நம் அனைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
என்ன எனக்குள் இன்றிலிருந்து இப்படியொரு மாற்றம். விடுமுறை பற்றி நினைத்துக் கூட பார்க்காதவன். எத்தனை நாள் விடுமுறை எடுக்க வேண்டும் என்று யோசனையில் இப்போது. வங்கியில் பணத்தை எடுத்து, செலவு மட்டும் செய்யத்தெரிந்தவன், இப்போ மீதமுள்ளதை மிச்சப்படுத்த முயல்பவன். திருமணத்திற்கு திண்ண மட்டும் சென்றவன், அதற்காகும் செலவிற்கு கணக்கு பார்ப்பவனாக, நான் இப்போது.
கல்யாண தேதி குறிச்சதுக்கே, கண்ணாடி போட்ட எனக்கு இப்படி கண்ணகெட்டுதுன்னா, கல்யாணத்துக்கு அப்புறம்!!!!!!!!!!!!!!.
வீட்ட கட்டிப் பாரு, கல்யாணம் செய்து பாருன்னு ஒரு பழமொழியிருக்கு. எவ்வளவு உண்மை அது. சிவில் இன்சினியராக இருப்பதால், வீட்டை கட்டிப்பார்பதன் கஷ்டம் ஒரளவிற்கு தெரியும். இருந்தாலும் அப்படி ஒரு கஷ்டம் வந்திரக்கூடாதுன்னு, வீடு கொடுக்குற வீட்டுல தான் பொண்ணு எடுக்கனும்னு, பயங்கரமா பிளான் எல்லாம் போட்டுவைத்திருந்தேன். வைத்தது வைத்ததாகவே இருக்கு இன்னமும். ம்ம்ம்ம்ம்
இன்று பெண் வீட்டிற்கு சென்று கல்யாண தேதி குறித்தாயிற்று. சரி கல்யாணத்திற்கு எவ்வளவு செலவாகும்னு என் அப்பாகிட்ட கேட்டா, ஏதோ, தோசக்கடையில சொல்லுறமாதிரி சாதா, ஸ்பெஷல் சாதா, ஸ்பெஷல், ரோஸ்ட்ன்னு 4 விதமா சொல்ல, ரோஸ்டுக்கு ஆகும் விலையிலிருந்து கேட்டு, சாதாவே போதும்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கே @!#% லட்சம் ஆகுமாம். அப்ப கட்டதோசை லெவலுக்கு இறங்கி எவ்வளவு ஆகுமுன்னு கேட்டா, என் குல பெருமை, குடும்ப பேரு எல்லாத்தயும் எங்கப்பா போனில், ஒரு பொசிசன்ல் நின்னு சொல்ல, பல்ல கடிச்சிகிட்டே, கடுப்போடு ஒகே, ஒகேன்னு சொல்லியிருக்கிறேன் (வேற வழி).
பொண்ணுக்கு பட்டு புடவை, அக்காவிற்கு நகை, அண்ணிக்கு செயின், அண்ணனுக்கு ஜவுளின்னு, வீட்டிற்கு பந்தல்ன்னு.........லிஸ்டு ஒரு குயர் நோட்டயும் தாண்டிப் போகுது. வாழ்கையில இந்தமாதிரியான விஷயம் எல்லாம் ஒரு முறைமட்டும் தான் வரும், அதனால செலவ எல்லாம் பார்க்கதே, சும்மா அடிச்சு தூள்பண்ணுன்னு என் நண்பன் சொன்னான். எனக்கு வந்ததே கோபம் அவன்மேல. வராத பின்ன, அந்த நாயி ஓடிப் போயி ரிஜிஸ்டர் மேரஜ் பன்னினவன், கூட வந்தவங்களுக்கு டீ கூட வாங்கிகொடுக்கல, பக்கி அது பேசுது.
கை நடுக்கம், சுவர்பார்த்து சிரிக்கிறது, வலது கால் ஷுவ இடது கால்ல போட்டுப்போறது, அடிவயிற்றில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், கண்ணடியில கீரல் விழுந்தாலும், கொடுறமா பார்த்துக்கிட்டு நிக்கிறது.... என்னதான் ஆயிரம் சொல்லுங்க, இது கூட நல்லாத்தான் இருக்கு.
.
.
.
.
.
.
தூக்கை எதிர்நோக்கியிருக்கும் கைதி போலவும்,
பிரசவ நாளை எதிர்பார்த்திருக்கும் அன்னை போவும்
இப்போது நான் – ஆம்,
பிரம்மச்சரியத்தின் சாவு, சம்சாரியின் பிறப்பு ஒரே நாளில்
பிப்பிரவரி 19, 2012 (இன்ஷா அல்லாஹ்)
--------------------------------------------------------------------------------------யாஸிர்.
--------------------------------------------------------------------------------------யாஸிர்.
all the best
பதிலளிநீக்குvalthukal anan...unaku invitation design nan daan vangitu varanumam chennai le irundhu....unga daddy order
பதிலளிநீக்கு@ திரு சூர்யா,
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி
@ அப்துல் ஜப்பார்,
பதிலளிநீக்குஉனக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்பதே எனக்கு இப்ப தான் தெரியுது தம்பி.
என் மேல் உள்ள கோபத்தை எல்லாம் இன்விடேசன் கார்டில் காட்டிடாதே!!!!!!!
Advance wishes, yasir!! Your new blog is an innovative way to say the update on getting married and your feelings on the same :)
பதிலளிநீக்கு@ திரு புன்னா,
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி