செவ்வாய், ஆகஸ்ட் 04, 2015

ஸாரி, கலாம்.

2001ம் ஆண்டு என்றுதான் என் நினைவு, எங்களோட காலேஜிக்கு ‘என்விரான்மெண்டல் சேஃப்டி பிளாக்கை (Environmental safety Block) திறந்துவைத்து பேசுவதற்காக அப்துல் கலாம் வந்திருந்தார். காரில் வருபவரை வரவேற்பதற்காக, காலேஜ் கேட்டில் இருந்து ஆடிட்டோரியம் வரை மாணவர்கள் சாலையின் இரண்டு சைட்களிலும் நிற்கவைக்கப்பட்டிருந்தோம். மாணவர்கள் நிற்பதை பார்த்த கலாம், காலேஜ் கேட்டில் காரிலிருந்து இறங்கி, எங்களை நோக்கி கையசைத்தபடி ஆடிட்டோரியம் வரை நடந்தே சென்றார். சுமார் 500 பேர் அமரக்கூடிய அந்த அரங்கில் கடைசி இரண்டு வரிசைகள் மட்டும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவை எல்லாம் கலாம் நேசித்த/விரும்பிய இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இளைஞர்கள் அனைவருக்கும் வயது சுமார் 30 இருக்கலாம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது.

மாணவர்களுக்காக, அவரவர் டிபார்ட்மெண்டில் புரஜெக்டர் மூலமாக, ஆடிட்டோரியத்தில் இருந்து நிகழ்ச்சிகள் லைவ் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அப்துல்கலாம் பேசும் போது, ‘’500 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் நான் சுமார் 400 மாணவர்களாவது அமரவைக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணினேன்’’ என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். பின்பு புரஜெக்டர் மேட்டர் அவருடய காதில் மெதுவாக புரஜெக்ட் செய்யப்பட்டது. ‘’ திரையில்தான் அவர்கள் என்னை காண வேண்டும் என்றால் நான் வீட்டிலிருந்தே பேசியிருப்பேனே? ’’ என்று கூறியதாக ஒரு பேச்சு அடிபட்டது. அன்று மட்டும் எனக்கு தெரிந்து குறைந்தது 1000 அக்னி சிறகுகள் புத்தகமாவது விற்றிருக்கும். அனைவருக்கும் பொறுமையாக கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் போல ரொம்ப எளிமையாகவே இருந்தார்.

வாங்கியதற்காக படித்தவர்களும், படிப்பதற்காக வாங்கியவர்களும் சரிபாதி இருந்தார்கள். இந்தியாவில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் அக்னிச் சிறகுகளாகத்தான் இருக்கும் என்றே நினைக்கின்றேன். படிப்பாளிகள் இருக்கும் தேசத்தை விட அறிவாளிகள் உள்ள தேசமாக இந்தியா இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்ட ஒரு நல்ல ஆன்மா. தன் இறுதி மூச்சுவரை மாணவர்களை நேசித்த ஒரு மகான். அதிகமான மக்களின் ரோல்மாடல், கண்டிப்பாக எனக்கும் ரோல்மாடலாக இருந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

ஆனால்,

அணு ஆயுத ஆபத்தையும், அதன் மூலம் உலகில் ஏற்பட்ட விளைவுகளையும் இங்கு பலர் அறிவர். தான் ஒரு அணு விஞ்ஞானி என்பதற்காக இந்தியாவை அணு ஆயுதம் கொண்ட நாடாக மாற்றி, அதன் மூலமாக இந்தியாவை வல்லரசாக மாற்றிட எண்ணிய அவரின் கருத்துக்கு உடன்பட என் மனம் ஒப்பவில்லை. அணு ஆயுதங்களின் விளைவைப் பற்றிய விவாதங்களில், அவற்றை நல்வழியில் உபயோகப்படுத்திடவேண்டும் என்று கூறியிருக்கின்றார், ஆனால், எப்படி? என்று மட்டும் கூறவில்லை. அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு இந்தியா வல்லரசு ஆவதைவிடுத்து, பசி, பட்டினியற்ற இந்தியா என்ற நல்லரசு வேண்டும் என்பது என்போன்ற சிலரின் கருத்து.

இந்தியா வல்லரசு ஆகிவிட்டால், புதுப்பேட்டை படத்தில் வரும் குமாரு, கொக்கி குமாரான கதைதான். பெரியண்ணன் தோரனை வரும், கட்டப்பஞ்சாயத்து செய்யனும், நாம்மள பார்த்து எல்லோரும் பயப்படுவான்......................., அதே மாதிரி நாமளும் எல்லோரையும் பார்த்து பயப்படனும், நிம்மதி இருக்காது. இங்க பலபேரு வல்லரசு என்றால் இந்தியாவும் அமெரிக்கா மாதிரி ஆகிடும், பொண்ணுங்க எல்லாம் ஸ்கர்ட் போட்டுப்பாங்க, ஆம்பள பயலுக எல்லோரும் ஜட்டி போடாம பேண்டு போட்டுக்கலாம், காலையில் பிரட்டு, மத்தியானத்துக்கு பர்கர், நைட்டுக்கு பிட்சா சாப்பிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பாவம்.

கலாமின் இறப்பிற்கு சமூக வலையதளங்களில் செலுத்தப்பட்ட அஞ்சலிகள் மற்ற எந்த தலைவருக்கும் வாய்க்கப்படாத ஒன்று. அது ஒரு கட்டததிற்கு மேல் .......ஷ்ஷ்ஷ்ஷ்...ஷப்ப்ப்ப்பா....... ‘மிடியல’ ரேஞ்சுக்கு செல்லும் அளவிற்க்கு அட்ராசிட்டி செய்துகொண்டிருந்தார்கள் / செய்துகொண்டிருக்கின்றார்கள் / செய்வார்கள். கலாம் இறந்த செய்தி கேட்டபின்பும் இரவு சாப்பாடு சாப்பிட்டவர்கள் எல்லாம் ‘’தேஷ்ஷ துரோகிகள்’’ என்றெல்லாம் கூறிவிடுவார்களோ என்று எண்ணி, நான் எல்லாம் பச்சத் தண்ணியக்கூட வாயில வைக்கவில்லை என்று சத்தியம் செய்துகொண்டிருந்தேன். ராமநாதபுரத்தில் கலாம் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால், 200 ரூபாய்க்கு ஆளும்கட்சிக்கு  ஓட்டுப்போடுபவன் எல்லாம் ‘’பார், கலாமின் மறைவிற்கு அமெரிக்க கொடியே பாதியில் பறக்கவிடப்பட்டிருக்கிறது’’ என்று பொங்கி ஸ்டேட்டஸ் இடுகிறான். அது கலாமின் மறைவிற்கு அல்ல, சண்டையில் செத்துப்போன அந்த நாட்டு ராணுவ வீர்ர்களுக்காக, அதுவும் ஜூலை 25ல் பறக்கவிடப்பட்டது என்று கமெண்ட் எழுதினால். அடுத்த பத்து கமெண்ட் ‘’தேஷ்ஷ துரோகி’’.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்றவர்களின் படத்தைப் போட்டு, காலாமின் இறப்பிற்க்கு செல்லாத இவர்களின் படங்களை புறக்கணியுங்கள் என்று அடுத்த போஸ்ட். போஸ்ட் போட்டவன் யாருன்னு பார்த்தா ‘பகவதி’ படத்துக்கு பால்குடம் எடுத்தவன், ‘தலைவா’ படம் வருவதற்கு தாமதமானதால் பால்டாயில் குடிக்க முயன்றவன். நகைச்சுவை நடிகர் தாமு, கலாமின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாக பார்த்தேன். ஆகையால் நடிகர் தாமு ஹீரோவாக நடித்து வெளிவரும் படத்தை தவிற வேறு எந்த படங்களையும் பார்க்கமாட்டேன் என்று நானும் கொள்கைமுடிவு எடுத்துள்ளேன். விசாரித்த வரையில், சன்னி லியோன் அஞ்சலி செலுத்தவரவில்லை, அதனால்தான் சன்னியின் படங்கள் இருக்கும் 850 இணையதளங்களை மத்திய அரசு முடக்கிவிட்டதாக, யாம் சந்தேகிக்கின்றோம்.

இவர்கள் இடும் கலாமின் அரிய புகைப்பட அலப்பரைகள், மோடியின் போட்டோஷாப் புகைப்படங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் போல. அப்துல்காலாம் ஸ்கூல் போட்டோ என்ற பெயரில் ஒரு 12 வயது சிறுவனின் புகைப்படத்தை, காணக் கண்டேன். அது HD மார்டன் கேமராவில் எடுக்கப்பட்ட ரொம்பத்தெளிவான கலர் போட்டோ. அப்துல்கலாம் பிறந்தது 1931, பனிரெண்டு வயது என்றால் 1943. அந்த ஆண்டு கலர் போட்டோ கேமெராக்கள் வந்ததாக்க் கூட என் சிற்றரிவிற்கு எட்டவில்லை. அதுவும் இவ்வளவு தெளிவாக எப்படி?. 1947ல் காந்தியே கருப்பு வெள்ளை போட்டோவில்தான் ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தார். என்னமோ போங்க.

அடுத்து கலாமின் குடும்ப போட்டோ என்று ஒன்று, எனக்கு தெரிந்து ராமநாதபுரம் முஸ்லீம் பேமிலியில் தலையில் முக்காடு இல்லாமல், நெற்றி நிறைய பொட்டுவைத்துக்கொண்டு மங்களகரமாக இருந்த ஒரே பேமிலி கலாமின் பேமிலியாகத்தான் இருக்கும். தனுஷ் பிறந்த நாள் கொண்டாடியது, உடல்நிலை காரணமாக ஜெயலலிதா அஞ்சலி செலுத்த வரமுடியாமல் போனது, கலாம் குடும்பம் VS  கலைஞர் குடும்பம் என்று போட்டோ போடுவது, கலாமின் கடைசி நிமிடம் என்று கூறிக்கொண்டு ஏழு வருடத்திற்கு முன்பான ஒரு போட்டோவைப் போஸ்ட் செய்வது என கலாம் ஆன்மா விரும்பாத/மன்னிக முடியாத காரியங்களை செய்வது ரொம்ப அபத்தம். அதை, படித்தவர்களே கொஞ்சம் கூட யோசிக்காமல் ஷேர் செய்வது அபத்தமோ அபத்தம்.

தன்னுடய இறந்தநாளில் விடுமுறையை விரும்பாதவர் கலாம், ஆனால் விடுமுறை விடச்சொல்லி பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பாக ஆர்பாட்டம். நம்மை விட மலையாளிகள் எவ்வளவோ மேல், அவரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மறுநாள் அரைமணி நேரம் கூடுதலாக வேலை செய்தனர். நம்மள செய்யச்சொன்னா? செய்வீர்களா?......... செய்வீர்களா?........ கூடுதலாக இருமுறை கேட்டுவிட்டால் ‘போய்ரு, தூக்கியடிச்சிருவேன்’ என்று கூறிவிடுவோம்.

ஹைலேட்டான ஒரு வாட்ஸஅப் மெஸேஜ்தான், என்னை ரொம்ப கவர்ந்தது. அதுல இருக்குற ஒரு சின்ன அரசியலைக்கூட ஒருவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் நமை என்ன செய்வது.

அந்த மெஸேஜ் என்னவென்றால்

‘’’’ ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார், இளைஞர்களாகிய நாம் கீழ்காணுபவையை பின்பற்றி ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்துகாட்டுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

1      1. புகையை விடுவது
2. மதுவை விடுவது
3. மாமிசம் உண்பதை விடுவது
4. மரம் நடுவது
5. கெட்ட பழக்கங்களை விடுவது
6. அன்பை பரப்புவது
7. ஈகோவை விடுவது. ‘’’ 

படிக்கும் போது சும்மா ஜிவ்வுன்னு இருக்குதா?. அப்படி இருந்துச்சுன்னா நீங்க அந்த வேலைக்கு சரிப்படமாட்டீங்க. படிக்கும்போதே மூன்றாவது பாயிண்டை இரண்டு மூன்று முறைக்கு மேல் திரும்ப திரும்ப படிச்சீங்கன்னா. உங்களுக்கு அந்த அரசியல் அப்பட்டமாக தெரியுதுன்னு அர்த்தம்.

மேலே இருக்கும் கலாமிற்க்கு தற்போது புரிந்திருக்கும், ‘’இவர்கள் கடைசிவரை கனவு மட்டுமே கண்டுகொண்டிருப்பார்கள்’’ என்று. 


-------------------------------------------------------------------------------------------------------------------------- யாஸிர் அசனப்பா.

6 கருத்துகள்:

  1. நல்ல கலாய்ப்பாய் எழுதியிருக்கீங்க...

    //படிக்கும்போதே மூன்றாவது பாயிண்டை இரண்டு மூன்று முறைக்கு மேல் திரும்ப திரும்ப படிச்சீங்கன்னா. உங்களுக்கு அந்த அரசியல் அப்பட்டமாக தெரியுதுன்னு அர்த்தம்.//

    -நெத்தியடி...

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவையோடு சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி விட்டீர்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. " மாணவர்கள் நிற்பதை பார்த்த கலாம், காலேஜ் கேட்டில் காரிலிருந்து இறங்கி, எங்களை நோக்கி கையசைத்தபடி ஆடிட்டோரியம் வரை நடந்தே சென்றார் "

    நெஞ்சை நெகிழச்செய்தது

    " படிப்பாளிகள் இருக்கும் தேசத்தை விட அறிவாளிகள் உள்ள தேசமாக இந்தியா இருக்கவேண்டும் "

    இப்படி எங்கேயாவது சொன்னார்ன்னு நினைக்கிறீர்கள் ? சொல்லி இருந்த ஒரு பய கால்லேஜ்லே பேச கூப்பிட்டிருக்க மாட்டான்!!!!!!!

    "கலாமின் மறைவிற்கு அமெரிக்க கொடியே பாதியில் பறக்கவிடப்பட்டிருக்கிறது’’ என்று பொங்கி ஸ்டேட்டஸ் இடுகிறான். அது கலாமின் மறைவிற்கு அல்ல, சண்டையில் செத்துப்போன அந்த நாட்டு ராணுவ வீர்ர்களுக்காக, அதுவும் ஜூலை 25ல் பறக்கவிடப்பட்டது என்று கமெண்ட் எழுதினால். அடுத்த பத்து கமெண்ட் ‘’தேஷ்ஷ துரோகி’ "

    இப்படியெல்லாம் சொல்லாம இருக்க அறிவு வேணுங்க


    "ஒரு நல்ல ஆன்மா. தன் இறுதி மூச்சுவரை மாணவர்களை நேசித்த ஒரு மகான். "

    நல்ல ஒரு மனிதனாகவே வாழ வில்லையே ? தன பேச்சுக்கு மரியாதை. கணம் இருப்பதை தெரிந்தும் , தான் பிறந்த இனம் கொத்துக்கொத்தாய் சீரழிகப்பட்ட போது வாய்திறவாமல் இருந்த கோழை

    "எனக்கும் ரோல்மாடலாக இருந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை."
    எதற்கு ரோல் மாடளுங்க ?..... அக்கினி சிறகை படிக்காத ஆட்களில் நீங்களும் ஒருவரோ ?
    " கடைசிவரை கனவு மட்டுமே கண்டுகொண்டிருப்பார்கள்’’

    கனவு மட்டுமில்லை, விளங்கவும் மாட்டான் என்றும்தான்.
    சோசியல் மீடியாவில எழுதறவன் எல்லாம் ரெம்ப படிச்சவன் வேற!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாம் வீர்ரா? கோழையா? என்பது பற்றியல்ல எனது பதிவு, அவரைப்பற்றிய தவறான தகவல்களை பதிவு செய்யும் அரைவேக்காடுகள் பற்றிய பதிவுதான்.

      நீக்கு