நம் அனைவரின் மீதும் இறைவைனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
எத்தனை நாளைக்குத்தான் நாமும் தொழிலாளியாகவே இருக்குறது, முதலாளியா ஆகித்தான்
பார்போமே என்று என் சிந்தனையில் விழுந்தது எப்படித்தான் காங்கிரஸ் ஆட்சியின் காதில
விழுந்ததோ தெரியாது, பெட்ரோலின் விலை ரூ. 7.5 லிட்டருக்கு கூடுதலாம், உனக்கும்,
இந்தியாவுக்கும் சரிபட்டு வராது, நீ அங்கயே (துபாயில்) இருந்து சிவில் இஞ்சினியர்
என்றபெயரில் ஒட்டகத்தினை மேய்த்துக் கொண்டேயிரு என்று கொல்லாமல் கொல்லுகின்றது
காங்கிரஸ் கட்சி. இரவுக்குள் ஒரு மூணு லிட்டர் போட்டுகிட்டா 22.5 ரூபாயை
மிச்சப்படுத்தலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் அனைவரும் வண்டியைத் தூக்கிகொண்டு
பல்கிற்கு ஓட, அத்தனை கூட்டத்தயும் பார்த்துவிட்டு, கதவ சாத்திக்கிட்டு பல்க் ஓனர்
ஓட, இந்தியனுக்கு ஓட, ஓட தூரம் குறையல.
‘இப்படி கூட்டம் கூட்டமா, நாம ஓட வேண்டிய இடம் பெட்ரோல் பல்க் இல்ல மக்களே,
நாம கூடி நிக்கவேண்டிய இடம் வேற’ என சொல்ல தோணுது, முஹம்மது யாஸிர்னு பேரு வச்சிருக்க என்னய ‘நீ என்னடா
பி.ஜே.பிக்காரனான்னு’ சொல்லிருவாங்களோன்னு பயம்மா வேரு இருக்கு.
போகிற போக்கைப் பார்த்தால் மக்களை எல்லாம், மாவோயிஸ்டுகளாக மாற்றிவிடுவார்கள்
போல. இந்தியாவின் வரலாறு பற்றி படிக்க அதிக அக்கரை கொள்ளும் எனக்கு, இந்தியாவின்
எதிர்காலம் ரொம்ப பயமாக இருக்கின்றது. அடுத்த தலைமுறையை எப்படி உருவாக்குவது
என்பதில் தொடங்கும் பயம், அடுத்த தலைமுறை எப்படி உருவாகும் என்பதில் திசைமாறி
மிரளவைக்கின்றது. ஒரு சில நிகழ்வுகளைப் படிக்கும் போது நாம் எதிர்காலத்தில் எதை
நோக்கிய பயணத்தில் இருக்கின்றோம் என்ற குழப்பம் ஏற்படுகின்றது.
கோவையில் ஒரு திருமணத்தினை நிருத்திய அந்த மணப்பெண் கூறிய காரணத்தை அறியும்
போது என் மனைவிமேல் எனக்கு அளவில்லா அன்பு அதிகமாகின்றது. தனக்கு காரில் அதிக
ஸ்பீடாக (140 km/hr) போவது பிடிக்கும், தனக்கு கணவராக வரப்போகும் இவருடன் அப்படி
காரில் செல்லும் போது, 80க்கு மேல் போகும் போதே, ஏன் இப்படி போகிறாய், மெதுவாகப்
போ, என்ன அவசரம், என்றெல்லாம் பயப்படுகிறார். இப்படிப்பட்டவருடன் என்னால் எப்படி
சந்தோசமாக இருக்க முடியும். என்று கேள்வி எழுப்பி அந்த கல்யாணத்தினை
நிறுத்திவிட்டாள்.
எதிர் வீட்டுக்காரியின் கோழி தன்வீட்டிற்குள் வருவதால் ஏற்பட்ட சண்டையின்
விரோதத்தில், அவள் வெளியே சென்ற நேரமாய் பார்த்து, எதிர் வீட்டுக்காரியின் ஒன்னரை
வயது குழந்தயை கழுத்தை நெரித்துக் கொன்ற விழுப்புரத்துக்கார குடும்ப குத்துவிளக்கை
நினைத்து எந்த விதத்தில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள?
ரவுத்திரம் பழகு என்பது அநியாயத்திற்கு எதிராகத்தானே ஒழிய, அநியாயத்திற்கு
ரவுத்திரம் பழகிவிடலாகாது.
உலகமே இப்போது வன்முறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 59 வயதுக்கார
ஜாக்கிச் சானே, எனக்கு வயதாகிவிட்டது, இனி என்னால் ஆக்சன் படங்களில் நடிக்கலாகாது,
காமெடி படங்களை தேர்வு செய்யப் போகிறேன், மேலும், நான் எப்போதும் வன்முறையை விரும்பாதவன்,
ஆதலால் தான் என் படங்களில் வரும் சண்டைக்காட்சிகளில், நகைச்சுவையை இணைத்திருப்பேன்
என்று கேசுவலாக சொல்லுகிறார்.
ஆனால் நாம் இன்னும், 62 வயதுக்காரரை ஆயிரம் பேரை அடிக்கிறமாதிரியான கிராபிக்ஸ்
காட்சிக்கு, கட்டிப் போட்டு கயிறு கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறோம். வருசத்துல
வருகிற 100 படத்துல 90 படம் ரத்தமும், ரணமுமாகத்தான் இருக்குது. பெரிய பட்ஜெட்
படம்னா, ஹீரோ துப்பாக்கி தூக்குறாரு, சின்ன பட்ஜெட் படம்னா ஹீரோ அரிவாள
தூக்குறாரு. இத பார்க்கும் போது நமக்கு தூக்கிவாரிப் போடுது, விட்டா ஸ்கிரீன்ல
இருந்து வெளிய வந்து நம்மள ஒரு போடு, போட்டுவிட்டு போயிருவானுங்க போல.
