செவ்வாய், ஜூன் 05, 2012

........டுமீல்........டுமீல்........டுமீல்................


நம் அனைவரின் மீதும், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
அதிகாலை பதினோரு மணி, எழுந்திருக்க இஷ்டமில்லாமல் எழுந்திருந்தான் மோகன். தூக்க கலக்கத்துடன், காபி மேக்கரில் காபியை போட்டு, கையில் எடுத்து குடித்துக் கொண்டே, காலண்டரில் தேதியை கிளித்தான்.

தேதியைக் கண்டதும், அவசர அவசரமாக, குளித்து முடித்து, பைக்கை ஒரு பொக்கே ஷாப்புக்கு விட்டு, ரோஜா பூங்கொத்தினை வாங்கிக்கொண்டான்.

பெயர் = ப்ரியா
தோற்றம் = 10.10.1982
இறப்பு = 05.06.2011

மேற்படி செதுக்கியிருந்த ஒரு கல்லரையின் மீது, வைத்து, பிராத்தனை செய்துவிட்டு, அதனருகில் அமர்ந்து, பழய ஞாபகத்தினை அசைபோட ஆரம்பித்தான்.

சரியா ஒருவருசத்துக்கு முன்னாடி.

@@@@@@@@@@@@

தம்பி, விமல் இருக்கானா?

இருக்காரு சார், நீங்க யாரு?

நான் மோகன் வந்திருக்கன்னு சொல்லு. அவனோட ஸ்கூல் ப்ரண்ட்.

என ஆபிஸ் பாயிடம் கூறி, விமலின் அழைப்பிற்காக காத்திருந்தான். விமல் ஒரு பெரிய வக்கீல். திருமணத்திற்குப் பின்பு அவ்வளவாக இருவரும் சந்தித்துக் கொண்டது இல்லை.

டேய் மோகன், மச்சி எப்படிடா இருக்க, என்ன திடீரென, அதுவும் ஆபிஸ்ஸுக்கே வந்திருக்க. வீட்டுக்கு வந்திருக்கலாமுல்ல.

இல்லடா, ஆபிஸ்ல சந்திக்குற மேட்டர் அதனாலதான்.........

அப்படி என்னடா மேட்டரு, சரி உள்ள வா.

படத்துல பாத்தது மாதிரியான சாட்ஜாத் அப்படியே இருந்தது அவனுடைய ரூம். எந்த பக்கம் பார்த்தாலும் புத்தகங்கள். ஆனா மோகனுக்குத் தெரியும் இது எல்லாம் சும்மா ஷோவுக்குத்தான், ஏனென்றால் விமலை பத்தாவது பாஸாக்கிவிட்டதே மோகன் கொடுத்த பிட் பேப்பர் தான்.

சொல்லுடா என்ன விஷயம்?

எனக்கு, எனக்கு..............

என்னட தயங்குற, எதுவானாலும் சொல்லு

எனக்கு விவாகரத்து வேணும்.

என்னடா சொல்லுற, உன் பொண்டாட்டி எவ்வளவு அழகு, அவகிட்ட இருந்து விவாகரத்து வேணும்னு கேட்குற அளவுக்கு என்ன ஆச்சு, அதுவும் ஒரு வருசத்துக்குள்ள?

மச்சி, இந்த ஷீ எப்படி இருக்கு?

என்னடா சம்பந்தமே இல்லாம கேள்வி கேட்குற.

சொல்லுடா, எப்படி இருக்கு, இந்த ஷீ?

ரொம்ப நல்லா இருக்குதுடா, காஸ்டிலியானதா இருக்கும்.

ம்ம்ம்ம். பாக்கத்தாண்டா எல்லாம் அழகு, போட்டிருக்குற எனக்குத்தான் தெரியும் அது காலைக் கடிக்கிற வலி. அதுமாதிரித்தான் என் பொண்டாட்டியும்.

அதுவும் சரிதான், ஆனா, புது செருப்பு எல்லாம் காலை கடிக்கத்தான் செய்யும், கொஞ்ச நாள்ல சரியாப் போயிடும். அதயெல்லாம் விட்டு விட்டு, போயி வேலையைப் பாரு எல்லாம் சரியாகும். அப்பப்ப உன் மனைவியுடனான சந்தோசமான வாழ்க்கையை நினைத்துப்பாரு எல்லாம் சரியாகிவிடும்.
சந்தோசமான தருணங்களா????, அப்படீன்னா என்னன்னு கேட்கும் அளவுக்கு இருந்தது அவனது வாழ்கை, முதல் ராத்திரியில் இருந்து, முந்தின ராத்திரி வரைக்கும் பிரட்சனை, பிராபளம், கோபம், கஷ்டம், இப்படியாகத்தான் போய்கொண்டிருந்தது.

நயன்தாரவ, சீதா வேஷத்துல ஏத்துக் கொள்ளவே முடியாத மோகனுக்கு, இந்த அறிவுரை ஏற்றுக்கொள்ளக்கூடியதா?. குழப்பத்துடனே வீட்டிற்குச் சென்றான்.

நாமாக ஏதும் இவளிடம் சண்டை போடக்கூடாது, என்று முடிவெடுத்துக்கொண்டான். அதுவும் அவள் டீ கொண்டுவந்து கொடுக்கும் வரை மட்டுமே நிலைத்திருந்தது. டீயை கொஞ்சம் குடித்தவுடனேயே

சனியனே, ஒரு வருசம் ஆச்சு, இன்னும் ஒழுங்கா டீ கூட போடத்தெரியல, உன்னயப் போயி, பஸ்டாண்டு, பஸ்டாண்டா சுத்திவந்து காதலிச்சு கட்டிகிட்டேன் பாரு என்ன சொல்லனும்.

பொண்ணு பார்க வந்தப்போ மட்டும், நான் கொடுத்த டீய, நாய் மாதிரி நக்கி நக்கி குடிச்ச. இந்த மாதிரியான ஆளுன்னு தெரிஞ்சிருந்தா, அன்னைகே, அந்த டீயில விஷத்த கலந்திருப்பேன்.

ங்க்க்க்கும், உன் கேரக்டர் இந்த மாதிரின்னு தெரிஞ்சிருந்தா, அந்த விஷம் வச்ச டீய சிரிச்சிக்கிட்டே குடுச்சிருப்பேன். நான் ஒரு முட்டாள், நான் ஒரு முட்டாள்.

இப்ப சொல்லி என்ன புண்ணியம், நீ முட்டாளுன்னு அப்பவே எனக்கு தெரிந்திருந்தால், என் வாழ்கையாவது நல்லா இருந்திருக்கும்.

இப்படி முடிவேயில்லாமல், ஆளுக்கொரு கதவை சாத்திக்கிட்டு ரூமுக்குல்லேயே கிடந்தனர்.

அரை மணி நேரம் கழித்து.

டக், டக், டக், பிரியா, பிரியா, கதவத் திற.

5 நிமிடம் ஆகியும், கதவைத் திறக்காத்தால், மோகனுக்கு பதற்றம் அதிகமானது, மீண்டும் வேகமாக கதைவைத்தட்ட

என்ன, இப்படி கதவ உடைக்கிற, செத்துட்டேன்னு பயந்துட்டியா?

அப்படி சீக்கிரம் போறவளா நீ, என்னைய எல்லாம் தூக்கிவிட்டுட்டுத்தான் நீயெல்லாம் போவ

பிறகு, 5 நிமிசம் லேட் ஆனா நீ ஏன் பதறனும்?

நான் உன்ன நினெச்சு பதறல, என் பணத்த நினெச்சு பதறினேன். நேற்று சொன்னேன்ல, நீ போட்ட கையெலுத்து உன் மூஞ்சி மாதிரி இருந்ததால, பாங்க்ல பணத்த கொடுக்கமாட்டேனுட்டானுங்க. ஆள நேருல கூட்டிக்கிட்டு வரச் சொன்னானுங்க. கிளம்பு, இப்பவே லேட்டு, எனக்கு பணம் கொஞ்சம் அவசரமா தேவை.

பேங்கில்.

இருவரும் நுழைந்த நேரத்தில், ஒரு பத்து பேர், முக மூடி அணிந்து, துப்பாக்கியும் கையுமாக வந்து பேங்கை கொள்ளையிட. அங்கிருந்த அத்தனை பேரும் என்ன செய்வதென அறியாது விழித்தனர்.
டேய் மேனேஜர், அந்த ரூம திறந்து எல்லா ஸ்டாப்களையும் அனுப்பு, கஸ்டமர்ஸ் மட்டும் இங்க நிக்கட்டும். ம்ம்ம் சொல்லுறத செய். என மிரட்டும் தோனியில் கட்டளையிட, மேனேஜரும் அதன்படி செய்தார்.

மிச்சம் இருக்குறவனுங்க எல்லோரும், எங்க வேலை முடியுற வரைக்கும் அமைதியா, கைய தூக்கிக்கிட்டு நிக்கனும், எவனாவது சப்தம் போட்டீங்க, அவ்வளவுதான். என தூப்பாக்கியை நீட்ட, அனைவரும் கைய மேலே தூக்கி நிக்க, டைமிங் கரெக்டாக இருந்தது.

பரதேசி, பரதேசி இப்படி மாட்டிவிட்டுடியே? இன்னைக்குன்னு பார்த்தா பேங்குக்கு கூப்பிடுவ, நாசமா போவ. இந்த நேரத்துலயும் எப்படி, பகுமானமா நிக்குது பாருன்னு பிரியா, மோகனைப் பார்த்து குறைத்துக்கொண்டிருந்தாள்.

உங்கிட்ட இருக்குறதுக்கும், இவங்ககிட்ட இருக்குறதுக்கும் எனக்கு ஒன்றும் பெருசா வித்தியாசம் தெரியல. நான் கூப்பிட்ட உடனே கிளம்பி வந்தப்பவே நான் யோசிச்சியிருக்கனும். சும்மாயிருந்த மாரியாத்தாவ, வேப்பில அடிச்சு வா ஆத்தான்னு கூப்பிட்டதுமாதிரி ஆகிடுச்சு. எல்லாம் என் நேரம், சனியன நான் வண்டியில கொண்டுவந்தேன். தர்தினியம் துப்பாக்கியோட அதுவா வந்து நிக்குது.

கொண்டுவந்த, 5 பைகளிலும் பணத்தை நிறப்பி, கொள்ளையர்கள் கிளம்பும் சமயத்தில், ஒரு காகித பேப்பர், கொள்ளைத் தலைவனின் முகத்தில் வந்து விழுந்தது. அந்த பேப்பரை எடுக்கும் சமயத்தில், முக மூடி களண்டு விழ. அவனது முகம் அனைவருக்கும் தெரிந்தது.

பேர் போன கொள்ளையன் ரிவால்வர் ராஜா!!!!!!!!!!!!!

கொள்ளையன் ராஜா, துப்பாக்கியுடன் பேங்கில் இருந்தவர்களிடம் ஒருவனை அழைத்து கேட்டான்.

போலிஸ் வந்து, கொள்ளையடிச்சவன நீ பார்தீயான்னு கேட்டா என்ன சொல்லுவ?

நான் பார்த்தேன்னு சொல்லுவேன்.

அப்படியா, அப்படின்னா, செத்துப்போ

..............டுமீல்..............

மற்றொருவனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டான் ராஜா.

அவனும் அதே பதிலை சொல்ல, அதே சன்மானம் கிடைத்தது.

..............டுமீல்..............

இப்போது மோகனைப் பார்த்து, ரிவால்வர் ராஜா கேட்டான்.

ம்ம்ம் சொல்லு நான் இங்க கொள்ளையடிச்சதை நீ பார்த்தீயா?

இல்லை.

சபாஷ். நீ தாண்ட பிளைக்கத்தெரிந்தவன் என ராஜா புகழ,

மோகன் தயங்கியபடியே, ஆனா, ஆனா..........

என்னடா ஆனா, ஆவன்னான்னு,

நீங்க கொள்ளயடிச்சதை நான் பார்க்கவில்லை. ஆனா என் பொண்டாட்டி பார்த்துவிட்டாள்.

*

*

*

*

..............டுமீல்..............

----------------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக