நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
இறைவன் அருமையான இந்த உலகத்தை மனிதனுக்காகவே படைத்தான்.
உலகத்தை உருவாக்கியவுடனே அவன் மனிதனை உருவாக்க விரும்பாமல், மனித ஜாதி இந்த உலகில்
நல்ல முறையில் வாழ அவனுக்கு துணையாக சில மிருகங்களை படைத்தான்.
முதல் நாள் ஒரு பசுவை உருவாக்கினான். பின்பு அதனிடம் “ஏய்
பசுவே! உன்னை நான் படைத்ததற்கான காரணம், நீ பூமியில், விவசாயின் கட்டளைப்படி
நடந்துகொள்ளவேண்டும், அவனுடய தொழுவத்தில் இருந்து, வெயிலில் கஷ்டங்களை
அனுபவித்தாலும், மனிதனுக்கு பால் கொடுத்து அவனுக்கு துணையாக இருக்க வேண்டும்,
இதற்காக உனக்கு 60 ஆண்டுகால வாழ்க்கைய தருகிறேன்” என்று கூறினான்.
அதற்கு பசு, இறைவனிடம் “பிரபு, தாங்கள்
கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கின்றேன், ஆனால் இந்தமாதிரியான ரணமான வாழ்க்கைக்கு
எனக்கு 60 வருடம் என்பது அதிகம், ஆகையால் 20 ஆண்டுகளை நான் எடுத்துக் கொண்டு, 40
ஆண்டுகளை திரும்ப கொடுத்துவிடுகின்றேன்” என்றது. இறைவனும் பசுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான்.
இரண்டாவது நாள், ஒரு குரங்கினை
படைத்தான், அதனிடம் “குரங்கே, நீ மனிதனுக்கு வேடிக்கை காட்டவும், சில செயல்களை
செய்து அவர்களை சிரிக்கவைக்கவும் படைக்கப்பட்டிருக்கின்றாய், அதற்காக உனக்கு 20
ஆண்டுகால வாழ்க்கையை உனக்கு பூமியில் நான் அளிக்கின்றேன்”. என்றான் இறைவன்.
அதனைக் கேட்டுக்கொண்ட குரங்கு, இறைவனிடம்
“இறைவா, மற்றவர்களை மகிழ்விப்பது என்ற பணி எனக்கு கொடுக்கப்பட்டதற்கு எனக்கு
சந்தோசம் தான், ஆனால் 20 ஆண்டுகாலம் என்பது அதிகம், ஆகவே அதனை 10 ஆண்டுகளாக
குறைத்து அருளவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தது. இறைவனால் குரங்கின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மூன்றாவது நாள், இறைவன் மனிதனுக்காக
நாயைப் படைத்தான். மேலும் அதனிடம் “வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்க, வேகமாக வரும்
புது நபர்களை வீட்டு முற்றத்திலே நிருத்த, மெதுவாக செல்பவர்களை வேகமாக ஓடவைக்க
உன்னை படைத்துள்ளேன். நீ வீட்டின் வாசற்படியில் கிடந்து அவர்களுக்கு உதவ வேண்டும்,
இதற்காக உனக்கு நான் 20 ஆண்டுகால வாழ்க்கையை அளிக்கின்றேன்” என்றான். இதனைக் கேட்ட நாயோ “மற்றவர்கள்
கூறியதைப் போன்றே நானும் கூற ஆசைப்படுகின்றேன். 20 ஆண்டுகாலம் என்பது எனக்கு
அதிகம், ஆகவே எனக்கும் 10 ஆண்டுகளாக என் வாழ்க்கையை குறைத்து அருளும்படி
வேண்டுகின்றேன்” என்று வேண்டியது. இறைவனும் அதற்கு சம்மதித்தான்.
இறுதியாக, இறைவன் மனிதனைப் படைத்தான்.
அனைவரிடமும் சொன்னைப் போல் மனிதனிடமும் “உண்டு, உறங்க, மகிழ்ச்சியாக இருக்க,
திருமணமுடித்து குழந்தைக்களைப் பெற்றுக் கொள்ள உனக்கு பூமியில் 20 ஆண்டுகால
வாழ்க்கையை தருகின்றேன்” என்றான்.
இதனைக் கேட்ட மானிடன் “ஓ மை காட்,
இவ்வளவு செயல்களை நான் பூமியில் செய்ய எனக்கு வெறும் 20 ஆண்டுகள் போறவே போறாது,
ஆதலால் பசு கொடுத்த 40 ஆண்டுகள், குரங்கு, நாய் திரும்ப கொடுத்த பத்து, பத்து
ஆண்டுகளை எனக்கே வழங்கிட வேண்டுகிறேன், மை லாட்” . இறைவனும் மனிதனின் வேண்டுதலை ஏற்றுக்
கொண்டு, பசு, குரங்கு, நாய் திரும்ப கொடுத்த வருடங்களை மனிதனுக்கே கொடுத்து
அனுப்பினான்.
ஆகையால்தான் நாம் முதல் இருபது
வருடங்களில் உண்ண, உறங்க, விளையாடி பொழுதை கழிக்கின்றோம். பின்பு அடுத்த 40
வருடங்களில் பசுவைப் போல வெயில், மழை பாராது உழைத்து, நமை அண்டியிருப்பவர்களுக்காக
வாழ்கின்றோம். அடுத்த 10 வருடத்தில் குரங்கைப் போல பேரக்குழந்தைகளுக்கு வேடிக்கைகள்
காட்டி, மகிழச்செய்கின்றோம். இறுதியான 10 ஆண்டுகள், வீட்டிற்கு வெளியே கட்டிலில்
கிடந்தபடி நாயைப் போல, வீட்டிற்கு வருகிறவர், போகிறவர்களை நிறுத்தி கேள்விகேட்டுக்
கொண்டிருக்கின்றோம்.
--------------------------------------------------------------------------------------யாஸிர்.
அப்போ 20 வருசம் மட்டும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமா?
பதிலளிநீக்கு10 மாசத்துல பள்ளிகூடம்,4 வயசுல கல்லூரி,8 வயசுல கல்யாணம்!!!!!!!!! ம்ம்....ம்ம்ம்
8 வயசுல கல்யாணம், 8 வயசுல கல்யாணம், ஆஹா கேக்குறதுக்கு எவ்வளவு சுகமா இருக்கு....
நீக்கு