புதன், நவம்பர் 30, 2011

அந்த 7 நாட்கள்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

கடந்த இரண்டு பதிவுகள் அரசியல் சம்பந்தமாக ஆகிவிட்டமைக்கு, கொஞ்சம் மாறுதலாக இருக்கட்டுமேன்னு மறுபடியும் நம்ம சொந்த கதைய எழுதலாமுன்னு நினைத்து, எழுத ஆரம்பித்தது தான் இந்த பதிவு. 

நான்காம் வருட கல்லூரி இன்ப சுற்றுலா. உண்மையில் எனக்கு அந்த டூருக்கு போகுறதுக்கு பிடிக்கல. ஏன்னா, அப்போ எங்க வகுப்பு சில, பல காரணங்களுக்காக பிரிந்து இருந்தது. இரண்டு அணியா இல்ல மூன்று அணியான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நான், மற்றும் எனது மற்ற சில நண்பர்கள் எந்த அணியினு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தோம.  டூருன்னா ஒன்னா இருந்து கும்மியடிச்சாத்தான் நல்லா இருக்கும், ஆனா இந்த முறை அப்படி இருக்கப்போவதில்லை என்பதை அறிந்து நான் என் பெயரைக் கொடுக்கவில்லை.

ஆனாலும், சீட்டுகட்டு விளையாடும் போது ஜோக்கர் இல்லனா எப்படின்னு முடிவுபன்னி என்னை என் நண்பன் கார்த்திகேயன் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் சம்மதிக்க வச்சான். இதுவரை எங்க காலேஜ் வரலாற்றிலேயே, அதிக தூரமா டூர் போனது எங்க செட்டுல தான். எவ்வளவோ பேர், எத்தனையோ முயற்சி செய்தும் கிடைக்காத கோவா எங்களுக்கு கிடைத்தது. கோவா, மும்பை, ஹைதராபாத், சென்னைனு மொத்தம் 7 நாள் டூர்.

காலேஜ் சார்பா ஆண், பெண் என இரண்டு ஆசிரியர்கள் வருபதுண்டு,  எங்க செட்டு பொண்ணுங்கள பார்த்த பிரின்சிபாலுக்கு என்ன தோனுச்சின்னு தெரியல, பெண் ஆசிரியர் வேண்டாமுன்னு இரண்டுமே ஆண்களாக கொடுத்துவிட்டார். பொதுவா மாணவர்கள், டூருக்கு எந்த ஆசிரியர் வரனும் என்பதை விட யாரு வந்திரக்கூடாங்குறதுல ரொம்ப கவனமா இருப்பாங்க. அதனால எங்க ஜூனியர் பசங்ககிட்ட, எங்ககூட வரக்கூடாதுண்ணு நினைகிற ஆசிரியர்கள பத்தி ரொம்ப பெருமையா சொல்லி ஏத்திவிடுவோம். அவர நீங்க கூப்பிட்டு போங்க, நல்லா என்ஜாய் பண்ணலாம்னு அள்ளி தெளிப்போம்.
அவரா.....ன்னு எவனாவது இழுத்தான்னா, உடனே அவரு கிளாஸ் ரூமில் தாண்டா அப்படி இருப்பாரு, வெளியில வந்தார்னா அவரமாதிரி ஒரு பெஸ்டு பிரண்ட நீங்க பாக்கவே முடியாதுன்னு சொல்லி அவங்க தலையில கட்டிவச்சிருவோம். இப்படியான பல நாடகங்களுக்கு மத்தியில் எங்களுக்கு கிடைச்சவர்கள் தான், திரு. முத்துக் குமார், திரு. சீனிவாசன்.

எல்லாமே ரயில் மார்கமாகத்தான் பயணங்கள். திருவனந்தபுரத்தில் இருந்து கோவாவிற்கு பயணம் தொடங்கியது. ஒரே சிரிப்பும், கும்மாளம் தான்.  கனேசன், பார்த்திபன், விமல், நான் அந்த டூரில் ஒன்னாக இருந்தோம். மத்த பசங்க எப்படின்னு தெரியல, ஆனா எங்க ஏரியாவில மட்டும் தான் அதிகமான சிரிப்பு சத்தமா கேட்கும். மொழி தெரியாம, ஹிந்திகாரர்களிடம் சிரிச்சிகிட்டே கெட்டவார்த்தை யூஸ் பன்னி, உதவிகேட்கிறது, அடிவாங்குர மாதிரி இருந்தா அப்ஸ்காட் ஆகுரதுன்னு முதல் நாளே அல்லோலப்பட்டது.

கனேசனுக்கும், பார்திபனுக்கும் எப்போதும் 7ம் பொருத்தம்தான். கனேசன் கொஞ்சம் பேசிக்கா சோம்பேரி, எந்த பொருளையும் ஒழுங்காக வைக்கமாட்டான், கிடைத்த இடத்தில் எரியுவான். பார்திபன் அதற்கு நேர் எதிர், எதிலும் பெர்பக்சன், எதுனாலும் வைக்கிர இடத்தில் வைப்பான். அது மாதிரி புத்திமதி சொல்லுரதுலயும் பார்த்திபனை மின்சுரதுக்கு ஆளுயில்ல. திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தது கனேசனுக்கு பார்திபனின் புத்திமதி. கனேசனுக்கு பர்ஸ் என்றாலே அலர்ஜி, பணத்தை சுருட்டி, ஏதாவது இடத்தில் வைப்பான், இல்லனா பெட்டியில் சட்ட, பாண்டிற்கு இடையில் வைப்பான். இப்படி வைக்காதே, அப்படி வைக்காதேன்னு ஒரே அலப்பர, உங்கப்பா இந்த பணத்த சம்பாதிக்கிறதுக்கு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருப்பாருன்னு தெரியுமான்னு வேற. இப்படியா போற இடத்தில் எல்லாம் அட்வைஸ் தான். 

அட்வைஸ் ஆளு, திடிரென ஒரே சைலன், ஹைதராபாத் வந்த பின்னாடியும் வாயே தொரக்கல, என்னடான்னா எதுவும் சொல்லமாட்டேன்றான். கனேசன் தான் ஏதாவது சொல்லியிருக்கனும்னு, அவங்கிட்டயும் கேட்டா அவனு இல்லைன்னு சொல்ல. 
டேய், என்னடா இப்படி இருக்க, என்ன ஆச்சுடா? சொல்லித்தொலையண்டானு கேட்டபின்
தயங்கிய படி இல்ல, இல்ல ..................
சொல்லுடா என்ன ஆச்சு?

அழுதுகிட்டே சொன்னான், மச்சான் என் பர்ஸை காணோம்டா, எவனோ அடிச்சிட்டு போயிட்டான்னு சொல்ல. எங்களுக்கு எல்லோருக்கு ஒரே சிரிப்பு. கனேசனுக்கு ஏக சந்தோசம் அதில். நாங்க எல்லோரும் சிரித்தமைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சமாதானம் சொன்னோம். ஆனா கடைசிவரை கனேசன் மட்டும் சமாதானம் சொல்லவேயில்லை. எதனாலும் மன்னிச்சிடுவேன், இந்த பணத்துக்கு உங்கப்பா என்ன கஷ்டப்படுறாருன்னு கேட்டததாண்டா என்னால மன்னிக்க முடியலன்னு அவன் சீரினான்.
விடுடா, பணம் கிடைச்சிடும், உன காலேஜ் I.D கார்டு பார்த்து அனுப்பிவைப்பாங்கன்னு நாங்க எல்லோரும் பார்திபனுக்கு ஆருதல் சொல்ல, அதெப்படி கிடைக்கும், அதெல்லாம் கிடைக்காது, கோவா காரன் என்ன கேனயனா அனுப்பிவைக்கிரதுக்குன்னு கனேசன் சொல்லி சொல்லி பார்திபன வெறுப்பேத்துனத இன்னைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும். அதிலிருந்து பாவம் அட்வைஸ் பன்னுரத்யே நிறுத்திட்டான்.

பார்த்திபனாவது பரவாயில்லை ஆம்புள பயலுக முன்னாடி அசிங்கப்பட்டான், நம்ம நிலை அதவிட மோசம்.

திருவனந்தபுரத்தில் இருது கோவா போக ஒரு பகல், ஒரு இரவு ஆகிடுச்சு. தூங்குற நேரத்தில் பொண்ணுங்க இருந்த இடத்தில் ஒரு பெட் இருக்குன்னு தெரிஞ்சி, இருக்குரதுலயே நல்ல பையன் யாருன்னு பார்த்து என்னை (எங்கம்மா சத்தியமா நான் நல்ல பையன் தான்) அனுப்பிவைத்தார்கள். குளிர் அதிகமாக இருக்கும் என்று முதலிலையே தெரிந்து கொண்டு, கம்பளியால் ஆன நைட் பாண்ட் போட்டுத்தான் தூங்கினேன். மறுநாள் காலையில நான் எந்திக்கிரதுக்கு முன்னாடியே எல்லோரும், ரயிலில் எந்திச்சியிருக்க, பயங்கர குளிர், பொண்ணுங்க கூட கடல போடுரதுக்குன்னு உள்ள ஒரு குரூப் காரியத்தில் கண்ணாயிருக்க, ஒரு பெண் மட்டும் அதிலிருந்து

என்ன யாஸிர் ரொம்ப குளிருதுல்ல

ஆமா

எல்லோருக்கு சூடா டீ வாங்கி கொடேன்

ங்கொய்யால இதுக்குத்தானா, இப்படி தெரிஞ்சிருந்தா, குளிரா அப்படின்னா என்னனு சொல்லியிருப்பனேன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு, அதுக்கென்ன வாங்கிட்டா போச்சின்னு சொல்லி எல்லோருக்கும் வாங்கி கொடுத்தேன்.

எல்லோருக்கு வாங்கிக் கொடுத்தபின்னாடி, உனக்கு என்ன வேண்டு என்று ரயிலில் டீ விற்பன் கேட்க, எது ரொம்ப சூடா இருக்கு டீயா, பாலா?

பால் என்று அவன் சொன்னதும், அப்ப அது கொடு என்று வாங்கிகொண்டு, சில்லைரய கொடுத்தனுப்பினேன்.


பயபுள்ள கொதிக்க, கொதிக்க குடுத்துட்டு போயிட்டான், கேட்டுவாங்கிட்டு குடிக்கலனா, பொண்ணுங்க முன்னாடி அசிங்கம்னு நினைச்சு, கைல சூடு தாங்கமுடியாம அட்ஜஸ்ட் பன்னி குடிக்க வாய்கிட்ட கொண்டு போனேன், ஒரு எடுபட்டவன் பாத்ரூமுக்கு போற அவசரத்துல பாலை தட்டிவிட்டுட்டு போயிட்டான்.

பால் எல்லாம் கொட்டக் கூடாத இடத்துல கொட்டிடுச்சு. நான் போட்டிருந்தத காட்டன் பேண்ட் குளிருல கொஞ்சம் ஈரமாக இருந்ததால், சூடாக பால் கொட்டின உடன் புகை, புகையா வந்திருச்சு. எனக்கு ஆனா.... சூடு தாங்க முடியல, புகயை நிறுத்தவும் முடியல, எந்திருச்சு ஓடவும் முடியல.
வரக்கூடாத இடத்தில் இருந்து புகைவருவதைப் பார்த்த, பெண் தோழிகளின் சிரிப்பு பார்த்து எனக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமாயிருச்சு.

என்னதான் அசிங்கப்பட்டாலும் அது அழகான நாட்கள், அற்புதமான தருணங்கள். வாழ்வில் மறக்க முடியாத 7 நாட்கள்.

-----------------------------------------------------------------------------------யாஸிர்

2 கருத்துகள்:

 1. anna climax sooooper.....!
  Partheeban anna kitta yen sarbulayum sorry sollirunga...
  still laughing... :D

  பதிலளிநீக்கு
 2. @ பிளோ ஆவரேஜ் ஸ்டூடண்ட்,

  மறுமொழியிட்டமைக்கு நன்றி, பார்திபனிடம் இதைப்பற்றி கூறிவிடுகின்றேன்.

  பதிலளிநீக்கு