ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

இழப்பு


வாழ்க்கையில இரண்டு விஷயங்களை நாம தேர்ந்தெடுக்க முடியாது ஒன்னு பிறப்பு இன்னொன்னு இறப்பு, இத நாம பல படத்துல கேட்டிருக்கலாம். இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் கூட நமக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாது. பிறப்பதற்கு முன் அம்மா வயிற்றில் அதற்கு முன்?, இறந்ததற்கு பின் மண் குழியில் அதற்கு பின்?. ஒரு பிறப்பு என்பது இரு பேரின் (பாலியல்) சந்தோஷத்தில் உண்டாவது, ஆனால் இறப்பு என்பது பல பேரின் துக்கத்தில் முடிவது. என்னதான் ஒருவன் எவ்வளவு பெரிய கெட்டவனா இருந்தாலும் அவனுடைய இறப்புக்கு கவலைப்படுவது தான் நம்ம இயல்பா இருக்கும்.

சும்மா ரோட்டுல விபத்துல இறந்துபோகுற, யாருன்னே தெரியாத ஒரு ஆளுக்காக நம்ம மனது கஷ்டப்படும்போது, நமக்கு உதவிய, நம்ம கூட இருந்த உயிருடைய இறப்பு ரொம்ப பேரிடியாக இருக்கும், அது எத்தனை வருடம் ஆனாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவங்கள, நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.

அந்தமாதிரியான இரண்டு பேர பத்தி இந்த கட்டுரை.

1) ஜனாப். சாகுல் ஹமீது. B.A
நான் மேல சொன்னது மாதிரி, சில சமயங்களில் நாம சிலரை மறந்தாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பம், அல்லது ஒரு நிகழ்வு அவங்களை நமக்கு ஞாபகப்படுத்தும். அதுமாதிரியான சந்தர்ப்பம் தான் எனக்கு இவங்கள ஞாபகப்படுத்தியிருக்கு, ஆம் இதுமாதிரியான ஒரு நோன்பு மாதத்தில் தான், இவங்க இறப்பு நடந்தது.

இவங்க என்னுடைய வீட்டுக்கு தொட்டடுத்த வீட்டுக்கரங்க, எனக்கு தெரிஞ்சு, எங்க தெருவுல ஹிந்து பேப்பர் வாங்குர இரண்டுபேர்ல இவங்க ஒரு ஆள். அந்த காலத்து பி.ஏ,ன்னு ரொம்ப மதிப்பும் அதிகம். வெளிநாட்டுல இருக்குற (வேலை செய்கிற)வங்களுக்கு ஏதாவது எமர்ஜன்சி பேக்ஸ் அனுப்பனும்னா எந்த நேரத்திலும் இவங்க வீட்டு கதவ தட்டலாம்.

எங்க வீட்டுக்கும், அவங்க வீட்டுக்கும் ஒரு வித்தியாசமான உறவுமுறை இருக்கும், என் அப்பா அவங்கல மச்சான்னு கூப்பிடுவார்கள் அதனால நான் அவங்கல மாமானு கூப்பிட்டாலும் அவங்க பசங்களை, அண்ண்னுதான் கூப்ப்ட்டேன், இப்பவும் அது மாதிரிதான். இறந்து 11 வருஷம் ஆகுது, இன்னும் எதாவது அழகான எழுத்துப்பார்த்தாலும் இவங்க ஞாபகம் வரும், கையெழுத்து அப்படி அழகா இருக்கும், கண்ணுல ஒத்திக்கலாம், அங்க எழுதிய குரான் தமிழ் வசனம் இன்னும் என் அப்பாகிட்ட இருக்குது. எங்க அப்பாவோட ஒரு நல்ல நண்பராகவும் இருந்ததால, பள்ளி முடிந்தவுடன் ஆங்கில டியூஷன் அவங்க கிட்ட போய் படிச்சேன். இப்போ எனக்கு ஒரு 50% வாது ஆங்கிலம் தெரியுதுன்னா கண்டிப்பா அவங்க ஒரு பெரிய காரணம்தான். நான் வேண்டா வெருப்புக்கு படிச்சபோது எனக்கு தெரியல, ஆனா ஆங்கிலத்துல பிச்சு உதரனும்னு முடிவெடுத்தப்போ அவங்க இல்ல. வெயில்ல போனப்பத்தான் நிழலோட அருமை தெரியும்னு சும்மவா சொன்னாங்க. நான் கண்முன்ன பார்த்த முதல் இறப்பும் அவங்களுடையது தான். நோன்பு எல்லாம் திறந்துவிட்டு, இரவு சாப்பாடும் முடிந்த நிலையில், பக்கத்து வீட்டுல இருந்து ஒரே அழுகை சப்தம் கேட்டு நானும், என் அப்பாவும் ஒருவித பயத்துடன் ஓடினோம். எங்கப்பவோடு சிரித்துப்பேசிய ஒருவரை, எந்த அசைவும் இல்லாமல் பார்த்தவுடனே எனக்கு அழுகை வந்தது. டாக்டருக்காக்காக ஒரு கூட்டம், காத்து வீசிவிட, காலில் தைலம் தேக்க ஒரு கூட்டம்னு பரபரப்பா இருந்தப்ப அவருடய கடைசி மூச்சி ஒரு சத்தத்தோட முடிந்தது.