பெட்ரோல் விலைக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து நடக்கும் ஆர்பாட்டத்துக்கு
கூடும் கூட்டத்தை விட, சினிமா பார்க்க
கூடும் கூட்டமே அதிகமாக இருக்கின்றது. மறதி இந்தியனின் பெரிய வியாதி. இதயெல்லாம் தெரிந்து தான் மத்தியரசு ஒன்னு
ஒன்னுக்கா ரேட்ட கூட்டியாச்சு.
எங்க ஊருல ஒருத்தன் மூணு குழந்தையுள்ள பொண்ண கூட்டிக்கிட்டு ஓடிட்டான். ஆனா
நான் ஊருக்கு போன போது, வெள்ளையும் , ஜொள்ளையுமா ரோட்டுல நடந்துக்கிட்டு இருக்கான்.
நான் என் நண்பனிடம் கேட்டேன்
‘என்ண்டா இவன், ஒரு குற்றவுணர்சி, அசிங்கமே இல்லாம, கூலா இப்படி நடமாடுறான்,
எப்படிடா?”
மூணு நாளைக்கு முன்னாடி வரை அவன் அசிங்கப்பட்டு, தெருவில் எல்லாம்
நடமாடாமத்தான் இருந்தான், ஆனா 2 நாளைக்கு முன்னாடி இவன் சாதனையை
முறியடிச்சுட்டதுனால, இவன் நல்லவனாக புரமோசன் ஆகிட்டான்
என்ண்டா சொல்லுற, எனக்கு ஒன்னுமே புரியலையே!!!!!
‘ஆமா, மச்சான், 2 நாளைக்கு முன்னாடி ஒருத்தன் 5 புள்ள வச்சிருக்குற பொம்பளய
கூட்டிட்டு ஓடிட்டான். அதனால 3 புள்ளய வச்சிருந்தவள கூட்டிட்டு ஓடுன இவன் நல்லவனா
ஆகிட்டான். இதுக்கே இப்படி வாயப்பொளந்துட்டா எப்படி? 2 நாளைக்கு முன்னாடி ஓடிப்போன
இவனும் நல்லவனா மாருவதற்கான சான்ஸும் இருக்கு’. இப்படி அவன் சொல்ல சொல்ல எனக்கு மயக்கமே வந்திருச்சு.
இந்த மெத்தடாலஜியத்தான் காங்கிரஸ் இப்போ கையில எடுத்திருக்கு. 7.50 ரூபாயை
அதிகப்படுத்தி முக்குக்கு, முக்கு கூடி ‘பொறம்போக்கு’, ‘பண்ணாடைங்க’...... என்று சொல்லும்
நம் வாயை, 2.0 ரூபாயை குறைத்துவிட்டு ‘நல்லவங்கன்ன்ன்ன்ன்னு’ சொல்ல வச்சிருவானுங்க.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
----------------------------------------------------------------------------------யாஸிர்.
மிக யதார்த்தமான நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் யாசிர்.
பதிலளிநீக்குநான் நண்பர்களிடம் (நான் என் மனைவியிடம் பேசும்போது கூட) பேசும்போது தாங்கள் எழுத்து நடையை ஒத்திருக்கும் எங்கள் பேச்சு நடை.
வாழ்த்துக்கள்!
அப்துல் கபூர்
லாஸ் ஏஞ்சலஸ்
@Abdul Kaboor,
பதிலளிநீக்குThanks brother.
Super. Read your blog for the past one hour. You have a great writing style. Thoroughly professional.
பதிலளிநீக்குI have two suggestions.
1) Write more.
2) Avoid writing about people of other religion. (sankaracharya - sornamalya etc)
yes, I know that you talk truth, but suddenly it creates a barrier when you cross borders. ( I dont respect religion either, but as a Hindu I can criticize him to any extent.)
Or declare yourself as a neutral blogger and criticize all wrong-doers.
Anyway, I leave it to you. After all, its your blog, and mine is just a suggestion.
@முகமறியா நண்பருக்கு,
பதிலளிநீக்குநாட்டில் நடக்கும் ஒரு விஷயம் பற்றிய கருத்தாகத்தான் ஜெயந்திரர் சமாச்சாரம் இங்கு பகிரப்பட்டது, அதுவும் தமிழனாக, இந்திய பிரஜையாக என்னை நான் நினைத்தமைக்காக மட்டுமே நான் அதை பிரசுக்ப்படுத்தியது. இதில் நான் முஸ்லிமாக நடந்துகொள்ளவில்லை. எந்த ஒரு நேரத்திலும் அப்படி நடக்க எனக்கு விருப்பம் இல்லை.
இருப்பினும் தங்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பனாக, பலபேர் கூற நினைத்ததை தங்களின் கருத்தாக கருதிக்கொண்டு, இனிவரும் எந்த எனது பதிப்பிலும் இது போன்ற விசயங்களை எழுதுவதை தவிர்க்கின்றேன்.
என் எழுத்து தங்களையோ, அல்லது எனது தொப்புள் கொடி உறவுகளான மாற்று மத சகோதரர்களையோ காயப்படுத்தியிருப்பின் அதற்கு எனது மன்னிப்பினை கேட்டுக்கொள்கின்றேன்.
தாங்களின் கருத்துக்கு மதிப்பளிப்பவனாக, இந்த பதிவில் சர்ச்சைக்குறிய பகுதியினை நீக்குகிறேன்.
தங்களின் கருத்துக்களை என்றென்றும் எதிர் நோக்கும் சகோதரன் ----------யாஸிர்.