புதன், நவம்பர் 30, 2011

அந்த 7 நாட்கள்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

கடந்த இரண்டு பதிவுகள் அரசியல் சம்பந்தமாக ஆகிவிட்டமைக்கு, கொஞ்சம் மாறுதலாக இருக்கட்டுமேன்னு மறுபடியும் நம்ம சொந்த கதைய எழுதலாமுன்னு நினைத்து, எழுத ஆரம்பித்தது தான் இந்த பதிவு. 

நான்காம் வருட கல்லூரி இன்ப சுற்றுலா. உண்மையில் எனக்கு அந்த டூருக்கு போகுறதுக்கு பிடிக்கல. ஏன்னா, அப்போ எங்க வகுப்பு சில, பல காரணங்களுக்காக பிரிந்து இருந்தது. இரண்டு அணியா இல்ல மூன்று அணியான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா நான், மற்றும் எனது மற்ற சில நண்பர்கள் எந்த அணியினு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தோம.  டூருன்னா ஒன்னா இருந்து கும்மியடிச்சாத்தான் நல்லா இருக்கும், ஆனா இந்த முறை அப்படி இருக்கப்போவதில்லை என்பதை அறிந்து நான் என் பெயரைக் கொடுக்கவில்லை.

ஆனாலும், சீட்டுகட்டு விளையாடும் போது ஜோக்கர் இல்லனா எப்படின்னு முடிவுபன்னி என்னை என் நண்பன் கார்த்திகேயன் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் சம்மதிக்க வச்சான். இதுவரை எங்க காலேஜ் வரலாற்றிலேயே, அதிக தூரமா டூர் போனது எங்க செட்டுல தான். எவ்வளவோ பேர், எத்தனையோ முயற்சி செய்தும் கிடைக்காத கோவா எங்களுக்கு கிடைத்தது. கோவா, மும்பை, ஹைதராபாத், சென்னைனு மொத்தம் 7 நாள் டூர்.

காலேஜ் சார்பா ஆண், பெண் என இரண்டு ஆசிரியர்கள் வருபதுண்டு,  எங்க செட்டு பொண்ணுங்கள பார்த்த பிரின்சிபாலுக்கு என்ன தோனுச்சின்னு தெரியல, பெண் ஆசிரியர் வேண்டாமுன்னு இரண்டுமே ஆண்களாக கொடுத்துவிட்டார். பொதுவா மாணவர்கள், டூருக்கு எந்த ஆசிரியர் வரனும் என்பதை விட யாரு வந்திரக்கூடாங்குறதுல ரொம்ப கவனமா இருப்பாங்க. அதனால எங்க ஜூனியர் பசங்ககிட்ட, எங்ககூட வரக்கூடாதுண்ணு நினைகிற ஆசிரியர்கள பத்தி ரொம்ப பெருமையா சொல்லி ஏத்திவிடுவோம். அவர நீங்க கூப்பிட்டு போங்க, நல்லா என்ஜாய் பண்ணலாம்னு அள்ளி தெளிப்போம்.
அவரா.....ன்னு எவனாவது இழுத்தான்னா, உடனே அவரு கிளாஸ் ரூமில் தாண்டா அப்படி இருப்பாரு, வெளியில வந்தார்னா அவரமாதிரி ஒரு பெஸ்டு பிரண்ட நீங்க பாக்கவே முடியாதுன்னு சொல்லி அவங்க தலையில கட்டிவச்சிருவோம். இப்படியான பல நாடகங்களுக்கு மத்தியில் எங்களுக்கு கிடைச்சவர்கள் தான், திரு. முத்துக் குமார், திரு. சீனிவாசன்.

எல்லாமே ரயில் மார்கமாகத்தான் பயணங்கள். திருவனந்தபுரத்தில் இருந்து கோவாவிற்கு பயணம் தொடங்கியது. ஒரே சிரிப்பும், கும்மாளம் தான்.  கனேசன், பார்த்திபன், விமல், நான் அந்த டூரில் ஒன்னாக இருந்தோம். மத்த பசங்க எப்படின்னு தெரியல, ஆனா எங்க ஏரியாவில மட்டும் தான் அதிகமான சிரிப்பு சத்தமா கேட்கும். மொழி தெரியாம, ஹிந்திகாரர்களிடம் சிரிச்சிகிட்டே கெட்டவார்த்தை யூஸ் பன்னி, உதவிகேட்கிறது, அடிவாங்குர மாதிரி இருந்தா அப்ஸ்காட் ஆகுரதுன்னு முதல் நாளே அல்லோலப்பட்டது.

கனேசனுக்கும், பார்திபனுக்கும் எப்போதும் 7ம் பொருத்தம்தான். கனேசன் கொஞ்சம் பேசிக்கா சோம்பேரி, எந்த பொருளையும் ஒழுங்காக வைக்கமாட்டான், கிடைத்த இடத்தில் எரியுவான். பார்திபன் அதற்கு நேர் எதிர், எதிலும் பெர்பக்சன், எதுனாலும் வைக்கிர இடத்தில் வைப்பான். அது மாதிரி புத்திமதி சொல்லுரதுலயும் பார்த்திபனை மின்சுரதுக்கு ஆளுயில்ல. திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தது கனேசனுக்கு பார்திபனின் புத்திமதி. கனேசனுக்கு பர்ஸ் என்றாலே அலர்ஜி, பணத்தை சுருட்டி, ஏதாவது இடத்தில் வைப்பான், இல்லனா பெட்டியில் சட்ட, பாண்டிற்கு இடையில் வைப்பான். இப்படி வைக்காதே, அப்படி வைக்காதேன்னு ஒரே அலப்பர, உங்கப்பா இந்த பணத்த சம்பாதிக்கிறதுக்கு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருப்பாருன்னு தெரியுமான்னு வேற. இப்படியா போற இடத்தில் எல்லாம் அட்வைஸ் தான். 

அட்வைஸ் ஆளு, திடிரென ஒரே சைலன், ஹைதராபாத் வந்த பின்னாடியும் வாயே தொரக்கல, என்னடான்னா எதுவும் சொல்லமாட்டேன்றான். கனேசன் தான் ஏதாவது சொல்லியிருக்கனும்னு, அவங்கிட்டயும் கேட்டா அவனு இல்லைன்னு சொல்ல. 
டேய், என்னடா இப்படி இருக்க, என்ன ஆச்சுடா? சொல்லித்தொலையண்டானு கேட்டபின்
தயங்கிய படி இல்ல, இல்ல ..................
சொல்லுடா என்ன ஆச்சு?

அழுதுகிட்டே சொன்னான், மச்சான் என் பர்ஸை காணோம்டா, எவனோ அடிச்சிட்டு போயிட்டான்னு சொல்ல. எங்களுக்கு எல்லோருக்கு ஒரே சிரிப்பு. கனேசனுக்கு ஏக சந்தோசம் அதில். நாங்க எல்லோரும் சிரித்தமைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சமாதானம் சொன்னோம். ஆனா கடைசிவரை கனேசன் மட்டும் சமாதானம் சொல்லவேயில்லை. எதனாலும் மன்னிச்சிடுவேன், இந்த பணத்துக்கு உங்கப்பா என்ன கஷ்டப்படுறாருன்னு கேட்டததாண்டா என்னால மன்னிக்க முடியலன்னு அவன் சீரினான்.
விடுடா, பணம் கிடைச்சிடும், உன காலேஜ் I.D கார்டு பார்த்து அனுப்பிவைப்பாங்கன்னு நாங்க எல்லோரும் பார்திபனுக்கு ஆருதல் சொல்ல, அதெப்படி கிடைக்கும், அதெல்லாம் கிடைக்காது, கோவா காரன் என்ன கேனயனா அனுப்பிவைக்கிரதுக்குன்னு கனேசன் சொல்லி சொல்லி பார்திபன வெறுப்பேத்துனத இன்னைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும். அதிலிருந்து பாவம் அட்வைஸ் பன்னுரத்யே நிறுத்திட்டான்.

பார்த்திபனாவது பரவாயில்லை ஆம்புள பயலுக முன்னாடி அசிங்கப்பட்டான், நம்ம நிலை அதவிட மோசம்.

திருவனந்தபுரத்தில் இருது கோவா போக ஒரு பகல், ஒரு இரவு ஆகிடுச்சு. தூங்குற நேரத்தில் பொண்ணுங்க இருந்த இடத்தில் ஒரு பெட் இருக்குன்னு தெரிஞ்சி, இருக்குரதுலயே நல்ல பையன் யாருன்னு பார்த்து என்னை (எங்கம்மா சத்தியமா நான் நல்ல பையன் தான்) அனுப்பிவைத்தார்கள். குளிர் அதிகமாக இருக்கும் என்று முதலிலையே தெரிந்து கொண்டு, கம்பளியால் ஆன நைட் பாண்ட் போட்டுத்தான் தூங்கினேன். மறுநாள் காலையில நான் எந்திக்கிரதுக்கு முன்னாடியே எல்லோரும், ரயிலில் எந்திச்சியிருக்க, பயங்கர குளிர், பொண்ணுங்க கூட கடல போடுரதுக்குன்னு உள்ள ஒரு குரூப் காரியத்தில் கண்ணாயிருக்க, ஒரு பெண் மட்டும் அதிலிருந்து

என்ன யாஸிர் ரொம்ப குளிருதுல்ல

ஆமா

எல்லோருக்கு சூடா டீ வாங்கி கொடேன்

ங்கொய்யால இதுக்குத்தானா, இப்படி தெரிஞ்சிருந்தா, குளிரா அப்படின்னா என்னனு சொல்லியிருப்பனேன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு, அதுக்கென்ன வாங்கிட்டா போச்சின்னு சொல்லி எல்லோருக்கும் வாங்கி கொடுத்தேன்.

எல்லோருக்கு வாங்கிக் கொடுத்தபின்னாடி, உனக்கு என்ன வேண்டு என்று ரயிலில் டீ விற்பன் கேட்க, எது ரொம்ப சூடா இருக்கு டீயா, பாலா?

பால் என்று அவன் சொன்னதும், அப்ப அது கொடு என்று வாங்கிகொண்டு, சில்லைரய கொடுத்தனுப்பினேன்.


பயபுள்ள கொதிக்க, கொதிக்க குடுத்துட்டு போயிட்டான், கேட்டுவாங்கிட்டு குடிக்கலனா, பொண்ணுங்க முன்னாடி அசிங்கம்னு நினைச்சு, கைல சூடு தாங்கமுடியாம அட்ஜஸ்ட் பன்னி குடிக்க வாய்கிட்ட கொண்டு போனேன், ஒரு எடுபட்டவன் பாத்ரூமுக்கு போற அவசரத்துல பாலை தட்டிவிட்டுட்டு போயிட்டான்.

பால் எல்லாம் கொட்டக் கூடாத இடத்துல கொட்டிடுச்சு. நான் போட்டிருந்தத காட்டன் பேண்ட் குளிருல கொஞ்சம் ஈரமாக இருந்ததால், சூடாக பால் கொட்டின உடன் புகை, புகையா வந்திருச்சு. எனக்கு ஆனா.... சூடு தாங்க முடியல, புகயை நிறுத்தவும் முடியல, எந்திருச்சு ஓடவும் முடியல.
வரக்கூடாத இடத்தில் இருந்து புகைவருவதைப் பார்த்த, பெண் தோழிகளின் சிரிப்பு பார்த்து எனக்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமாயிருச்சு.

என்னதான் அசிங்கப்பட்டாலும் அது அழகான நாட்கள், அற்புதமான தருணங்கள். வாழ்வில் மறக்க முடியாத 7 நாட்கள்.

-----------------------------------------------------------------------------------யாஸிர்

திங்கள், நவம்பர் 28, 2011

துப்புக்கெட்ட துரைமுருகன்....

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.


