நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
என் நினைவு சரி என்றால் அது 2006, பெங்களூரில் வேலை செய்துகொண்டிருந்தேன்.
அங்கு இரண்டு தெலுங்கு இஞ்சினியர்களும் இருந்தார்கள். ஆனால் அதில் ஒருத்தன் தான்
நம்ம தோஸ்த். அவனுக்கும், எனக்கும் ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் இருந்தது,
என்னன்னா, அவன் எனக்கு தெலுங்கு கற்றுக்கொடுக்கவேண்டும், அதற்கு பதிலா நாம என்ன
இங்கிலீஸையா கத்து கொடுக்கமுடியும், தமிழ்தான். அவனுக்கு ஏற்கனெவே குஞ்சும்,
குஞ்சும் தமிழ் தெரியும், அதற்கு காரணம் அவன் எம்.டெக் சென்னையில்
படித்திருந்ததால். குஞ்சம் குஞ்சம் தமிழ் என்றால், டேய் ஸ்......, பொறம்போக்கு,
தே.....லே, போட்டாங்க்..... மாதிரியான சங்க இலக்கிய சொற்கள் மட்டுமே. எனக்கு அது
கூட தெரியாது (தெலுங்கில்). பாய்ஸ் படத்தில் வரும் “தெங்கனா கொடுக்கா”வின்
அர்த்தமே அவன் சொல்லிக்கொடுத்துத்தான் தெரிந்தது.
அது சரி........... பெங்களூருல போய் கன்னடத்தை கத்துக்குறத விட்டு விட்டு நீ
எதுக்குடா, தெலுங்கு கத்துக்க ஆசைப்பட்டன்ன நீங்க கேக்கலாம். ஆனா நான்
சொல்லமாட்டேன், அப்படின்னு சொன்னா நீங்க மிச்சத்தையும் படிக்கமாட்டீங்க என்பதால்
சொல்லுறேன். அதுக்கு 2 காரணம் ஒன்னு, அப்ப சிவில் இஞ்சினியர்களுக்கு பெங்களூரை
விட்டா, ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் தான் வேலை வாய்ப்பு அதிகமா இருந்தது.
பெங்களூர் ரொம்ப பிடித்த நகரம் என்றாலும், காவிறியில தண்ணி வந்தாலும், அவன்
கக்கூஸ்ல தண்ணி வரலைன்னாலும் ஒருவாரத்துக்கு வெளி இடத்துல தலைகாட்டமுடியாது.
அடுத்த காரணம், அப்போது மலையாளத்தை விட கில்மா படம் எல்லாம் தெலுங்குலதான் அதிகமா
வந்துகொண்டிருந்தது. அந்த படத்துக்கெல்லாம் வசனமாடா முக்கியம்னு நீங்க முக்குறது
தெரியுது, ஆனாலும் எனக்கு வசனத்தோட படம் பார்த்தாத்தான் கொஞ்சம் இது. சரி
மறுபடியும் டியூசன் மேட்டருக்கு வருவோம்
நாம கொடுத்த டிரெய்னிங்கில் அவனிடம் சரஸ்வதி சம்பளம் போட்டு
உட்கார்ந்துவிட்டாள். ஆனா நாம கொஞ்சம் வீக்கு (கத்துக்குறதுல). ஒரு நாளுக்கு, பத்துவார்த்தை
உதாரணத்தோடு சொல்லித்தருவான், மறுநாள் மறந்திடும். அதுக்கு காரணம் சைடுல
இன்னொருத்தன் கூட இதேமாதிரியா டீலிங்க் வச்சி ஹிந்தியும் கற்றுக்கொண்டிருந்தேன்.
அதுனால என்னாச்சின்னா, தெலுங்கு சேனல் வரவேண்டிய நேரத்துல ஹிந்தி சேனல் ஓப்பன்
ஆகிடும், ஹிந்தி சேனல் வரவேண்டிய இடத்துல, தெலுங்கு சேனல் ஓப்பன்
ஆகிடும். அப்படி இருந்தும், அவனுடைய தீவிரமான பயிற்சியில படிச்சதுதான் ‘பாகவுண்ணாரா’
‘போஜ்ஜனமாயிந்தா’ ‘தெல்லேது’ ‘தெலுசு’ ‘சம்பிஸ்தானு’..... போன்றவார்த்தைகள். நான்
சினிமா பைத்தியம் என்பதை கண்டுகொண்டு, தெலுங்கு படம் பார்த்தால் தெலுங்கு
சீக்கிரம் கத்துக்கொள்ளலாம் என்றான். நானும் அதுவரைக்கும் எந்த தெலுங்கு
சினிமாவும் பார்க்காததால் டபுள் ஓ.கே சொல்லிவிட்டேன்.
அதுக்கும் காரணம் இருந்தது, அந்தகால கட்டங்களில் தான் நடிகர் விஜய் தெலுங்கில்
ஹிட்டான கில்லிகாரு, வசிகராகாரு.... போன்ற படங்களை தமிழில் விட்டு
வெற்றிபெற்றுக்கொண்டிருந்தார். “பங்காராம்’ இதுவும் தரணி இயக்கிய படம், தெலுங்கில்
எடுத்தபின்பு தமிழில் ‘தங்கம்’ என்ற பெயரில் எடுப்பதாக இருந்தது. இந்த விவரத்தை
எல்லாம் என்னிடம் என் நண்பன் சொல்லி, படம் பார்க்க சம்மதிக்கவைத்தான். சரி நாமளும்
தமிழில் ரிலீஸ்ஸாவதற்கு முன்பு பார்த்தமாதிரி இருக்கும் என்று சம்மதித்தேன். ஆந்திரா நண்பன் பவன் கல்யாணின் தீவிர ரசிகன். பவன் ‘அப்படி ட்ரஸ்
பண்ணியிருப்பாரு, இப்படி ஸ்டைலா இருப்பாருன்னு’ என்கிட்ட வந்து ரொம்பதடவை
டார்ச்சர் பண்ணுவான். எனக்கு பவன் கல்யாண் எல்லாம் யாருன்னு தெரியாது, தெரிஞ்சது
சிரஞ்சீவி மட்டும்தான் என்று சொன்னாலும், விடாமல், ‘சிருவோட (சிரஞ்சீவி) சொந்த
தம்பிதான் பவன்’னு ஹிஸ்டரி, ஜாக்கிரபி எல்லாம் சொல்லுவான்.
கிடைக்கிற ஒரு நாள் லீவுலதான் நான் நல்லா தூங்குவேன், ஞாயிற்றுக்கிழமைன்னா
11.30க்குத்தான் எழுந்திருப்பது. ஷோ டைம் 11.00 மணி என்று சொன்னதால், அவனுக்காக
10.க்கு அலாரம் வைத்துவிட்டு தூக்கியிருந்தேன். திடிரென ஒரு குரல் ‘ஏமிரா,
ஒஸ்தாவா? லேதா?’, யாருன்னு பார்த்தா, நம்மாளு பவன் ஸ்டார் கெட்டப்புல நின்னுகிட்டு
இருந்தான். அலாரம் அடிக்காம ரொம்ப நேரமா தூக்கிட்டோமோன்னு நினைச்சு மணிய பார்த்தா,
7.00. வந்துச்சே கோபம், எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு தெலுங்கு கெட்டவார்த்தையை
டிஜிட்டெல் சவுண்டுல கத்தி திட்டுனேன்.
“இப்பவே போனாத்தான் 11.00 மணி காட்சிக்கு டிக்கெட் இருக்கும் ராடா” ன்னு
போர்வையை இழுத்துகொண்டிருந்தான். ‘சரிடா, போர்வையை ரொம்ப இழுக்காதே பிறகு வேற படம்
பார்க்குறமாதிரி ஆகிடும், நீ போய் ஹால்ல உட்காரு நான் வர்றேன்’னு சொல்லி
அனுப்பினேன். 8.00 மணிகு தியேட்டருக்கு போனா அடேய்ய்ய்ய்ங்கப்பா, நிக்குறானுங்க
நாலு தெருவுக்கு. அந்த நேரத்துல என் நண்பனோட, நண்பனும் படத்துக்கு வந்திருந்தான்
ரெண்டு பேரும் தெலுங்குல என்னோமோ பேசிக்கிட்டனுங்க. கூட நின்ன எனக்கு ஜெமினி
டிவியில செய்தி பார்த்தமாதிரி இருந்துச்சு. அவங்கிட்ட பேசினபின்னாடி என் நண்பன்
பயங்கரமா திட்ட ஆரம்பிச்சிட்டான். ‘பாரு அவன் மதியம் 1.30 ஷோவுக்கு இப்பவே
வந்திட்டான், உன்னாலதாண்டா லேட்டு, இன்னைக்கு மட்டும் படம் பார்க்கல, உன்னை
சும்மாவிடமாட்டேன்’னு தெலுங்குலேயே திட்டினான், இத எல்லாத்தையும் நான்
‘ஜம்பிஸ்தானு’ங்குற ஒரு வார்த்தையைக் கொண்டு கண்டுபிடிச்சேன்.
யாரு செஞ்ச புண்ணியமோ, அன்னைக்கு டிக்கெட் கிடைத்தது. உள்ள போனா, எல்லா சேரும்
ஃபிரியா இருக்கு, எல்லா பக்கிகளும் நின்னுக்கிட்டே படம் பார்த்தானுங்க. சும்மா சொல்லக்கூடாது,
ஹீரோ, வில்லன், காமெடியன் என எவனுக்கும் பாகுபாடு பார்க்காம ஹோ, ஹோன்னு
கத்துனானுங்க. “யாருடா ஹீரோ?, இவனா?, இவனா?’ ன்னு கேட்டு கேட்டு ஓஞ்சுபோன எனக்கு
‘கதை என்னடான்னு கேக்குறதுக்கு என் உடம்புல தெம்பு இல்லை”. படம் ஆரம்பிக்கும்
போது, தி.மு.க காரனுங்கமாதிரி ஹோ, ஹோ, ஹொன்னவனுங்க, ஒவ்வொரு தொகுதி நிலவரம் வரும்
போது கலவரம் ஆனதுமாதிரி, கப்சிப்புன்னு அடங்கிட்டானுங்க. படம் பப்படம் மாதிரி
நொறுங்கிடுச்சு. இடைவெளியின் போது ஒரு பய வாய்திறக்கல. படம் நல்லா இல்லைங்குறதுனால
நமக்கு கிடைக்கவேண்டிய கூல்டிரிங்ஸ்ஸும், முருக்கும் போச்சு. “பர்லேதுடா, செகண்ட்
ஆஃப் பாகவுந்தி’ ன்னு அவனை தைரியப்படுத்தினேன். அதுக்கப்புறம் தான் கோன் ஐஸ்
வாங்கி கொடுத்தான்.
முதல் ஆஃப் பாக்கும்போதே தெரிஞ்சு போச்சு எனக்கு, செகண்ட் ஆஃப்
வேலைக்காகாதுன்னு. அதேமாதிரித்தான் நடந்தது. அவனுக்கு இருந்த அந்த கொலவெறியில
எனக்கு கேட்கனும்னு தோணுன அந்த கேள்விய மட்டும் நான் கடைசிவரை கேட்கவே இல்லை.
அது என்ன கேள்வின்னா ‘இ படத்துலு நானு தெலுங்கு கத்துக்குறதுக்கு ஏமிடா
உந்தி?’
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.
எனக்கு வர்ற கேள்வி என்னன்னா...
பதிலளிநீக்கு" ‘இ படத்துலு நானு தெலுங்கு கத்துக்குறதுக்கு ஏமிடா உந்தி?’ "
- அப்படின்னா என்னங்க அர்த்தம்?
தங்லீஷ் மாதிரி அது தமிங்கு,
நீக்குநீக்கு தெலுங்கு தெல்லேதா?, அர்த்தம் காவாலா?.