அவங்க வீட்டுல டி.வி இருந்தாலும், எங்க அப்பாகூட பேசியபடியே டி.வி பாக்குரதுக்குன்னு எங்க வீட்டிலதான் சாய்ங்காலம் நேரம் கழியும். எங்க அண்ணன்மார்கள் படிக்காத காரணத்தினால் என் அப்பா என் படிப்பு மேல ரொம்ம சிரத்தயெடுத்தது எல்லாம், இவங்க மூலமாகத்தான் எனக்கு தெரியும். அப்ப நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன், என் உடம்ப பார்த்துவிட்டு, இஞ்சினியரிங்ல மெக்கானிக் இல்லாம வேற ஏதாவது பிராண்ஜ்ல தான் சேர்க்கனும்னு (அப்பவே இஞ்சினியர்தானு முடிவுபன்னியிருந்ததும் அவங்க தான்)சொல்லிக்க் கொண்டே இருந்தாவங்க. நான் நல்லா படிக்கனும்னு நினைத்த சில பேர்களில் இவர்கள் முக்கியமானவர். நான் +2 படிக்கும் போது இறந்துவிட்டார்கள்.

2) ஜனாப். முஹம்மது அலி ஜின்னா. M.A

இது எனக்கு மச்சான் முறை, என் பெரியப்பா மகளின் கணவர். எங்க தெருவில் ஹிந்து பேப்பர் வாசிக்கின்ற அந்த இரண்டாவது நபர். மத்தவர்களுக்கு எப்படின்னு என்க்கு தெரியாது, என்னப் பொருத்தவரையிலும், என் குடும்பத்தை பொருத்த அளவிலும் இவர் ஒரு ஞாயஸ்த்தர். பெரும்பாலான எங்க குடும்ப விவகாரமானாலும் சரி, குடும்பத்தில உள்ள உறுப்பினர்கள் விவகாரம்னாலும் சரி, பேசி முடிச்சு வெக்கிற ஆள்.

எங்க அப்பா, சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் இவங்கல விட வயதுல பெரியவர்களாக இருந்தாலும் கூட, சொன்ன முடிவுக்கு எதிரா யாரும் நின்னது இல்ல. தப்பு தப்புத்தான்.
இவர் மறைந்து 7 வருடம் இருக்கும். எங்க குடும்பத்துல முக்கியமான ஆள இழந்திட்டோம்முங்கிரது தான் நிஜம்.

இவர் மறைவிற்க்குப் பிறகு, இவர் இடத்துல இருக்க தகுதியா யாருமே இல்லாததுனால, எங்க குடும்பத்துக்குல்ல அதிக பிரட்சணை, அதன் காரணமாக எங்களுக்குள் அதிக இடைவெளி. என்னால் மட்டும் இல்ல எங்க எல்லாராலயும் கண்டிப்பா சொல்ல முடியும், அவங்க இருந்திருந்தா எங்களுக்குள் இவ்வளவு பெரிய இடைவெளியே வந்திருக்காது.

பெரியவங்களுடைய விஷயத்துல ஒரு மரியாதையோடு, என் அண்ணன் வயது ஒத்தவர்களிடம் ஒரு நட்புடனும், என் மாதிரியானவர்களோடு ஒரு பாசத்துடனும் விஷயங்களை கையாலுவதால், எந்த பிரட்சனைனாலும் அங்க தான் பொதுக்குழு கூடும். அவங்க இறந்த நாள் நான் ஊரில் இல்லை, என் நண்பர் சொல்லி கேட்டது அவருடைய ஜனாஸா ஊர்வலத்துக்கு அவ்வளவு கூட்டமாம். ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது நம்முடைய இறுதி ஊர்வலத்துல தான் தெரியும்னு அப்போ தான் புரிந்தது. அவர் இறந்து ஒரு வாரம் விட்டு ஒரு தயிர் விக்கும் பெண், இவர் இறந்தது தெரியாமல் தயிர் வாங்க கூப்பிட்ட போது பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னது கேட்டதும் கதரி அழுதது கண்டு திகைத்துதுப் போனது, பின்பு அந்த பெண் தனக்கு அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய தொகையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்கி கொடுத்த விஷயத்தை சொல்லிவிட்டு மறுபடிய்ம் அழ ஆரம்ப்த்துவிட்டது. தனக்கு அந்த தொகை 2 நாளுக்கு முன் கிடைத்துவிட்டதாக கூறி, நன்றி சொல்லவந்ததாக அவள் சொல்ல, கனத்த இதயத்துடனையே இருந்திருந்தது என் சொந்தங்கள்.


இவ்விருவரின் மருமைநாளின் நல்வாழ்க்கைக்காக ஆண்டவனிடம் பிராத்தித்தவனாக, இதை முடிக்கிறேன்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக