போன வருசம் மாதிரி ஒரு கேவலமான வருசத்தை 2012க்கு அப்புறம்
நான் அனுபவிக்கவேயில்லை. “ஊதியம் இல்லாமல் ஊளியர்கள் உயிர் ஊசல்…….” ரேஞ்சுக்கு கம்பெனி
இருந்துச்சு. இந்த நாரப்பய வருசத்தை பல்லக் கடிச்சிக்கிட்டு எப்படியாவது கடந்திடனும்னு
சூழுரை எடுத்து, வருசத்தோட கடைசி நாள்ல காரித்துப்பி அனுப்ப காத்துக்கிட்டு இருந்தேன்.
புது வருசத்தை வரவேற்பதை விட 2021 முடியப்போகுற சந்தோசம், பொண்டாட்டிய இந்தியாவுக்கு
அனுப்பிவைக்கும் போது ஏற்படும் ஆனந்தத்தை விட அதிகமா இருந்துச்சு.
டிசம்பர் 31, பால்கனியில் இருந்து புர்ஜ் கலிபாவில் புது
வருச வரவேற்பு வானவேடிக்கைகளை பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டு பால்கனிய பார்த்து
“ஹேப்பி நியு இயர் ஆண்டி” ன்னு சொன்னேன். பதில் வரலியேன்னு உத்துப் பார்த்தா….. நாலு
வேட்டி கட்டுன வெரும்பயலுங்க. ஸோ ஸேட், ஒரு ஹேப்பி நியு இயர் வேஸ்டாப்போச்சு. நைட்டு
புல்லா 2021, கக்கத்துல கன்னி வெடி வச்சது, பாதையில பள்ளம் வெட்டிவச்சது, அம்மணமாவுட்டு
ஆசிட் அடிச்சதுன்னு…. நானும் என்னோட நண்பரும் நினைவுகூர்ந்து கொண்டே இருந்தோம்.
ஜனவரி 1, அதிகாலை 11 மணிக்கு தூங்கிக்கிட்டு இருக்கும்போது
கத்துன போனை காதுகிட்ட வச்சி “ஹலோ”ன்னு சொன்னேன். தெரிஞ்சவரோட அப்பா இறப்பு செய்தி.
முதல் நாள், முதல் போன் கால், முதல் செய்தி. “சிறப்பு”. ரெண்டு மணி நேரம் கழிச்சு வாட்ஸ்
அப் வாய்ஸ் மெசேஜ், பிரண்டோட அம்மா இறப்பு செய்தி. அடுத்து வெங்காயம் வெட்டும் போது
விரல்ல கத்தி குத்து. சில பல மி.லிட்டர் பிளட் பிளீடிங். ‘’என்ன ரத்தக் காவெல்லாம்
வாங்குது?, ஆங்க்… ஒரு சிறந்த வருசம்னா சில தடங்கள்கல் இருக்கத்தான் செய்யும்’’னு நானே
சாமாதானப் பட்டுக்கிட்டேன்.
இதன்ன பெரிய பிரமாதம், இதவிட ஒரு ஸ்பெசல் ஐட்டம் ஒன்னு இருக்குன்னு
ஒரு தோணல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அன்னிக்கு நைட்டு தூங்குற வரைக்கும் வேற ஒன்னும்
நடக்கல (முதல் நாள்ல இதுக்கு மேல என்ன நடக்கவேண்டியிருக்கு?). ஜனவரி 2, ஆபிஸ் போய்
பன்ச் பண்னிட்டு, கம்யூட்டர் ஓப்பன் பண்ணினா HR ல இருந்து மெயில் வந்திருஞ்சு. ‘’ஹேப்பி
நியு இயர்’’ அனுப்பி இருக்கானுங்கன்னு நம்பி ஓப்பன் பண்ணுனேன்.
“தாங்கள் கடந்த நாலு வருசமா புடுங்குனத, நாங்க நாற்பது பேரைக்கொண்டு
அள்ளிக்கிட்டு இருக்கோம். இதுக்கு மேல முடியாது. வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்” ன்னு
மெயில் அனுப்பி இருந்தாங்க. ஓ இது தான் அந்த ஸ்பெசல் அய்ட்டமான்னு மிரண்டு போய்யிருந்தேன்.
‘இந்த கம்பேனிக்காக நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்க, உங்களப் போயி தூக்கிட்டானுங்களே?’
ன்னு எல்லோரும் துக்கம் விசாரிக்க கண்ணுல தண்ணிவச்சிண்டு வந்துட்டா. ஆனா மனசுக்குள்ள
பூராப் பயலுங்களுக்கும் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ தான்.
லெட்டர் குடுத்த அடுத்த 2 நாள், கம்யூட்டர தட்டுரது, பிரிண்டர்
மிசின்கிட்ட நின்னு பிரிண்ட் எடுத்து அடுக்கி வைக்கிறது, வலது கையால சாப்பிட்டுகிட்டே
இடது கையால கீ போர்டுல டைப் பண்ணுறதுன்னு பேய் மாதிரி வேலை பார்த்தேன். இத பார்த்துட்டு
என்னோட மேனஜரே பாலகிருஷ்னா டபுள் ஆக்ட் பண்ணின படத்த பார்த்தமாதிரி மிரண்டு போய் நின்னாரு.
எங்கிட்ட வந்து ‘அதுதான் தம்பி ஒரு மாசம் நோட்டீஸ் பிரியட் இருக்குல்ல, எல்லா வேலையையும்
ஒரே வாரத்துல முடிச்சிட்டா எப்படி?’ன்னு கேட்டாரு. ‘’எதே….. வேலையா? யோவ் நான் ரெசூம்
ரெடிபண்ணி பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு இருக்கேன்’’ன்னு சொல்லலாம்னு தோனுச்சு, பட்
அந்த மனுசனோட நெனப்புல எதுக்கு மண் லாரிய ஏத்தனும்னு “இது என்னோட கடமை, என்னய தடுக்காதீங்க”ன்னு
சொல்லிட்டேன். நம்பிட்டான். இவனெல்லாம் ஒரு மேனஜரா?ன்னு உங்களுக்கு தோனுதுல்ல, இத நான்
பலதடவ சொல்லியிருக்கேன் இருந்தும் 4 வருசம் வச்சியிருந்தானுங்க.
புதுவருசம் ஆரம்பிச்ச கையோட துபாயில கொரோனா கேஸ் எண்ணிக்கை
அதிகமாகிடுச்சு. கம்பெனியில பாதிப் பேருக்கு காய்ச்சல், இருமல். ஆபிஸுக்கு வந்தாலே
ஏதோ கொரோனா வார்டுக்குள்ள வந்த பீளிங்க். கம்பெனி ‘’பூராப்பயலும் டெஸ்ட் எடுக்கனும்’’னு
சொல்லிடுச்சு. யானையே எதிர்ல வந்தாலும் ஏறி அடிப்பாண்டா இந்த யாசிர்ன்னு சிறு இருமலுடன்
இருமாப்போடு இருந்தேன். கங்குராச்சுலேசன்….. உங்களுக்கு கொரோனான்னுட்டானுங்க. அடுத்த
பத்து நாள் ஆரும் இவங்கூட அன்னந்த் தண்ணி பொழங்கக்கூடாது, அத மீறினா அவுங்களு பத்து
நாள் கோரண்டைன் இருந்துட்டு வரணும், நீதிடா, நேர்மைடா, ஞாயம்டா…..ன்னு கம்பெனி சொல்லிடுச்சு.
போனை கீழ வைக்க முடியல, கருணை மனுவோட எல்லோரும் கால் கடுக்க
லைன்ல நின்னானுங்க. போன் பண்ணவன் எல்லாம் “அது எப்படி பாய், உங்களுக்கு பாஸிட்டிவ்
வந்திருக்கு, ஆனா செகரட்ரிக்கு நெகட்டிவ் வந்திக்கு?”னு கேட்குறான். இன்னொருத்தன்
“கம்பெனிய விட்டு போகும் போது, எல்லாத்தையும் கேண்ட் ஓவர் பண்ணனும், செகரட்ரிய யாருட்ட
கேண்ட் ஓவர் பண்ண போறீங்க?’’ன்னு கேட்குறான்.
புருஞ்சுபோச்சு இவனுங்க இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வாரானுங்க.
கோரண்டைன்ல நேரம் போகனுமேன்னு ராஜ வம்சம்னு ஒரு படம் பார்த்தேன்.
கொரோனால செத்திருவோமோன்னு பயந்த எனக்கு, தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணிடுச்சு. சரி போகுற
உசிரு கொரோனாவுலேயே போகட்டும்னு முடிவு பண்ணி, கொம்பு வச்ச சிங்கமடா, அன்பறிவு……படங்களை
தவிர்த்திட்டேன். கோரண்டைன் முடிஞ்சு பல எதிர்பார்ப்போடு ஆபிஸ் போனேன், அந்த செகரட்டரிகிட்ட
என்ன சொன்னானுங்களோ தெரியல, நான் சொன்ன “குட் மார்னிங்”, ஈவினிங் வரை அனாதயா கெடந்துச்சு.
கேண்ட் ஓவர், கேண்ட் ஓவர்னு பேசுனானுங்க இப்ப அவனுங்களே டேக் ஓவர் பண்ணி டேங்கர் லாரிய
ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க, ப்ளடி 5மாச சம்பள பாக்கி கம்பெனி எம்ப்ளாயர்ஸ்.
என்னடா இந்த 2022 போர்பிளே பண்ணாம நேர டாங்கி ஸ்டைல்லுக்கு
போகுதேன்னு அப்பப்ப ஒரே மிரட்சியா இருக்குது. இதுக்கு 2021ன்னே பரவாயில்லை. தமிழ்ல ஒரு
கதை இருக்கு ‘’முன்னாடி இந்தியாவ மைக்மோகன் சிங்குன்னு ஒரு மன்னன் ஆண்டு வந்தாராம்,
அவர எல்லோரும் மோசம் மோசம்னு திட்டுனாங்களாம்……………………’’ சரி விடுங்க டைம் வேஸ்ட். பை
த பை எனக்கு 2012ல கல்யாணம் ஆச்சு.
---------------------------------------------------------------------------------------------யாஸிர் அசனப்பா.
நீண்ட நாள் கழித்து இடுகை இட்டத்துக்கு நன்றி, எப்போவும் போல நகைச்சுவையாக இருந்தது தொடர்ந்து எழுதவும்
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்க பாஸ்
பதிலளிநீக்குதல..வாரத்துக்கு இதுமாதிரி ஒன்னு போட்டு விடுங்க...உங்க எழுத்துக்கு நாங்க அடிமை
பதிலளிநீக்கு