நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
எப்படி புருசன்-பொண்ட்டாட்டி,
சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாம் பிரபலமோ அதுமாதிரித்தான் குடிகாரர்களின் ஜோக்கும் ரொம்ப
பிரபலம். புருசன்-பொண்ட்டாட்டி ஜோக்ஸ், சர்தார்ஜி ஜோக்ஸ், பெரும்பாலும் 90%
கற்பனைத்திறன் கொண்டு சொல்லப்படுபவை. ஆனால் குடிகாரர்களின் ஜோக்ஸ் 99%
உண்மையானதாகவே இருக்கும். தண்ணியப் போட்டுட்டானுங்கன்னா பயபுள்ளைங்க
பச்சப்புள்ளையா மாறிடுவானுங்க, அந்த நேரத்துல எவனும் பொய்யே பேசமாட்டான். இதுல
எனக்கு நல்ல அனுபவம் இருக்குது.
என் நண்பர்களுடய எல்லா
பார்டியிலும் நான் இருப்பேன், நான் தண்ணி அடிச்சது கிடையாது (சொன்னா நம்பனும்,
அதுக்காக சூடம் ஏத்தி சத்தியமெல்லாம் பண்ணமுடியாது). எல்லா கேங்கிலும் என்ன மாதிரி
ஒரு பலி ஆடு இருக்கும். சிக்கன் வாங்கிட்டு வர, ஆப்பாயில் போட்டு கொண்டுவர, சோடா
வாங்கி வர, இப்படி எல்லா வேலைகளும் நாங்கதான் செய்யனும். அடுத்து,
தண்ணியப்போட்டுவிட்டு மட்டயானதுக்கு அப்புறம், தூக்கிட்டுப்போயி அவ, அவனுங்கு
பெட்டுல தூக்குப்போடுறது வரை என்ன மாதிரி பலி ஆடுங்கதான் செய்யனும். இதற்கு கூலி
இல்லாம இருக்குமா?. இருக்கும், அவனுங்க வாங்குற 2 கிலோ சிக்கன் 65யில், ஒருகிலோ
நமக்குத்தான், ஆப்பாயிலில் அனைத்து வெள்ளைக்கரு பகுதியும் நமக்குத்தான்.
புதுசா தண்ணி அடிக்கிறவனுங்க
யாராவது நம்ம கேங்குல சேந்திட்டான்னு எனக்கு தெரிஞ்சுச்சுன்னா, அடுத்த பத்து
பார்ட்டிக்கு நான் போகவே மாட்டேன். புது குடிகாரனுங்க, ஒரு 50 ரூபா பீர
குடிக்குறதுக்கு 500 ரூபா நொருக்கு தீணிய திண்ணுடுவானுங்க. அந்த சிக்கனுக்கும்,
ஆப்பாயிலுக்கும்தான் அந்த அரசவையிலே கவிஞனாக இருப்பேன், அதுவும் இந்த
புதுக்குடிகாரனுங்களால பங்கம் வந்திரும்.
எங்க கூட ஒருத்தரு வேலை செஞ்சாரு,
அவர் தண்ணிபோட்டாத்தான் ஸ்டெடியா இருப்பாரு, உடலில் ஆல்கஹால் அளவு
குறைஞ்சிடுச்சுன்னா, நாக்கு உளரும், நடை தள்ளாடும். இந்தமாதிரி ரொம்ப வித்தியாசமான
ஆளு. சனிக்கிழமை ஆச்சின்னா, போச்சு. மேல சொன்னமாதிரி பச்சப்புள்ளையா மாறிடுவாரு
மனுசன். அதுவும் கொஞ்சம் அதிகமாயிடுச்சுன்னா, பிறந்த குழந்தைமாதிரி மாறிடுவாரு. அப்புறமா
நாங்கதான் பேண்ட், சர்ட் எல்லாம் மாட்டிவிடனும்.
அந்த ஆளு ரொம்ப பாசக்காரர், அதும்
நான்னா அவருக்கு ஒரு தனி பாசம்தான். ஒரு சனிக்கிழமை இரவு, எதுவுமே வாங்காமல், பூஜையை
ஆரம்பிச்சிட்டானுங்க. பத்து நிமிசத்து ஒரு தடவ என்ன கூப்பிட்டு, வாட்டர் பாட்டில்
வாங்கிட்டு வா, சிப்ஸ் வாங்கிட்டு வா, கோக் வாங்கிட்டு வான்னு ஒரே இம்சை. ஒரு
தந்தூரி சிக்கன கூட ஒழுங்க திங்கவிடல. இப்படி மாறி மாறி எல்லோரும் என்னிடம் வேலை ஏவ, எனக்கு நடக்கும் கொடுமையை கண்டு, நம்மாளுக்கு சாமி வந்து ஆடா ஆரம்பிச்சிட்டாரு, ‘என்னடா
நெனச்சீங்க இவன என்ன முட்டாப்ப்.... நெனச்சீங்களா? இல்ல கிருக்க்க்க்.....ன்னு
நெனச்சீங்களா?’ ன்னு எனக்கு சப்போர் பண்ணி சண்ட போடுறாரா இல்ல, என்னய சண்டைக்கு
கூப்பிடுறாரான்னே தெரியாம, ‘ஙே’ ன்னு முழிச்சிக்கிட்டு நின்னேன்.
‘நீ இருடா தம்பி, இந்த தடவ நான்
போய் வாங்கிட்டு வாரேன்’னு சொன்னாரு,
“இல்லண்ணே நானே போயி வாங்கிட்டு
வாரேன், நீங்க இப்ப நிதானத்துல இல்ல.......’ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள.
‘என் நிதானத்தப் பத்தி உனக்கென்னடா
தெரியும், நான் சொல்லி நீ போனீன்னா, இவனுங்க உன்ன
கேனக்க்க்க்....கிருக்க்க்கு......முட்டாப்ப்ப்.....ன்னு நெனப்பானுங்க’
இதுக்கு அவனுங்களே தேவலாம்னு மனுசுக்குள்ள நினைத்துக்கொண்டு ‘சரிண்ணே, நீங்க
சொன்னா சரியாத்தான் இருக்கும், நீங்களே போய்ட்டுவாங்க, அதுவரைக்கும் உங்க சிக்கனை
நான் பாத்துக்குறேன்னு’ சொல்லி இரவு 9 மணிக்கு அனுப்பிவச்சோம்.
போன மனுசன் போனவன்தான், மணி 10 ஆச்சு, 11 ஆச்சு. ஆளக்காணோம். பத்து வீடு தள்ளி
இருக்குற கடையில பெப்சி வாங்கப்போனவர காணோம்ங்குற கவலை, எல்லோருக்கும் அடுத்த
ரவுண்டுக்கு பெப்சி இல்லங்குற போதுதான் தெளிஞ்சுது, சாரி......, தெரிஞ்சுது. மாடில
நின்னு பார்த்தா, அண்ணன் வாங்கப்போன கடை முன்னாடி ஒரே கூட்டம். பதறிப்போய்
எல்லோரிடமும் சொன்னேன்.
ஏற்கனவே, அந்த கடக்காரனுக்கும்
நம்ம அண்ணனுக்கும் ஆகாது, அக்கம்பக்கத்துல வேற கடை இல்லை என்பதற்காக, அவன் எல்லாப்
பொருட்களின் மீதும் ஒரு ரூபாய் அதிகம்வைத்தே விற்பான். இது நம்ம அண்ணனுக்குப்
பிடிக்காது, ‘ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கட்டும், இவன ஒரு வழி பண்ணுறேன்னு’ அடிக்கடி
சொல்லிக்கிட்டே இருப்பாரு. இந்த விசயம் நினைவுக்கு வர, கூட்டம், அண்ணன் இருந்த
நிலை எல்லாம் ஒன்னு கூடி, ‘போச்சுடா, ஏழரைய கூட்டிட்டாருடா, செத்தாண்டா அந்த
கடைக்காரன், போலிஸ் கேஸ் ஏதாவது ஆகிடுச்சா?, பாட்டில எடுத்து மண்டய
பொழந்திருப்பாருரோ?,” இப்படி ஆளாளுக்கு பல கேள்விய எங்களுக்குள்ளேயே
கேட்டுக்கொண்டு, கூட்டத்தை விலக்கி அண்ணனைத்தேடுனா....................
அண்ணன் பாதாள சாக்கிடையில பல்டி
அடிச்சி கிடந்தாரு. “நான் தலைகீழாத்தான் குதிப்பேன்” ங்குறமாதிரி, கட்டை மேல
ஏறிப்போகாமல், ஜம்ப் பண்ணி, சாக்கடைகுள்ள போய்ட்டாரு. தூக்குங்கடான்னு தூக்கி
கொண்டுவந்து, குளிப்பாட்டி பெட்டுல போட்டு தூங்கவைக்குறதுகுள்ள,
அடிச்சவனுங்களுக்கெல்லாம் இறங்கிடுச்சு. தானம், தர்மம் செய்யுறதுல, இவர மிஞ்ச
எவனும் இல்ல. கர்ணன் எல்லாம் வந்து கையேந்தனும் அந்த அளவுக்கு வள்ளல். ஒரு
ஞாயிற்றுக்கிழமை ரூமை கிளீன் பண்ண வந்த 5 லேபர்களின் சட்டையைப் பார்த்து, போதையில்
இருந்த மனுசன் ‘என்னடா சட்டை இது, எங்கிட்ட வேலைபாக்குறவனுங்க இப்படி இருக்கக்கூடாது,
நல்லா டிப் டாப்பா இருக்கனும்’னு சொல்லி, துவச்சி காயப் போட்டிருந்த எங்க சட்ட,
பேண்ட் எல்லாத்தையும் எடுத்து தானம் கொடுத்திட்டாரு. அந்த ஒரு வாரம் அவனுங்க
இஞ்சினியர் மாதிரி டிப் டாப்பா இருந்தானுங்க, நாங்க லேபர் மாதிரி திரிஞ்சிக்கிட்டு
இருந்தோம்.
இப்படி அவரு அலும்பலுக்கு அளவே
இல்லாம போய்கொண்டிருந்தது. அவர் சொன்ன ஒரு கதை.
ஒரு பார்ல ஒருத்தன் ஓவரா தண்ணியப்
போட்டுவிட்டு, சேர்ல இருந்து எழுந்து நடக்க கூட முடியாமல், தள்ளாடி தள்ளாடி கீழே
விழுந்துகொண்டே இருந்தானாம். இத பார்த்த பக்கத்து சீட்டுக்காரன். இவனுக்கு ரொம்ப
ஓவராகிடுச்சு, நடக்க முடியாத அளவுக்கு குடிச்சவன் எப்படி வண்டி ஓட்டி வீட்டுக்கு
போவான்னு இரக்கப்பட்டு, அவன் வீட்டு அட்ரஸை கேட்டு, அவனை வீட்டில் விடப்போனானாம்.
அவன் வீடு வந்ததும், அவனின் மனைவி ‘என் கணவனை வீட்டில் பத்திரமா கொண்டு
வந்ததுக்கு, கோடி புண்ணியம், ஆனா, அவருடைய வீல் சேரை எங்கே?”ன்னு கேட்டாளாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.
அந்த போட்டோவுல இருக்குறது யாரு நம்ம கேப்டனா ??
பதிலளிநீக்குஒரு பாட்டிலுக்கு குப்புற கவுற ஆளா?. பத்து பாட்டில் அடிச்சாலும் விட்டத்தப் பார்த்தமாதிர்த்தான் இருப்பாரு.
நீக்குநல்ல செந்தமிழ் ல சொன்னாத்தான் ஒனக்கு புரியும் போல நம்ம அண்ணன் போல ...
பதிலளிநீக்குஎன்ன செய்யுறது அப்படியே பழகிடுச்சு. சேர்க்கை அப்படி
நீக்கு//கோடி புண்ணியம், ஆனா, அவருடைய வீல் சேரை எங்கே?”ன்னு கேட்டாளாம்.//
பதிலளிநீக்குநகைச்சுவையை மையப்படுத்தி எழுதியிருந்தீர்கள் யாசிர். இதுபோல் 'அவர்களு'க்கு உதவும் உங்களுக்குக் கிடைக்கப்போவது கோடி புண்ணியமா? அல்லது பாவத்தின் சம்பளமா? சிந்திக்க வேண்டுகிறேன்.
எனது வலைப்பூவில் இது: அம்மா சொன்ன கதை: http://nizampakkam.blogspot.com/2014/01/ammaa-story122.html
சிந்திக்கிற அளவிற்கு நான் ஒன்னும் எழுதிவிடவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
நீக்குஅது அவர் சொன்ன நகைச்சுவை கதைதான். அதை நான் எழுதியதற்காக நான் குடிக்குறதுக்கு துணை போகிறவன் என்று எண்ணவேண்டாம்.
கருத்துக்கு நன்றி.
super yasir...last post was also so good... especially the 'vegundeluntha theme seiyathu' , 'kovapata annan'..kalakal...ethachum tensionla un blog padicha, sema comedya irukuthu... aadithya, siripoliyellam beat panita po - punnaivanam
பதிலளிநீக்குதேம்ம செய்யது கதை இன்னும் இருக்கு அது எல்லாம் 18++++++. ஏதோ அவரைப்பத்தி சொல்லுறதுக்காக போட்ட சுமாரான சமாச்சாரம் தான் அது.
நீக்குநன்றி நண்பா