புதன், பிப்ரவரி 08, 2012

அய்யய்யோ.....என்னை ஆளாளுக்கு குழப்புறாங்களே!!!!!!!!!!!

நம் அனைவரின் மீதும், ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.
ஒரு இலக்கிய விழாவிற்கு ரஜினிகாந்த் வந்தாலும் வந்தார், சாரு நிவேதிதாவும், மனுஷிய புத்திரனும் என்னமோ, சிம்பு, தனுஷ் ரேஞ்சுக்கு சண்ட போட ஆரம்பித்துவிட்டார்கள். எஸ் ரா என்று செல்லமாக அழைக்கப் படும் எஸ்.ராமகிரிஷ்ணனின், கனடா நாட்டின் இலக்கிய விருதுக்கான பாராட்டு விழாவில் மூலமாக இந்த கூத்து நடந்து கொண்டிருக்கின்றது. மனுஷிய புத்திரனின் உயிர்மை பதிப்பகம் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. எனக்கு எப்படி எந்த ஒரு காரணமும் இல்லாமல், எந்த ஒரு புத்தகத்தையும் படிக்காமல், மனுஷிய புத்திரனை பிடிக்குமோ, அதே போல சாரு நிவேதிதாவைப் அறவே பிடிக்காத்தற்கும் காரணம் எதுவுக் கிடையாது.

ஆனால், சாரு நிவேதிதாவின் வாசகர் வட்டம் மிகப் பெரியது, அவரை மனதளவில் பலபேர் வெறுத்தாலும், அவரின் எழுத்துக்கள் அதனை மொழுகி பூசிவிடும். அவருடைய ஒரு வாசகரின் கட்டுரை எனக்கு அன்மையில் இணையத்தின் வாயிலாக படிக்கக்கிடைத்தது, ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் நீங்கள் சாருவை வெறுப்பதற்கு, ஆனால் அவருடைய எழுத்து ஒன்று போதும் அவரைப் நேசிப்பதற்கு. மற்ற எழுத்தாளர்களுக்கும் சாருவுக்கும் மியப்பெரிய வித்தியாசம் உண்டு, அது எப்படியாப்பட்டது என்றால், ஒரு படத்தின் சி.டியை தியேட்டர் பிரிண்டில் பார்ப்பதற்கும், புளூ ரேய் பிரிண்டில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்று எழுதியிருந்தார். இந்த ஒரு விசயம் என்னை ரொம்ப ஈர்த்தது. அதன் காரணமாகவே சமீபத்திய சாருவின் வெளியீடான எக்ஸைல் புத்தகத்தினை படித்துவிடவேண்டும் என்று எண்ணி, ஆர்டர் செய்யப் போகின்றேன்.

சாருவை நான் வெறுக்க ஒரு காரணம், இன்று நித்தி என்றழைக்கப்படும் முன்னால் நித்தியானந்த சுவாமிகள் தான். இவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்த சாரு, ஜலபுலஜங்க் சி.டி வருவதற்கு முன்பு, நித்திதான் “லோகத்துல உள்ளவாலை காப்பாத்தும் கருணை கடல், இவரின் புகழ் பத்து பவர் ஸ்டாரின் புகழுக்கு சமம் என்றெல்லாம் அடுக்கி சில வார பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் சி.டி பூஜையில், தன்னை சேர்க்காமல், தனியாக பூஜையை நட்ததிவிட்ட கடுப்போ என்னமோ, பின்பு நித்தி பற்றி கேட்டால், பொத்தி கொண்டு போய்விடுவார். பேஸ் புக்கில் தனது வாசகியிடம், தனது வக்கிறத்தினை காட்டியது, மது பான பாட்டிலுடன் போட்டவிற்கு போஸ் கொடுப்பது....... என்று தன்னுடய் இமேஜினை கெடுத்துக் கொண்டார்.

எனக்கு ஒன்னு மட்டும் புரியவில்லை, கிட்டதட்ட அனைத்து எழுத்தாளர்களும், கவிஞர்களும், மது, மாதுவிற்கு அடிமையானவர்கள் தான் அது என்ன நம்ம சாருவை மட்டும் வெறுக்கின்றார்கள். ஏன், கவியரசன் கண்ணதாசனே தன்னுடய சுயசரிதை புத்தகத்தில், தான் சில வேசிகளிடம் சென்றதாகவும், மதுவுக்கு அடிமைப்பட்டு கிடந்ததாகவும் எழுதியுள்ளார். ஒரு வேளை சாருவும் தன்னுடய சுயசரிதையில் இதயெல்லாம் எழுதியவுடன், நல்லவர் என்று சொல்ல தொடங்கிவிடுவார்கள் போல.

இவங்க சண்டயில எஸ்.ராவை பற்றி யாரும் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம். எஸ். ராமகிருஸ்ணன் ஒரு உண்ணதமான எழுத்தாளர். சாரு என்னமோ, ரஜினிகாந்தின் மூலமாகத்தான் எஸ்.ராவை பலருக்கு தெரிந்திருக்கின்றது என்று சொல்லுவது, மடத்தனமான கூற்று, கண்டிப்பாக அந்த அரங்கத்தில் ரஜினிக்காக கூடியவர்கள் 1000 பேர் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கெல்லாம் எஸ்.ராவைத் தெரியாது என்று சொல்லுவது ஆகாது. 

நானும் ஒரு நடிகர் எதற்கு இந்த இலக்கியவாதியின் பாராட்டு விழாவிற்கு வரவேண்டும் என்று யோசனையில் இருந்தேன். ஆனால் அன்றய விழாவில் திரு.வைரமுத்து அவர்கள் பேசியபோது ஒரு விசயத்தினை சொன்னவுடன் தான் புரிந்தது, ரஜினியைத்தவிர வேறு யாரும் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்திருக்க முடியாது. திரு.ஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது அறிவித்தவுடன், காலையில் பெருங்கூட்டத்தினை தாண்டி சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தவேண்டும் என்று எண்ணிய வைரமுத்துவிற்கு பெரும் அதிர்ச்சி அங்கு யாருமே இல்லாத்தைப் பார்த்த பின்பு, அதன் பின்னர் அவர் அறிந்து கொண்டாராம் முந்தய இரவே ரஜினிகாந்த் வந்து கை கொடுத்து பாராட்டிவிட்டு சென்றது. ரஜினிகாந்த் ஒரு இலக்கியவாதியாகவோ, ஒரு நடிகராகவோ அங்கு வரவில்லை, மாறாக தன்னுடய ஒரு ஆத்மாத்தமான நண்பனுக்காக வந்திருந்தார் என்பது அவருடய பேச்சில் இருந்து தெரிந்தது.

பெரும்பாலும் இந்த மாதிரியான நிகழ்சிகளுக்கு ரஜினி போன்றவர்கள் வரும் போது, மீடியாக்கள், ரஜினிகாந்த் என்ன சொன்னார் என்பதை மட்டுமே பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. அந்த நிகழ்சிகளில் ரஜினியை விட, அற்புதமாக பேசிய வைரமுத்து, ஞானசம்பந்தன் மற்றும் பலரின் பேச்சிகள் வெளிப்படுத்தப்படாமலேயே போய்விடுகின்றது. இந்த விழாவில் பேசிய வைரமுத்து, எஸ்.ராவின் சமீபத்திய ஒரு சிறுகதை தொகுப்பினை வாசகர்களுக்கு பரிந்துரைத்தார். அது “புத்தராவது சுலபம். ரஜினியின் மூலமாக சிலருக்கு எஸ்.ராவை தெரிந்திருக்கும் என்பது கொஞ்சம் உண்மையாகக் கூட இருக்கலாம், இந்த ஒரு சிறந்த எழுத்தாளனை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பதில் அவருக்குத் தான் பெருமையே ஒழிய, எஸ்.ராவிற்கு தரத்திற்கு எந்த குறையும் வரப்போவதில்லை.

கண்டிப்பாக அந்த விழாவிற்கு வந்து, ரஜினி கோச்சடயன் படம் பற்றியோ அல்லது, தனது மருமகனின் கொலைவெறி பாடலின் பேமஸ் பற்றியோ பேசியிருப்பாரேயானால் கண்டிக்கத்தக்கதாக இருக்கும். ஆனால் அவர் பேசியது, எழுத்தாளர்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்கவேண்டு, அதன் மூலமாக நமக்கு இன்னும் சிறப்பான புத்தகங்கள் கிடைக்கும் என்று தானே பேசியிருக்கின்றார். மேலும் ஆண்டு தோறும் நடைபெறும் புத்தக கண்காட்சிகளில், அதிக அளவு புத்தகங்கள் விற்பனையாவது பற்றிய அவருடைய மகிழ்சியை பகிர்ந்து கொண்டிருக்கின்றார். இதுல என்ன தப்பு இருக்குங்குரேன்.......... இலக்கியவாதிகளுக்கு, நடிகர்களை கூட்டிக் கொண்டுவந்து பாராட்டுவிழா எடுக்கும் அளவிற்கு இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்துவிட்ட்தாக ஒப்பாறி வைக்கும் சாரு, ஏன் நடிகர்கள், இலக்கியவாதிகளை பாராட்டும் அளவிற்கு தங்களின் தரத்தினை உயர்த்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கக் கூடாது?
ஆனல், சாருவின் ஒரு கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லமுடியவில்லை. ரஜினிகாந்த் உண்மையில் எஸ்.ராவை பாராட்ட வந்திருந்தால், எஸ்.ரா அல்லவா கடைசியாக பேசியிருக்கவேண்டும், ஏன் எஸ்.ரா முன்னர் பேசிவிட்டு, ரஜினியை கடைசியாக பேசவைக்கவேண்டும்?. என்னைப் பொருத்தவரையில் அது தவறுதான், கண்டிப்பாக விழா நாயகனே கடைசியில் பேசியிருக்க வேண்டும். அதற்காக ரஜினியை முன்னாடி பேசவிட்டுவிட்டு, எஸ்.ரா கடைசியாக பேசியிருந்தால், எஸ்.ராவின் பேச்சை கேட்க அந்த அரங்கத்தில யாரும் இருந்திருக்கமாட்டார்கள் என்பது கொஞ்சம் மிகைப்படுத்தி கூறப்படுவது. இதனை என்னால் நம்ப முடியவில்லை, ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் உண்மையான, எஸ்.ராவின் வாசகர்கள் அடயாளம் காணப்பட்டிருப்பார்கள்.
இப்படியா நடிகர்களை போட்டு தாக்கும் சாரு, சொல்லுறதெல்லாம் ரொம்ப கரெக்ட் என்று முடிவெடுப்பதற்குள், மனுஷிய புத்திரன் தன்னுடிய பேஸ்புக்கில் சாருவின் முந்தய ஒரு கட்டுரையை பிரசுகம் செய்திருந்தார், சரி படித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்றால், அதில் சாரு, நடிகை திரிசாவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் (தப்பா நினைக்காதீங்க, முழுவதுமாக படிங்க), எதுக்குன்னா, பாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா போன்று இவர்களும் புத்தகத்தினை பிரபல படுத்தவேண்டுமாம்!!!!!!!!!!!!!. அது ஏன் திரிஷாவிற்கு அழைப்பு விடுத்தார் என்றால், அவருடய தமிழ் நன்றாக இருக்குமாம் அதையும் ஒரு நடிகர் (கமல்) சொன்னதால் தானாம் (ஷ்ஷ்ஷ்.....யெப்பா இப்பவே கண்ணகெட்டுதே)
சாரு இப்பவெல்லாம், நடிகர்கள் மாதிரி அடிக்கடி கெட்டப்ப மாத்திக் கொண்டிருகிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில், என்னடா மணிரத்தினம் நிக்கிறாருன்னு பார்த்தா, அட சாஜ்ஜாத் நம்ம சாரு தான்!!!!!!!!!!.
இவரு சொல்லுறது உண்மையா?, பொய்யா?, இவரு நல்லவரா? இல்ல கெட்டவரா?

---------------------------------------------------------------------------------------------------------------------------குழப்பத்துடன் யாஸிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக