நம் அனைவரின் மீதும், இறைவனின் சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
ஐ.பி.எல் ஆரம்பித்ததிலிருந்து, நான் இதுவரைக்கும்
சென்னைக்கு சப்போர்ட் பண்ணியதே இல்லை. வரும் ஐ.பி.எல்களில் பண்ணுவனா என்னனு எனக்கு
தெரியாது, ஏன்னா அது என் கையில இல்ல, எல்லாம் நம்ம தாதா கங்கூலி கையில தான்
இருக்கு. ஆமா அவரு அடுத்த வருசத்துல இருந்து ஐ.பி.எல் விளையாடலன்னா, ஒரு வேளை நான்
சென்னைக்கு சப்போர்ட் பண்ணலாம். உன்னையெல்லாம் இப்ப யாருடா அழைச்சான்னு நீங்க
மனசுக்குள்ள கொதிக்குறது தெரியுது.
ஜ.பி.எல் ஒன்னு ஆரம்பிக்கும் போது, தல
கங்கூலிய யாருடா ஏலத்துல எடுக்குறான்னு பார்த்துக்கிட்டு இருக்கும் போது, நம்ம
சாருக்கான் முன்னாடி வந்து ஏலத்துக்கு போகுற ஆளா நீங்க, இங்க வாங்கன்னு கொல்கத்தா
நைட் ரைடர்ஸுக்கு இஸ்துகுனு போக. அன்னையில இருந்து “மே பொங்காளி கூ” (நான் பெங்காளி)
ஆகிட்டேன். ஜ.பி.எல்லின் முதல் மேச்சில் மெக்குல்லம் அடிச்ச அடில, இனி
பத்துவருசத்துக்கு எவனும் கப்பு பக்கத்துல வரக்கூடாது, கப் வாங்கும் போது, முதல்
வரிசையில இவன் இவன் தான் இருக்கனும், செண்டருல கங்கூலி நின்னு அவருக்கு கீழ கப்
இருக்கனும் என்று ஒரே அக்கப்போருதான். கொல்கத்தாவுக்கு எதிரா எவனாவது பேசிட்டான்
செத்தான், பேசியே பேய வெரட்டிருவோம். முடிவுல “சென்னை ஜிந்தாபாத்ன்னு” சொல்லவேண்டியவன், இவனுங்கள்ட இருந்து இப்ப
தப்பிச்சா போதும்னு “கொல்கத்தாகி கோலி மார்ரோ” ன்னு சொல்லிட்டு தப்பிச்சோம்
பிளைச்சோமுன்னு ஓடிருவான்.
இது எல்லாம் ஒரு வாரத்துக்குத்தான்,
அடுத்தடுத்து தோல்விகள் மட்டுமே கொல்கத்தாவிற்கு கிடைக்க, ஏர் டெல் சூப்பர்
சிங்கர் வைக்கலாமே, இன்னைக்கு நீயா? நானாவில் நல்ல தலைப்பு அது பார்க்கலாமே, வாங்க
டி.ஆர். ராஜேந்திரன் படம் ரிலீஸ் ஆகியிருக்கு முதல் நாளே பார்த்துடலாம் இல்லன்னா,
மறு நாள் தியேட்டருல படம் இருக்காது, அங்க போகலாமே..............என மே, மேன்னு
ஆடுமாதிறி கத்தி, எதிரணி கோஷ்டியிடம் தப்பிக்க நான் பட்ட பாடு, அடடடடா........
சொல்லிமாளாது. இதுல திடிரென ஒரு வெற்றி கிடச்சிருச்சுன்னா, மறுபடியும் வேதாளம்
முருங்க மரம் ஏறும். அடுத்த மாட்சிக்கு அப்புறம் என்ன மறுபடியும் மே, மே.....
தான்.
இப்படியா ஒன்னு இல்ல ரெண்டுயில்ல, மூணு
வருசமா விடாம சப்போர்ட் பண்ணினேன் கொல்கத்தாவிற்கு. இதுல மூணாவது ஐ.பி.எல்ல கேப்டன்
பதவியில் இருந்து கங்கூலிய தூக்க, காண்டாயிடுச்சு நமக்கு, இருந்தாலும் அன்றைக்கு
டீமின் நலன் கருதி, தீ குளிக்குறத ஒத்திவச்சோம். 4 வது ஐ.பி.எல், சோகமே சோகம்,
கங்கூலிய யாரும் ஏலத்துல எடுக்கல, இதனால ஐ.பி.எல் என்பது இந்தியா கிரிகெட் டீமுக்கு
முற்றுக்கட்டயா இருக்கும், அதனால பிள்ளைகள் படிப்பு கெடுகின்றது, ஜட்டி பனியனோட
சாரி பிராவோட சியர் கேள்ஸ் எல்லாம் ஆட்டுறது மறுபடியும் சாரி ஆடுறது நம்ம நாட்டு
கலாச்சாரத்த குழி தோண்டி புதைக்குறதுக்கு சம்ம்...............இப்படியா சொல்லுற
கூட்டத்துக்கு கொடி பிடிச்சு, கங்கூலி இல்லாத ஐ.பி.எல்ல, இல்லாம பண்ணனும் என்று
இந்தியாவின் கடைக்கொடியிலிருந்து ஒரு குரல் அல்ரா சவுண்ட் சிஸ்டத்துல, துபாயில்
இருந்து கேட்டுருக்குமே, கேக்கலயா, அப்படின்னா அது அடியேன் குரல்
தான்.
இப்படியா போய்கிட்டு இருந்ததுக்கு இடையில,
கங்கூலியின் சேவை, புனேக்கு தேவையின்னு, புனேக்காரனுங்க கால்லவிழுந்து கதற (ஒரு
விளம்பரம்ம்ம்ம்ம்), தாதா, புனே நோக்கி புறப்பட்டார். ஆனா புனேக்காரனுங்களுக்கு
வந்த அறிவு கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா, அந்த ஐ.பி.எல்லில் புனே பிளே ஆப்
சுற்றுக்கு போயிருக்கும். ஆனா என்ன பண்ணுறது, மீதமுள்ள இரண்டு போட்டியில
ஜெயிச்சாலும், பிளே ஆப் சுற்றுக்கு போகமுடியாதுங்குற நேரத்துல வந்து கங்கூலிகிட்ட
கெச்சிக்கிட்டு நின்னா, பாவம் அவரால என்ன பண்ணமுடியும்?. அதுவும் கேபடன் பொறுப்பு
கொடுக்காம, அவர் என்ன தான் செய்யமுடியும்?. இருந்தாலும் முயற்சி செய்து பிளே
ஆப்க்கு இல்லன்னாலும், நேரா பைனலுக்கு முயற்சி செய்தும் பயன் இல்லாம போச்சு. அந்த
அளவுக்கு பிரஸர் கொடுக்கலன்னா அட்லீஸ்ட் அந்த இரண்டு மேட்சுலயுமாவது
ஜெயிச்சிருந்துருக்கலாம். ம்ம்ம்ம்ம் நேரம் யார விட்டது.
ஐ.பி.எல் 5 கங்கூலி தலைமையில் புனே வாரியர்ஸ்,
ஆஹா கேட்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கு. ஆனா கங்கூலி முடிவு பண்ணியிருந்தாரோ இல்லயோ
நான் முடிவு பண்ணியிருந்தேன், தக்காளி........, கப்பு வாங்கலன்னாலும் பரவாயில்லை,
ஆனா தாதாவை ஏலத்துல பங்கு பெறவச்சு, அதுல யாரும் எடுக்காம அவர தெருவுல நிக்கவச்ச,
சாருக்கான் டீம, சும்மா டாரு, டார கிளிச்சு, ஐ.பி.எல்ல இருந்து ஓட, ஓட விடனும்
என்று.
போர், போர் குருஷேஸ்திர போர்ன்னு சொல்லி,
எல்லாரையும் கூட்டிவச்சு புனே-கொல்கத்தா மேட்சப்பார்த்தா, கொல்கத்தா ஃபோர், ஃபோரா
அடிக்குது. அவனுங்கள ஓட விடுவாருன்னு பார்த்த 6 பாலுக்கு 36 ரன்னு தேவையான இடத்துல
ஒரு ரன்னுக்கு புனேவாரியர்ஸ் ஓடு, ஓடுன்னு ஓடிக்கிட்டு இருக்கு. பொங்காளிங்களுக்கு
எதிரா விளையாண்ட 2 போட்டியிலும், கொல்கத்தா வெற்றி பெற, 5 வது ஐ.பி.எல்லிலும் தல,
பிளே ஆப் சுற்றயே பார்க்காம வெளியே வந்தது ரொம்ப சோகம்.
நாம தான் தமிழ்நாட்டுக்காரனாச்சே,
தேர்தல்ல நாம போட்டியிடலனாலும், போட்டியிடுற கட்சிக்கு ஆதரவு கொடுகுறது மாதிரி.
பெங்களூருக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்குன்னு சும்மா தான் சொன்னேன், நல்லா
விளையாண்டுக்கிட்டு இருந்த பயலுங்க திடிரென, டெக்கானுடன் தோல்வியடைய, சென்னை பிளே
ஆஃபுக்கு போயிருச்சு. இதுக்கு பேருதான் “நோகாம நொங்கு திங்குறது”
இந்த டெக்கான் சார்ஜஸ் பயலுகள பத்தி
சொல்லியே ஆகனும், தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்ங்குற மாதிரி,
எல்லோருடயும் தோத்துக்கிட்டு இருந்தவனுங்க, இரண்டு மேட்சிலயும் ஜெயிச்சு, புனே
வாரியர் வாயில மண்ணல்லிப் போட்டதுமில்லாம, அய்யோ பாவம், பெங்களுரு தலையிலயும்
மண்ணப்போட்டு, இவனும் உள்ள போகாம, அவனுங்களையும் உள்ள போகவிடாம பண்ணிட்டானுங்க.
பிளே ஆஃப் ஒன்னு – கொல்கத்தா vs டெல்லி. தலைவன்
கங்கூலிய மதிக்காத கொல்கத்தா டீம்முக்கு நோய் வந்து நாசமா போகுகன்னு சாபம்
விட்டேன், என் சாபம் அப்படியே பலிச்சிடுச்சு, ஆனா, ஒரு சின்ன மாற்றம் டீம்
மாறிடுச்சு. டெல்லிக்கு டெங்கு காய்ச்சல் வந்திடுச்சு, கொல்கத்தா ஜெயிச்சு
பைனலுக்கு போகிடுச்சு.
பிளே ஆஃப் இரண்டு – சென்னை vs மும்பை. சென்னைதான் இரண்டு தடவ கப்
வாங்கிடுச்சே, பாவம் மும்பைக்கு இந்த தடவ சான்ஸ் கிடைக்கட்டும் என்று கண் மூடி
பிராத்தனை செய்ய. இங்கயும் லைட்டா டங்க் சிலிப்பாயிடுச்சு. சென்னை ஜெயித்து
செமிபைல்லில் டெல்லியை எதிர் கொள்ள
செமி பைனல் – சென்னை vs டெல்லி.
விஜய் நடிச்சது
கில்லி,
சேவாக் அடிப்பான்
சொல்லி,
தோனி ஆவான் பல்லி,
இந்த தட ஐ.பி.எல
வாங்குது டெல்லி
இப்படியெல்லாம் பாடிக்கிட்டே என் மச்சான்
பக்கத்துல உக்கார்ந்து மேட்ச் பார்த்தா..............., யாரு ஸார் அவன் முரளி
விஜய், அந்த அடி அடிக்குறான்.
கடந்த 5 வருட என்னுடைய ஐ.பி.எல் வரலாற்றுல,
4 வருட கிரிகெட் வாழ்க்கயில (ஐ.பி.எல் 4 நான் எந்த டீமுக்கும் சப்போர்ட் பண்ணல),
நான் பார்த்த எந்த போட்டியிலுமே, சப்போர்ட் பண்ணின டீம் ஜெயிக்கவேயில்லை. அதையும்
மீறி ஜெயித்திருந்துச்சுன்னா, அன்னைக்கு நான் அந்த மேட்ச பார்க்கல / (கமெண்ரி) கேட்கலன்னு
அர்த்தம். அத விடுங்க நம்ம பைனலுக்கு வருவோம்
பைனல் – சென்னை vs கொல்கத்தா. ஆயிரம் சொல்லுங்க இந்த
கல்கத்தகாரனுங்க செஞ்சது கொஞ்சம் கூட சரியில்ல. எவ்வளவு தையிரியம் இருந்தா எங்க
தல, எங்க தாதா, எங்க உயிர் கங்கூலிய டீம விட்டு தூக்குவானுங்க.
அஜித்
நடிச்சது மங்காத்தா
பஸ்பமாயிடுவ
கங்கூலிய எதிர்த்தா
சாருக்கான்,
போடாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.......
புரியலியா??????????????
சென்னைக்கு விசில் போடு......
----------------------------------------------------------------------------------யாஸிர்.
நண்பா தயவு செய்து நீ கொல்கத்தா வுக்கு சப்போர்ட் பண்ணு நண்பா.... அப்படி பண்ணி கொல்கத்தா ஜெயிச்சாலும் பரவாயில்லை.....
பதிலளிநீக்கு@ராபர்ட்,
நீக்குநோ, நெவர். நான் ஒரு பச்சைத்தமிழன் என்பதி நீங்க பைனலில் என்னுடய சப்போர்ட்டின் மூலமாக பார்க்கப் போகின்றீர்கள்.
மானம் உள்ளவரை,
மருந்தைக்குடித்து சாகும் வரை இனி, சென்னைக்கு விசில் தான். (விசிலுக்கு பதிலா, சங்குன்னு யாருக்காவது தோனுச்சுன்னா, கம்பெனி பொறுப்பல்ல)