ஞாயிறு, ஜூலை 23, 2017

ஓவியா ஆர்மி :)

இப்போ தமிழ்நாட்டில் முக்கால்வாசிப் பேர் ‘’எண்டே மதர் டங் மலையாளம், எண்டே ஸ்டேட் கேரளா, எண்டே சீப் மினிஸ்டர் பினராயி விஜயன், எண்டே நடனம் கதகளி, தக்கிட தக்கதிமி தக்கிட தக்கதிமி..............’’ன்னுதான் ஆடிக்கிட்டிருக்கானுங்க. சமீப காலமாக ‘’கூட மேல கூட வச்சி...’’ பாடலைத்தான் முனுமுனுப்பேன், ஆனால் இப்போது ‘’ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுதே...’’தான் ரிங்க்டோனே. பாடல் ரொம்ப நல்லா இருக்கு, லிரிக்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு யு-டூப்பில் வீடியோ பார்த்தேன். பாடல் முழுவதும் ஹீரோ ஒரு தண்ணி ட்ரம்பை உருட்டி உருட்டி விளையாண்டு கொண்டிருக்கிறார்.  
காலம்தான் எவ்வளவு கொடியது. என் வாழ்க்கையில், என் நாவு ‘’நமீதா வாழ்க’’ என்ற திருநாமத்தை அன்றி வேறொன்றையும் உச்சரிக்காது என்று இருந்தவனை ‘’பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி’’ என்று சொல்லவைத்துவிட்டது. இதை விதி என்பதா இல்லை கடவுளின் சதி என்பதா?. நமீதா பி.ஜே.பியில் சேரக் கூடும் என்ற வதந்தி கிளம்பியபோது கூட டபுள் ஜீரோ (00) டிரிபிள் ஜீரோவிற்கு (000) மிஸ்டுகால் கொடுத்து பிஜேபியில் சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். அந்த அளவிற்கு ரசிகனாயிருந்த நானா? இன்று கையிலிருந்த 50 ஓட்டுக்களையும் ஓவியாவிற்கே கொடுத்துவிட்டு வெரும் கையோடு நமீதாவை வேடிக்கை பார்த்து நிற்பது?. இனி, ஆப்பிள் ஐபோன் லோகோவைக் காணும் போதெல்லாம் ‘’இது நமீதா கடித்து பிரிஜ்ஜில் வைத்த ஆப்பிள்’’ என்று நினைவுகள் என் மனதை கொத்தித் திண்ணுமே, அய்யஹோ..... நான் என் செய்வேன்.
ஓவியாவை களவானி படத்தில் பார்த்த போதோ, மெரினாவில் (படத்தில்) பார்த்த போதோ பெரிதாக ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. ‘’இந்த பொண்ணுகிட்ட என்ன இருக்குன்னு இதெல்லாம் ஹீரோயினா நடிக்குது’’ன்னு நக்கல் பண்ணியிருக்கேன். ஆனால் கலகலப்பு படத்தைப் பார்த்த பின்பு “பாரேன்.... இந்த பொண்ணுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு...’’ன்னு மிரண்டு போனேன். ஹீரோயின்களில் விஜயசாந்தியை அடுத்து ஓவியாவிற்குத்தான் போலிஸ் டிரஸ் நச்சென்று பொருந்தி இருந்தது. இந்த மாதிரி போலிஸ் இருந்தா நான் எல்லாம் டெய்லி பிக்பாக்கெட் கேசில் கைதாவேன்.
ஜித்தாவில் எல்லா நாளும் தனிமைதான், ரூமிலும் ஆள் கிடையாது, பேச்சு துணைக்கென்று அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஜீலி பாணியில் சொல்வதென்றால் ‘’கட்டிப் புடிக்கக்கூட யாருமில்ல’’.  கிட்டத்தட்ட இதுவும் பிக்பாஸ் ரூம்தான்.    முதல் 15 நாட்கள் தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வந்தேன். அந்த பதினைந்து நாட்களும் தூக்கத்தில் நானும் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போலவும், காயத்திரியும், ஆர்த்தியும் என்னை அடிமை போல் நடத்துவது போலவும் கனவு வரும். மனசு ஒரு விதமான பயந்த நிலையில் இருந்தது. பரணியை பொம்பள பொருக்கி ரேஞ்சில் கூடி நின்று பேசிய போது, என்னை பேசுவதுமாதிரியான மனோ நிலை இருந்தது. இதே ரேஞ்சில் சென்றால் மெட்ராஸ் ஜானியாக மாறிவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது. இப்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கமல் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்காக பார்க்கிறேன்.
பிக்பாஸை பார்க்கவில்லை என்றாலும் டெய்லி என்ன நடக்கிறது என்பதை பலரின் போஸ்ட்களிலும், மீம்களிலும் பார்த்து தெரிந்து கொள்கிறேன். பிக்பாசின் இரண்டாவது நாளில் இருந்தே ஓவியாவைப் பிடித்துவிட்டது. இந்த பொண்ணு ரொம்ப உண்மையா இருக்குதே, நேர்மையா பேசுதே.............என பல ‘தே’க்கள்தான் ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுதே மொபைல் ரிங்டோன். தமிழகத்தில் குடிசைகளே இருக்கக்கூடாது என்று ஓடி ஓடி கொளுத்தும் டாக்டர் அன்புமணி ஐ.ஏ.எஸ் என்னைக்கு ஓவியாவிற்கு கிடைத்த ஒன்னரை கோடி ஓட்டுக்களை எண்ணி காண்டானாரோ அன்னையில இருந்து ஓவியா ரசிகனாக இருந்த நான் ஓவியாவின் வெரியனாகவே மாறிவிட்டேன்.
 எனக்கு இரண்டு இ-மெயில் ஐடி உண்டு, ஓவியாவிற்கு ஓட்டுப் போடுவதற்காக மூன்றாவது ஐடியை ஓப்பன் செய்தேன். என் ஆபிசில் இருக்கும் பாக்கிஸ்தானியிடம் ஓவியாவின் அருமை பெருமைகளைச் சொல்லி, இந்தியாவின் அடுத்த பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி பிரதமரானால் பாக்கிஸ்தானில் நாலு பள்ளிக்கூடம் கட்டித்தரச் சொல்லுகிறேன் படிச்சு பொழச்சுக்கோங்க, என்றெல்லாம் மண்டயக் கழுவி ஓட்டுப் போட வைத்துள்ளேன். இந்தவாரம் மட்டும் ஓட்டுப் போடும் வரை பக்கத்திலேயே இருந்து ஓவியாவிற்குத்தான் ஓட்டுப் போடுகிறானா? என்று கன்பார்ம் செய்துகொண்டேன். (நமீதா விசயத்தில் பாக்கிஸ்தானிகளை நம்ப முடியாது, அயோக்கியப் பயலுக).
ரெண்டு வாரத்திற்கு முன்னாடி, வீட்டம்மா போன் பண்ணிய போது ‘’மனசே சரியில்ல’’ன்னு சொன்னேன். தனிமையில் இருப்பதால் வீட்டை நினைத்து வருந்துவதாக நினைத்துக்கொண்டு ஏதேதோ ஆருதல் சொல்லி ‘’என்ன காரணம்?’’ன்னு கேட்டாள். நான் ‘’ஓவியாவ யாருக்கும் பிடிக்கமாட்டேங்குது, எவிக்சனில் அவள் பெயர் வந்திருச்சு’’ன்னு கவலை தோய்ந்த குரலில் சொன்னேன். சொன்னதுதான் தாமதம், விழுந்த வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், காயத்திரிக்கு கோவில் வைத்து கும்பிடலாம். கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் சந்திரமுகி போய் கங்காவா வந்தவுடன், திட்டியதற்கு பிராய்ச்சித்தமாக ஓவியாவிற்கு ஓட்டுப்போட சம்மதிக்க வைத்தேன். ஒரு வாரம், ரெண்டு வாரம்னா ஓகே. வார வாரம் ஓவியா பெயர் வருது. இந்த வாரமும் ஓவியா பெயர் வந்தால் அவ்வளவுதான். என் பொண்டாட்டி என்னை டைவர்ஸ் பண்ணிருவா. அப்புறம் பிக்பாஸில் இருந்து ஓவியா வெளியே வந்தவுடன், நேரா எங்க வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்துறமாதிரி ஆகிடும்.
இப்போது யாராவது ‘’தமிழ்தாய் வாழ்த்து சொல்லு?’’ன்னு கேட்டா, ‘’கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட...’’ன்னுதான் சொல்கிறேன். அந்த அளவிற்கு சிஸ்டம் கெட்டுப்போச்சு. ‘’அழுக வந்தா அழுதுடு, ஆனா அதுக்கப்புறம் அழவே கூடாது’’, ‘’வாங்குற ஒவ்வொரு அடியும் வாழ்க்கையில ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும்’’, ‘’நடிக்கிரான்னு முடிவு பண்ணிட்டா நாம செத்தாக் கூட நடிப்புன்னுதான் சொல்லுவாங்க’’ இந்தமாதிரி டயலாக்கெல்லாம் கேட்டபின்பு கூட ‘’ஏண்டா ஓவியா ஓவியான்னு அலையிரீங்க’’ன்னு எவனாவது கேட்பான்?. சிலர் பிக்பாஸ் புரோகிராம் ரியாலிட்டி ஷோ இல்லை என்கிறார்கள். இருக்கலாம், நான் ஒரு சீரியல் பார்ப்பது போலத்தான் பார்க்கிறேன்.
இன்னொரு விஷயம், டிவியில் பார்க்கும் ஓவியாவை நாம் ரியல் வாழ்க்கையில் ரசிக்க முடியுமா??????. தனக்கு மட்டுமே உண்மையாக இருக்கும், கொடுத்த வேலையை தன் இஷ்டப்படி செய்யும், கொஞ்சம் சோம்பேரியான, யாருடனும் ஒத்துப்போகும் குணம் இல்லாத, தலமையை மதிக்காத, வெடுக் வெடுக்கென பேசும், எல்லாவற்றிலும் தான் தான் சரி என்று எண்ணும், தவறு என்றால் ஒரே ஒரு ‘’சாரி’’ சொல்லி கிளம்பும் கேரக்டர்கள் கொண்ட, நம்மோடு ஒட்டி வாழும் ஓவியாக்களை நம்மால் ரசிக்க முடியுமா?. என்னால் சத்தியமா முடியாது. ஒருத்தனோட வாழ்க்கையை டிவியில் பார்த்து கணிப்பதற்கும் (ரசிப்பதற்கும்), நேரில் பழகிப் பார்த்து கணிப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. யாருக்குத் தெரியும்?, நாம் வெறுக்கும் பலர், ஓவியாக்களாகக்கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி கேமராக்கள் இல்லாதவரை நம்மில் இருக்கும் காயத்திரி, ஜீலியை நம்மால் அறிந்துகொள்ளவே முடியாது.
நேற்று, கமல் தந்திரமாக ஜீலியை மாட்டிவிட்டு, காயத்திரியை காப்பாற்றி இருக்கிறார். இந்த வாரம் ஒருவேளை ஜீலியும், காயத்திரியும் எலிமினேசன் லிஸ்டில் வந்தால், காயத்திரியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கலாம். என்ன எழவுனாலும் இருக்கட்டும், சினேகனை மட்டும் நல்லவனா காட்ட முயற்சிக்காதீங்க மிஸ்டர் கமல் வாந்தி வாந்தியா வருது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
ஸாரி நமீதா.    

-------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.

4 கருத்துகள்:

 1. // என் ஆபிசில் இருக்கும் பாக்கிஸ்தானியிடம் ஓவியாவின் அருமை பெருமைகளைச் சொல்லி, இந்தியாவின் அடுத்த பிரதமராகக் கூட வாய்ப்பிருக்கிறது. அப்படி பிரதமரானால் பாக்கிஸ்தானில் நாலு பள்ளிக்கூடம் கட்டித்தரச் சொல்லுகிறேன் படிச்சு பொழச்சுக்கோங்க //

  அல்டிமேட் ப்ரதர் 🤣😂..!! #oviya4life

  பதிலளிநீக்கு
 2. :) - எழுதுங்கள் யாஸீர்.. உங்கள் கட்டுரைகள் உங்களை மிக அண்மையானவராக ஆக்குகிறது. நிறைய எழுதுங்கள்.. பாலசுப்ரமணியம் முத்துசாமி

  பதிலளிநீக்கு
 3. //நமீதா விசயத்தில் பாக்கிஸ்தானிகளை நம்ப முடியாது, அயோக்கியப் பயலுக// முடியல இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் பாஸ்!

  பதிலளிநீக்கு