ஞாயிறு, ஜனவரி 15, 2012

பதிவுலகில் நான்.........


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
பதிவுலகம், சும்மா எல்லோரும் எழுதுறானுங்கன்னு எண்ணி, நானும் ஆரம்பித்தது. இதனை ஆரம்பித்தவுடன், பலருடைய பதிவுலகத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது, இதில் நிறைய பேர் ஏதாவது இணையதளத்திலிருந்து சுட்டாதாக இருக்கும், அப்படியில்லை என்றால் பிறர் பதிவுகளை காப்பி செய்து அவர்களுடைய பெயரை இட்டதாக இருக்கும். ஒரே மாதிரியான கட்டுரைகளை கிட்டத்தட்ட 10 பேரின் பிளாக்கிலாவது பார்த்திருப்பேன். 100 க்கு 90 பேருக்கு சுய சிந்தனை என்பது இல்லை, மீதமுள்ள பத்து பேரில் 5 பேர் பெரியாரிஸ்டாக இருக்கின்றார்கள், மீதமுள்ள மற்ற 5 பேரின் சுய சிந்தனை என்பது சினிமாவில் மட்டும் தான் உள்ளது, காலம் மாறிய வில்லன், தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாத கட்டழகி நாயகிகள்(சும்மா சொல்லக்கூடாது போட்டவெல்லாம் ம்ம்ம்ம்ம் நச்சுன்னு இருக்கும்), காலை 7 மணிக்கு ரிலிஸ் ஆகும் படத்திற்கு, 10 மணிக்கே விமர்சனம் செய்வது போன்றவைகளாக மட்டுமே இருக்கின்றது. மத்தவர்களுக்கு கருத்து கூறுவது ஒருவகை, கருத்தினை திணிப்பது என்பது ஒருவகை, பெரும்பாலான பெரியாரிஸ்ட் வலைதளங்கள் இதில் இரண்டாவது வகை.

சிலபேரின் வலையுலகம் சென்றால், மிகப்பெரிய ஆச்சிரியம் காத்திருக்கும், ஒரு புதிய கட்டுரையை படித்து முடிப்பதற்குள், 3 கட்டுரைகளை போஸ்ட் செய்துவிடுவார்கள். அதிக பதிவுகள் எழுதவேண்டும் என்று எண்ணி, சில அசடுகள், காமெடிங்கிற பேருல மொக்கைகளைப் போடுவதுவும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் வலையுலகம் அஜித் குமார் மாதிரி, அஜித் நடித்த படங்கள் அதிகமாக யாருக்கும் பிடிக்காது, ஆனால் அஜித்தை அதிகமானவர்களுக்கு பிடித்திருக்கும், வலையுலகத்தில் அதிகமான குறைகள் இருந்தாலும், இதுவும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது.

சிலபேருடைய வலைதளத்திற்கு சென்றால், இவனுங்க வேலைக்கு போறானுங்களா?, இல்லையா? ங்குற டவுட்டே வந்திடும். நல்ல பதிவுகளாக இருந்தால் பாராட்டி இரண்டு வரிகளை அரை மணி நேரம் செலவு செய்து அவர்களின் கமெண்ட பாக்ஸ் வழியாக அனுப்பினால், அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவது வரிகளில் நம்மை பாராட்டி நன்றி தெரிவிக்கின்றார்கள், (என்ன ஆச்சர்யம், என்ன ஆச்சர்யம்!!!!!!!). ஒரு வாரத்தில் நான் அதிகமாக போஸ்ட் பண்ணியது 2 மட்டும் தான். அது பொருக்காத ஒரு பயபுள்ள, “என்ன பாய், வேலையே..... இல்ல போல!!!!! என்று சொல்லி கேவலமா ஒரு லுக்கவேற விடுகுதுங்க.
முதலில் எல்லாம், ஒரு பதிவை எழுதுவதற்கு, கம்யூட்டரில் டைப் செய்வதற்கு முன்னால் பேப்பரில் எழுதிவைத்துக் கொள்வேன், இப்போது கற்பனை நயம், கண்ணா பின்னானு வருவதால் நேரடியாகவே டைப் செய்துவிடுகின்றேன். டைப் பன்னுறது கூட இப்போ ரொம்ப ஈசியா முடிஞ்சிருது, கரெக்சன் பன்னுரதுலதான் உயிர் போகுது. அதிக நேரங்களில், வார்த்தைகள் வழக்கு மொழியிலேயே டைப் ஆகிவிடிகின்றது. எங்க வழக்கு மொழியில் டைப் செய்து கரெக்சன் செய்யாமலே போஸ்ட் செய்துவிட்டால் அவ்வளவுதான் பல வழக்குகளுக்கு உள்ளாகும் அபாயம் வந்துவிடும்.

பெரும்பாலும் எழுத்தாளர்களின் பதிவுகளை நான் விரும்பி படிப்பதுண்டு, அது என்னமோ தெரியல கவிதை, கதைகளின் பக்கம் அத்தனை இஷ்டம் இல்லை எனக்கு. அரசியல் சம்பந்தமான விசயங்களில் இருக்கும் ஆர்வமும், சரித்திரம் பற்றிய ஆவலும், சிறுகதைகளிலும், கவிதைகளிலும் கிடைப்பதில்லை. 150, 175 ரூபாய்கள் கொடுத்து வாங்கின, இந்திய பிரிவினைவாதம், காந்தியடிகளின் கொலைவழக்கு, என்ன நடக்கிறது காஷ்மீர், ஆர்.எஸ்.எஸ், சிம்ம சொப்பனம் பிடல் காஸ்ரோ, விடுதலைப் புலிகளின் இறுதியுத்தம், கண்ணதாசனின் வனவாசம்....................................., எல்லாம் படித்துக் கொண்டிருந்தாலும், 600 ரூபாய் கொடுத்து வாங்கிய வைரமுத்துவின் கவிதை புத்தகம், குறட்டை சப்தம் வரும் அளவிற்கு தூங்கிக்கொண்டுதான் இருக்கின்றது இன்னும்.

இதப்பத்தி எழுதலாம், அதப் பற்றி எழுதலாம் என்று எண்ணியெல்லாம் எதுவும் எழுதமுடியாது. அதுவா வரும். எழுத ஒரு விசயம் வேண்டும் என்று நினைத்து, அடுத்தவன் வாழ்கைய எல்லாம் எட்டிப் பார்க்கவேண்டாம், நம்முடைய வாழ்க்கயிலயே நிறைய இருக்கின்றது.

எழுதுவோம், எழுதுவோம் கம்யூட்டர், ஹேங்க் ஆகும் வரை எழுதுவோம், படிப்பவனின் பார்வைபோகும் வரை எழுதுவோம். 
---------------------------------------------------------------------------யாஸிர்

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. மறுமொழியிட்டமைக்கு நன்றி, அத்துடன் தங்களின் வலையுலகம் பற்றிய அறிமுகத்தினையும் தெரிந்துகொண்டேன். பொங்கல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. எழுதுவோம், எழுதுவோம் கம்யூட்டர், ஹேங்க் ஆகும் வரை எழுதுவோம், படிப்பவனின் பார்வைபோகும் வரை எழுதுவோம்.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுமொழியிட்டமைக்கு நன்றி,
      பொங்கள் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  3. வருக வெல்க

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுமொழியிட்டமைக்கு நன்றி,
      வெல்ல வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லீங்க. சினிமா பற்றி எழுதினால் தான் வெல்ல முடியும்ன்னு ஏதோ ஒரு எழுதாத சட்டம் ஒன்று இருக்காமே????????.
      இருந்தாலும், வெல்ல கதவுகளை மெல்ல தட்டிப்பார்போம், உடைத்து உள்ளே போகும் அளவுக்கு எல்லாம் முயற்சி செய்ய முடியாது.

      நீக்கு
  4. பதிவுலகத்த நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க போல.

    எழுதுங்க... எழுதுங்க... எ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுமொழியிட்டமைக்கு நன்றி, பொங்கல் வாழ்த்துக்கள்.

      பதிவுலகைப் பற்றி நான் புரிந்துகொண்டதை வைத்து புத்தகமே போடலாம், ஆனால் நேரமில்லாததால இதோட முடித்துக்கொண்டேன்.

      நீக்கு