தி.மு.கவின் தெனாலி ராமன் என்றால் அனைவருக்கும் அறியப்படும் நபர் தான் திரு துரைமுருகன். கடந்த தி.மு.க ஆட்சியில் பல துறைகளுக்கு மாற்றப்பட்டு அசிங்கப்படுத்தியும், அசராமல் சிரித்தமுகத்துடன் துடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவர் இவர். கிண்டல் பேச்சு, நக்கல், நையாண்டிகள் இவரின் கைவந்த கலை. தி.மு.க, காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சிவார்த்தையில் இவர் அள்ளிப்போட்ட ஒரு வார்த்தைக்காகவே, கேட்ட 63 தொகுதியையும் கொடுத்துவிட்டு, தேமேன்னு முழுச்சிக்கிட்டு நின்னது தி.மு.க.


அவர் ஒன்னும் பெருசா சொல்லிரல, காங்கிரஸ் 90 சீட்டு கேட்டவுடன், இவர் சொன்னது “சரி கொடுக்குறதுல ஒன்னும் பிரட்சனையில்லை, அவ்வளவு தொகுதியில நிக்கிறதுக்கு உங்க்கிட்ட ஆளு இருக்க்கா?. பொதுவா தி.மு.கவில் பிரபலமாகனும்னா, ஒன்னு அவர் சிறந்த பேச்சளராக இருக்கவேண்டும் இல்லனா ஒரு போராட்ட்த்தில் அதிகளவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவராக இருக்கவேண்டும். ஆனால் துரைமுருகன் அது போல எந்த ஒரு செயலையும் செய்யாமல் கழகத்தின் முக்கிய அந்தஸ்தை பெறக் காரணம் ஜெயலலிதா மட்டுமே. என்னடா அப்துல் காதருக்கும், அம்மாவசைக்கும் முடிச்சி போடுறன்னு நினைக்காதீங்க.

எம்.ஜி.ஆர் மறைந்த பின்பு ஏற்பட்ட, தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, சட்டசபையில், ஜெயலாலிதாவின் சேலையை உருவி, ஜாக்கெட்டை கிழித்து தன்னை அதிகளவில் பிரபலப்படுத்திக் கொண்டவர் இவர். இப்போ சொல்லுங்க ஜெயலலிதா எவ்வளவு நல்லது செஞ்சிருக்காங்க. எங்க அமைச்சர் பதவி கொடுக்கலன்னா, நம்ம வேஷ்டிய உருவிருவானோன்னு பய்ந்துதான் கருணாநிதியும் அமைச்சர் பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்திருப்பார் போல.

இந்த வார ஆனந்தவிகடனில் “செவன் ஹில்.... கேப்டன் தில் னு ஒரு பக்கம், அதில் பிரபலமான 5 பேர்களிடத்தில், 6 கேள்வி கேட்டு அதற்கு அவர்கள் பதில் சொல்லக்கூடியது மாதிரியான ஒரு நிகழ்சியின் கட்டுரை. நான் விகடனின் இணையதளத்தில் உறிப்பினராக இணைந்திருக்கின்றேன். என்னதான் சொல்லுங்க புத்தகமா படிக்கிறதுல இருக்குற சுகம், கணினியில பார்த்து படிக்கிறதுல வராது. அதனால முக்கியமான கட்டுரைகள் மட்டும் படிப்பதுண்டு. இந்த வார 5 பிரபலங்களில் நம்ம துரைமுருகனும் ஒருவர், விஷால், திபக் (சின்னத்திரை நடிகர்), தாப்ஸி, ஜோஸ்னா சின்னப்பா (ஸ்குவாஷ் வீராங்கனை) மற்றவர்கள்.

இதில் துரைமுருகன், ஜோஸ்னா தவிர மற்றவர்கள் அனைவரும் திரைத்துறை சம்பந்தமானவர்கள். பொதுவா எனக்கு இவனுங்க அரசியல் பற்றி பேசினா நான் விரும்புவது இல்லை, எதுவும் தெரியாது என்பதை விட தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் என்பது என்னுடய அபிப்பிராயம். இந்த பக்கத்தை நான் வார வாரம் படித்து நம்முடய அறிவு எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுண்டு (குறைந்த்து 5 க்கு 2 வது கரெக்டா இருக்கும்).

மற்ற நாலு பேரைவிட கண்டிப்பாக உள்ளூரில் இருந்து உலக விசயங்களில் அறிவு பெற்றிருக்கவேண்டும் ஒரு அரசியல்வாதியான துரைமுருகன். ஆனால் நடந்தது வேறு. இவருடன் ஒப்பிடும் போது, சினிமாகாரர்கள் பரவாயில்லை என்றாகிவிட்ட்து எனக்கு.
இப்பதான் உடற்பயிற்சி முடித்துவிட்டு வருகின்றேன், ரொம்ப பிரஷ்ஷா இருக்கேன், கேள்விய கேளுங்கன்னு அவர் சொன்னவுடனே கண்டிப்பா எல்லாத்துக்கும் கரெக்டா சொல்லப்போராருன்னு நம்பி படிக்க ஆரம்பித்தேன்

கேள்வி 1 : ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவமான மருத்துவமனையின் பெயர் என்ன (செவர் ஹில்ஸ்)
அதுக்கு இவரோட பதில், சினிமாவபத்தி எங்கிட்ட கேட்டா எப்படி அதில் நான் பெயில் தான். அடுத்த கேள்வி கேளுங்கன்னு சொல்ல. படித்த எனக்கு அதுவும் சரிதான், சினிமாவுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தமுன்னு எனக்கு நனே ஆருதல் படுத்திக்கொண்டேன்.

கேள்வி 2 : 10 வகுப்பு தேர்வில் ஆள்மாராட்டம் செய்த புதுவை அமைச்சர் பெயர் என்ன (கல்யாண சுந்தரம்)
அட அமா நானும் கேள்விப்பட்டேன், ''ஏதோ கல்யாணம்னு வரும். என்ன கல்யாணம்?''.(ம்ம்ம் அறுபதாங் கல்யாணம்) இந்த பதிலைக் கேட்டு எனக்கு வந்ததே கோபம். பரதேசிக்கு அரசியல்வாதியா இருந்துகிட்டு இதுக்கு கூட பதில் தெரியல,இந்த பதில்ல என்ன கொஞ்சம் சுரண்டி பார்துட்டார்.

கேள்வி 3 : '7ஆம் அறிவுபடத்தில் வில்லன் பெயர் என்ன? (டாங்க்லீ)
''வெளிநாட்டுக்காரத் தம்பி ஒருத்தரு ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரு. அவரு பேரு என்னனு விசாரிக்காம விட்டுட்டேன்!'' மன்னிச்சிட்டேன் ஏன்னா இது சினிமா சம்பத்தப்ப்ட்ட்து என்பதால்.
கேள்வி 4 : சசிகலா குடும்பத்தில் எத்தனை 'கரன்கள் இருக்கிறார்கள்... அவர்கள் பெயர் என்ன? (திவா'கரன்’, தின'கரன்’, பாஸ்'கரன்’, சுதா'கரன்)
''இதை எதுக்கு என்கிட்ட கேக்கு றீங்க... அவங்க வீட்ல எத்தனை கரன் இருக்காங் கனு கணக்கு எடுக்குறதுதான் என் வேலையா?''. மற்றவர்கள் பெயர் தெரியலனா கூட பரவாயில்லை, வளர்ப்பு மகன் சுதாகர் பெயர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தினகரன் பேரு கூட தெரியவில்லை இவனுக்கு. (மரியாத என்னவேண்டிகிடக்கு)

கேள்வி 5 : சமீபத்தில் திவால் ஆகும் நிலைக்கு வந்ததாகப் பரபரப்புக் கிளம்பிய தனியார் விமான நிறுவனம் எது? அதன் உரிமையாளர் யார்? (கிங்ஃபிஷர் - விஜய் மல்லையா)
''இப்போதான் ஏதோ ஒரு கம்பெனியை மூடின தாச் சொன்னாங்க. என்ன கம்பெனினு பேரு தெரியல!''. ஒரு சின்னபிள்ளையை கேட்டா கூட சொல்லிரும் இந்த கேள்விக்கான பதிலை. இதிலிருத்து தான் தெரியுது இவர் சன் நியூஸ் கூட பார்பதில்லை என்று. (இவங்களுக்கு தேர்தலுக்கு காசு கொடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும்)

கேள்வி 6 : சமீபத்தில், சினிமா பாணியில் காவல் நிலையத்துக்குச் சென்று, தன் கட்சித் தொண்டர் களை மீட்டு வந்த அரசியல்வாதி யார்? (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!)
''இந்த செந்தமிழனும் வளர்மதியும்தான் ஸ்டேஷனுக்குப் போய் யாரையோ கூட்டிட்டு வந்ததாக் கேள்விப்பட்டேன்!''. மற்ற கேள்விக்கு சொன்ன பதிலையாவது நான் மன்னிச்சிருவேன், ஆனா இந்த கேள்விக்கு கூட இவருக்கு பதில் தெரியலையேன்னு நினைக்கும் போது, இவனெல்லாம் நம்மள 5 வருசமா ஆண்டிருக்கானேன்னு வெக்கப்படவேண்டியிருக்கு ச்சே.
2,3,5,6 வது கேள்விகளுக்கு எனக்கே பதில் தெரிஞ்சிருக்கு, 4வது கேள்விக்கு சுதாகரன், தினகரன் பேர்கள் தெரிந்திருந்த்து.
என்னத்தசொல்ல, சொன்னா ஏதாவது ஆகப்போகிறதா என்ன, இல்ல 2016-2021ல் இவர் உயிருடன் இருந்தா கொடுக்கப் போகும் அமைச்சர் பதவி, கொடுக்கப்படாமல் இருக்கப் போகிறதா என்னா?
இதயெல்லாம் யாராவது இவர்கிட்ட கேட்டா என்ன சொல்லுவாரு?
.
.
.
.
ஹி, ஹி, ஹி அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.......
ஏதோ கருகின வாசனைவருதா?, ஒன்னுமில்லை
என்வயிரு எறியுது
-----------------------------------------------------------------------------------யாஸிர் 

சனி, நவம்பர் 26, 2011

அடிடா அவன, உதடா அவன...(பளார் பவார்)


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

ஹர்விந்தர் சிங், இவரை பாராட்டுவதா, இல்லை நம் நாட்டினுடய பாதுகாப்பு பற்றி குறை சொல்லுவதா இல்லை, அன்னா ஹஸாரே சொன்ன கமெண்டுக்கு கண்டனம் தெரிவிப்பதா என்றே புரியவில்லை.

சரத் பவார் சொன்ன சொல்லுக்கு கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதத்திற்கு முன்பே அடி வாங்கியிருக்க வேண்டும். இவருக்கும் ராமதாசுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. சோனியாவை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி அப்போதைய சபாநாயகர் சங்மாவுடன் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி இன்று அதே காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கும் கொள்கையில்லா அரசியல் தலைவர்.

ஹர்விந்தர் சிங் சொன்னதுல ஒரு உண்மையிருக்கு, விலைவாசி உயர்வுக்கு கண்டிப்பா இவரும் ஒரு முக்கிய காரணம் . இவரிடத்திலுள்ள தனித்தன்மையே 100க்கு 95 கேள்விக்கு “ஐசா நை, “மாலும் நகி (அப்படியில்லை, தெரியவில்லை) என்ற இரண்டு பதில்கள் மட்டும் வரும். அடிவாங்கின அன்றும் கூட பத்திரிக்கையாளருக்கு அந்த பதிலைமட்டுமே சொல்லிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். அதில் கடுப்பாகித்தான் என்னவோ, பத்திரிக்கையாளர்கள் கூட, தாக்கியவருக்கு எதிராக ஒரு செயலிலும் ஈடுபட்வில்லை. இன்றும் வடக்கிலுள்ள பத்திரிக்கைகள் அதிகமாக தப்பாக எதுவும் எழுதவில்லை.

ஆறுமாசத்துக்கு முன்னாடியே அடிபட்டிருக்கனும்னு எதுக்கு சொன்னனு சொல்ல்லியே, பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஒருவர் சக்கரை விலையுயர்வைப் பற்றி கேட்க, அதற்கு இவரின் பதில், “இந்திய மக்கள் இப்போது அதிக அளவில் சர்கரை எடுத்துக்கொள்கின்றார்கள், ஆகவே தான் இந்த விலை உயர்வு. மேலும் விலை குறைய மக்கள் அனைவரும் இனி டீ, காபியில் பாதி சீனி போட்டுகுடிக்கவும். இப்படி சொன்னதற்கான அடியாகத்தான் நான் இதை எடுத்துக்கொள்கின்றேன்.

ஒரு தனிமனிதன் மத்திய அமைச்சரையே, அதுவும் ஒரு தேசிய கட்சியின் தலைவரை பளேருன்னு கன்னத்துல் குடுத்திருந்திருக்கான்னா அப்போ அவன் எவ்வளவு வெம்பிப்போயிருந்திருக்கனும். கண்டிப்பா இந்த அடி, நாட்டப்பத்தி சிந்திக்கின்ற ஒவ்வொருவனும் கொடுத்த அடி. அடிபட்ட பின்னாடியாவது ரேட்டு குறையுதானு பார்க்கவேண்டாம் (ஏன்னா அது குறையாது) புத்திவருதான்னு பார்க்கலாம்.

அதே நேரத்துல, நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்குதுன்னு நமக்கு இப்ப விழங்குகின்றது. ஒரு சாதாரண மனிதனின் தாக்குதலில் இருந்து ஒரு அமைச்சரைக் காப்பாற்ற தவறிய நமக்கு, பாக்கிஸ்தாக்காரனிடம் இருந்து நாட்ட எப்படி காப்பாற்ற?. இந்த செய்தி கேள்விப்பட உடனே, ஓஹோ இவ்வளவுதான் இவனுங்கன்னு நினைத்து, 10 பேர் கொண்ட குழுவ அமைச்சி, மறுபடியும் நாடாளுமன்றத்துக்கு வந்திரப்போரானுங்க. ஏற்கனவே ஒரு அமைச்சரை நீதிமன்றம் முன்னாடி அடித்தவர் இவர் என்பது கூடுதல் தகவல், சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் இதேபோல் செயலில் ஈடுபட்போவதாக அரிவித்துள்ளார். (அப்போ அடுத்து ப.சி, இல்ல பிரனாப், இல்ல இல்ல அவங்களுக்கெல்லாம் சீனியர் மன்மோகன் சிங்க்தான்). பன்னிங்க தான் படையோட வரும், ஆனா சிங்கம் "சிங்"கிலாத்தான் வரும்.

அந்த மனிதர், சரத் பவாரை ஒரே ஒரு அடிதான் அடித்தாரா? என்று கேட்டு தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார் அன்னா ஹசாரே. அவர் கேட்டதுல என்ன தப்புன்னு பலபேர் கேட்கலாம், ஒரு காந்தியவாதியாக இருந்து கொண்டு இப்படி சொல்லக் கூடாது. அது காந்தியத்திற்கு இழுக்கு.
.
.
.
அதே நாம கேட்கலாம்

என்ன அந்த மனிதர், சரத் பவாரை ஒரே ஒரு அடிதான் அடித்தாரா?

ஏன்னா நாம “நேதாஜிவாதி


-----------------------------------------------------------------------------------யாஸிர்

வியாழன், நவம்பர் 24, 2011

நெஞ்சு பொறுக்கதில்லையே (Dam999).......


நம் அனைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக...

சத்தியமாக இது சினிமா விமர்சனம் இல்லை. அப்படி எண்ணிவந்தவர்களிடம் தங்களின் மேன்மையான நிமிடத்தினை எடுத்துக்கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு பொதுவாக சினிமா நாட்டம் அதிகம், ஆனால் நான் பிளாக் தொடங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட போது, கண்டிப்பாக சினிமா விமர்சனமோ, அல்லது என் பிடித்தமான நடிகர் (அஜித்) பற்றியோ எதுவும் எழுதக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏன்னா, கிட்டத்தட்ட என் நண்பர்களுடனான விவாதங்களில் ஆகட்டும், கேலிப் பேச்சிகளிலாகட்டும் இந்த இரண்டு விஷயங்களே மேலோங்கியிருக்கும். பிளாக்கிலும் இந்த மாதிரியான விசயத்தில் விரயம் செய்வதில் என் மனம் உடன்படவில்லை. சினிமா சம்பந்தமான விசயங்களின் மூலமாகத்தான் அதிக பார்வையாளர்களை கவரமுடடியும் தான், இருந்தாலும் அவ்விதமான பார்வையாளர்களின் மூலமாக ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.

கடந்த சில நாட்களாகவே, Dam999 படத்தைப் பற்றியதான ஒரு செய்திகள், பத்திரிக்கைகளில் ஆகட்டும், தொலைக்காட்சிகளில் ஆகட்டும் ஆக்கிரமைத்துக் கொண்டிருக்கின்றன. முல்லை பெரியார் அணைக்கட்டு சம்பந்தமான ஒரு சர்சைக்குரிய படம். எனக்கு தெரிந்து முதல் முதலில் நாடாளுமன்றத்தில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒன்றாக இணைந்து ஒரு விசயத்திற்காக போராடுகின்றது என்றால் அது இந்த படத்தின் தடை பற்றியது தான். இருவரையும் இணைத்த்தற்காக வேண்டுமென்றால் இந்த பட்த்தினைப் பற்றி பாராட்டிக்கொள்ளலாம்.

நான் தமிழ் சினிமாவைவிட அதிகளவு மதிக்கும் சினிமா, இயக்குனர்கள், ரசிகர்கள் அனைவரும் மலையாள மொழியினரே. ஒரு மேன்மையான சினிமாவை கொடுக்கமுடியும் என்றால், அது கண்டிப்பாக அந்த மொழிக்காரர்களால் தான் முடியும் என்பது என் நிலைப்பாடு. தமிழ் சினிமாவிலும் இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் அளவுக்கு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை.

நம்மாளுங்களுக்கு எப்போதுமே கண்ணுகெட்டதுக்கப்புரம் தான் சூரிய நமஸ்காரம். இந்த படத்தைப் பற்றியதாக இருக்கட்டும், அல்லது கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியதாக இருக்கட்டும், முதலிலோ அல்லது பாதியிலோ போராட யவனும் வரமாட்டான். சாகுர நேரத்துல சங்கரா சங்கரான்னா எப்படி?. இவ்வளவு தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தினைப் பற்றி நமக்கு இப்போதுதான் தெரிகின்றது என்பது வெக்கக்கேடு மற்றும் நம்பும்படியானதாக இல்லை. கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சென்னையில் தான் நடந்திருக்க வேண்டும், அதற்கான வசதிகள் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகமாக உள்ளது. ஹிந்தி திரைப்படத்தின் முக்காவாசி கிராபிக்ஸ், எடிடிங் எல்லாம் சென்னையில் நடந்துகொண்டிருக்கும் போது, ஏன் அவதார் படத்தின் கிராபிக்ஸே சென்னை நடந்திருக்கும் போது இது மட்டும் எப்படி வேறுமாநிலத்தில் நடந்திருக்க முடியும்?

சரி விஷயத்துக்கு வருவோம்.....

இன்று என் முகப்பு புத்தகத்தில், “டாம்999 படத்தினை இந்தியாவில் தடை செய்யுன்னு ஒரு வாக்கியத்தை பதிவுசெய்திருந்தேன். அதை கண்டு எனது ஒரு மலையாள நண்பர், அவருடைய முகப்பு புத்தகத்தில் அதிகமாக உலாவிக்கொண்டிருந்த ஒரு விசயத்தினை எனக்கு கூகுள் மூலமாக மொழிமாற்றம் செய்து அனுப்பியிருந்தான்.

அது “டாம் உடைந்து நிறைய மலையாளிகள் இறந்து போனாலும், அவர்களின் அடுத்த தலைமுறை சிறிது காலமானாலும் திரும்ப வரும், ஆனால் தமிழர்களின் 5 மாவட்டங்களில் நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு, பாலைவனமாகும், அவர்களின் இந்த தலைமுறைகள் பட்டினியால் உயிர்விடுவார்கள். மேலும் உடைந்த இடத்தில் மீண்டும் அணைகட்ட ஒரு மலையாளிகளும் அனுமதிக்கமாட்டார்கள். தமிழகத்துக்கு வேரு எந்த மாநிலமும் தண்ணீர் தராது. முல்லை பெரியார் அணைக்கட்டு ஒரு பாடமாக அமைந்து விடும். கேரள அரசு புதிய அணைகட்டியிலிருந்து நீர் கொடுக்க தயாராக உள்ளது. ஆகவே தமிழர்களே சிந்திப்பீர்”

மலையாளி நம்மள சிந்திக்க சொல்லுர அளவுக்கு ஆகிடிச்சு நம்ம நிலம.

ஒரு விவகாரமான விசயம் சர்சயில் நீதிமன்றத்தில் இருக்கும் போது அதை படமாக எடுக்க எத்தனை துணிவு?. 
இன்னும் பெரியார் அணையைப் பற்றிய ஆய்வரிக்கை சமர்பிக்கப்படாத நிலையில் இவர்கள் யார், அதை வலிமையில்லை என்று சொல்ல?. 
எத்தனையோ வருடங்களுக்கு முன்னறே ஆய்வு செய்ய தொடங்கிய கேரள அரசாங்கம், இன்னமுமா இது உடைந்து போகும் என்று வாய்வழியாக சொல்லிக் கொண்டிருக்கும் விசயத்தை, அவர்கள் எடுத்த டெஸ்ட்களின் மூலமாக அறிகையாக வலிமையில்லை என்று நிருபித்துக் காட்டமுடியுமா?.

ஒருத்தனுக்கு நோய் வந்தா, அவன் செத்துருவான் அவன் குடும்பம் இப்படியாகிடும்னு சொல்லுரது ஓகே. இது என்னடான்னா,  நல்லாயிருக்குரவன படையில கொண்டுபோகுறமாதிரில இருக்கு.

நம்ம தண்ணீரை எடுத்துகிட்டு, அவன் அணைகட்டி, நமக்கே தருவானாம்!!!!!!!!!!!!!! (அடடா ஆச்சிரிய குறி).

இவனுங்களுக்கெல்லாம் பவர் ஸ்ட்டார் நடிச்ச லத்திகா படத்தை, “என்டே லத்திகா சேச்சி னு மொழிமாற்றம் செய்து பார்கவச்சாத்தான் தெரியும் ஒரு தமிழனின் வலி.

---------------------------------------------------------------------------------------யாஸிர்.

புதன், நவம்பர் 23, 2011

என்ன வாழ்கடா இது.......


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.

ஒரு வழியா துபாய் வந்து மூன்று வருடம் முடிந்துவிட்டது. துபாய்ன்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் புரியும் என்பதற்காக நான் அப்படி சொன்னேன், ஆனால் துபாய் என்பது யு.எ.இ (United Arab Emirates) என்ற ஒரு நாட்டின் ஒரு மாநிலம் என்பது இன்றுவரை 85% இங்கு வேலை செய்யும் எங்க ஊரு குடும்பத்தாருக்கு கூட தெரியாது. எனக்கே இங்க வந்து தான் தெரியும்.

வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல, துபாய்ல எங்க? அபுதாபியா, சார்ஜாவான்னு கேட்கும் போது சிரிச்ச பல பேரில் நானும் ஒருவன். யு.எ.இ என்பது அபுதாபி, துபை, சார்ஜா, ராசல் கைமா, புஜைரா, உமல் குயின், அஜ்மன் என்ற ஸ்டேட்களின் கூட்டமைப்பு. சுதந்திரத்திற்கு முன்னாடி இவை எல்லாம், தனி தனியாகவே செயல்பட்டு வந்தன, பின்பு யு.எ.இ யின் தேச தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் ஷாகித் அல் நகியான் முயற்சியால் ஒன்றினைக்கப்பட்டது.

மூன்று வருடத்திற்கு முன்பு........

பல கனவோடு துபாய் வந்தேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், துபாய் வந்தேன் அவ்வளவு தான். திருவனந்தபுரத்து விமான நிலையத்தில், கண்ணீரோடு விடை கொடுத்த குடும்பத்தை, தேம்பி தேம்பி ஆருதல் படுத்தி உள்ளே சென்றேன். விமான நிலையத்தில் எல்லா சடங்குகளும் முடிய ஒரு மணி நேரம் ஆனது. அடுத்த ஒரு மணி நேரம் வெயிட்டிங் ஏரியாவில் உட்கார வைக்க, நாம யாருன்னு காட்டனும்னு, லேப்டாப்பை எடுத்து சும்மான்னாலும் சீன் காட்டிக் கொண்டு இருந்தேன். அப்ப லேப்டாப் என்பது பெரிய விசயம். ஆனால் துபையில் அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல என்பது இங்க வந்த பின்னாடி தான் தெரிந்தது. கம்பி கெட்ட வந்தவங்க எல்லாம் கம்யூட்டர் வச்சிருந்தத பார்த்து, அடுத்த மூனாவது மாசமே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.

மீண்டும் விமான நிலையத்திற்கு வருவோம்.
திருவனந்தபுரத்தின் பழைய விமான நிலையம்

வெயிட்டிங் ஏரியாவே, ஏதோ எழவு வீடுமாதிரி இருந்தது. எல்லோரும் கண்ணீரோடு வீட்டிற்கு செல் போனில் சம்சாரித்து (பேசிக்) கொண்டிருந்தார்கள். அங்க ஓரளவுக்கு சிரித்தமாதிரி இருந்தவர்களில் நானும், எனக்கு ஒரு வரிசையில் தள்ளியிருந்த ஒரு பையனும் தான்.

விமானத்துல ஏறி, என் இருக்கையில் இருக்கும் வரைக்கும் எதுவுமே தோனாத எனக்கு, அப்ப தான் துபை பற்றிய பயம் எனக்கு வந்தது. விமானத்த பார்த்து இல்ல என் இருக்கையின் அருகில் இருந்த எங்க ஊருக்கார பயபுள்ள சொன்னத கேட்டதுலயிருந்து.

ஆறடி உயரம், அழகிய உருவம் ஆனால் அழுகிய ஆப்பில் போல இருந்தான்.

எந்த ஊரு?

கடையநல்லூர், நீங்க?

ம்ம்ம்ஸ்ஸ்ஸ் (பெரும் மூச்சிவிடுராராமா) நானும் தான், உங்க ஊடு எங்க?

வீடு எங்கிறத ஊடுன்னு கேட்ட போதே தெரிஞ்சி போச்சி, நம்ம தெருக்கார பங்காளின்னு (தெரு, பேட்டைன்னு இரண்டு வகையான மக்கள் உண்டு எங்க ஊருல்ல, இன்னும் டீடயில் வேணும்னா, எங்க ஊரு..... தலைப்பை படிங்க)

நான் பேட்டை.

புதுசாவா துபைக்கு போற?

ஜோசியக்காரனா இருப்பானோ?, சட்டுன்னு கண்டுபிடிச்சிட்டானேனு நெனச்சி, அட ஆமா, எப்படி தெரிஞ்சிது உங்களுக்கு?

இப்படிதான் நானும் சிரிச்சிக்கிட்டே, 12 வருசத்துக்கு முன்னாடி போனேன். (நமக்கு முன்னாடி வெயிட்டிங் ஏரியாவில் சிரித்து கொண்டு இருந்த பையனும் புதுசாத்தான் போரான்னு அப்ப தான் தெரிஞ்சுது.)

போச்சுடா அப்ப நாம சிரிக்கிர கடைசி சிரிப்பு இது தானான்னு நெனச்சிகிட்டே. ஏண்ணே என்ன ஆச்சு இப்போ, நீங்க சந்தோசமாதான இருக்கீங்க?

சிக்குனாண்டா ஒரு சின்னப் பயன்னு, பிளைட்டை தூக்கும் போது ஆரம்பிச்சவன், துபாயில வந்து இறக்குர வரைக்கும் ம்ம்ம்ம் விடலியே.

கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சி இப்ப தான் எனக்கு குழந்த பாக்கியமே கிடச்சிருக்கு, அந்த குழந்தயக் கூட நான் முழுசா பாக்கல, அதுக்குள்ள லீவு முடிஞ்சிருச்சின்னு ஓ ஓன்னு ஒரே ஒப்பாரி.

துபாய்னா அப்படி, இப்படின்னு, நாசம்மா போறவன் கெட்டதா சொல்ல ஆரம்பிச்சான், உன் வாழ்க்கை அவ்வளவு தான்னு என்னும் படி வச்சிட்டான். இப்படி சொல்லி, சொல்லி பாவம் ரொம்ப டயடாகி இருந்தவனை “அதெப்படி டயடாவிங்கன்னு விமான பணிப்பெண் கட்டிங்கோட கண்ண சிமிட்டிக்கிட்டு நிக்க, என் கணக்குல உள்ள ரெண்டு பாட்டலயும் அவனுக்காக வாங்கியடிசிட்டு அமோகமா அலப்பரைய ஆரம்பிச்சுட்ட்டான் (மீண்டும் முதல்லயிருந்தா!!!!!!!!!!!!!!!)

வெயிலு அடிக்கும் பாரு, நரகத்துல எண்ணச்சட்டியில போட்டு பொறிக்கிர மாதிரி இருக்கும், சொந்தகாரனுங்க எல்லாம் “மாப்பிள வான்னு சொல்லி முதல் நாள் டீ வாங்கி கொடுப்பான் அப்புறம் உன்ன கண்டாலே எவனும் பார்காதமாதிரி போயிருவான்,.......... இந்த மாதிரியா அவன் லிஸ்ட் ரொம்ப பெருசா போட்டுகிட்டே போக, அவன் அடிச்ச தண்ணிக்கு எனக்கு கிரு கிருன்னு வந்திடுச்சு.கண்டிப்பா துபாய்க்கு மட்டும் பஸ்ஸுல வந்திருந்தேன், வண்டிய பாதில நிறுத்தி அங்கயிருந்து நடந்தே ஊருபோயி சேந்திருப்பேன்.இம்ச, இறங்கும் போதும் விடல,

சரி தம்பி பார்கலாம்.

சரிண்ணே துவா (பிராத்தனை) செய்யுங்க.

ம்க்கும் (சலிப்பா).... 12 வருசமா துவா கேட்டுப் பார்த்து எனக்கே ஒன்னு நடக்கல, உனக்கு வேரயா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (உனக்கு தேவையா, தேவையாடா)

மறந்துட்டனே...... ம்ம்ம்ம் உன்னோட சம்பளம் எவ்வளவு?

-------ன்னு உண்மையான சம்பளத்தின் முக்கால்வாசியைத் தான் சொன்னேன்.

அப்படித்தான் சொல்லித் தான் கூப்பிடுவானுங்க, ஆனா அவ்வளவு தருவானுங்களா.....................?

போச்சுடா அதுவேறயா. (அடுத்து இந்தியாவுக்கு எத்தன மணிக்கு பிளைட்ன்னு கேட்க தோனும் அளவுக்கு கொண்டுபோயிட்டான்)

பரந்து விரிந்த இடம், இரவுன்னு தெரியாத அளவுக்கு வெளிச்சம், கிட்டத்தட்ட அனைத்து உலகநாட்டு விமானங்களும் ஒரே இடத்தில், வெள்ளை, மாநிறம், கருப்பு, அட்ட கருப்புன்னு அனைத்துவிதமான மக்கள்....... இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த, துபாய் விமான நிலையத்த பார்த்து ரசிக்கும் நிலையில நான் அப்போ இல்ல.

பாஸ்போர்ட் செக்கிங்க் ஏரியாவில் என்ன பார்த்து ஒரு அரபி “புதுசா இந்தியாவுல இருந்து வர்ரவயெல்லா சிரிச்சுகிட்டு வருவான், ஆனா நீ ஏன் உம்முன்னு இருக்கன்னு" ஆங்கிலத்துல கேட்க ,

ஆங்ங்ங்ங் வேண்டுதலுன்னு தமிழ்ழயே சொல்லிக் கொண்டு, பாஸ்போர்டயும், லக்கேஜயும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

“அரபாத், டேய் அரபாத் (என்னுடய இன்னொரு பெயர்) இங்க டா என் அண்ணனும், மச்சானும் கத்த

திரும்பி அவங்கள, பார்த்த பின்பு தான் கொஞ்சம் கண்ணு பளிச்சின்னு தெரிஞ்சது.

என் முகத்த பார்ததும் என் அண்ணனுக்கு புருஞ்சிருச்சி, “ஆகா ஆட்ட யாரோ கலச்சிட்டானுங்க

தேமேன்னு நின்னவன பார்த்து கேட்டான். என்ன ஆச்சில இப்படி இருக்க?

மறுபடியும் திருவனந்தபுரத்து விமான நிலைய, விமான சீட்டுல இருந்து ஆரம்பிச்சேன்........

“கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சி இப்ப தான் எனக்கு குழந்த பாக்கியமே கிடச்சிருக்கு, அந்த குழந்தயக் கூட நான் முழுசா பாக்கல, அதுக்குள்ள லீவு முடிஞ்சிருச்சி. ன்னு அவன் சொன்னத சொல்லிக்கிட்டு இருக்கும் போதே, தலையில இடிவிழுந்த மாதிரி ஒரு அடி,

யாருன்னு பார்த்தா எங்கண்ணன், அடுத்த அடி கொடுக கைய ஓங்கிய படி, பொறம்போக்கு, கல்யாணம் ஆகி, பிறகென்ன அவனுக்கு ஒரு மாசத்துலயால புள்ள பொறக்கும்.....

ஆமா இல்லா, ச்சீ இப்படி ஏமாந்துட்டமேன்னு, என்ன நானே கரச்சி கொட்டிகிட்டேன்.

குளிர்காலத்துல குஜாலாகவும், வெயில் காலங்களில் வெம்பிப் போயும், அப்படி இபடியுமா வருசம் மூனு முடிஞிருச்சு. இன்ன்னும் எத்தன வருசமோ.........................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
.
.
ஆப்பிரிக்கா, அமெரிகான்னு
எவ்வளவோ நாட்டுக்கு போறவனெல்லாம், நல்லா இருக்கான்.
ஆனா நாங்க
இந்த துபாய்க்கு வந்திட்டு படுற பாடு இருக்கே
அய்யய்யய்யோ......
 -----------------------------------------------------------------------------யாஸிர்.

ஞாயிறு, நவம்பர் 20, 2011

ஏ ஜோக்


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமமும் உண்டாவுவதாக.


ஒரு சர்தார்ஜி 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

சர்தார் : ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல.

நீதிபதி : அப்புறம்?

சர்தார் : எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்?

நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும்.

சர்தார் : அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க?

சர்தார் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் அப்படி ஆயிடுச்சு.

நீதிபதி : ????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.
.
.
.
.

நான் நல்ல குடும்பத்துல பிறந்த பையன், “ஒரு நகைச்சுவை என்பதைத் தான் ஆங்கிலத்தில் தலைப்பாக போட்டுள்ளேன். அந்த மாதிரியான தப்பான நினைப்போடு வந்திருந்தால், நிர்வாகம் பொருபல்ல.

----------------------------------------------------------------------நல்ல பையன் – யாஸிர்.