திங்கள், அக்டோபர் 24, 2016

தலாக் ³

உண்மையிலேயே தலாக் விஷயத்தில் மோடி அரசாங்கத்தை திட்டுவதை நிறுத்திவிட்டு முஸ்லீம் சமுதாயம் அவருக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்யலாம். மோடியின் மூலமாகத்தான் 98% முஸ்லீம்களுக்கே தாலாக்கின் உண்மையான நடைமுறையைப் பற்றி தெரியும். அதற்கு முன்பு இஸ்லாத்தில் தலாக் என்றால் ஏதோ ‘’ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க.......... வேடையன் ராஜா பராக், பராக், பராக்.....’’ என்பது போல தலாக், தலாக், தலாக் என்று சொல்லிவிட்ட அன்றே அடுத்த முதலிரவை கொண்டாடிவிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இஸ்லாத்தின் படி ஒரு ஆண் விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் அந்த பெண்ணின் மூன்று மாதவிடாய் காலங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதவிடாய் முடிந்தபின்பும் ஒவ்வொருமுறை தலாக் என்ற வார்த்தையை சொல்லவேண்டும். மூன்று கால இடைவெளியில் இப்படி மூன்று தலாக் கூறவேண்டும், இதுவே முத்தலாக். இதில் முக்கியம் என்னவென்றால் அந்த மூன்று மா.காலமும் அவள், அந்த கணவனின் பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும். அதிலும் ரொம்ப முக்கியம் என்னவென்றால் இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் கசமுசா நடந்துவிட்டால், டீ கேன்சல். (முன்னாடி இது எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?)

முஸ்லீம்களுக்கான சட்டத்தைப் பற்றி முஸ்லீம்களின் அறிவே அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் மாதிரி இருக்கையில், மாற்று மதத்தவர்களின் சிந்தனையை குறைசொல்ல நமக்கு அருகதையில்லை. தலாக் பற்றி மட்டும் அல்ல, வரதட்சனை, சொத்துரிமை, கல்வி என எத்தனையோ விஷயங்களில் குரானில் இருக்கும் புஷ்பத்தை புய்ப்பம் என்றே கூறிக்கொண்டிருக்கிறோம். பிரட்சனை மற்றவர்களிடம் இருந்து ஆரம்பிக்கவில்லை நம்மிடமிருந்துதான் ஆரம்பமாகிறது. இன்ற தேவைக்கு ‘’இதுதான் இஸ்லாம்’’ என்று குரானை மற்றவர்களிடம் கொடுப்பதை விட, அதை ஒவ்வொரு முஸ்லீம்களும் புரிந்துபடிப்பது / தெரிந்துகொள்வதுதான்.

இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ‘’சரி பாதி’’ உரிமையை வழங்குகிறது என்பதே தவறு. ‘’சரி நிகர்’’ உரிமையைத்தான் இஸ்லாம் போதிகின்றது. சரி பாதிக்கும் சரி நிகருக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டு ஆப்பிள், இரண்டு ஆரஞ்ச்சை இருவருக்கு பிரிக்கவேண்டும் என்றால், ஒரு ஆப்பிள், ஒரு ஆரஞ்ச் என பிரிப்பது சரி பாதி. அதே ஒருவனுக்கு ஆப்பிளை விட ஆரஞ்ச் பிடிக்கிறது, மற்றவனுக்கு ஆரஞ்ச்சை விட ஆப்பிள் பிடிக்கும் போது, ஒருவனுக்கு இரண்டு ஆரஞ்ச்சையும், மற்றவனுக்கு இரண்டு ஆப்பிளையும் கொடுப்பது சரி நிகர். சரி நிகர் என்பது விருப்பத்தின் படி அமைவது அதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. சில உரிமைகள் ஆணுக்கு அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவாகவும் இருக்கும். சில உரிமைகள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும். கூட்டி கழித்து இரண்டால் வகுத்துப் பார்த்தால் கணக்கு சரியா இருக்கும். 

ஆண் விரும்பி விவாகரத்து (தலாக்) செய்வதற்கு அவன் குறைந்தது மூன்றுமாதங்கள் காத்திருக்கவேண்டும். அதே, பெண்கள் விரும்பி விவாகரத்து (குலா) செய்தால் அன்றே பிரிந்துவிடலாம். ஆனால் எத்தனை பெண்களுக்கு அப்படி நடந்திருக்கிறது?. இப்படி ஒரு சலுகை பெண்களுக்கு இருப்பதே அனேக பெண்களுக்குத் தெரியாது. அதை வேண்டுமென்றே மூடிமறைத்தது இந்த சமுதாயமே அன்றி மோடியோ அவருடைய அரசாங்கமோ இல்லை.

தலாக் விஷயம் இன்று இந்த அளவிற்கு வந்து நிற்பதற்கு யார் காரணம்? போனில், வாட்ஸ் அப்பில், பேஸ்புக்கில் தலாக் கூறிய செய்திகேட்டும் கும்பகர்ண தூக்கம்போட்டுவிட்டு இப்போது குய்யோ முய்யோ என கூப்பாடுபோடுகிறோம். ‘’முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம்’’ இதுவரை தின்ற மிச்சர்கள் அதிகம். தலாக் சொன்ன 60% முஸ்லீம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது, ஜீவனாம்சம் முறையாக கொடுக்கப்படவில்லை என சில அமைப்புகள் ஆய்வு நடத்தி டிவி ஷோக்களில் விவாதித்துக்கொண்டிருந்த போதும் கூட மிச்சர்தானே தின்று கொண்டிருந்தது மு.த.ந.வா.

இன்னும் மசூதிகளில் ‘’பெண்களே அன்னிய ஆண்களுடன் பேசாதீர்கள்’’, ‘’ஆண் துணையின்றி வெளியே செல்லாதீர்கள்’’, ‘’ஹிஜாப் அணிந்துகொள்ளுங்கள்’’............ என்ற பெண்களுக்கான உபதேச பிரச்சாரங்கள்தான் நடக்கின்றன. எந்த பள்ளிவாசலிலாவது பெண்களே உங்களுக்கும் கல்வி கடமையாக்கப்பட்டிருக்கிறது, ஆண்களுக்கு சரி நிகரான உரிமைகள் உங்களும் உள்ளது என்று பிரசுகங்கள் செய்து கேட்டதில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு மட்டும்தான் ஹிஜாப்பா? மார்பும், தொடையும் தெரியும்படி எத்தனை முஸ்லீம் ஆண்கள் சிலிம் பிட்டில் சுத்திக்கொண்டிருக்கின்றார்கள்? ஏன் ஆண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு கிடையாதா?. பெண்ணடிமைத்தன தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்திவிட்டு இஸ்லாம் இதயம் நல்லெண்ணெய் போன்று சுத்தமானது என சர்டிபிக்கேட் கொடுத்தால் மோடி பூச்சாண்டி காட்டத்தான் செய்வார்.

‘’முஹம்மது நபி கனவில் வந்து இனிமேல் இந்த பள்ளிவாசலில் தொழக்கூடாதுன்னு சொல்லிட்டாரு’’ சொல்லி எதிர்புறமே குடிசை போட்டு வீம்புக்கு தொழுகை நடத்தும் பல கோஷ்டி மற்றும் அதிலிருந்து பிரிந்து அடுத்த குடிசை போடும் சப்-கோஷ்டிகளை வைத்துக்கொண்டு நாம அடுத்த மதத்து கோஷ்டி சண்டையை பேஸ்புக்கில் லைக் பண்ண என்ன யோக்கியதை இருக்கிறது?. ரம்சான், பக்ரீத் வாழ்த்தை வாங்கிக்கொண்டு, ஹேப்பி தீபாவளி, ஹேப்பி கிரிஸ்மஸ் சொல்வது பாவம்ன்னு சொல்லுறது என்ன டிசைன்?.  

சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லீம்கள் தங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அந்த வட்டத்திற்குள்ளாகவே வாழ்க்கையை சுருக்கிக்கொண்டுவிட்டார்கள். பொதுவெளியில் பரவலாக கலக்காமல், தெருக்களில் நின்று குரானைக் கொடுத்துக்கொண்டும், பிரசுகங்கள் செய்துகொண்டும் ‘’இஸ்லாம் ஒரு இனியமார்க்கம்’’ என்றால் எல்லாம் சரியாகிவிடுமா?. இனிமேலும் என் பெயர் அப்துல்காதர், பெஸ்ட் பிரண்ட் பெயர் மசூது, ஸ்கூல் பெயர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வாத்தியார் பெயர் ஷாஜகான், காலேஜ் பெயர் சதக்கத்துல்லாப்பா, மேனஜர் பெயர் பீர் முஹம்மது........................என வாழ்ந்தால் கடைசியா காதர்மைதீன் மையவாடி குழியில் அடுத்துவரும் தலைமுறையின் நம்பிக்கையையும் சேர்த்தே புதைக்கவேண்டியிருக்கும். இனியும் அந்த வட்டத்திலிருந்து வெளிவர அடம்பிடித்தால் பிரியாணி அண்டாக்கள் திருடு போவதை தடுக்க முடியாது.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்னுடய நண்பன், ‘’மோடி ஆட்சிக்கு வந்தால் விஷத்தன்மை கொண்ட சீன பட்டாசுகளுக்குத் தடை’’ என்று போஸ்ட்போட்டு வோட்டு கேட்டான், இப்போது ‘’பிரதமர் விஷத்தன்மை கொண்ட சீன பட்டாசுகளை புறக்கணிக்க வேண்டுகோள்’’ என போஸ்ட் போடுகிறான். தடை செய்யமாட்டாராம், புறக்கணிக்க மட்டும் சொல்லுவாராம் என்ற உண்மையறிந்து. நாளை அவனே, அந்த சீனப் பட்டாசே மோடிதான்னு சொல்லுவான். மோடியைச் சுற்றி வருண்காந்திகளும், சுப்பிரமணிய சுவாமிகளும் இருக்கும் வரை நாம் அவ்வளவாக கெம்பத்தேவையில்லை. அதற்காக அடுத்த பிரதமர் ராகுல்காந்தியா? என்று கேட்டு என்னைக் கோவக்காரனாக்கவேண்டாம்.

பொது சிவில் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவான சட்டம் அதற்கும் தற்போதய சட்டத்திற்கும் சிலவற்றைத் தவிர பெரிய வித்தியாசம் இல்லை என ''உருட்டிப் போட்டா போண்டா, தட்டிப் போட்ட வடை'' என்ற ரீதில் சொல்லிக்கொண்டாலும், இந்தியா போன்ற பன்முகம், பல கலாச்சாரம் கொண்ட நாட்டிற்கு சாத்தியமற்ற ஒன்று. பொ.சி.சட்டத்தில் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் ஆயுள்தண்டனை என்று வந்தால், யுவராஜ் சிங் ஒத்துக்கொள்வார், ஆனால் பாவம் ஹர்பஜன் சிங் என்ன செய்வார்?.

---------------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

15 கருத்துகள்:

 1. நான் சொல்ல வேண்டும் எழுத வேண்டும் என்று நான் நினைத்த விஷயத்தை நான் நினைத்து கொண்டிருந்த மாதிரி மிக அழகாக பகிரிந்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் யாசீன்

  பதிலளிநீக்கு
 2. Nice writeup as usual. Clarified a few points I had about talaq. Just have a couple of questions.

  1. While this practice is being abolished in Muslim countries (ex:Pakistan), why should India carry this forward (Considering that this is being misused for long time and no solution in sight)

  2. Indian muslim woman contingent seems to be favorable to this removal overwhelmingly (Correct me if wrong). When both the government and the affected party are asking for the same law why should anyone oppose it?


  -Saravanan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ சரவணன்
   1. பாக்கிஸ்தான் ஒன்றும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதி கிடையாது. இந்திய முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல அனைவரும் அறிந்தது பாக் அனைதிலும் தோற்றுப்போன ஒரு நாடு. நமது சட்டம் சரியா தவறா எனபதுதான் இங்கு விவாதம், அதை அடுத்த நாட்டுடன் ஒப்பிடுவது சரியில்லை. ஊர் பஞ்சாயத்துகளில் இன்றும் கற்பழித்தவனுக்கு 1000 ரூபாய் அபராதம் என்ற தண்டனை இருப்பதால், கற்பழிப்பு சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்று அந்த சட்டத்தை நீக்கிவிடுவோமா என்ன? தவறாக பின்பற்றுவதை தவிர்க்க என்ன வழி என்றுதான் ஆராயவேண்டும்.
   2. சில முஸ்லீம் பெண்கள் இதற்கு எதிராக இருப்பதற்கு காரணமே ஜமாத் நிர்வாகம் சரியாக பின்பற்றாததால்தான். அதற்கு அவர்கள் அந்த ஜமாத் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கவேண்டுமே ஓழிய, சட்டத்தை நீக்கு என்பது சரியான தீர்வாக இருக்காது.

   நீக்கு
  2. நன்றி யாஸிர்

   நீக்கு
  3. நன்றி திரு.சரவணன். மேலும், என்னுடன் வேலை செய்யும் ஒரு பாக்கிஸ்தானியிடம் அந்தநாட்டின் முத்தலாக் தடை பற்றி கேட்டேன். அவன் அதை மறுக்கிறான்.

   நீக்கு
  4. http://scroll.in/article/806299/if-pakistan-and-21-other-counties-have-abolished-triple-talaq-why-shouldnt-india

   http://www.firstpost.com/india/banned-in-more-than-20-countries-practice-of-triple-talaq-continues-to-prevail-in-india-2869988.html

   Just googled it now

   -Saravanan

   நீக்கு
  5. உங்களோட லிங்கின் தலைப்பை மட்டும் படித்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் தலாக் தலாக் என்று சொல்லும் முறைதான் ஒழிக்கப்பட்டிருக்கின்றது. மற்ற முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமிய முறைப்படி தலாக் கூறினாலும் அதற்கான உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு சில கூடுதல் சட்டங்கள் இருக்கும். ஆனால் விவாகரத்து முறையில் மாற்றம் இல்லை.

   இந்தியாவில் கூட இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் ஆனால் கூடுதலாக அனைவரும் செய்வது போல திருமண ரிஜிஸ்டரும் செய்துகொள்ள வேண்டும். இந்த கூடுதல் முறைக்கு எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?.

   20 நாடுகளில் நீங்கள்/மற்றவர்கள் சொல்வது போல இஸ்லாமிய தலாக்முறை நீக்கப்பட்டிருந்தால், வேறு எந்தமுறைப் படி அங்கு விவாகரத்து நடைபெருகிறது என்பதை தெரிந்துகொண்டால்தான், இஸ்லாமிய விவாகரத்து முறை நல்லதா? கெட்டதா? என்பதை ஆராய முடியும்.

   சவுதி, பாக்கிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ் பெண்களுக்கு படிப்பறிவுக்கு தடை என்று ஒரு சட்டம் வந்தால், அப்போதும் 10 முஸ்லீம் நாடுகள் பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்று சொல்லும்போது ஏன் இந்திய முஸ்லீம்கள் மட்டும் அந்த மத பெண்கள் படிப்பிற்கு அக்கறை காட்டுகிறார்கள்? என்று சிலர் கூறினால், கண்டிப்பாக யாஸிருக்கு முன்பாகவே சரவணன் எதிர்பார்தானே?.

   நீக்கு
  6. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகா சரவணன்.

   நீக்கு
 3. Dear brother,

  As usual your writing is nice and useful. Are you told true muslim are not possible in secular country. I understand in your article like that. If I live namakawise muslim also, Biriyani Anda Thirudupogathan seyum.

  A Abudl Rahim

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான முஸ்லீமோ அல்லது போலியான முஸ்லீமோ எந்த ஒருவரும் பொ.சி.சட்டத்தை முழுமையாக அறிந்துகொண்டால் எதிர்க்கத்தான் செய்வார்கள் (என்னுடய கருத்து)

   நீக்கு
 4. Yasir, Assalamualaikum...Many thanks to give a holistic view on these items which mist of us are not well understood and also our non Muslim friends doesn't have clear idea what and how, this post inwould say that will clear the doubts and clarifications, may be it's useful for them if they are debating or hearing a wrong news about triple talaq. Barakkallah.

  பதிலளிநீக்கு