செவ்வாய், பிப்ரவரி 07, 2012

முகப்புப் புத்தகம்.


நம் அனைவரின் மீதும் ஆண்டவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.

பேஸ் புக் இணையதளதம் ஆரம்பித்து 9 வருடங்கள் கடந்துவிட்டதாம், நான் இதில் அக்கவுண்ட் தொடங்கியது சுமார் 3 வருடத்திற்கு முன்புதான். கிட்டத்தட்ட தொடங்கிய நாள் முதலில் இருந்து, அனைத்து நாட்களிலும் ஓப்பன் பண்ணி பார்க்காமல் இருந்தது இல்லை. அதனுடனான நட்பு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

எங்கள் கல்லூரி நண்பர்கள் இறுதியாண்டு இறுதியில் படிக்கும் போது (2004), யாஹீவில் குரூப் மெயில் ஒன்றினை உருவாக்கி (சிவில் லையன்ஸ்) அதன் மூலமாக, எங்களுடய தொடர்பினை தொடர்ந்து கொண்டிருந்தோம், யாருக்காவது வேலை கிடைத்துவிட்டது என்றால், வெளி நாட்டிற்கு போவது என்றால், கல்யாணத்திற்கு அழைப்பிதல் அனுப்பிவைப்பது என்றால் அதன் மூலமாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்பு ஜி மெயிலின் ஆதிக்கம் மேலோங்கவே, ஆர்குடின் மூலமாக எங்களுடைய நிலைகளை புதுப்பித்துக் கொண்டிருந்தோம். புகைப்பட்த்தினை இணைப்பது, அதற்கு வண்ட வண்டயா கருத்து எழுதுவது என்று கொஞ்சம் ஆனந்தம் அதிகமானது, அதுவே எங்களுடைய குரூப் மெயிலுக்கு பாலூத்த ஆரம்பித்தது. பின்பு பேஸ் புக் வந்த மாத்திரத்தில், குரூப் மெயிலுக்கு பாடையே கட்டப்பட்டுவிட்டது.

முன்பெல்லாம், ஒருவனுக்கு கல்யாண செய்தி குரூப் மெயிலில் வந்தால், கிட்டத்தட்ட வாழ்த்து செய்திகள் வந்து குவிந்தவண்ணமாக இருக்கும். ஆனால் இப்போது 33 பேரில் வெரும் 2, 3 பேர் மட்டுமே வாழ்த்துக்களை அதன் மூலமாக அனுப்பிவைக்கின்றார்கள். எல்லாம் பேஸ் புக்கின் மாயம். அதுவே பேஸ் புக்கில் அப்டேட் செய்துவிட்ட அடுத்தகணம் 20 லைக், 15 கமெண்ட வந்துவிடுகின்றது. எனக்கு என்னமோ, டுவிட்டர், கூகுள்+ யைவிட, பேஸ் புக் தான் பிடித்திருக்கின்றது.

எகிப்து நாட்டில் நடைபெற்ற அதிபருக்கு எதிரான புரட்சியின் வீரியத்தினை அதிகப்படுத்தியது இந்த பேஸ்புக் தான், அதன் அடையாளமாக ஒருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு பேஸ் புக் என்று பெயர் சூட்டி நன்றி தெரிவித்துள்ளார். இது போல, எனக்கும் நன்றி சொல்லவேண்டியுள்ளது, எனது பள்ளிக் கூட நண்பர்களையும், கல்லூரியின் மற்ற துறை தோழர்களையும், ஜொல்விட்ட சில பிகர்களுடனும், நலம் விரும்பும் தோழிகளுடனும், பழைய கம்பெனியின் சக ஊளியர்களையும் என்னுடன் இணைத்தமைக்காகவும், எங்களின் கருத்துக்களை பறிமாறிக் கொண்டமைக்காகவும் நன்றி சொல்லித்தானே தீரவேண்டும்.

எல்லா நன்மைக்குப் பின்னாலும் ஒரு தீமையிருக்கும் அது மாதிரி, என்னமோ காலையில ஆபிஸ்க்கு வந்ததும் வராததுமாக, எனக்கு எதிர்த்தாப்புல இருக்குற எனது சக ஊளியனின் பேஸ பாக்குறதுக்கு முன்னாடி, பேஸ் புக்கை பார்த்தே ஆகவேண்டும்.  அவனுக்கே பேஸ் புக்கின் மூலமாகத்தான் காலை வணக்கம் சொல்லுறது (பயபுள்ள அதுவும் பேஸ் புக்க பார்த்துக்கிட்டுதான் இருக்கும்). 5 நிமிசத்துக்கு ஒரு முறை, என்ன அப்டேட் ஆகியிருக்குன்னு பார்த்துக்கிட்டே இருக்க தோனுது. எதுவும் அப்டேட் ஆகலியா, “என்னங்கடா செய்யுறீங்க??? பேஸ் புக்குல போஸ்ட் பண்ண முடியாத அளவுக்கு அப்படி என்னதாண்டா வேலை பாக்குறீங்கன்னுநாமளே வால்ல எழுதனும். அதுக்கு 10 லைக் கிடைக்கும், 5 கமெண்ட் கிடைக்கும்.

மூன்று வருடம் முடிந்த பின்னாடி கொஞ்சம் யோசித்து பார்த்தால், அதுவும் பொண்ணுங்க கிட்ட பேசினது மாதிரித்தான், எல்லாமே வெட்டி வேஸ்ட். எதுவுமே உருப்படியா போஸ்ட் பண்ணவில்லை என்பது தான் உண்மை. ரஜினிகாந் ஜோக்ஸ், விஜய் ஜோக்ஸ், பவர் ஸ்டாரின் பவர் புல் பன்ச் டயலாக்ஸ், என்று கலைகட்டும். உலகத்தில் கூகில் இணையதளத்திற்கு அடுத்தபடியாக, பேஸ் புக்கினை உபயோகிப்பவர்களே அதிகம், அதில் இந்தியர்கள் இரண்டாம் இடமாம் (இந்த பதிவு எழுதும் வரை).
ஒரு சர்தார்ஜிக்கு, ஒருவன் பேஸ்புக்கினைப் பற்றி சொல்லிக் கொடுத்தான். அதன் அருமை, பெருமைகளில் மயங்கிய சர்தார்ஜி, உடனே எனக்கு ஒரு அக்கவுண்ட் அதில் ஓப்பன் பண்ணவேண்டும் என்று கூறி, அதற்கான விபரங்களை அந்த நண்பனிடம் கேட்டார், நண்பரும், உங்களுக்கென்று ஒரு ஐ.டி உருவாக்கிக் கொள்ளுங்கள், பாஸ்வேர்டும் கொடுத்துவிடுங்கள், நண்பர்களை இவ்வாரு இணைத்துக் கொள்ளுங்கள் என்று தன்னை, அவருடைய பிரண் லிஸ்டில் இணைத்து உதாரணம் காட்டிக் கொடுத்தார், உடனே அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிடும், பின்பு நீங்கள் வாலில் (Wall) எதாவது எழுதினால் அது உங்களுடைய நண்பர்களுக்கு செல்லும் என்று கூறிவிட்டு அந்த நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அவர் சொன்னபடி எல்லாம் செய்துவிட்டு, பேஸ்புக் வாலில் என்ன எழுதுவது என்று யோசித்து, யோசித்து எழுதியதை, மறுநாள் அவருடய நண்பர் பார்த்து மயங்கியே விழுந்துவிட்டார். சர்தார்ஜி அப்படி என்ன எழுதினார்னா......
.

.

.

.

.

.

.

இங்கு யாரும் சிறுநீர் கழிக்க கூடாது.

---------------------------------------------------------------------------யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக