நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.
இந்தியாவில் இருந்து கிரெடிட் கார்டு மூலமாக, நான் ஆர்டர் செய்த புத்தகங்கள் நேற்றுதான் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது. பதிமூணு புத்தகங்களில், பத்து மட்டும் தான் இப்போது கிடைத்திருக்கின்றது. மீதி, இருப்பு இல்லாமையால் பின்பு அனுப்பிவைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து கிரெடிட் கார்டு மூலமாக, நான் ஆர்டர் செய்த புத்தகங்கள் நேற்றுதான் என் கைகளுக்கு வந்து சேர்ந்தது. பதிமூணு புத்தகங்களில், பத்து மட்டும் தான் இப்போது கிடைத்திருக்கின்றது. மீதி, இருப்பு இல்லாமையால் பின்பு அனுப்பிவைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
புத்தகங்களை நான் ஆர்டர் செய்வதற்காக, இணையதளத்தினை மேய்ந்து கொண்டிருந்த போது, என் கண்ணில்பட்டது “இவன் தான் பாலா”. பல நண்பர்களால் அதிகளவு, எனக்கு சிபாரிசி செய்யப்பட்டது. நான் விகடன் பிரியன் என்பதால், விகடன் வெளியீட்டில் வரும் புத்தகங்களை அதிகளவு படிப்பதில், ஆர்வம் உண்டு. இப்படியாக படித்து எனக்கு, மிகவும் பிடித்தது பிரகாஷ் ராஜின் “சொல்லாததும் உண்மை” சேரனின் “டூரிங்க் டாக்கிஸ்”, இந்த இரண்டுமே ஓசியில் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்தது. பின்பு காசு கொடுத்து வாங்கியது என்றால் அது கோபிநாத்தின் “நீயும் நானும்”, இப்போது “இவன் தான் பாலா”.
பாலாவை எனக்கு பிடிக்காதபோதிலும், நண்பர்கள் சிபாரிசு பண்ணுகின்ற அளவிற்கு, அப்படி என்ன இருக்கின்றது, என்பதை அறிய மட்டுமே நான் இந்த புத்தகத்தை வாங்கினேன். பாலாவை எனக்கு மிகவும் பிடித்த காலம் ஒன்று இருந்தது, அவரை விரும்பியதற்கான காரணமும், வெருப்பதற்கான காரணமும் நடிகர் அஜித்தாக இருந்தார். அவருடைய சேது படம் வெளிவந்த பின்பு, அவரின் இரண்டாவது படத்தின் (நந்தா) நாயகன் அஜித்தாக இருந்தார், பின்பு சில காரணங்களுக்காக அவர் நடிக்கயியலவில்லை. பின்பு அவரின் நான் கடவுள் திரைப்படத்திற்காக, அஜித்தின் தலைமுடி முதல், உருவம் வரை மாற்றி, ஒருவருடம் ஆகியும் திரைப்படத்தை துவங்காததால், அஜித் அந்த படத்திலிருந்து வெளியேற, பெருங்கோபமுற்று இவர், இவரின் நண்பர்களோடு செய்த கலாட்டாவின் மூலம் தான் மனித இனத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமானவன் என்று காட்டிக்கொண்டவர். ஆக அஜித்தை வைத்து படம் எடுக்கப் போகின்றார் என்பதற்காக இவரை விரும்பியும், அஜித்திடம் நடந்துகொண்ட விததினால் இவரை வெறுத்துப் பார்த்தவன் நான்.
சரி, பத்து புத்தகம் கையில் வந்துவிட்டது, ஆனால் முதலில் எந்த புத்தகத்தில் இருந்து ஆரம்பிப்பது? என்ற எண்ணத்தில், ஒன்று ஒன்றாக நோட்டம் விட்டபடி இருக்கையில், மிகவும் குட்டியூண்டு புத்தகமாக இருந்ததால் “இவன் தான் பாலா” படிக்கத்துவங்கினேன்.
ஒரே மூச்சில் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன், இது என் முதல்முறையும் கூட, ஆனாலும் நான் பாலைவை விரும்பவில்லை. ஆனால் அவரின் சில வரிகளில் மெய்சிலுத்திருக்கின்றேன். புத்தக அறிமுகத்தில் “சுயமே சத்தியம்”, “சுயமே உன்னதம்”, “பராதீனம் ப்ராண சங்கடம்” யாரையும், எதற்காகவும் சார்ந்திருக்க கூடாது என்பது வாழ்கை எனக்கு கற்றுத்தந்த அனுபம் என்று எழுதியிருந்தது என்னை அதிகம் ஈர்த்தது.
இதுவரை நான் படித்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் என் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது இல்லை (அதிகமானவர்களுக்கு இருந்திருக்காது). இதுவும் தான், ஆனால் ஒரு சில சம்பவங்கள், ஒத்துப் போகும். 7 வது பகுதியில் வந்த ஒரு நிகழ்வு தான், என்னை புத்தகத்தை கீழே வைக்கவிடாமல், 21 பகுதிகளையும் படித்து முடிக்கத்தூண்டியது.
“பாலு... நம்ம வம்சத்துல எவனும் உன் லெவலுக்கு இருந்தது இல்லப்பா. ஒங்கிட்ட எப்படி பேசறதுன்னு தெரியல. தயவுசெஞ்சு உடம்பைக் கெடுத்துக்காதடா” கட கட வென கண்ணீர் வழிய, என்னைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான் என் தகப்பன்!. அவர் என் காலில் விழுந்தபோதே, பாதி நிதானத்துக்கு வந்துவிட்ட நான், அவரது கண்ணீரைப் பார்த்ததும், உடைந்தே போனேன்.
என் வாழ்வில், ஒத்துப் போன சம்பவம் அது, என் அப்பாவின் கண்ணீருக்கு காரணமானவன் நான் இல்லை, மற்றவனுக்காக என் அப்பா வடித்தது, ஆனால் அந்த கண்ணீர், எனக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்தது. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பாமல் இருப்பது, வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்று புரியவைத்தது..... இப்படி கற்றுக் கொண்டது அதிகம். வாழ்க்கையில் நான் யாரையும் மன்னிப்பேன், ஆனால் அந்த மற்றவனை மட்டும் மன்னிக்கவே என்னால் முடியாது.
பாலுமகேந்திராவின் அன்பு, மனிதநேயம், நண்பர்களின் கலாட்டா, ஊன்றி கவனிக்கும் குண்ம், வாழ்வின் ரணம், சின்ன வயது காதல், கடந்து சென்றவர்கள்....... இப்படியாக பல இருந்தும், என்னைக் கவர்ந்தது வழக்கறிஞர் சந்திரசேகர் சொன்னதாக சொன்னது “ நல்லா ஆட்டம் போடு, ஊர் சுத்து, கெட்டு குட்டிச்சுவராக் கூட போ... ஆனா ஒரு நாளைக்கு ஒரு புது விஷயமாவது தெரிஞ்சுக்கோ. ஒரே ஒரு விஷயம்... ஒரே ஒரு தகவல் புதுசாத் தெரிஞ்சிக்காம தூங்காதே”
அடுத்து விக்ரம் சொன்னது “நாம ஜெயிக்கனும். பழிவாங்கறதுண்ணா... அடிக்கிறது, உதைக்கறது, அவமானப்படுத்துவது மட்டுமில்லையே.... அவங்க கண்ணு முன்னால் ஜெயிக்குறது கூடத்தான்”
அப்ப நான் அதிக, அதிகமா ஜெயிக்கவேண்டியிருக்கு........
தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல-நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
-------------------------------------------------------------------------யாஸிர்.
Good one, yasir. Didn't have my tamil typewriter handy.. Wish you all success in your life!!
பதிலளிநீக்குநன்றி திரு புன்னா அவர்களே...
பதிலளிநீக்கு