நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும்
உண்டாவுவதாக.
பொங்கள் என்றுதான் என் நினைவு, எட்டு வருடத்துக்கு முன்பு
ஆழ்வாரும், போக்கிரியும் ரிலீஸ். தீபாவளி, பொங்களுக்கு எல்லோரும் சொந்த ஊருக்கு
போய்விடுவதால், பெரும்பாலான இந்துப் பண்டிகைகளின் நான் பெங்களூரில் ஒண்டியாக
இருப்பேன். நேரம் போகவேண்டுமே என்பதற்காக படத்துக்குப் போவதும் உண்டு. அஜித் படம்
ஏதாவது ரிலீஸ் என்றால் 1000 ரூபாய் கடன்வாங்கியாவது ஒரு பத்து பேரை கூட
கூட்டிசெல்வது வழக்கம்.
கட்சிக்காரர்கள் மாநாட்டிற்கு கூட்டிச்செல்வது போலத்தான்
இதுவும், தியேட்டர் டிக்கெட், இடைவெளியில் முருக்கு, கூல்ட்ரிங்க்ஸ் அப்புறமாக
இரவு சாப்பாடு என்று அனைத்தும் அடியேனின் செலவே. படம் சூப்பராக இருந்தால், இரவு சாப்பாடு
அசைவமாக இருக்கும் இல்லன்னா இட்லியும், கட்டிச்சட்னியும் மட்டும்தான். எனக்கு
தெரிந்து அசைவம் வாங்கிக்கொடுத்ததாக நினைவு இல்லை (பில்லா1 தவிர்த்து). சில (பல)
படங்கள் ரொம்ப மொக்கையா இருக்கும், அந்த நேரத்துல எப்படிடா இவங்கிட்ட சாப்பாடு
வாங்கி சாப்பிடுறதுன்னு எண்ணி, என்னுடய பில்லையும் சேர்த்து கூட்டிக்கொண்டுவந்த
கொள்கை குன்றுகளே கட்டிவிடுவார்கள்.
இப்படி எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொண்டாலும், அஜித்
படம் என்றால் அல்லு கழண்டு, தெரிச்சு ஓடுவானுங்க. “போன படம்மாதிரி இருக்காதுடா,
கண்டிப்பா சூப்பரா இருக்கும், நீ வேணும்னா பாரு, கண்டிப்பா 150 நாள்தாண்ட” என்று
கெஞ்சி கூத்தாடி இஸ்துக்குன்னு போவனும். அதுவும் விசிலடிக்க தெரிஞ்சவனுங்களுக்கு
எக்ஸ்ரா கொஞ்சம் செலவு செய்யனும். தல வர்ற நேரமா பார்த்து பக்கி தூக்கிரும்,
எழுப்பு விட்டு “விசில் அடிடா, அடிடா” ன்னு கத்துறதுக்குள்ள தல எண்ரி முடிந்து, வில்லன்
முகத்த காட்டிருவானுங்க.
மேட்டருக்கு வருவோம்.
அந்த பொங்களுக்கு அஜித்தின் ஆழ்வாரும், விஜயின்
போக்கிரியும் ரிலீஸ். “அஜித் படம் வருது, கண்டிப்பா இங்க இருந்தா இவன் படம்
பார்க்கனும்னு தூக்கிட்டு போயிருவான்”னு பயபுள்ளைங்க சுதாரிச்சிட்டானுங்க. பாட்டி
செத்ததுக்கு போகதவனுங்க கூட இந்த தடவ பஸ் ஏறிட்டானுங்க. ஆள் கிடக்காம ரொம்ப கஷ்டமா
போச்சு. எனக்கு தெரிஞ்சு, அஜித் குமாருடைய படத்துக்கு என்னுடன் வெறும் ரெண்டே
ரெண்டு ஜீவன்களை கூட்டிகொண்டு சென்றது ஆழ்வார் படத்துக்கு மட்டுமே.
நாங்க இருந்த இடத்துல இருந்து வெறும் 5 கி.மீட்டரில்
லாவண்யான்னு ஒரு தியேட்டர் இருந்தது. “கண்டிப்பா, அங்க எல்லாம் டிக்கெடி
கிடைக்காது. புஷ்பாஞ்சலி போகுறதுக்கு பதிலா மாரத்தாளி ஏரியாவில் இருக்கும்
மல்டிபிளக்ஸ்க்கு போகலாம்” என்று அந்த இருவரிடமும் கூறினேன். அப்போது இருந்ததிலேயே
ரொம்ப காஸ்டிலியான தியேட்டர் அதுதான். இந்தமாதிரியான சந்தர்ப்பத்தில்தான், என் புண்ணியத்துல அந்த தியேட்டரை பார்த்தால்தான்
உண்டு என்று அவர்களுக்கும் தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பயணம்
செய்து, தியேட்டருக்கு வந்தால். கூட்டம்னா, கூட்டம் அப்படி ஒரு கூட்டம். சுத்திப்
பார்த்தா எல்லாம் அஜித் குமாரின் கட் அவுட் தான். விஜய்க்குன்னு அங்க ஒன்னு, இங்க
ஒன்னு என்று இருந்தது. மற்றபடி தியேட்டரை சுத்தி தல போஸ்டர்தான், ஃபெலக்ஸ்தான்,
அஜித் படம் போட்ட கொடிதான். ஒரே திருவிழாக்கூட்டம்.
டிக்கெட் கவுண்டருக்கு கூட்டம் ஐநூறு மீட்டராவது இருக்கும்.
மற்ற இரண்டு கவுண்டர்களும் கிட்டத்தட்ட காலியாகவே இருந்தது. அந்த தியேட்டரில்
ஹிந்தி, தெலுங்கு படங்களும் ஓடிக்கொண்டிருந்ததால், அது அந்த படங்களுக்கான கவுண்டர்
என்று நினைத்துக்கொண்டு இந்த பெரிய்ய்ய்ய கியூவில் நின்று கொண்டிருந்தேன். என்னுடய
முறை அரைமணி நேரத்துக்கு பின்பு வந்தது, நான் காசை நீட்ட, “இன்னைக்கு எல்லா ஷோவுக்கும்
டிக்கெட் முடிந்துவிட்டது நாளைய ஷோவுக்கு டிக்கெட் தரவா?” என்று டிக்கெட்
கொடுப்பவன் கேட்க, எனக்கோ “சே!!! தல படத்துக்கு, இம்புட்டு டிமாண்டா?” என்று
மெச்சிக்கொண்டேன். “அண்ணே எஸ்வந்த்பூரா ஏரியாவுல இருந்து, பார்த்தா உன் தியேட்டர்ல
தான் படம் பார்கனும்னு வந்திருக்கேன். சாயங்கால டிக்கெட் இல்லன்னாலும் பரவாயில்லை,
நைட்டு 10 மணி ஷோவுக்காவது மூனு டிக்கெட் கொடுண்ணா....” பாவமா மூஞ்சை
வச்சிக்கிட்டு கேட்க. “நான் என்னடா வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன், இல்லடா,
எல்லாம் புக் ஆயிடுச்சு, வேணும்னா, ஆழ்வார் படத்துக்கு தரவா, இந்த ஷோவுக்கே
டிக்கெட் இருக்கு..”ன்னு சொல்ல. கொதிச்சிட்டேன் “அப்புறம் இம்புட்டு நேரம் நீ எந்த
படத்த பத்தி சொல்லிகிட்டு இருந்த?”ன்னு பெருங்கோபம் கொண்டு கேட்டேன் (நெற்றிக்
கண்ணை மட்டுந்தேன் தொறக்கல). அவன் ரொம்ப கூலாக “போக்கிரி” ன்னு சொன்னான்.
நம்முடய டிக்கெட் கிடைத்து, தியேட்டருக்குள்ள போனா......
என் வாழ்க்கையில முதல் தடவையா வெறும் பதினஞ்சு பேரோட பார்த்த ஒரே படம் இதுதான், அதுவும்
ரிலீஸ் ஆன முதல் நாளில் (“வெங்காயம்”ன்னு ஒரு படம் அதுக்கு கூட ஒரு அம்பது பேரு
இருந்திருப்பான்). சரி, அஜித்துக்குன்னு இந்த 15 பேராவது வந்தானுங்களேன்னு எண்ணி
ஒரு சின்ன சந்தோசம். அஜித் எண்ரி சீனில் நான் (மட்டும்) கையை தட்டி
‘தல..............”ன்னு கத்த. அந்த பதினஞ்சு பேரும் திரும்பி விட்ட லுக்கு
இருக்கே.................90 வயசு பாட்டிய ரேப் பண்ணினவனா பார்க்குறதுமாதிரி
கொலவெறியோட பார்த்தானுங்க.
அப்புறமாத்தான் தெரிஞ்சுது, அவனுங்க எல்லாம் போக்கிரி
படத்துக்கு, டிக்கெடி கிடைக்காம வந்து உக்காந்தவனுங்கன்னு. இடைவெளியில் எண்ணிக்கை
ரொம்ப குறைஞ்சிடுச்சு. “பாய், பார்த்தீங்களா?, எவனுமே இல்ல, பேசாம நாமளும்
போயிடுவோம்”ன்னு கூப்பிட்டு வந்த ஒரு அடிமை முன்மொழிய, அதை இன்னொரு அடிமை
வழிமொழிய. “பாருங்கடா, செகண்ட் ஆஃப் தான் பயங்கரமா இருக்கும், கண்டிப்பா பல
டுவிஸ்ட் எல்லாம் இருக்கும், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்....”ன்னு ஏதேதோ சொல்லி
பார்த்துவிட்டு வந்த படம் அது.
என்னோட டவுட்டு என்ன என்றால், போஸ்ர ஒட்டினவன், பிளக்ஸ்
வச்சவன், கொடி கட்டினவன் எல்லோரும் எங்க போனானுங்க? என்றுதான். உங்க டவுட்டு என்ன
என்பது எனக்கு புரியுது, கூட்டிகொண்டு போன அந்த ரெண்டு பேரும் இருக்கானுங்களா ?
என்று தானே...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------யாஸிர்.
Boss, That day in pushpanjali Pokkri was release. Becoz I saw that with one of my friend( Vijay fan) Whoc used to do the similar technic like u....
பதிலளிநீக்குபேப்பரில் அந்த தியேட்டரில் ரிலீஸ் ஆவதாக போட்டிருந்தது. ஆனால் நான் நேரில் சென்று பார்க்கவில்லை. மறுமொழியிட்டமைக்கு நன்றி.
நீக்குlol - 90 vayasu kelavi...uvamaigal ellam pinreye yasir.. -punnaivanam
பதிலளிநீக்குஎல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.
நீக்குபின்றீங்க பாஸ்..நெறைய எழுதுங்க..
பதிலளிநீக்குசெம்ம பாஸ்! :))
பதிலளிநீக்கு