பி என்னப்பா என்ன சொல்லுற, மணலோட பண்புகளப்பத்தி கேட்டுக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா கார்பண்டை ஆக்ஸைடுன்னு சொல்லுற, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?என்ன விட அதிகமா பதறிப் போயி கேட்டாரு.

பெக்கர, பெக்கரன்னு முழிச்சிக்கிட்டு நின்னனே தவிற, எதுக்கு சொன்னேன்னு சொல்லவேயில்ல (தெரிஞ்சாத்தா சொல்லுவோம்ல). இனிமேல் கேள்விய நல்லா உள்வாங்கிகிட்டு பதில் சொல்லனும்னு பாவம் அந்த ஆசிரியர் அட்வைஸ் பண்ணிட்டு போனார்.

அவரு எங்க டிப்பர்ட்மெண்ட் ஆசிரியர், அவருக்கே அப்படின்னா, மத்த டிப்பார்ட்மெண்டுல இருந்து ஆசிரியர்கள் வந்தா, ரவுடிஸத்துக்கு கேக்கவா வேணும். அதே செமஸ்டரில் C, C++ என்ற கம்ப்யூட்டர் வகுப்பு இருந்ததால், ஐ.டி டிப்பார்ட்மெண்டல இருந்து ஒரு மேடம் வந்திருந்தது. செங்கள், மண்ணுனாலே பாடத்த ஒழுங்கா கவனிக்க மாட்டோம், இந்த லட்சனத்துல include (), math() ன்னு சொல்லித்தந்தா எப்படி?. அந்த சார்கிட்ட ஒரு பழக்கம் இருந்த மாதிரி, இந்த மேடத்துக்கிடயும் ஒரு பழக்கம், போர்ட பார்த்து திரும்பி எழுத ஆரம்பிச்சுசின்னா அவ்வளவு சீக்கிரத்துல திரும்பாது. இது எங்களுக்கு ரொம்ப வசதியா போச்சு.
எப்படா மேடம் போர்ட பார்த்து திரும்பும்னு காத்துக்கிட்டு இருந்து, திரும்பின உடனேயே, பெஞ்ச் மேல ஏறி நின்னு அங்கும், இங்குமா ஓடி கொண்டிருப்போம். இப்படியா ஒரு நாள், கடைசி பெஞ்சில இருந்து முதல் பெஞ்சுக்கு ஓடும் போது, 3வது பெஞ்சில் வைத்து ஒருவன் என்னை இழுத்துவிட்டான். பிறகு என்ன பெஞ்சோட, பெஞ்ச் மோதி “ட்ட்ட்ட்ட்ட்டடமாமாமால்ல்ல்ல்ல்ல்ல் ன்னு பெரிய சைஸ் அணுகுண்டு வெடிச்சமாதிரி ஒரு சவுண்ட்டோட நான் கீழே விழுந்துவிட்டேன். என்னால வலி தாங்க முடியல, இருந்தும் வலிய பொருத்துக்கிட்டு எதுவும் நடக்காதது போல உட்கார்ந்திருந்தேன்.

சவுண்டுல பதறிப்போய் மேட்த்துக்கு பயத்துல வேத்துருச்சு. “யாருப்பா, யாரு, சொல்லுங்க யாரு? ன்னு கேட்க, என் மூஞ்சை பார்த்தவுடன் மேடத்துக்கு தெரிந்துவிட்டது.

யாஸிர் ஸ்டெண்டப், என்ன நடந்துச்சு, ஒழுங்க சொல்லிரு, எவ்வளவ் பெரிய சப்தம், சொல்லு என்ன செஞ்ச? நீ தான் ஏதோ செஞ்சிருக்க சொல்லு எப்படி இவ்வளவு சப்தம்? ன்னு கொஞ்சம் சாந்தமா, அதே வேளையில கொஞ்சம் படபடப்பாகவும் கேட்டது.

உண்மய சொல்லியிருந்தாலாவது பாவம் பார்த்து கொஞ்சமா திட்டிவிட்டு உட்காரச்சொல்லியிருக்கும் , ஆனா நான் சொன்ன பதில கேட்டுவிட்டு பாவமா இருந்த மேடம் பத்ரகாளியாகிடுச்சு  “யூ, யூ, யூ இடியட், ஃபூல், நான்சென்ஸ்........................................................ இங்கிலீஸ் டிக்ஸ்னரியில தேடினாலும் கிடைக்காத கெட்டவார்த்தயா பார்த்து திட்டி தீர்த்துடுச்சு. கடைசியா “கெட்டவுட் ஃப்ரம் மை கிளாஸ்ன்னு சொல்லிடுச்சி.

இப்படி பாய்ஞ்சி கொதர்ர அளவுக்கு அந்த மேடம்கிட்ட என்னடா சொன்னன்னு நீங்க கேக்கலன்னாலும் நான் சொல்லியே தீருவேன்.

(கொஞ்சம் பிளாஸ் பேக்)

யாஸிர் ஸ்டெண்டப், என்ன நடந்துச்சு, ஒழுங்க சொல்லிரு, எவ்வளவ் பெரிய சப்தம், சொல்லு என்ன செஞ்ச? நீ தான் ஏதோ செஞ்சிருக்க சொல்லு எப்படி இவ்வளவு சப்தம்?
*

*

*

*

*

ஸ்ஸ்ஸ்ஸ் சாரி மேடம், பென்சில் கீழே விழுந்திடுச்சு.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
----------------------------------------------------------------------------------யாஸிர்.

1 கருத்து: